உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

untitledதாவடியில் அதிகாலை வேளையில் கதவினை உடைத்து உட்புகுந்த திருடர்கள் பெண்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு கொள்ளையிட முயன்றபோதும் வீட்டாரின் சாதுரியத்தினால் திருட்டுக்கள் தவிர்க்கப்பட்டது.தாவடி நந்தாவில்லேனில்   உள்ள துரைசிங்கம் என்பவரது வீட்டினுள் நேற்று அதிகாலை ஒரு மணியளவில் வீட்டு வளவிற்குள் திருடர்கள் உள்நுளையும் சத்தம் கேட்டு வீட்டின் உரிமையாளர் மின் விளக்குகளை ஒளிரச் செய்துள்ளார்.

இதன்போது திருடர்கள் மின் விளக்குகளை அடித்து நொருக்கியுள்ளனர். இதனால் வீட்டில் இருந்த மூன்று முதியவர்களும் கூக்குரல் இட்டுள்ளனர்.இதனையடுத்து கொள்ளையர் மூவர்   கதவினை உடைத்து உட்புகுந்தனர்.இவ்வாறு உட்புகுந்த மூன்று கொள்ளையர்கள் முகத்தினை கறுப்புத் துணிகளினால் கட்டியவாறு வீடு முழுவதும் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது கொள்ளையர்கள் ஒருவனை மடக்கிப் பிடிக்க முற்பட்ட பெண்மனி மீது பலமாக தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இருப்பினும் விடாது போராடிய  பெண்மணி கொள்ளையன் ஒருவன் அணிந்திருந்த முகத்துணியினை அகற்றியுள்ளார்.

இதனால் நிலை தடுமாறிய கொள்ளையர் பலமாக தாக்கி பணம் நகைகளை வழங்குமாறு கோரியுள்ளனர். இதன்போது வீட்டார் பயண்படுத்தும் கவறிங் நகைகள் கொள்ளகயர் கண்ணில்பட அதனை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.

இவ்வாறு தப்பிச் சென்றவர்கள் அருகில் உள்ள நமசிவாயம் செல்வநாயகம் என்பவரது வீட்டிற்குள் மாடிவழியாக உட்புகுந்தனர். இவ்வாறு உட் புகுந்த கொள்ளையர்கள் மாடியில் படுத்துறங்கிய வீட்டு உரிமையாளரின் ஆடைப் பாக்கற்றில் இருந்த 10 ஆயிரம் ரூபா பணத்தினை அபகரித்துச் சென்றுள்ளனர்.

குடாநாட்டில் திருட்டுக்கள் இரகசியமான முறையில் இடம்பெற்ற காலம் கடந்து வீட்டாரின் முன்னிலையில் வீடு உடைக்கப்பட்டு அச்சுறுத்திய நிலையில் கொள்ளையிடும் படலம் குடாநாட் டினில் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து