உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

Unavngivet

32 Responses to “”

 • சுழிபுரம்கண்ணகை:

  நன்றி அண்ணா உங்கள் விளக்கத்திற்கு,

  எங்கட கிராமத்தில யார் அண்ணா கண்களை திறந்தபடி
  ஐம்புலன்களை ஒருமனப்படுத்தி பாமாலை பாடுகிறார்கள்.

  எப்படிப்பட்டவர்களின் பூதவுடலை எரிக்கவேண்டும்,எப்படிப்பட்டவர்களின் பூதவுடலை
  விதைக்கவேண்டும்? என வேதங்களில எழுதப்பட்டிருப்பதாக புத்தகங்களில வாசித்து
  நினைவில இருக்கு.அசூசங்கள் பொய்யல்ல அண்ணா, சவத்தை தெய்வமாக்க குருவால
  முடியுமா!“` யார் அந்தக் குரு அவர் இறைவனிலும்
  மேலானவரா? குருவை அவர் இவர் என மதிக்கிறீர்கள், இறைவனை அவன்இவன் என
  எழுதப்பட்டிருப்பதால கேட்கிறேன்.

  திருவாசகத்தில சொல்லியிருக்கே மனிதனாய் பேயாய் கணங்களாய்—–
  மனிதனை மரணத்தின் பின்னர் வீட்டுப்பேய்கள் என்று
  தானே காச்சிப்படைக்கிறார்கள். எட்டுச்செலவு வீடுகளில பேயால வேதனைப்பட்டவர்களை
  கண்டதை மூடநம்பிக்கை என சொல்கிறீர்களா அண்ணா?

  உருவாக்கும் சக்தி {ஆண்+பெண்}ஆன இறைவனுக்கு
  எந்த ஒரு மனிதனாலும் உருவாக்க முடியாது. இறைவனுக்கு ஒப்பாக நாம் கனப்படுத்து
  எந்த ஒரு உருவங்களும் கொடும்பாவிகளாக அரும் பெரும் பரம்ஜோதீ“ காண்கின்றார்.
  இறைவன் பேரழகானவர், பயந்து நடுங்கும் விசப்பாம்புக்கொப்பா நாம் வணங்குவது!!!!!!!~~~~
  .நம் வீட்டில உயிரோட தொடப்பயப்படுகிறோமே வாசமலரானவர் கடவுள்====

  • vadivelan:

   தலைப்பிலிருந்து திசை மாறுவது அழகல்ல .தலைப்புடன் செல்வதே நல்லது .

 • Rana:

  உதாரணத்துக்கு மூவர் வரிசையாக இருந்து

  முதலாவது ஆள் பானைகளை செய்கிறார் . ———– —– (படைத்தல்)

  அடுத்தவர் பானைகளுக்கு வர்ணம் பூசி பாதுகாப்பாக
  உடையாமல் எடுத்து அடுக்கிவைக்கிறார் ————— ( காத்தல்)

  மூன்றாவது ஆள் பானைகளை ஒவ்வொன்றாக உடைக்கிறார் (அழித்தல்)

  வேடிக்கையாக இருக்கிறது அல்லவா?

  அழிக்கும் பொருள் என்றால் ஏன் ஆக்க (படைக்க) வேண்டும்?

  அழிக்கும் பொருள் என்றால் ஏன் காக்க (காத்தல்) வேண்டும்?

  • kunathilagam santhai:

   பானையை வனையும் போதே அந்தப் பானை எவ்வளவு காலம் சீவிக்கும் என்பது வனைபவனுக்குத் தெரியும் .அதற்க்கு வர்ணம் பூசும் போதும் பூசுபவனுக்குத் தெரியும் அதன் ஆயுள் .அதன் பிரகாரம் உடைப்பவன் உடைத்து விடுகிறான் .இவை மூன்று தொழிலையும் செய்பவன் ஒருவனே .அவனே சகலாகலா வல்லவன் .

  • சுழிபுரம்கண்ணகை:

   உலகம் நமக்கொரு பாடசாலை போன்றது. நமக்கு கற்க இங்கே அதிகம் உண்டு.அதே போல
   கட்சிகள் பல அரசியலில இருப்பது போல,ஆன்மீகத்திலும் அரசாட்சி செய்கிறது.

   இறைவனைக்குறித்த ஆதிமூலக்கரு எல்லாமதங்களுக்கும் பொருந்தும் தத்துவங்கள் தான், அண்டசராசரங்களை படைத்தவர் அக்கினியாக இருக்கிறார்.

   {ஆதிமூல} சத்தியவார்த்தைகளும்
   ஒன்றாக இருந்தாலும் பிரம்மாவை போன்ற தங்கள் பெருமையினாலே பரமலோகத்தை
   விட்டுத்தள்ளப்பட்ட ஒளியின் தூதர்கள் தாங்கள் தள்ளப்பட்டது போல மனிதர்களையும் பரலோகம் போகமுடியாதபடிக்கு அற்புதங்களை நடப்பித்து
   நம்மை இறைவனடி சேர்ப்பதாக வஞ்சித்துக்கொண்டிருக்கு.

   பாடசாலையில் பழையமாணவர்ஃ விலகினாதானே புதியமாணவர் கற்கமுடியும்.
   {அதனாலேயே இறப்பு பிறப்பு நடக்கிறது.}

   இறைகட்டளை கற்று அதன் படி வாழ்ந்தால் பரலோக ராட்சியத்தில வாழ்வர் . மண்ணுக்கவிதைக்கபபட்டவர்கள் புதுப்பிக்கப்படுவார்கள்.

