உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

railதலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதுண்டு இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று(4) இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் மன்னார் புதுக்குடியிறுப்பு கிராமத்தைச் சேர்ந்த சேர்ந்த இளம் குடும்பஸ்தரான 29 வயதுடைய முஹம்மது நஜிபுதீன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தலைமன்னாரில் இருந்து நேற்று (4) வெள்ளிக்கிழமை இரவு கொழும்பு நோக்கி பயணித்த குறித்த புகையிரதத்துடன் தலைமன்னார்-மன்னார் பிரதான வீதி சின்னக்கருசல் பகுதியில் உள்ள புகையிரத வீதியிலே குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.

இன்று காலை சடலத்தை கண்ட கிராம மக்கள் மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளது.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மன்னார் பொலிஸார் சடலத்தை மீட்டதோடு மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து