உங்கள் கருத்து
- m.suresh on பனிப்புலம் முத்துமாரியம்பாள்ஆலய 9ம் நாள் (18 07 2020) இரவு திருவிழா
- Krishnapillai Ampikkumar on பணமா ? பாசமா ?
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்
- நோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை
- நோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகமும் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை
- Loganathan on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை
- Logan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்
- பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on
தமிழில் எழுத
பிரிவுகள்
- ambigai paddusolai (7)
- Uncategorized (51)
- அம்மன் கோவில் (118)
- அரங்க நிகழ்வுகள் (15)
- அறிவித்தல் (34)
- அறிவியல் (46)
- ஆன்மீகம் (18)
- ஆறுமுக வித்தியாலயம் (52)
- இடுமன் கோவில் (58)
- இத்தாலி (27)
- ஊருக்கு உதவுவோம் (14)
- ஊர் காட்சிகள் (14)
- ஐரோப்பிய செய்திகள் (72)
- கனடா (51)
- கனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (78)
- கருத்துக்களம் (31)
- காலையடி அ.மி.த.க. பாடசாலை (11)
- காலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (5)
- காலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (13)
- காலையடி மறுமலர்ச்சி மன்றம் (145)
- கோவில்கள் (205)
- சங்கர் (11)
- சமைத்துப் பார் (468)
- சாத்தாவோலை (வயல்கரை) சிவன் (3)
- சாந்தை காளிகோவில் (21)
- சாந்தை சனசமூக நிலையம் (25)
- சாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (2)
- சாந்தை பிள்ளையார் கோவில் (104)
- சிந்திப்பவன் (16)
- சுவிஸ் (61)
- சுவீடன் (11)
- செய்திகள் (26,092)
- ஜேர்மனி (68)
- டென்மார்க் (34)
- தினம் ஒரு திருக்குறள் (80)
- திருமண சேவை (19)
- திருமணவிழா (36)
- நற்சிந்தனைகள் (13)
- நினைவஞ்சலி (182)
- நெதர்லாந்து (17)
- நோர்வே (61)
- பணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (20)
- பணிப்புலம் சனசமூக நிலையம் (65)
- புதுக்கவிதை (129)
- பூப்புனித நீராட்டு விழா (21)
- பொதறிவுப்போட்டி (1)
- மண்ணின் மைந்தர்கள் (6)
- மரண அறிவித்தல்கள் (182)
- முத்தமிழ் (32)
- எம்மவர் ஆக்கங்கள் (20)
- மெய் (24)
- வர்த்தக விளம்பரம் (34)
- வாரமொரு பெரியவர் (10)
- வாழ்த்துக்கள் (92)
- வினோதமான செய்திகள் (44)
- விரதங்கள் (5)
- வெளியீடுகள் (25)
- ஸ்ரீ காடேறி ஞானவைரவர் (2)
புதிய செய்திகள்
- புதிய அமைச்சரவை அமைச்சர்களுக்கு சம்பளம் கிடையாது; ரணில்
- மட்டு – புதுக்குடியிருப்பு கடற்கரையிலிருந்து ஆஸிக்கு செல்ல முற்பட்ட 21 பேர் கைது!
- இஸ்ரேலில் பெண் பத்திரிகையாளர் சுட்டுக் கொலை – ஐ.நா.கண்டனம்
- நியூயோர்க்கில் துப்பாக்கி சூடு 10 பேர் பலி
- மே 18 முன்னாள் போராளிகள் தாக்குதல் முயற்சி – த ஹிந்து நாளிதழுக்கு சாணக்கியன் கண்டனம்!
- வடக்கு , கிழக்கில் இருந்து முள்ளிவாய்க்கால் நோக்கி பேரணி
- கராச்சியில் குண்டு வெடிப்பு: ஒருவர் பலி- 13 பேர் படுகாயம்
- ஐக்கிய அரபு இராச்சிய ஜனாதிபதி காலமானார்
செய்திகள் தமிழ்
வாசகர்கள்
முந்தைய செய்திகள்
மகரிஷ வேதாஸ்த்திரியின் சீடர் மனவழக்கலைப் பேராசிரியர் பழனிவேல் (சென்னை)நெதர்லாந்து(அசன்) நாட்டில் நடைபெற்ற பொங்கல் விழாவின் போது ஆற்றிய உரை. டிவிடியை எமக்கு அனுப்பி வைத்தவர். டினேசன் சிவாசுப்பிரமணியம்.
அன்புள்ளம் கொண்ட சிவானந்தம் உங்களிடம் அன்பான வேண்டுகோள் தங்கள் கருத்துக்களையும், கேள்விகளையும் நட்புடன் ஏற்று, கருத்துப் பரிமாற்றம் செய்வதில் ஆட்சேபனை எதுவும் எனக்கில்லை நம்முடைய பெற்றோர்,மூதாதையர் நம் மரியாதைக்கு உரியவர்கள். மாற்றுக்கருத்துக்கு இடமே இல்லை.ஆனால் தெரியாமல் நம்முடைய பெற்றோர்,மூதாதையரின் ஏதோ ஒரு பழக்கவழக்கம் , நம்பிக்கை நம்முடைய பெற்றோரின்,மூதாதையரின் சுக ஆரோக்கியத்துக்கு கேடு உண்டாக்கி அவர்களின் வாழ்க்கையை அழித்து சிந்திக்க விடாது குறுக்கிபோடும் என்று உங்களுக்கு நன்றாக தெரியவந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்.
அவர்களின் பழக்கவழக்கத்தினை அப்படியே நீங்களும் பின்பற்றி நீங்களும் சிந்திக்காமல் உங்கள் பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுத்து அதை அவர்களும் தங்கள் பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்க ஊக்கம் செய்வீர்களா?
அல்லது உங்களின் பெற்றோருக்கு சொல்லி இது கூடாது. மாற்றம் தேவை என்று சொல்லி நல்ல வழி காட்ட மாட்டீர்களா? எங்கள் முதுகில் இருக்கும் அழுக்கை சிறுவன் கூடிகாட்டலாம்தானே?
என்னை நேரடியாகக் கண்டால் என்னைக் கடித்துக் குதறிவிடுவீர்கள் போலத்தெரிகின்றது உங்களது வசனங்களிலுள்ள ஆத்திரத்தின் உச்சம். இது தான் மதத்தின் மீதுள்ள பற்றின் வெளிப்பாடு?.
ஏனோ தெரியவில்லை இந்து மதத்தில் மாற்றுக்கருத்துடையவர்களை அறிவற்றவர்கள் போல சிந்திப்பது.? அடுத்தவரின் பெற்றோர்களை இழுத்துப்பேசுவதிலுந்தே தெரிகின்றது இந் நாகரீகத்தின் வளர்ச்சித் தன்மை
சிவானந்தம் அவர்கள் எப்பொழுதுமே கேட்க்கப்படும் கேள்விகளுக்கு உங்களது விளக்கங்களைக் கொடுக்காது நளுவுகின்றீர்கள் என்று எண்ணத் தோன்றுகின்றது. எழுதுபவர் யார் என்பதில் செலவிடும் நேரத்தைத் தவிர்த்து உங்களால் கூற முடிந்த பதில்களை எழுதுவதே நன்று. கடவள் பற்றிய வாதங்களில் ஈடுபடுபவர்கள் பொதுவாகவே உதாரணந்களையே பெரும்பாலும் தங்கள் விளக்கங்களுக்குத் துணையாக காட்டுவார்கள். மேற்ப்படி உரையில் பேராசிரியர் பழனிவேல் (சென்னை) நாம் உயர்தர வகுப்பில் புவியியற் பாடம் படித்தபோது கற்ற விடையங்களை சுவையாகவும் சுவாரஸ்யமாகவும் தமது மேடைப்பேச்சுத் திறமையால் சமயத்துடன் தொடர்புபடுத்தி விளக்கியுள்ளாரே தவிர வேறு ஒன்றும் புதிய விளக்கங்கள் எவையும் பெறமுடியவில்லை.