   மற்றவர்கள் நரகவேதனையில நெருப்புக்க கிடப்பார்கள்

   இறைவன் அக்கினியாக இருப்பதால பரலோத்தினதும்
   நரகத்தினதும் அதிகாரம பரமனிடத்தலேயே இருக்கு ..நான் அறிந்ததை எழுதினேன்////

 • சுழிபுரம்கண்ணகை:

  கண்ணகையை பற்றிமட்டுமல்ல இன்னும் பல பெண்களைப்பற்றி
  இங்க வாசித்து அறிந்தேன். மதிப்புக்குரியவர்களை இறை வழிபாடு
  செய்ததால தான் முக்கோடி தெய்வங்கள் உண்டானதோ?` ஒன்றே
  குலம், உருவரே தேவன் என்ற உண்மை மறைந்தா இருக்கு?
  ஆகாயத்தையும் சூரியனையும், ஏனைய இயற்கையான அனைத்தையும்
  படைத்த இறைவன் தானே ஆவியாக இருந்து நம் உள்ளங்களிலே வாழ
  விரும்புவதன் காரணமென்ன?

  உள்ளமே பெருங்கோயில் நம் ஊனுடம்பே
  தேவாலயம்**. உள்ளம் கவர் கள்வன்

  • பணிப்புலத்தால்:

   அம்மா கண்ணகியே நீங்கள் என்ன சொல்ல வாறீர்கள் ?கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல முடியுமா ?

   • சுழிபுரம்கண்ணகை:

    கண்ணகை எப்படி அம்மாள்[இறைவி] இல்லையோ,
    அப்படித்தான் படைத்தல்,காத்தல், அழித்தல் அருளல்
    இவையனைத்தையும் ஒருவராய் செய்கிற சர்வலோகாதிபதி உருவரே
    ஆணாகவும் பெண்ணாகவும் இணைந்த சக்தி{ஆஆவி}

    அப்பன்ஃநீ அம்மையும்ஃ நீ அன்புடைய ———எனப்பல
    பாமாலைகளை சாற்றுகிறோமே,்,
    ஒன்றானது மெய்தேவன். சூரியனைப்போன்ற கண்களும் அக்கினியைப்போன்று
    பிரகாசிக்கின்ற பரம்ஜோதீஷ்வரரை வணங்க நம் மாம்சக்கண்களை மூடி
    பாமாலைகளால பாட ““““` நம் உள்ளமோ களிகூரும். இறைவனது வாகனம்
    நம் உள்ளமா அல்லது மிருகங்களா?

    • kunathilagam santhai:

     ஒருவனே தேவன் .அவன் வலுவே சக்தி .அதன் வடிவே அம்பாள் .அதன் ஒரே தோற்றமே அர்த்த நாரீஸ்வரர் .வேத நாயகன் அவன் .இந்துசமயத்தில் இறைவனை பல வடிவில் வழிபட்டதாலேயே பல பிரிவுகள் காணப் படுகின்றன .ஆனால் இவை அனைத்தும் வேதத்தை முதலாகக் கொள்கின்றன .எனவேதான் இறைவன் வேத நாயகன் எனப் பட்டான் .இந்து சமயம் ஆறு பிரிவானாலும் இன்று சைவம் சாக்தம் வைணவம் ஆகிய மூன்றுமே கடைப்பிடிக்கப் படுவதாக அறிய முடிகிறது .ஏனையவை இவற்றுடன் சேர்ந்துள்ளது .இந்த மூன்று சமாமும் தமது கடவுளரே முழுமுதல் எனக் கூறுகின்றனர் .”நீங்கள் யாரை வணங்கினாலும் அது என்னை வணங்கியதாகவே இருக்கும் “என கீதையில் கண்ணன் சொல்கிறான் .இதிலிருந்து நாம் விளங்கிக் கொள்வது தெய்வம் ஒன்றே .

     அடுத்து இறைவன் எங்கும் வியா பித்துள்ளவன்.எம் ஒவ்வொருவரிலும் அவன் இருக்கிறான் .”உள்ளம் பெரும் கோயில் ,ஊன் உடம் பாலையம்,வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுரம் “எனக் கூறப் படுகிறது .

     இதனால் அன்றோ எமது உடம்பிலிருந்து உயிர் பிரிந்ததும் எமது ஆசாரப் படி சவத்தைச் சிவமாக்கி பஞ்ச பூதங்களால் ஆக்கப் பட்ட இந்த உடம்பை பஞ்ச பூதங்களிடம் ஒப்படைக்கின்றோம் .

     எனக்குத் தெரிந்த தத்துவங்களையே இங்கு கூறினேன் .கண்ணகியே குறை இருப்பின் பொறுத்தருள்வீர் !

     • சுழிபுரம்கண்ணகை:

      அண்ணா, நீங்க சொல்வதென்ன?

      அரும்பெரும் ஜோதிக்கு
      ஆணும், பெண்ணும் இணைந்த மகாசக்தி காற்றை
      போன்ற {காற்று அல்ல} அண்டசராசரங்களிலும் காற்று
      இல்லாத இடத்திலயும் வியாபித்து நிற்பவரை, நம் புறக்கண்களை
      மூடி பாமாலை பாடி நமஸ்காரம் செய்து வணங்காமல் , தூணிலும்
      துரும்பிலும் இருக்கிறபடியால்“ அவைகளால“ இறைவனை உருவாக்க
      முடியுமா? இறைவனுக்கு அபிசேகம் நம்மால செய்ய
      முடியுமா? அபிசேகம் யாருக்கு தேவை அண்ணா?

      சவத்தை சிவமாக்கும் சக்தி மனிதருக்கு உண்டா“? சிவம் அக்கினிப்பிழம்பாய்
      இருப்பதால் அக்கினிக்கிரை ஆக்குகிறார்களோ? “ சாய்பாவா , அப்பாக்குட்டி தங்கம்மா
      மண்ணுக்காய் போராடினவர்களை ஏன் மண்ணுக்க விதைக்கிறார்கள்? எனக்கு விளங்காமல்
      இருப்பதால கேட்கிறேன் , சிவமானால் ஏன் கொள்ளி வைத்தவர் இறைவனருகில போகக் கூடாது?
      குடும்பத்தவர்கள் ஏன் ஆலயத்துக்க போகக் கூடாது?

