உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

கிழக்கு மாகாணம் உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் நேற்றுக்காலை முதல் தொடர்ந்தும் அடைமழை பெய்து வருவதனால் மீண்டும் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. கடந்த இரு தினங்களில் அடைமழை குறைந்து காணப்பட்டதுடன் இடையிடையே மழைபெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை ஓரளவு வழமைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் நேற்றுக்காலை முதல் மீண்டும் மழை பெய்து வருவதால் நிலைமை மோசமடைந்துள்ளது.

கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற மாவட்டங்களிலும் வடமத்திய மாகாணத்திற்கு உட்பட்ட பொலனறுவை, மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் வடமாகாணத்தில் வவுனியா, மற்றும் மன்னார் பகுதிகளிலும் நேற்றுக்காலை முதல் மழை பெய்து வருகின்றது. விடாது தொடரும் மழையினால் மக்கள் செய்வதறியாது பரிதவித்து வருகின்றனர்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்தும் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவிவருகின்றது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள போதிலும் அவர்களுக்கு உரிய நிவாரணங்கள் இன்னமும் வழங்கப்படவில்லையென முறைப்பாடு தெரிவிக்கப்படுகின்றது. மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி கிழக்கு மாகாணத்தில் இதுவரை பல்லாயிரக்கணக்கான கால்நடைகள், உயிரிழந்துள்ளன.

அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் குறைந்திருந்த வெள்ளம் நேற்று பெய்த அடைமழையினால் அதிகரித்து காணப்பட்டது

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து