அவதானி அவர்களே!
சிந்திப்பவன் கேட்ட கேள்விக்கு நான் எழுதிய இரு பதில்களிலுமே கடவுளைப் பற்றிய பதில் இருக்கிறது. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி தங்களிடம் இல்லையென்றால் நான் பொறுப்பேற்கமுடியாது. தாங்கள் கடவுளைக் காண வேண்டுமானால் தாங்கள் தங்கள் பெற்றோரிடம் வைத்துள்ள பக்தியை எண்ணிப் பாருங்கள், தங்கள் குடும்பத்தின் மீது வைத்துள்ளபக்தியை எண்ணிப் பாருங்கள் . தங்கள் பெற்றோர் தங்களுக்கு அறிமுகம் செய்த குல தெய்வத்தின் மீது அவர்கள் எவ்வாறான பக்தியை வைத்திருந்தார்கள் என்பதை எண்ணிப் பாருங்கள். தங்கள் மனதில் வளர்ந்துள்ள காழ்ப்புணர்வுகளை களைந்திடுங்கள். பெற்றார் காட்டிய குல தெய்வத்தை தூய உள்ளத்துடன் வழி படுங்கள். கடவுளைக் காணும் பேரின்பத்தைப் பெற்றிடுவீர்கள். அழுக்குகள் நிறைந்த உள்ளம் இருந்தால் சந்தேகங்களும், சலனங்களுமே வளரும்.நானும் தங்களைப் போல் ஒரு மானிடனே. என் பெற்றார் காட்டிய வழியில் இறை பக்தியை வளர்த்து, கற்ற கல்வியின் துணைகொண்டு கற்றறிந்த அறிஞர்கள் காட்டிய பாதையில், கல்லும்,முள்ளும் நிறைந்த வாழ்க்கைப் பயணத்தில், இறை துணையுடன்
பயணிப்பவன். தாங்கள் கருத்து வழங்குவதற்கு அநாமதேயப் பெயர்களை உபயோகிப்பதே தங்களிடம் நிறைந்துள்ள மனச் சஞ்சலங்களை வெளிப்படுத்துகிறது. இதவே தங்களிருவருக்கும் பெரிய தடைக்கல்லாகும். உள்ளத்தை தூய்மைப் படுத்துங்கள்! உறவுகளை மேம்படுத்துங்கள்! உலகை ஆளும் உத்தமனாம் இறைவன் உங்கள் முன் தோன்றுவான்.
நன்றி!
• எனது அன்பின் சிவானந்தம்! நன்றி உங்கள் கருத்துகளுக்கு! நாங்கள் கருத்துகளை ஆராய்வோம். நான் குறிப்பிடுவது கடவுள் உண்டா இல்லையா?கேள்வி மட்டுமே ஒழிய அல்லது கருத்துக்களமே ஒழிய வேறு ஒன்றுமில்லை. . இதே கருத்தினைத்தான் பகீரதனுக்கு ஆறாவது கருத்தில் நான் தெரிவித்தேன். இதுவரையில் நான் கிட்டதட்ட முப்பத்திமூன்று கேள்விகள் கேட்டு இருந்தேன். பதில் ஒன்றும் இல்லை.ஆனால் பதில் இல்லாவிட்டால் கூடி பரவாயில்லை. மக்கள் சிந்தித்தார்கள் என்பது மட்டும் உண்மை
• .நீங்கள் புதிதாக ஒரே ஒரு கேள்விகேட்டு கேள்விக்கு விடை சொன்னால்த்தான் தொடருவோம்.இல்லையென்றால் விட்டு விடுவோம் என எழுதுகிறீகள்..நீங்கள் கேட்ட கேள்விக்கு எனது அறிவுக்கு எட்டிய வரையில் பதில் தர முயர்ச்சிக்கிறேன்.
• விடை இருப்பதாக நீங்கள் நினைத்து பின்பற்றுகிற இந்துசமய வழியில் எப்போது புவி வாழ்வின் முடிவு அறியலாம் என்றால் இந்துசமயத்தினை பின்பற்றுகிற நீங்கள் அறிவதுதானே.