      சவம் சிவமானால் ஆலயத்தில வைத்து இறுதி மரியாதை
      கொடுப்பது இல்லை ? கொள்ளி வைத்த காரணத்தினால இறைவனை தொடக்கூடாதென்றால்
      இறந்தவர் எப்படி இறைவனடி போயிருப்பார்? எனக்கு விளங்காமல்
      இருப்பதால கேட்கிறேன் ,

     • kunathilagam santhai:

      கண்ணகியே ,உங்கள் வினாக்களுக்கு விடையளிக்க என்னால் அதிகம் பதிவு செய்ய முடியாதுள்ளது .எனினும் மிகச் சுருக்கமாக ………

      எமது புறக்கண்ணை மூடிப் பாமாலை பாடி வழிபடுவது எமது புலன் வெளியை நாடாதிருக்கவே .புலனைக் கட்டுப்படுத்த முடியுமானால் நாம் கண்ணை மூடாதே வணங்கலாமல்லவா ,ஆனால் எமது புலன்களை ஆளும் மாயையை எம்மை மறைத்துக்கொண்டே இருக்கும் .எனவேதான் நாம் கண்களை மூடி வணங்குகின்றோம் என்பது என் கருத்து .

      இறைவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்பது அவனின் வியாபகத்தைக் காட்டவே .எல்லாப் பொருள்களிலும் ,எல்லா உயிர்களிலும் அவன் இருப்பான் .அவனின்றி ஓர் அணுவும் அசையாது .அன்பர்களுக்கு அவன் அன்பன் .

      இறைவனுக்கு அபிசேகம் செய்வது யார் என வரையறை தேவையில்லை .அன்பன் ஒருவன் தன அன்பினால் அபிசேகம் செய்யலாமே ,இதை யார் தடுக்கப் போகிறார்கள் ?
      கண்ணப்பர் பண்டி இறைச்சி படைத்து அபிசேகம் செய்யும் பொது காளத்தி அப்பர் வெறுத்தாரா ?அவனை அணைத்தார் .அவனுடைய உண்மை அன்பை அணைத்தார் .
      பூசல நாயனார் தன ஆசை போல் ஒரு கோயிலை மனதில் கட்டியபோது காடவர் கோன் ஒரு பிரமாண்டமான கோயிலை ஆகம விதிப்படி கட்டி கும்பாபிசேகம் செய்ய முற்ப்பட்ட போது பூசல நாயனாரும் அதே தினத்தில் தன மனக் கோயிலிலும் இறைவனை எழுந்தருளும் படி வேண்ட இறைவன் பூசலார் கோயிலில் குடி கொள்ளவில்லையா ?இப்படியே சொல்லிக்கொண்டே போகலாம் .

      சவத்தைச் சிவமாக்குவது மனிதனல்ல .மனித வடிவில் வந்த குருவே .அவரை நாம் இறைவனால் அனுப்பப் பட்டவராகவே கருதுகிறோம் .இது இந்து சமயத்தில் பாரம்பரியமாக வரும் முறை .இங்கு பிழை சரி கூறுவது தற்கால அறிவு .ஆனால் ஒரு குருமூலம் இறுதிக் கிரியை செய்வது ஆன்ம திருப்தி .
      சவம் சிவமாகிறதோ இல்லையோ எமக்குள்ள கடமையை செய்து முடிக்கிறோம் அதுவே ஆன்ம திருப்தி .

      ஒரு உடல் பஞ்ச பூதத்தினால் ஆக்கப் பட்டதென இந்து சமயம் கூறுகின்றது .எனவேதான் உயிர் பிரிந்த உடலை மீண்டும் பஞ்ச பூதங்களிடம் ஒப்படைக்கின்றோம் .இது இந்து விதி .உடலை நாம் தகனம் செய்யும் போது அங்கு பஞ்ச பூதங்களும் தொழிற்படுகின்றது .நிலத்தில் வைத்து எரிக்கும்போது நிலமும் எரியும்போது நெருப்பும் எரியும் பாகங்கள் காற்றுடன் சென்று ஆகாயத்திலும் இறுதியில் சாம்பலை நீரிலும் சேர்க்கிறோம் .இதை விட புதைத்தல் அவரவர் அறிவு .இதைப்பற்றி நான் எதுவும் கூறவரவில்லை .

      சவம் சிவம் என்பது குருக்கள் கடமை முடிந்து சுடலையை அடைந்து தீ மூட்டும் வரையே .அதன்பிற்பாடு நீங்கள் கூறும் ஆசூசங்கள் இந்து சமயத்தில் தொன்று தொட்டு வரும் முறையே .இது இன்று விதியாகக் கடைப்பிடிக்கப் படுகின்றது .

      இன்னும் சொல்வதென்றால் அழியா முப் பொருள்களான பதி,பசு (உயிர் )பாசம் ஆகியவற்றின் தொழிற்பாடே வாழ்வு .இதுபற்றி விளக்க இப்போ பதிவு கஷ்டமாக உள்ளதால் வேறொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம் .

      தயவு செய்து நான் அதிகப் பிரசங்கியாக கூறவில்லை .எனக்குத் தெரிந்ததைக் கூறுகின்றேன் ,தவறிருந்தால் மான்னித்து நுரையை ஏற்றுக் கொள்ளவும் .

