உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

policesகாலி இமதுவ பகுதியில் பாதாள உலக கோஷ்டியைச் சேர்ந்த நபர் ஒருவர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.இமதுவ பொலிஸார் நேற்று மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இமதுவ வவுலுகல பகுதியில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைதுசெய்யப்பட்டுள்ள நபரிடமிருந்து கைதுப்பாக்க ஒன்றும், 6 துப்பாக்கி ரவைகளும் மீட்க்கப்பட்டுள்ளன.இந்த துப்பாக்கியானது உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதோடு மில்லிமீற்றர் 9 வகையை சேர்ந்த ரவையை பயன்படுத்தும் துப்பாக்கி என்பது குறிப்பிடத்தக்கது.கைது செய்யப்பட்ட நபர் காலி பலபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 18 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த நபர் பல கொள்ளை கொலை சம்பவங்களுடன் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.கைது செய்யப்பட்ட நபரை காலி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து