• அல்லது உங்களுக்கு சாத்திரத்தில் நம்பிக்கை உண்டென்றால் எதிர்காலத்தில்
என்ன நடக்கும் என்று நல்ல சாத்திரியிடம் உங்கள் குறிப்பினை கொடுத்து
சாத்திரம் கேட்டுப் பார்க்கவும் .எனக்கு சாத்திரம் தெரியாது.தெரிந்தால் சொல்லிவிடுவேன்.
• உங்கள் சிந்தனைக்கு இந்தப் பெரிய இந்துமதத்தினை பின்பற்றுகிற பல பெரிய இந்துக்கோயில்கள் உள்ள பலகோடி இந்து மதத்தினர் வாழுகின்ற தமிழ்நாட்டினை ஆட்சிசெய்யபவர்கள். திராவிடக்கழகத்தினர் எந்த மதத்தினர்?. கடவுள் இல்லை என்ற கொள்கை உள்ளவர்கள்.ஆனால்அவர்களை ஆட்சி பீடம் ஏற்றியவர்கள் இந்து மதத்தினை ஆதரிக்கின்ற இந்துக்கள்தான்! என்பதை சிந்தித்து பாருங்கள்
• .தயவு செய்து சிந்தியுங்கள் பேராசிரியர் சொல்கிறார் விதை புழுக்களாகவோ பூச்சியாகவோ மறுபிறப்பு எடுப்பதாக உங்களால் இதை ஏற்றுக்கொள்ள முடியுமா?பழைய முற்பிறப்பு பதிவுகளை மறக்க யோகாசனம் .செய்யவேண்டுமாம். நான் தேவராய் இருந்து மனிதராய் வந்தவன் என்றால் ஏன் நான் நல்ல முற்பிறப்பு பதிவுகளை அழிக்கவேண்டும்.தொடருவோம்
,
அன்புடன்,
சிந்திப்பவனுக்கு!
தங்கள் கடவுள் இருக்கின்றாரா? என்ற வினாவிற்கு தாங்கள் விடை தேடுவது சற்றுக் கடினமான விடயமாகும். ஏனெனில் கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்காகத் தாங்கள் அலைந்து கொண்டிருக்கிறீர்கள். இத்தகைய அறியாமையாலும், வாழ்க்கையில் தங்களிற்கு ஏற்பட்ட சில கஷ்டங்களாலுமே தங்கள் மனதில் இவ் வினா எழுந்துள்ளது. தங்களது மனச் சஞ்சலங்களைப் போக்கி, மனதை ஒரு நிலைப்படுத்திக் கொள்ளப் பழகிக்கொள்வீர்களானால். தங்களது வினாவுக்கு தாங்களே விடைகாண முடியும். என்னுடன் தொலை பேசியூடாக அல்லது இலத்திரனியல் கடிதமூலமாக தொடர்பு கொள்வீர்களாயின் எனது அநுபவங்களைக் கூறி, தங்கள் வினாவுக்கான விடை தேடலுக்கு ஓரளவிற்கு உதவ முடியும். மீண்டும் சந்திப்போம்.
நன்றி!
அன்புடன்,
சிந்திப்பவனே!
என்னைத் தாங்கள் அறிவீர்கள் போலும் ஆனால் நான் தங்களை அறியேன். எனினும் தங்கள் கருத்துக்களையும், கேள்விகளையும் நட்புடன் ஏற்று, கருத்துப் பரிமாற்றம் செய்வதில் ஆட்சேபனை எதுவும் எனக்கில்லை. தங்கள் கருத்துக்களையும், கேள்விகளையும் பார்க்குமிடத்து தாங்கள் ஒரு சிறந்த கல்வியாளராக இருப்பீர்கள் போல் தெரிகிறது. எனினும்
தாங்கள் மக்களை செம்மறி ஆட்டுக் கூட்டமெனக் கூறியிருப்பது மிக மிகத் தவறாகும். இக் கூற்றைத் தாங்கள் வாபஸ்பெற வேண்டும் என்பது எனது பணிவான கருத்தாகும்.
