உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

வணக்கம்: வா + இணக்கம் = வணக்கம்.<<  தங்கள் வரவை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம் (சம்மதிக்கின்றோம் உடன்படுகின்றோம்)  என்பதே இதன் பொருள்.  வலதுகரம் நாம் எனவும். இடதுகரம் நம்முன் அல்லது நம்மனதில் நிற்பவர்கள் எனவும் எண்ணியே கரம் கூப்புவது. 

வழிபாடு: வழி+ பாடுபடுதல் = வழிபாடு.<<< நம் முன்னோர்கள், தாய் தந்தை, ஆசான், கடவுள், காட்டிய, அனுபவித்து வழங்கிய உணர்த்திய, நல்ல வழிகளை கடைப்பிடித்து, அதன்வழி நடப்பதே வழிபாடு எனப்படும்.


 

 

 நண்பர்கள். உறவினர்கள். விருத்தினர்கள். மற்றும்  அனைவரையும் வரவேற்கும் போது இருகரங்களையும் இதயத்தின் முன் நிறுத்தி (கைகளை கூப்பி) சிரம்தாழ்த்தி வரவேற்க  வேண்டும். நம் கரங்களை இதயத்தின் முன் நிறுத்துவதால் இதயபூர்வமாகவும். சிரம் தாழ்த்துவதால் பணிவுடனும். வரவேற்கின்றோம்.என்று பொருள்படும். 

        தாய் தந்தையை வணங்கும் போது முகத்தின் முன் கரங்கூப்பி வணங்க வேண்டும். (ஓர் மனிதனை அடையாளம் காண்பது என்றால் முகத்தை வைத்தே அடையாளம் காண்போம்.)  நம்மை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தியதால் தாய் தந்தையை முகத்தின் முன் கரங்கூப்பி வணங்கவேண்டும். 

குருவை வணங்கும்போது நெற்றிக்குநேர் கரங்கூப்பி வணங்கவேண்டும். நம் சிந்தனையை தூண்டி நம்மை சித்தித்து செயற்பட வைத்தவர் என்பதினால்.குருவை நெற்றிக்கு நேர் கரங்கூப்பி  வணங்க வேண்டும். 

கடவுளை வணங்கும் போது இருகரங்களையும் தலைக்குமேல் உயர்த்தி கூப்பி வணங்கவேண்டும். 

கடவுள் அனைத்தையும் கடந்தவர். அனைத்தையும் நமக்கு தந்தவர். எப்பொழுதும் எம்மை ஆழ்பவர் என்பதனால் நம் கரங்களை முடிந்த அளவிற்க்கு தலைமேல் உயர்த்தி கூப்பி வணங்கவேண்டும். 

  வழிபடவேண்டியவர்கள்: தாய் தந்தை, குரு, கடவுள், இவர்கள் காட்டிய வழியில் நடப்பவர்கள். என்றும் நல்ல நோக்கம் உடையவர்களாக, நல்ல வழியில் நடப்பவர்களாக, நல்ல காரியம் செய்பவர்களாக, நல்லவாழ்வு வாழ்வார்கள் என்பதில் ஐயமில்லை. 

 அன்புடன்,
 நா.சிவாஸ்

9 Responses to “வணக்கம் மற்றும் வழிபாடு என்றால் என்ன.”

 • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

  -இக்கட்டுரையின் தலயங்கத்துக்குள்ளே நிற்போம்-
  நல்ல கட்டுரை, பிரியோசனமானது என்னைபோல் அரைகுறை தமிழும், தமிழ் பண்பாடும் தெரிந்த சந்ததியினரிருக்கு – முக்கியமாக அதில் நம்மில் புலன்பெயர்ந்தவர்க்கு – பிரயோசனம். நாம் நாளாந்தம் செய்யும் சில விடயங்களுக்கு விளக்கம் தெரியாமல் மற்றவர்களும் செய்கிறார்கள் நாமும் செய்வோம் என்ற மனப்பாங்கு இருக்காமல். நாம் செய்யும் கருமங்களின் அடிப்படை விளக்கம் இருந்தால் சிலவற்றை ஏன் செய்கிறோம், ஏன் செய்யகூடாது என விளங்கும். சுப்புறு-அண்ணை, இப்படியான அடிப்படை விளக்கங்கள் இன்னும் இருந்தால் எடுத்து விடுங்கோ – Panippulam.net இற்கு இவற்றை பிரசுரிப்பதற்கு எந்த ஆட்சேபனையும் இருக்காது, என்னை போல் பல பேருக்கு பிரியோசனமாகும். எமது பண்பாடு பழமை வாய்ந்தது, இவை ஒன்றும் இன்றைய நாட்களில் Google இல் தேடிபிடிக்கமுடியாது. நன்றி சுப்புறு-அண்ணை விழிப்புணர்ச்சிக்கு, இனியாவது நான் ஒழுங்க்காக கும்பிடுவேன் கால் நூற்றாண்டு பிழையாக செய்தபின்னும் ….
  இதன் கட்டுரையில் கருத்து தெரிவித்தவர்களில் பலரில் ஒரு ஏக்கம் தெரிந்தது: தமிழும் தமிழ் பண்பாடுகளும் அழிந்துவிடும் என்று. என் கருத்தும் ஏறக்குறைய அதுதான் புலன்பெயர்ந்த நாடுகளில் இன்னும் 10 வருடங்களில்… எல்லா தமிழ் அடையாளங்களும் சற்று சற்றாக அழியும், முதலில் தமிழின் எழுத்து உருவம், அதன் பின் பேச்சு உருவம் இவையோடு சேர்ந்து தமிழின் பண்பாடுகள். 10 சதம் பலமுறைகளில் முயற்சித்தார்கள் தமிழ் வளர்ச்சியின் குன்றலை புலன்பெயர்ந்த நாடுகளில் தடுப்பதற்கு – அவர்(பலத்தை)யும் அழிச்சிட்டான்கள். எது எப்படி அழிந்தாலும் சேலை(saree ) , தமிழ் party எல்லாம் உருவங்கள் நவீனப்படுத்தபட்டு அழியாமல் தொடரும்.
  -இக்கட்டுரையின் தலயங்கத்துக்குள்ளே நிற்போம்-

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   -Funny Zone begins-
   தமிழ் party எல்லாம் உருவங்கள் நவீனப்படுத்தபட்டு அழியாமல் தொடரும்.
   உதாரணம்:- 2020 -இல் புலன்பெயர்ந்த நாட்டில் ஒரு தமிழ் party -இற்காக மட்டும் ஒரு சின்ன தீவு ஒன்று உருவாக்கி அதில் bday அல்லது wedding party ஒன்றை செய்து முடிந்ததும் அத்தீவை அழிப்பது நடைமுறை பழக்கமாக வரலாம். அந்த party இல் helicopters இல் தான் வந்து பூ தூவுவார்கள்…
   ஐயையோ….Canada விலிருந்து வாசிக்கிறவர்களுக்கு ஒரு நல்ல யோசனையாக தான் இருக்கிறது போல நினைப்பார்கள். உதவியாக ஒரு முன்யோசனை: Canada வில் வசிக்கும் முதல் ஆயிரம் எங்கட ஊர் குடும்பத்திற்கு luck . Thousand Islands (LOL ) ