உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

//people.panipulam.net/#!album-624
Foto-Anujan Sabanayagam

12 Responses to “சில்லாலை சிந்திக்கும் சிறுவர் கழகம்”

 • சி.சிவானந்தம்:

  குழந்தைகளுக்கு தமிழ்த் தாயின் கலாச்சாரப் பண்பாடுகளைக் கற்பித்து,வளர்த்திட நடாத்தப்பட்ட இந்தச் சிறுவர்களின் கலாச்சார விழா நிகழ்வுப் படங்கள் தேவையற்ற விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது. எதிர்காலச் சந்ததியை தூய தமிழ் பண்பாட்டு பழக்க வக்கங்களைக் கற்பித்து நல்ல முறையில் வளர்த்திட உழைக்கும் பெற்றோரின் முயற்சிகள் பாராட்டி வாழ்த்தி வளர்க்கப்பட வேண்டும்.

  பிறந்த மண்ணில் வாழ்கின்ற எந்தவொரு மக்களையும் எத்தகைய காரணத்திற்காகவும் விமர்சிப்பதற்கு புலம்பெயர்ந்தவர்கள் எந்தத் தகுதியுமற்றவர்கள்.

  சில்லாலைச் சிறுவர் கழகம் வாழ்க! வளர்க!

  சி.சிவானந்தம்
  நோர்வே.

 • vadivelan:

  அப்ப இந்தச் சில்லாலை சிந்திக்கும் கலகத்தார் ஒருத்தரும் வெளிநாட்டுக்குப் போகாகினம் எண்டு சொல்லுறியளோ?

 • மித்திரன்:

  இங்கு பலர் பல விதமான கருத்தை தெரிவித்துள்ளார்கள். எல்லோரும்பெரியவர்கள்தான் கருத்து தெரிவிதுள்ளதனால் நான் சிறுவன் என்ற வகையில் கருத்து தெரிவிக்க தயங்குகின்றேன்.என்றாலும் இங்கு எமது சிறுவர்கழகத்திற்கு சில வேண்டுகோள் விடுத்துள்ளதால் இக் கழக இயக்குனரும் தலைவரும் என்ற வகையில் கருத்து கூறுகின்றேன். விநாயகர் ஆலய சூழலிலே 10 வருடங்களின் பின்னர் மக்கள் இப்படியான நிகழ்வுகளை நாடாத்த இருப்பார்கள்.அதற்கு இப்பொழுது வழங்கியது ஆதரவு போல விநாயகர் ஆலயம்,காளி அம்பாள் ஆலயம்,எமது ஊர் இளைஞர்கள் என எல்லோரது ஆதரவுகளும் கிடைக்கும் 10 வருடங்கள் அல்ல 100 வருடங்கள் ஆனாலும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறும்.அதற்கு எமது ஊரவரது மொத்த ஆதரவு கிடைக்க வேண்டும்.இந்த சில்லாலை சிந்திக்கும் சிறுவர் கழகத்திற்கு இம் முறை எமது கிராமத்தவர்களால் வீண் பழி சுமத்தபட்டுள்ளது.எமது கழக அங்கத்தவர்கள் எல்லோரும் ஒன்றினைந்து எமது கிராம சமூக அமைப்பு தலைவர்களினதும்கிராமத்தவர்களினதும் விடுகளிற்கு சென்று அவர்களின் கையில் அழைப்பிதழை கொடுத்து அவர்கள் அவ் அழைப்பிதழை பார்த்த பின்னர் அவர்களால் கேட்கப்படும் வினாக்களிற்கு விடையளித்த பின்னர் திரும்பினர். இப்படி செய்து அழைப்பிதழை கொடுத்து பார்த்து அவ் அழைப்பிதழ் கொடுத்ததிற்காக விழாவிற்கு வந்த பின்னர் அவ் விழாவில் நின்று”எங்களுக்கு அழைப்பிதழ் தரவில்லை என கூறியுள்ளனர்”.இப்படி இவர்கள் செய்வது என்னவென்றால் இந்த சிறுவர்கள் தானே என்று வீண் பழி சுமத்துவதாகும்.இப்படி இவர்கள் செய்வதால் தான் இந் நிகழ்வுகழ் தெடர்ந்து நடைபெற தடை ஏற்படுமெ ஒழிய மக்கள் வெளிநாடு செல்வதால் தடை ஏற்படாது ஆதரவுதான் பெருகும் தற் சமயமும் கூட சாந்தை வாழ்புலம் பெயர்ந்தவர்கள் சில்லாலை என்பதுடன் சாந்தை எனும் பெயரை இணைத்தால் ஆதரவு நல்குவதாக தெரிவுத்துள்ளனர்.அப் பெயரினை இணைக்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றோம்.இப்படி இந் நிகழ்வில் நடந்தவற்றையும் நடக்கவில்லை என கூறியுள்ளனர் எமது கிராம தலைவர்கள்.எனவே இப்படி வீண் பழிகளை இந்த சிந்திக்கும் சிறுவர்கள் மீது சுமத்தாமல் இருந்தால் இவை 10 வருடங்கள் அல்ல100 வருடங்கள் சாந்தை சித்தி விநாயகரின் ஆசியுடன் தொடர்ந்து நடைபெறும்