கடவுள் பற்றிய தங்கள் வினாவிற்கு ஒரேயொரு வினாவை மட்டும் தங்கள் முன் வைக்கின்றேன்
தங்களால் உறுதியான பதில் தர முடியுமாயின் எமது கருத்துப் பரிமாற்றத்தைத் தொடரலாம்.
வினா இதோ!
தங்களது வாழ்க்கையில் அடுத்து வரும் மணித்துளியில் தங்கள் உடல், மனம், உறவு,நிலைமைகள் எவ்வாறு இருக்கும், தங்களது புவி வாழ் இறுதி நாள் எது? என்பதை அழுத்தம்,திருத்தமாக உறுதியாகக் கூற முடியுமா? கூற முடியுமாயின் கருத்துப் பரிமாற்றத்தை அன்பான நட்புடன் தொடருவோம். இல்லையெனில் இத்துடன் நிறைவு செய்துகொள்வோம். அப்பர் சுவாமிகளின் தேவாரம் ஒன்றையும் தங்கள் தேடுதலுக்காக முன்
வைக்கின்றேன்.
* விறகில் தீயினன் பாலிற் படு நெய்போல
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்
உறவுக் கோல் நட்டு உணர்வுக் கயிற்றினால்
முறுக வாங்கிக் கடைய முன் நிற்குமே*
இத் தேவாரத்துக்கான பொருளைத் தாங்கள் அறிந்துகொள்வீர்களென நம்புகின்றேன்.
நன்றி!
அன்புடன் சிவானந்ததிற்க்கு!! நன்றிகள் யோகக்கலையை அருளியவர் யோகா சுவாமிகள் அல்ல பதஞ்சலிமுனிவர் என்று திருத்தியமைக்கு ,உண்மையில் நீர் எப்படி நினைத்தாலும் பரவாயில்லை. நீர் பிழை என சுட்டிக்காட்டியதை நான் பெரு மனதுடன் ஏற்றுக்கொள்கிறேன். தவறு விடுவது மனிதஇயல்பு.
ஆனால் நீர் செய்வது தப்பு .எனது கருத்துகளுக்கு எதிர்க்கருத்து அல்லது விளக்கம் தர முடியும் என்றால் தரவும்.கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்றால் துப்பாக்கிரவையிலும் இருப்பாரா?கடவுளை மனிதன் செய்யலாமா? திருக்கல்யாணமலையில் சிவனுக்கு கலியாணவீட்டுக்கு முப்பத்துமுப்பதுகோடி தேவர்கள் ரிஷிகள் போனதாலை தட்டையான பூமி சரிந்து விட்டது. அகத்தியரை மறுகரைக்கு சிவபெருமான் அனுப்பி சமப்படுத்துகிறார். பூமி தட்டையா? உருண்டையா?(கோளமா) தேவை இல்லாது ஏதோ எல்லாம் எழுதுகிறீர்..உம்மைக் கேட்டேனா என்னை கின்னஸ் புத்தகத்தில் பதியச் சொல்லி,என்னை கும்பிடச்சொல்லி கருத்துகளுக்கு கருத்தினை மட்டும் தரவும்.உம்மால் நல்ல கருத்துக்களை தரமுடியாது.
ஆனால் உமக்கு எனது கருத்துக்கள் கின்னஸ் புத்தகதில் பதிய வேண்டும் போல இருந்தையிட்டு மகிழ்ச்சி.
ஒருகருத்தினை எழுதும் போது தயவு செய்து யோசித்து எழுதவும். இப்படியாகத்தான் முன்பு ஒரு வாசிகசாலை சம்பந்தமாக இணயத்துக்கு ஒரு மடல் முன் பின் யோசியாமல் எழுதிப்போட்டு தயவு செய்து மடலை எடுத்து விடும்படி இணயத்தினை கைஎடுத்து கும்பிட்டீர்.