 • Rana:

  அன்பான குணதிலகம் அண்ணர்!
  உங்களின் கருத்துக்கள் அனைத்தும் சிறந்த ஒரு
  தமிழாசிரியரின் கருத்தாக இருந்தது. பல வருடங்களின்
  பின்பு கண்ணகியை,சீதையை, தமயந்தியை, நாளாயினியை,
  பாஞ்சாலியை சாவித்திரியை, காரைக்கால் அம்மையாரை
  நினைவு கூர வைத்துள்ளீர்கள்.மேலும் அவர்களின் வரலாற்றின்
  சிறப்பான பகுதியை சுருக்கமாக சிறப்பாக விபரித்துள்ளீர்கள்.
  நன்றிகள். பல தகவல்களை தந்துள்ளீர்கள்.

  கண்ணகியை வழிபடுவதும் , வழிபடாமல் விடுவதும்
  அவரவர் விருப்பம்.

  மேலும் வடிவேலர் அண்ணருக்கு நான் எனக்கு என்னபடிப்பினை
  என்று எழுதவில்லை. பெண்கள் சமுதாயத்துக்கு கொடுக்கும்
  செய்தி என்ன என்றுதான் கேள்விகேட்டேன்.
  அரிச்சந்திரனால்மனைவியைவிற்பதற்க்கும்,
  பாண்டவர்களால்மனைவியை வைத்து சூதாடவும்
  , கோவலன் மாதவியிடம் சென்றுவந்தாலும் தண்டிக்காமல்
  கண்ணகி தனது காற்சிலம்பை கழட்டி கொடுப்பதும்
  பெண்கள் சமுதாயத்துக்கு சொல்லும் செய்தி ?????

 • கலையடி அகிலன்:

  சிவா நாதன் அண்ணா நீங்கள் மீண்டும் ஒரு முறை கண்ணகியின் வரலாறை நினைவு
  படுத்தி இருகிரின்கள் நன்றி ..கண்ணகி கோவம் கொண்ட போது மதுரையை எரித்தால் என்பது உண்மையே அவளுக்கும் ஒரு அமனுசிய சக்தி இருந்ததை வாரலாறு
  கூறி நிக்கிறது அவளுக்கென ஆலயம் இப்பொழுதும் இந்தியாவில் இருக்குறது

 • கலையடி அகிலன்:

  வைக்கலாம் பொருத்தமான இருக்கும்
  அம்மன் பெண் தெய்வ வழி பாட்டு சிலை
  கண்ணகியின் முக சாயலில் தான் இருக்கிறது

  • kovalan:

   அண்ணா கண்ணகியை உங்களுக்குத் தெரியுமா ?

 • belvarajah kanesaratnam:

  அம்பாள் துணை,
  அற்புதனுக்கு ஒரு தகவல்,
  வடிவேலன் கூறுவது போல்.சைவசமயம் தோன்றிய காலம் எதுவென்று என்னும் உறுதி செய்யப்படவில்லை. நீர் கூறிய தத்துவஞானிகள் எலோரும் தமிழ்ப்புலர் திருவள்ளுவருக்குப் பின் வந்தவர்கள்.அவரை விடப் பெரிவர்களா?

 • Rana:

  அறிஞன், புலவன் ,கவிஞன் போன்ற
  ஆண்பால்ச்சொற்களுக்கு
  பெண்பாற்ச்சொற்கள் இருக்கா?

  இல்லத்தரசி, விதவை, போன்ற
  பெண்பால் சொற்களுக்கு
  ஆண்பாற்சொற்கள்
  இருக்கா? சிந்தியுங்கள்!!!

  • vadivelan:

   அறிஞன் -அறிஞை
   கவிஞன் -கவிஞை
   என இருப்பதாக நினைக்கிறேன் .புலவர் என்பது பால்சாராப் பதம் ஆகும் .
   விதவை -தபுதாரி
   இல்லத்தரசி -இலத்தரசன் என அழைக்கலாம் .அரசன் -அரசி என இருப்பதால் இதையும் இப்படி அழைக்கலாம் .உங்கள் வசதிப்படி செய்யவும் .

 • Rana:

  சிலப்பதிகாரத்தில் கோவலன்மாதவியோடு கள்ளஉறவு கொண்டு
  எல்லாச் செல்வங்களையும் அழித்து போட்டு வரும் கணவனை
  கண்ணகி தண்டியாமல் தொடர்ந்தும் காற்சிலம்பை கழட்டி
  கொடுத்த கண்ணகி பெண்கள் சமுதாயத்துக்கு கொடுக்கும்
  படிப்பினை என்ன?

  அரிச்சந்திரன் கதையில் அரிச்ந்திரன் கட்டிய மனைவி சந்திரமுகியை
  விற்றதன் மூலம் பெண்களை ஆண்கள் என்னவும் செய்யலாம்
  என்றபடிப்பினையோ ?

  பாண்டவர் பாஞ்சாலிக்கு தெரியாமல்பாஞ்சாலியை வைத்து சூது ஆடி
  தோற்றதன் மூலம் பாஞ்சாலி கேட்கிறாள்அவர்கள்முதலில் தங்களை இழந்தபின்
  என்னை இழ்ந்தார்களா?? அல்லது என்னை இழ்ந்தபின்பு தங்களை இழந்தார்களோ?
  பதிலே இல்லை. இதில் என்ன படிப்பினை ?

  மேலும் பாஞ்சாலியின் சீலையை உரியும்போது பாஞ்சாலி ஒருகையால் சீலையை
  பிடித்த படி மறுகையால் கண்ணனை அழைக்கிறான் .கண்ணன் வரவில்லை.
  கண்ணன் கூறுகிறான் நீ இரு கையையும் நீட்டி என்னைஅழைத்தால்தான்
  நான் வருவேன் இரு கையும் நீட்டி அழைத்தால் என்னநடக்கும்? மரத்தில் இருந்து விழுந்து ஒருகையைப்பிடித்து தூங்கிக்கொண்டு இருப்பவனை இருகைகளையும் விட்டால்தான் நான் உனக்கு உதவிசெய்வேன் என்று சொல்வது போலவல்லவா இருக்கிறது.இருகையும் விட்டால் இரு சந்தர்ப்பத்திலும் என்ன நடக்கும்??

