உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

சவுதி அரேபியாவில் ஒரு வீட்டில் வேலை செய்த பெண்ணின் உடம்பில், தண்டனைக்காக அறையப்பட்ட ஏழு ஆணிகள் அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டன.

இலங்கையை சேர்ந்த 18 லட்சம் பேர் வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டிருக்கின்றனர். இவர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள். இவர்கள் வளைகுடா நாடுகளில் பணியாற்றும் போது அங்குள்ள எஜமானர்களால் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகி வருகின்றனர்.

குறிப்பாக சவுதி அரேபியாவில் வீட்டுவேலை செய்யும் இலங்கை பெண்களின் உடலில் ஆணியை செலுத்தி தண்டனை வழங்குவது நடக்கிறது. கடந்த ஆண்டு அரியாவதி என்ற பெண்ணின் உடலில் 21 ஆணிகள் செலுத்தப்பட்டன.

தவறு செய்யும் பெண்களை இந்த முறையில் தண்டிப்பதை அமெரிக்க மனித உரிமை அமைப்பு ஏற்கனவே கண்டனம் செய்திருந்தது. இருப்பினும் இந்த குற்றச்சாட்டை சவுதி அரேபியா மறுத்து வருகிறது. இந்நிலையில் ரோகினி என்ற பெண்ணின் உடலில் சவுதி அரேபிய எஜமானர் ஏழு ஆணிகளை செலுத்தி தண்டித்துள்ளது தெரிய வந்துள்ளது.

கடந்த ஆண்டு இறுதியில் சவுதிக்கு வேலைக்கு சென்ற ரோகினி, அங்கு நடந்த கொடுமைகளை தாங்க முடியாமல் கடந்த வாரம் இலங்கை திரும்பினார். இலங்கையின் குருனிகலா பகுதியை சேர்ந்த இந்த பெண்ணுக்கு டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் அவரது கால் மற்றும் கைகளில் செலுத்தப்பட்டிருந்த ஏழு ஆணிகளை அகற்றினர்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து