,பல பன்றிகள் கூட்டமாய்த் போகும். சிங்கம் தனியாகத்தான் போகும். எமது சமுதாயத்தின் விழிப்புணர்ச்சிக்கு நான் கூறும் கருத்துகளை ஆராயாமல் செம்மறிஆட்டுக் கூட்டம் போல எல்லாரும் போகினம். நாமும் ஆராயாமல் போய் எமது சமுதாயத்தினையும் கொண்டுபோய் பாழ்ங்கிணற்க்குள் தள்ளிவிடும் முயர்ச்சி செய்கிறீர் என்பதை மட்டும் மனதில் வைத்தால் நல்லது. உண்மை கொஞ்சம் கசக்கும் தான். கருத்துகளுக்கு கருத்தினை மட்டும் தரவும் .108 சித்தர்களில் 18வது சித்தர் பதஞ்சலிமுனிவர் யோகா பற்றி எழுதியதை ஒளிவு மறைவின்றி நீர் எழுதுவீரோ?பிள்ளையார்,பிரம்மன் எப்படிப் பிறந்தார் என்பதை புராண இதிகாசங்களில் உள்ளதை ஒளிவு மறைவின்றி நீர் எழுதுவீரோ?
யோகா ஒரு நல்லஅப்பியாசம் உடலுக்கு என்றுதானே நான் எழுதி இருந்தேன்
எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. மனதுக்கு ஏதன் இடைஞ்சலாக எழுதினால் மன்னித்துவிடவும்.கருத்துக்களமாகவே இதைப் பார்க்கவும்.
மனவழக்கலை பற்ரிய உரை மிகவும் அருமை மனிதன் மற்றும் உயிர் இனங்கள் எப்படி இந்த உலகில் தோன்றின என்ற கேள்விக்கு மிகவும் அருமையாகவும் இலகுவாகப் புரிந்து கொள்ளும் விதத்திலும் எடுத்துரைத்துள்ளீர்கள் இருப்பினும் ஓர் விடையத்தில் மட்டும் எனக்கு சிறு குழப்பம் இருந்தது. நமக்கு எல்லாம் பழைய பதிவுகள் இருக்கின்றன என்பதில்.ஆனால் இப்போ சிந்திப்பவரின் பதிலை படித்தபின் நான் புரிந்து கொண்டேன். நமக்குள் என்ன என்ன பழைய பதிவுகள் உள்ளன என்று. நன்றி நன்றி நன்றி சிந்திப்பவர்க்கு மிகவும் நன்றி மிகவும அருமை. வாழ்க வழமுடன்
அன்புடன்,நா.சிவாஸ்
நன்றிகள்! பேராசிரியர் எல்லாமேதெய்வம் (கடவுள்,வெளி) என்று எங்களை சந்தோஷப்படுத்தியமைக்கு நன்றிகள் . மனிதர் எல்லாரும் கடவுள் குறிப்பிட்டமைக்குமகிழ்ச்சி.மரம்,செடிகொடி,ஊர்வன,பறப்பன,மிருகங்கள்.எல்லாம் கடவுள் .நிலம்,நீர் நெருப்பு, ஆகாயம்,காற்று எல்லாம்கடவுள். …நீங்கள் குறிப்பிட்படி இவை எல்லாம் கடவுள் என்றால் ஏன் கோயில்,குளம்என்றுகட்டவேணும், ஏன் கோயிலுக்கு போகவேணும்புழுக்களையும்,பூச்சிகளையும்,மனிதரையும்,அல்லது நெருப்பினை கொழுத்திப்போட்டு கும்பிட்டுவிட்டு இருக்கவேண்டியதுதானே. மறுபிறவிக்கொள்க்கைக்கு விளக்கம் சொல்லி எல்லாரையும் பைத்தியக்காரர் ஆக்கி விட்டீர்கள். அதாவது ரின்னுக்குள் பலநாட்களாக அடைத்து இருக்கும் விதை புழுவாகவோ,பூச்சியாக மறுபிறவி அல்லது கூர்ப்ப்பு அடைவதாக கூறினீர்கள். விதைகளில் இருந்த பூச்சி,புழுக்களின்முட்டை பூச்சியாக புழுவாகவோ பொரித்து வரவில்லையா?
