உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

தகவல். மறுமலர்ச்சி மன்றத்தின் தலைவர். அழ.பகிரதன்…மறுமலர்ச்சி மன்றத்தில் 4.02.2011 காலை 8.30 மணியளவில் மன்ற செயலாளர் நிவர்சன் அவர்களுடன் மன்ற செயற்பாடுகள் பற்றி இடம்பெற்ற உரையாடலில். மன்றத்தின் 16.02.2011 அன்று நடைபெற இருக்கும் திட்ட விளக்க கண்காட்சியை எவ்வாறு ஒழுங்கு படுத்துவது என்பது பற்றியும் எதிர்வரும்17.02.2011 அன்று பௌர்ணமி விழாவினை எவ்வாறு ஒழுங்கு படுத்துவது பற்றியும், மன்றத்தின் பாலர்பாடசாலை பற்றியும் அதனை புதிய ஒழுங்கமைவுக்கமைய எவ்வாறு மீள் பதிவது அதன் வசதி வசதியீனங்கள் பற்றியும் உரையாடினேன்.

9 மணியளவில் மன்றத்திற்கு சென்றபோது இடைவரவு ஊழியர்களான இரு பெண்மணிகள் இருவரை சந்தித்தேன். அவர்கள் புத்தகங்களை ஒழுங்குபடுத்துவதிலும் நூலகத்தை கூட்டுவதிலும் ஈடுபட்டிருந்தனர். நூலக உதவியாளர் தாட்சாயினி ஒருகூட்டத்திற்கு போயிருந்தமையால் அவருக்கு பதிலாக இந்த பெண்மணிகள் கடமையில் இருந்தார்கள். அப்போது மன்றத்தின் செயற் குழு உறுப்பினர் திருச்செல்வம் தி…. அவர்கள் வந்தார்கள். அவருடனும் மன்ற செயற்பாடுகள் பற்றி கலந்துரையாடினேன். இந்நேரம் திரு தேவராஜா அவர்கள் வந்தார்கள். நானும் அவரும் இணைந்து அந்த பெண்மணிகளுடன் மன்றத்திற்கான மகளிர் அணி ஒன்றை உருவாக்குவது பற்றி உரையாடி அதற்கு யார்யாரை இணைப்பது என்பது பற்றியும் அவர்களை ஒன்றிணைத்து கூட்டம் கூடுவது என்றும் தீர்மானித்தோம. எங்களது இந்த தீர்மானத்தை பற்றி மாலையில் நூலக உதவியாளர் தாட்சாயினி அவர்களுடனும் அகிலனின் தங்கையுடனும் உரையாடினோம். பின் இரவு மன்ற பொருளாளருடன் இது பற்றி விரிவாக கதைத்ததுடன் கண்காட்சி பற்றியும் உரையாடினேன். மாலையில் செயலாளர் நிவர்சன் திருச்செந்தூரன் உடனும் தொலைபேசியில் யாதவனுடனும் இதுபற்றி உரையாடினேன். இடைநேரத்தில் பணிப்புலம் கிராம அலுவலகர் அலுவலகத்தில் சென்று மன்ற அபிவிருத்தி திட்ட கண்காட்சிக்கு அவரையும் வருமாறு அழைத்த துடன் சுயதொழில் கடன் திட்ட அடிப்படையில் பயனாளிகளை தெரிவு செய்துமன்றத்தில கடன் வழங்கல் பற்றியும் ஆராய்ந்தேன். விரைவில் மகளிர் அணியின் தொடக்கம் …..

அழ பகீரதன்
செருக்கற்புலம்
சுழிபுரம்

One Response to “மறுமலர்ச்சிமன்றத்தின் மகளிர் அணி ஆரம்பிப்பது தொடர்பான ஆரம்பம்.”

  • Egan:

    மன்றத்தின் நிர்வாக நடவடிக்கைள் பற்றி அங்கு என்ன நடைபெறுகின்றது பற்றியும் அறிந்து கொள்ளக்கூடியதாக இருப்பது மகிழ்ச்சி. இந்தச் செய்திகள் புலம்பெயர்ந்து வாழும் எங்களுக்கு ஊர் மீதான பிடிப்பை வலுப்படுத்தும். நன்றி.

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து