  • vadivelan:

   இன்று உங்களை அவர்களைப்பற்றிப் பேச வைத்ததே படிப்பனை .

 • உலகின் சிறந்த 10 தத்துவ ஞானிகள் சொன்ன புகழ்பெற்ற தத்துவங்கள் இங்கே…
  சாக்ரடீஸ்:-
  உலகத்தின் முதல் தத்துவஞானி என போற்றப்படுபவர் சாக்ரடீஸ். மதவாதிகளை நோக்கி “கடவுள் என்பவர் யார்?” எனக் கேள்வி கேட்ட முதல் பகுத்தறிவாளர். உலகில் எந்த மதமும் தோன்றாத காலக்கட்டத்திலேயே மனித அறிவின் தோற்றம், தர்க்க சாஸ்திரம் ஆகியவற்றில் திறன் பெற்று விளங்கியவர்.
  ”எனக்கு எதுவும் தெரியாது என்பது எனக்கு தெரியும், ஏனெனில் நான் ஒரு அறிவாளி” என்பது சாக்ரடீஸின் புகழ்பெற்ற தத்துவம்.
  பிளாட்டோ:-
  க்ரீஸில் கி.பி 348-ம் ஆண்டுகளில் வாழ்ந்த தத்துவஞானி. பிளாட்டோவின் தத்துவங்கள்தான் 2400 ஆண்டுகளாக உலகத்தை ஆண்டு வருகிறது. சாக்ரடீஸின் மாணவரான பிளாட்டோ மேற்கத்திய அறிவியல், வாழ்வு மற்றும் கணித தத்துவத்தில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியவர். கண்மூடித்தனமான மத நம்பிக்கைகளை உடைத்ததில் ப்ளாட்டோவின் தத்துவங்களுக்கு பெரும் பங்கு உண்டு.
  ‘உள்ளடக்கத்துடன் வாழ்வதே மிகப்பெரிய செல்வம். நல்லவர்களுக்கு சட்டங்கள் தேவையில்லை, ஏனெனில் அவர்கள் பொறுப்புடன் வாழ்வார்கள். கெட்டவர்கள் தங்களுகே உரிய சட்டத்தை உருவாக்கிக்கொள்கிறார்கள்” என்பது பிளாட்டோவின் புகழ் பெற்ற தத்துவம்.
  அரிஸ்டாட்டில்:-
  மனிதன், இறைவன், அரசியல், மூன்று பிரிவுகளையும் அலசி ஆராய்ந்து தமது தத்துவ தரிசனமாக உலக்கு வங்கியவர் அரிஸ்டாட்டில். இவர் பிளாட்டோவின் மாணவர். மாவீரனாகத் திகழ்ந்த அலெக்சாண்டருக்கு பன்னிரண்டு ஆண்டுகள் நண்பராகவும், ஆசிரியராகவும் இருந்தவர் அரிஸ்டாட்டில்.
  “இந்த உலகம் இறைவனால் தோற்றுவிக்கப்படவில்லை. ஆனால் இந்த உலகை இயக்குபவன் இறைவனே!” “மனிதன் தனிமனிதச் சிந்தனை கொள்ளாமல், சமூகச்சிந்தனையோடு வாழ வேண்டும்” என்கிறார் அரிஸ்டாட்டில்
  கார்ல் மார்க்ஸ்:-
  பொதுவுடைமைக் கொள்கைகளின் மூலவர்களுள் முக்கியமானவர் கார்ல் மார்க்ஸ். பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையில், வரலாற்றை ஆராய்ந்து சொன்ன இவரது தத்துவங்கள், சமூக பொருளாதார அரசியல் அரங்கில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியது.
  ”மூலதனம் இறந்த தொழிலாளரை போன்றது. இது உயிருள்ள தொழிலாளரின் உழைப்பை உறிஞ்சும் வாழ்கிறது” என்பது மார்க்ஸ்சின் கருத்து.
  டார்வின்:-
  ‘மனிதன் எப்படித் தோன்றியிருப்பான்?’ என்ற பன்னெடுங்காலமாக தொங்கி நின்ற கேள்விக்கு தெளிவான விடையை சொன்னவர். மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியை பல நூற்றாண்டுக்கு முன்பே தெளிவுபடுத்திய வகையில், பல ஆராய்ச்சிக்கான கதவுகளை அகல திறந்து வைத்த பெருமைக்குரியவர்.
  ”மனிதன் ஒரு மணி நேரத்தை வீணாக்கிறான் என்றால், அவன் வாழ்கையில் மதிப்பை உணரவில்லை என்று அர்த்தம்” என்கிறார் டார்வின்
  விவேகானந்தர்:-
  பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவராக திகழ்ந்தவர் விவேகானந்தர். இவரின் கருத்துக்கள் இளைஞர்களிடையே மாபெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. இவர் இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் அத்வைத வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார்.
  ” நீங்கள் யாருக்கும் உதவி செய்ய முடியாது. சேவை மட்டுமே செய்ய முடியும்” என்பது விவேகானந்தரின் புகழ் பெற்ற கருத்து.
  வள்ளலார்:-
  வள்ளலார் என்ற இராமலிங்க அடிகளார் ஓர் சிறந்த தத்துவ ஞானி. சாதி சமய வேறுபாட்டுக்கு எதிரான தமது நிலைப்பாடு காரணமாக ஆன்மீகவாதிகளாலே விமர்சனத்திற்கு உள்ளானவர். ”அறியாமை என்னும் மாயத்திரைகள் நம்மை விட்டு விலகினால் அருட்பெருஞ்சோதியான ஆண்டவரை நாம் தரிசிக்கலாம்” என்பது வள்ளலாரின் வாதம்.
  ஓஷோ:-
  சிறு வயதிலிருந்தே தியானத்தில் ஈடுபட்ட ஓஷோ, தன்னுடைய இருபத்தொன்றாவது வயதில் ஞானம் அடைந்தார். ஞானமடைதல் என்பது, முழுமையான தன்னுணர்வு அல்லது விழிப்பு உணர்வு நிலை என்பதை குறிப்பதாகும். கெளதமபுத்தர், கபீர், ரமணர் மற்றும் பலர் இப்படி ஞானம் அடைந்தவர்கள்தான்.
  ”கடவுள் உன்னிடமிருந்து தன்னை எப்போதும் மறைத்துக் கொள்வதில்லை.நீ தான் உன்னுடைய கோப தாபங்களால் அவரைக் காணமுடியாதபடி கண்களை மூடி வைத்துக் கொள்கிறாய்” என்கிறார் ஓஷோ.
  புத்தர்:-
  தத்துவ ஞானி கௌதம புத்தரை அடிப்படையாகக்கொண்டு பௌத்த சமயம் உருவாக்கப்பட்டது. கௌதமருடைய வாழ்க்கையையும், வழிகாட்டல்களையும் புத்த மதம் ஏற்றுக்கொண்டுள்ளது.
  ”பிராத்தணைகளை விட மிக உயர்ந்தது பொறுமை தான்” என்பது புத்தரின் புகழ்பெற்ற பொன்மொழி.
  மகாவீரர்:-
  சமண சமயத்தின் மையக் கருத்துக்களை நிறுவிய துறவி. மூன்று ரத்தினங்கள் என அழைக்கப்படும் ‘நன்னம்பிக்கை, நல்லறிவு, நற்செயல்’ என்ற போதனையை போதித்தவர்.அவருடைய போதனைகளும், தத்துவங்களும் இன்றும் உலகம் முழுவதும் அனைத்துத் தரப்பு மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு போற்றப்படுகிறது.
  ”கவனமுடன் செயலாற்றுங்கள்..நல்ல விஷயங்களில் மட்டும் மனதை திருப்புங்கள்.” என்பது மகாவீரரின் அறிவுரை.