யோகக்கலை சிறந்த உடல் அப்பியாசம். ஆனால் யோகக்கலையை அருளிய யோகர் சுவாமிகள் யோகக்கலை பற்றி கூறியவார்த்தைகளைப் பற்றி பெரிதாக நீங்கள் ஒன்றும் சொல்லவில்லை. யோகக்கலைக்கு தொடங்கிய காலம் என்று ஒன்று உள்ளது.அதற்க்கு முன்பு வாழ்ந்தவர்களின் நிலை என்ன??
அன்புடன்,
சிந்திப்பவனிற்கு!
தங்கள் சிந்தனைகள், கேள்விகளை நோக்குமிடத்து தாங்களே இவ்வுலகின் அதிசிறந்த அறிஞரும்,சிந்தனையாரென்றும் உலகுக்கு உணர்த்திட தாங்கள் முயற்சிப்பதாக
தெரிகிறது. ஆனால் தங்களது இந்த ஆசையை நிறைவு செய்வதற்கு இந்த இணையம்
பொருத்தமானதாகத் தெரியவில்லை.தாங்கள் உலக சாதனையாளர்களை அறிமுகம்
செய்யும் கின்னஸ் நிறுவனத்தாருடன் தொடர்புகொள்வீர்களானால் அவர்கள் தங்களை
உலகில் சிறந்த அறிஞரும்,சிந்தனையாளருமென தமது கின்னஸ் புத்தகத்தினூடாக அறிமுகம் செய்து வைப்பார்கள். அதன் பின்னர் இவ்வுலகில் வாழும் பல் வேறு மதங்களை
கடைப்பிடிக்கும் கோடானுகோடி மக்கள் அனைவரும் தத்தம் இறை நம்பிக்கைகளைக் கைவிட்டு,தங்களது கருத்துக்களை ஏற்று, ஏன் தங்களையே கடவுளாக ஏற்று வழிபட்டாலும் வழிபடலாம். இதனால் தாங்கள் இவ்வுலகில் நிலவும் மத பேதங்களை மறைத்த மகானாகவும் மாறலாம், அடுத்ததாக, யோகக் கலையானது யோகர் சுவாமிகளால் உருவாக்கப்படவில்லை. பல்லாயிரம் ஆண்டுகளிற்கு முன்னர் வாழ்ந்த பதஞ்சலி முனிவரே யோகக் கலையின் தந்தையாவார். கடவுள் மற்றும் ஆலயங்கள் பற்றிய தங்கள் சந்தேகங்களை தவிர்ப்பதற்கு, சிறிது காலச் சிற்றாசைகளுக்காக சிதறியோடும் தங்கள் சிந்தனைகளை தங்கள் ஆழ்மனத்தில் சிறை வைத்து விட்டு, பேரின்பத்தைத் தர வல்ல பரம்பொருள் பற்றி பல நூல்கள் பாரினில் உண்டு. படியுங்கள், இணையத்திலும் தேடிப் பிடித்துப் படித்திடலாம். இதை நீங்கள் செய்வீர்களானால் இந் நூற்றாண்டின் பார் போற்றும் பரமசிவனாய்ப் பவனி வந்திடலாம். பணிப்புலத்து அம்பாளின் பிள்ளைகளிலும் ஒருவனாகிடுவீர்கள், முயற்சிக்கவும்.
வாழ்க வையகம்! வளர்க தங்கள் சிந்தனைத் திறன்! வாழ்க வளமுடன்!
நன்றி!
Lekker saai hoor… althans, ik voel me jong hiervoor….(Nice boring though … at least I feel young for this ….)
ஆகா, panipulan .net அறியாத பாசைகளை (google ஐ கொண்டு) மொழி மாற்றம் கூட செய்யுது…
ஆனால் நான் எழுதியதை டச்சில் சொன்னால் தான் ஒரு தனி இன்பம்..அது தினேஷிற்கு விளங்கும்