உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

நடிகர் விஜய் அரசியலில் குதிக்கிறார். இதற்கான ஆயத்தப் பணிகள் ரகசியமாய் நடக்கின்றன.

இரு மாதங்களுக்கு முன் ரசிகர் மன்ற முக்கியஸ்தர்களை சென்னைக்கு அழைத்து பேசினார்.

அவர்கள் ஒட்டு மொத்தமாக விஜய் அரசியலில் ஈடுபட வற்புறுத்தினர்.

ரசிகர் மன்றம் ஏற்கனவே மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டு வாக்காளர்களை விஜய்க்கு ஆதரவாக திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

குக்கிராமங்கள் வரை இந்த இயக்கத்தின் கிளை அமைப்புகள் துவங்கப்பட்டு விட்டன. அரசியல் கட்சி துவங்கும் பட்சத்தில் இவற்றை அப்படியே வட்ட, பகுதி, மாவட்ட கழகங்களாக மாற்றி விடலாம் என்று விஜய்யிடம் ஆலோசனை சொல்லப்பட்டதாம்.

தற்போதுள்ள சூழலில் தனிக்கட்சி துவங்குவதா? அல்லது வேறு கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதா? என்பதே விஜய் முன் வைக்கப்பட்டுள்ள முக்கிய கேள்விகளாய் உள்ளன.

கட்சி துவங்குவதற்கு இன்னும் சில காலம் போகட்டும் என்று அவர் கருதுவதாக கூறப்படுகிறது. அதே நேரம் இந்த தேர்தலில் தனது பங்களிப்பும் ரசிகர்கள் பங்களிப்பும் இருக்கவேண்டும் என கருதுகிறார்.

அந்த வகையில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவிப்பது அவர் இலக்காக தெரிகிறது.விஜய் தந்தை டைரக்டர் எஸ்.ஏ. சந்திரசேகரன் இரண்டு முறை ஜெயலலிதாவை சந்தித்து விட்டார். அவர் கட்சியில் இணைந்து ஏதேனும் தொகுதியில் போட்டியிடுவார் என பேச்சு நிலவுகிறது.

விஜய் அ.தி.மு.க. கூட்டணியை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுவார் என கூறப்படுகிறது.“காவலன்” பட ரிலீசின் போது ஏற்பட்ட தடைகள் அவரை அ.தி.மு.க. பக்கம் சாய்த்து உள்ளது. ஓரிரு வாரத்தில் ஜெயலலிதாவை விஜய் சந்தித்து பேசுவார் என கூறப்படுகிறது.

தற்போது பொள்ளாச்சியில் “வேலாயுதம்” படப்பிடிப்பில் தீவிரமாக உள்ளார். 20-ந் தேதிக்குள் அந்த படம் முடிந்து விடும் என தெரிகிறது.

அதன் பிறகு சென்னை வந்து ஜெயலலிதாவை சந்திப்பார் என கூறப்படுகிறது. அடுத்த மாதம் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவும் திட்டமிட்டுள்ளார்.

இரு மாதங்களுக்கு முன் இதுபோல் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு ரசிகர்களை சந்தித்தார். உதவிகளும் வழங்கினார். அதே மாவட்டங்களுக்கு மீண்டும் சென்று ரசிகர்மன்ற கூட்டங்களில் பேசுகிறார்.

அப்போது அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக வாக்காளர்களை திரட்டும் பணியில் ஈடுபடுமாறு ரசிகர்களை வற்புறுத்துவார் என தெரிகிறது. தேர்தல் பிரசார சுற்றுப்பயணமாகவும் அது இருக்கும் என்றும் விஜய் தரப்பில் கூறப்படுகிறது.

விஜய்யை வரவேற்று அனைத்து மாவட்டங்களிலும் ஜெயலலிதா, விஜய் படங்களுடன் ரசிகர்கள் பேனர்கள் வைக்க துவங்கி உள்ளனர்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து