 • சி.சிவானந்தம்:

  பல்லாண்டு காலப் பழமைமிகு கண்ணகி ஆலயம் முற்கால அந்நிய ஆக்கிரமிப்பு சக்திகளால் பல தடவைகள் அழிக்கப்பட்டும்,கவனிப்பாரற்றும் ஊரிலேயே இருந்த கண்ணகி ஆலயம் இன்று புனருத்தாரணம் செய்யப் பெற்று புதுப்பொலிவுடன் விளங்குகிறதே, இழந்தவற்றை மீண்டும் பெற்றுக்கொடுக்கும் தெய்வம் கண்ணகி என்றும், மதுரையை எரித்த பின் ஆவேஷத்துடன் நடந்து சென்று தமிழ்நாடு-கேரள எல்லையில் இருக்கும் விண்ணேந்தி மலைக்குன்றில் நின்ற போது கோவலன் விண்ணிலிருந்து புஷ்பகவிமானத்தில் வந்து கண்ணகியை அழைத்துச் சென்றதாகவும், இதனால் கண்ணகிக்கு *மங்களாம்பாள்* என்ற பெயர் இருப்பதாகவும் கூறப்படுகிறதே,மேலும் இன்றும் வருடத்தில் ஒருநாள் அதாவது சித்திராபௌர்ணமிக்கு மறுநாள் பல இலட்சம் பக்தர்கள் தாம் இழந்தவை மீண்டும் கிடைக்க வேண்டுமென்று வேண்டி விண்ணேந்தி மலைக்கு வந்து அங்கிருக்கும் கண்ணகை அம்மன் கோயிலில் வழிபாடுகளை மேற்கொள்கின்றனரே,அதுமட்டுமன்றி கோவலன் சிரச்சேதம் செய்யப்பட்ட கல் அமைந்திருக்கும் இடத்தில் பல அமானுஷ்யங்கள் நிகழ்வதாகவும் கூறப்படுகின்றது.இவற்றை பார்க்குமிடத்து கண்ணகிக்கு ஆலயம் அமைத்து வழிபடுவதில் தவறில்லை என்பதுவும், மதங்கள், மதப்பிரிவுகள் பலவானாலும் இறைவன் ஒருவனே! என்பதுவே என் கருத்தாகும்.

  • vadivelan:

   பல பழமையான கண்ணகி அம்மன் ஆலையங்கள் இன்று பெயர் மாற்றம் பெற்றுள்ளது .உ .ம் —–மாதகல் பானாவேட்டி அம்மன் இன்று புவனேஸ்வரி அம்பாள் எனவும் புங்குடுதீவு கண்ணகி அம்பாள் இன்று ராஜ ராஜேஸ்வரி அம்பாள் எனவும் மாற்றம் பெற்றுள்ளதை அறியமுடிகிறது .இடன் காரணம் ???????????????

   • சி.சிவானந்தம்:

    தங்கள் கருத்து முற்றிலும் உண்மையே! இப் பெயர்மாற்றமானது இலங்கையில் மட்டுமன்றி தமிழ்நாட்டின் பலபகுதிகளிலும், ஏன் கண்ணகி வாழ்ந்த மதுரையிலும் நிகழ்ந்திருக்கிறது. இதற்கான காரணம் முற்காலத்தில் சைவ,சமண மதங்களுக்கிடையே காணப்பட்ட போராட்டங்களின் விளைவென எண்ணத்தோன்றுகிறது. ஆனால் இன்று இந்துக்களிடையே மதப்போராட்டங்கள் எதுவும் இல்லாததாலும், இந்து மக்கள் அனைத்து மதத்தவரையும் அன்புடன் நேசித்து, அரவணைத்து வாழ்வதனால் இந்தத் தலைப்பு மீதான இத்தகைய கருத்தாடல் அவசியமறறதென்பது எனது கருத்தாகும்.

