உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

eythiyopiya_ciகாவிரி நதிநீர் விவகாரத்தால் கர்நாடகாவில் இன்றும் பதற்றநிலை நீடிப்பதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், தமிழகத்துக்கும் கர்நாடகாவுக்கும் இடையிலான போக்குவரத்து, அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில், தமிழக பதிவெண் கொண்ட வாகனமொன்று, இன்றும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

கலவரம் நீடிக்கும் பட்சத்தில், இராணுவம் வரவழைக்கப்படக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றது. காவிரி விவகாரம் மற்றும் கலவரம் ஆகியன குறித்து மாநில முதல்வர் சித்தராமையா, இன்று அமைச்சரவை கூட்டத்தை கூட்டியுள்ளார். இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தெரிகிறது.

இதேவேளை, பெங்களூரில் இடமபெறும் கலவரம் தொடர்பாக, சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையிலோ அல்லது கலவரத்தை தூண்டும் வகையிலோ எந்தவொரு நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்ப வேண்டாம் அனைத்து ஊடகங்களுக்கும், பொலிஸார் ஆலோசனை வழங்கியுள்ளனர். இதேவேளை, கர்நாடக மாநிலத்தின் பல பகுதிகளுக்கான பஸ் போக்குவரத்து இடம்பெறவில்லை என்றும் கூறப்படுகிறது.

பெங்களூரில் 15 ஆயிரம் பொலிஸார், பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அதேவேளை, நாளை புதன்கிழமை வரை, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவை கண்டிப்புடன் அமுல்படுத்த, உரிய அதிகாரிகளுக்கும் பணிக்கப்பட்டுள்ளது என்றும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து