  • kunathilagam santhai:

   தம்பி மித்திரன் .நீர் யாரைப் பற்றி இங்கு கூறுகின்ரீரோ தெரியவில்லை .நான் எமது ஊரின் உண்மை நிலையையே இங்கு விளக்கினேன் .நீங்கள் சிறுவர்கள் எடுத்த முயற்சசியை நான் கொச்சைப் படுத்தி எதுவும் கூற வரவில்லை .நான் நீண்ட காலம் இவ் ஊரில் வாழ்ந்து பலரை வழி அனுப்பியவர்களில் ஒருவன் என்ற படியால் எங்கள் கடந்த காலத்தையும் அக் கால நிலையையும் சிந்தித்தே என் கருத்தை எழுதினேன் .எனது கருத்தின் உட் பொதிவு வெளிநாட்டு மோகத்தின் பிரதி பலிப்பே .இதனாலேயே இதை உங்கள் சிந்தனைக்கு விடுத்தேன் .நீங்கள் இதைத் தவறாகப் புரிந்தது போல் தெரிகிறது .என்வயதுக்கு இருக்கும் அனுபவத்திலேயே இக்கருத்தை எழுதினேன் .நான் கூறியதில் எங்கு தவறிருக்கிறது என தெரியத் தந்தால் மீள் ஆய்வு செய்ய வசதியாக இருக்கும் .என்னுடைய கருத்து உங்களை வழிப்படுத்தவே எனக் கூறி முடிக்கிறேன் .நன்றி .

   • மித்திரன்:

    உங்களது கருத்தை பற்றி எதையும் கூறவில்லை் உங்களது வெளிநாட்டு மோக கருத்தை நான் புரிந்து கொள்கின்றேன்.

   • மித்திரன்:

    உங்களது கருத்து எம்மை கொச்சைப்படுத்தி கூறவில்லை.எமக்கு வெளிநாட்டு மோகம் பற்றி மட்டுமே கூறியுள்ளிர்கள்.அது எமக்கு ஒர் அறிவுரை ஆகும்.உங்களது கருத்தான வெளிநாடு செல்லும் பிரச்சனையை எடுகோலாக கொன்று எமக்கு எற்பட்ட பிரச சனையை கூற வந்ததால் கருத்து பிழைத்து விட்டது.மன்னிக்கவும்.

 • kunathilagam santhai:

  தம்பி காந்தனின் கருத்தை நான் முழுதாக ஏற்றுக் கொள்கிறேன் .இது பற்றி நான் பலமுறை பலருடன் கதைத்திருக்கிறேன் .எங்கள் ஊரின் நிலை இன்று கவலைக்கிடமாகவே உள்ளது .எங்கள் ஊர் இன்று சேடம் இழுக்கும் நிலையில் உள்ளதை யாரும் சிந்திப்பதில்லை .வெளிநாடு செல்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கும் எமது சமூகம் எம் ஊரில் அற்றுப் போவதை யாரும் சிந்திப்பதில்லை .எத்தனை வீடுகள் குடியின்றி வெறுமனே காணப் படுகின்றது ?எத்தனை வீடுகள் அழிக்கப் பட்டுள்ளது ?

  வளம் கொழித்த எம் மண் இன்று வாழ்விழந்து தவிக்கின்றது .
  பச்சப் பசேலென இருந்த எம்மண் இன்று பாலைவனம் ஆகிவிட்ட்து .
  இது பற்றி யாரும் சிந்திப்பதில்லை .எங்கள் ஊரிலிருந்து ஒருகாலம் பண்டத்தரிப்பு சந்தையை மரக்கறி நிரப்பிய காலம் உண்டு .இன்று ஒரு கிலோ மரக்கறி கூட எம்மண்ணில் இல்லை .அதற்கும் வேறிடம் செல்கின்றோம் .சாந்தை சிற்றம்பல வித்தியாசாலை எமது சமூகத்தால் நிறைந்த காலம் போய் இன்று பேருக்குக் கூட எம்மவர் ஒருவரும் இல்லை .இது பற்றி நாம் யாரும் சிந்திப்பதில்லை .