    நன்றி!

  • kunathilagam santhai:

   சேரன் செங்குட்டுவன் சிலை எடுத்தான் என்பதாலேயே இந்தக் கண்ணகி வழிபாடு தோன்றியது .ஆனால் கண்ணகியை விட கற்பில் சிறந்த இலக்கிய நாயகிகள் வேறும் சிலர் உள்ளனர் .அவர்களுக்கு யாரும் சிலை எடுக்க முன்வரவில்லை .கண்ணகி வரலாற்றை எழுதிய இளங்கோ சமணத் துறவி .இவரின் தம்பியே மன்னன் செங்குட்டுவன் .இதனால் அவர் தம்பியைச் சிறப்பிக்கவும் இதைச் செர்த்த்திருக்கலாம் .
   ராவணன் எவ்வளவோ ஆசை வார்த்தைகள் கூறியும் ,அதிகாரத்தொனியில் முயன்றும் ராமரே தன கணவர் என காத்திருந்த சீதாபிராட்டியார் ராமரை அடைந்தும் தான் கற்பு தவறவில்லை எனத் தீக் குளித்து நிலைநாட்டியவள் .
   இவளுக்கு ஏன் கோயில் இல்லை ?(உண்மையில் இவள் இலக்குமியின் அவதாரம் ,இவளுக்குக் கோயில் எடுப்பதில் தவறில்லை .)

   பாதி ஆடையுடன் காட்டில் விடப்பட்ட போதும் நளனே தன கணவன் என இறுதிவரை இருந்து அவனை அடைந்தவள் தமயந்தி ,இவளுக்கு ஏன் கோயில் இல்லை ?

   யார்கண்ணுக்கும் தெரியாத யமதர்மன் சாவித்திரி கண்ணுக்கு மட்டுமே காட்சி அளித்தான் .இது சாவித்திரியின் கற்பின் மகிமை ,தன கற்பின் மகிமையால் சத்தியவானின் உயிரை மீண்டும் யமனிடம் இருந்து பெற்றவள் அவள் .அவளுக்கு ஏன் கோயில் இல்லை ?

   பாஞ்சாலி ஐந்துபேர் மனைவிதான் .ஆனால் தம்கனவர் சூதாடித் தம்மைத் தோற்ற போதும் துரியோதனன் அவளைச் சபைக்கு அழைத்தும் அவள் வரவில்லை .தம் கணவர்களுக்கே தான் பணிவேன் எனக் கூறி மறுத்தாள் .பின் இழுத்து வரப் படுகிறாள் .துகில் உரியப்படுகிறாள் .அங்கு தருமரின் பொறுமை காக்கப் படுகிறது .ஆனால் வீர சபதம் எடுக்கப் படுகிறது .அதன் காரணமாகவே கவுரவர் அழிகின்றனர் .தருமம் காக்கப் படுகிறது .
   அத்துடன் பாஞ்சாலி முற்பிறப்பில் தன கணவனான ஒரு குஸ்ட ரோகியைக் கூடை ஒன்றில் சுமந்து வரும்போது வழியில் ஒரு முனிவரில் முட்டுப்படவே குஸ்ட ரோகியத் தன்னில் முட்டி ஆசூசம் ஏற்ப்படுத்தினாய் என அந்தமுனிவர் நீ அடுத்த பிறப்பில் இவரைத் தாங்கும் வண்ணம் இவர் ஐந்து பேராகி உன்னை இடை விடாது அனுபவிப்பர் எனச் சாப மூலம் வாழ்வளித்தார் .(அவளின் முட்பிறப்புப் பெயர் நளினி )
   அதன்பயனே அவள் பாண்டவரைக் கணவராகப் பெற்றது .அவள் முறை தவறிய பெண்ணல்ல .அவளின் முற்ப் பிறப்புக் கற்பின் பயனே இப்பிறப்பில் ஐந்து கணவனை அடைந்தது .அதுவும் கிடைத்த கனியை ஐவரும் பகிர்ந்துண்ணுங்கள் என்ற தாய் குந்தியின் வாக்கைத் தட்டாத பாண்டவர்களின் சிறப்பும் இங்கு காட்டப் படுகிறது .இவளுக்கு ஏன் கோயில் எழுப்பவில்லை ?

   தெய்வத் தன்மை பொருந்திய இவளுடன் வாழ நான் தகுதி அற்றவன் என தன்மைனைவியைப் பிரிந்து வேறு பெண்ணை திருமணம் செய்தான் காரைக்கால் அம்மையாரின் கணவன் .ஆனால் தன் கணவனுக்கல்லாது வேறு யாருக்கும் தான் அழகாக இருந்து கவர்ச்சி ஏற்ப்படுத்தக் கூடாது என இறைவனிடம் பேய் வடிவம் கேட்டுப் பெற்ற காரைக்கால் அம்மையார் அவ்வடிவத்துடனேயே முத்தி அடைந்தார் .இதை விடக் கண்ணகி கற்பு மேலானதா ?இவருக்கே கோயில் இல்லை .

   காரணம் இவர்கள் மனிதர்களாகப் பிறந்தவர்கள் .எனவே கண்ணகிக்குக் கோயில் இந்து சமயத்தில் எடுப்பது தவறு என்பது ஏன் பணிவான கருத்து .

   தம்பி ரண உங்களுக்கும் என்பணிவான கருத்து உரித்தாகட்டும் .தவறிருந்தால் கூறவும் .மன்னிக்கவும் .

   • சி.சிவானந்தம்:

    ஆசிரியர் அவர்களிடம் பணிவான வேண்டுகோள்!

    இலங்கைத் தமிழ் மக்கள் இலங்கையை மையப்படுத்தி இராமயணம் தோற்றம் பெற்றது ஏன்?என்பதை உணராது, பல்லாயிரம் ஆண்டுகளாக பழமைகளைப் பேசிப் பேசி அழிவின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கும் இக் கால கட்டத்தில் இந்து மதம் பற்றிய இத்தகைய கருத்து மோதல்கள் அவசியமானதா?

    நன்றி!

    • kunathilagam santhai:

     நண்பன் சிவானந்தம் ,நீங்கள் ஆதங்கப்புவதும் நியாயமே .இப்படியான வாதங்கள் இன்றைய மாணவர்கள் மத்தியில் அவசியம் தேவை .கண்ணகி வழிபாடு எம்மிடையே ஊறிப் போன ஒன்றானாலும் வரலாற்றை அனைவரும் அறிய இது வைப்பாக இருக்கிறது .நான் ஆசிரியராகக் கடமை ஆற்றும் பொது ஒரு மாணவன் இப்படி ஒரு கேள்வியை என்னிடம் கேட்டான் .திருமூலர் ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம் 3000 பாடல்கள் பாடியதாகக் கூறப்படுகிறது .இப்போ 2000 வருஷம் தானே நடக்கிறது .அப்படியானால் இது எந்தக் காலம் பாடியது என .நான் திகைத்துப் போனேன் .அத்துடன் பாடத்தை நிறுத்தி விட்டேன் .காரணம் நான் கதைகள் மூலமே விளக்கம் கொடுப்பது வழமை .இப்போது என்னால் விளக்கம் கொடுக்க முடியவில்லை .நான் நாளைக்கு இது பற்றிப் படிப்போம் எனக் கூறிவிட்டு அன்றிலிருந்து இதற்க்கு விடை தேடிக்கொண்டே இருக்கிறேன் .இதுவரை விடை கிடைக்க வில்லை .ஆனால் நான் மாணவர்களுக்கு ஒரு தவறான பதிலைக் கொடுத்து ஏமாற்ற்னேன் என் மனச்சாட்சிக்கு விரோதமாக .அதாவது ஞானிகளின் வாழ்வில் ஆண்டுகள் எம்மைப் போலல்ல என .அதுபோன்று இங்கு காண்ணகி வழிபாடு பற்றி என்கருத்தையே என் அறிவுக்கு எட்டியதை கூறினேன் .நீங்கள் கூறியது போல ராம்மாயனத்தை ஆரியர்களுக்காக எழுதியதுபோல் கண்ணகி வழிபாடும் இந்து சமயத்தில் இடம் பிடித்ததே உண்மை .இன்று கண்ணகி இந்துக்கள் வழிபாட்டில் ஓரங்கமாகி விட்டாள்.தயவு செய்து எனக்குத் தெரிந்ததை கூறினேன் .தவறிருந்தால் மன்னிக்கவும் .

     • சி.சிவானந்தம்:

      தங்களுக்கு பணிவான நன்றிகள்.தங்கள் கருத்துகளில் தவறு காண்பதற்கோ,மன்னிப்பதற்கோ தகுதியற்றவன். ஏனெனில் நான் தங்களின்,அநுபவ முதிர்ச்சியும், அறிவாற்றலும் நிறைந்த கருத்துகள்,கவிகளிலிருந்து பல விடயங்களைக் கற்றுக்கொள்ளும் ஒரு மாணவன்.

      நன்றி!

 • kunathilagam santhai:

  கண்ணகி வழிபாடு சிறந்தோங்கும் இக் காலம் இப்படி ஒரு தலைப்பு மூலம் கண்ணகியைப் பற்றிய தகவல்களை அறிய முடிவது நன்றே !
  நானறிந்த வரை கண்ணகி ஒரு பெண் மட்டுமல்லாது அவள் இந்து சமயத்தவளு மில்லை ,சமண சமைத்துப் பெண்ணான கண்ணகிக்கு கற்பின் மேன்மையால் கோயில் எடுத்தது என்னவோ உண்மை .ஆனால் இந்து சமய விதிகளுக்கமைய கோயில் எடுப்பது தவறெனவே எனக்குப் படுகிறது .இது பற்றிய ஏனையோர் கருத்துக்களுடன் ஆராய்வதே நல்லது .

 • vadivelan:

  இந்து சமயத்தில் வழிபடும் தெய்வங்கள் அனாதியானவை .அழிவற்றவை .ஆனால் கண்ணகி ஒரு குடும்பப் பெண் .அவள் வாழ்க்கையில் கற்பு நெறி தவறாது வாழ்ந்தவள் என்பது உண்மை .சிலப்பதிகாரம் ஒரு இலக்கியம் .இது கி .பி .2ஆம் நூற்றாண்டில் தோன்றியது .இந்துசமையம் தோன்றிய காலம் தெரியாது .அதன் ஆரம்ப கடவுளர்களே இந்துத் தெய்வங்கள் .அதன் பிற்பாடு எந்தத் தெய்வத்தை வைத்து வழிபட்டாலும் அது இந்துத் தெய்வம் ஆகாது .கண்ணகி ஒரு பத்தினிப் பெண்ணே தவிர இந்துத் தெய்வம் அல்ல என்பதே என்கருத்து .

 • vadivelan:

  கண்ணகியைத் தெய்வமாகப் போற்றலாம் ,ஆனால் இந்து சமயத் தெய்வமாக வழிபடுதல் பொருத்தமற்றது என்பது என் கருத்து .

Leave a Reply for kunathilagam santhai

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து