  எமது கிராமத்திலுள்ள ஏனைய ஆலயங்களை விட எமது விநாயகர் ஆலையம் உச்ச நிலைக்கு வந்துள்ளது எனப் பெருமைப் படுகின்றோம் .உண்மைதான் .இதன் உள்ளார்ந்த அர்த்தத்தை நாம் யாரும் சிந்தித்தோமா ?இது எம்மூரின் அஸ்தமனத்தை விளக்கும் ஒரு ஆரம்பப் படி .நான் கோயிலை வெறுக்கவில்லை .என்கருத்துக்காகக் கூறுகின்றேன் .இக்கோயில் இவ்வளவுக்கு வளர்ந்தது இங்குள்ள அனைவரும் வெளிநாடு சென்றதாலேயே என்பதை அனைவரும் அறிவர் .காந்தன் கூறியது போல் இன்னும் பத்து வருடங்களில் இங்கு எமது சந்ததி வாழ்வு அற்றுப் போய்விடும் .மிக வேகமாகப் பரவிவரும் வெளிநாட்டு நோயே இதற்குக் காரணம் .
  குடும்பம் குடும்பமாக வெளிநாடு சென்றவர்களில் முன்னிலை வகிப்பது எம்மண் சாந்தை வாசிகளே .ஏனைய எமது சகோதர பணிப்புலம் காலையடி போன்ற இடங்கள் இந்த ஆபத்தைச் சந்திக்கும் வாய்ப்பில்லை .
  இப்போது என்சியுள்ள தம் உறவுகள் இருக்குவரை திருவிழா போன்ற வைபவங்களுக்கு வந்து கூடுவது மகிழ்ச்சி அளித்தாலும் இனிவரும் காலம் இது தொடருமா என்பது பற்றி யாரும் சிந்திக்கிறார்களா ?
  இப்போது இங்கிருக்கும் மூத்தோருடன் எங்கள் கிராம எங்கள் சமூக வாழ்வு அஸ்தமிக்கப் போவது பற்றி யாரும் சிந்திக்கிறார்களா ?

  எனவே சிறுவர்களே உங்கள் சிந்தனைக்கு இவற்றை வைக்கிறேன் .சிந்தித்தித்து எம்மண்ணைக் காக்க முன் வாருங்கள் .நன்றி

  • palan:

   நாங்கள் அனைவரும் ஒன்று இரண்டு பிள்ளை பெற்றால் இந்தநிலைதான் ஏற்படும் .இரண்இற்கு மேல் பிள்ளைபெறும் குடும்பங்களுக்கு ஏதாவது அரச தனியார் ஆதரவு உண்டா? வீட்டுத்திட்டம் தாரளமாக வந்தும் எங்கள் ஊரில் நிலம் இன்மையால் கைவிடப்பட்ட குடும்பங்கள் எத்தனை?

 • kaanthan canada:

  சில்லாலை சிந்திக்கும் சிறுவர் கழகத்துக்கு ஒரு பணிவான வேண்டுகோள் !
  பொழுது போக்காகச் சிந்திக்காது மனப் பூர்வமாகச் சிந்தியுங்கள் .உங்கள் ஊர் நிலையைக் கொஞ்சம் சிந்தியுங்கள் .இன்னும் குறைந்தது 10 வருடங்களில் உங்கள் ஊர் எப்படி இருக்கும் என்று சிந்தியுங்கள் .நான் குதர்க்கமாகக் கூறவில்லை .சீரியஸாகவே கூறுகின்றேன் .

 • kaanthan canada:

  கருத்து எங்கே ?

  • காந்தன் அவர்களே!
   சாந்தை ஊரவர்களின் சமூக கரிசனைகளையும். அக்கறைகளையும் அவர்களின் சமூகம் சார்ந்த செயல்ப்பாடுகளையும்.பற்றி நீங்கள் அறிவு பூர்வமாகச் சிந்திக்கின்றீர்கள். ஆனால் சாந்தை ஊரவர்களின் மனங்களில் அறிவை தாண்டி, உணர்வை பிரதிபலிக்க கூடிய பல கனவின் பிம்பங்கள் நிஜ‌மாய் ஆகின்ற‌ன என்ற உண்மையை நீங்கள் முதலில் சரியாக விளங்கிக்கொள்ளவேண்டும். நீங்கள் அறிவு பூர்வமாகச் சிந்திக்கின்றதை.அவர்களின் ஊர் அன்பு அவர்களை உணர்ச்சி பூர்வமாகச் சிந்திக்க வைத்து விட்டது. இதில் எது நிஜம், எது நிழல் ?

   • kaanthan canada:

    அண்ணா அற்புதன் அவர்களே ,நானும் சாந்தையில் பிறந்தவனாகையால் சாந்தையின் இன்றய நிலையை பார்த்த ஆதங்கத்திலேயே என் கருத்தைக் கூறினேன் .நீங்கள் விளங்காது கூறுவதாக நான் நினைக்கிறேன்

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து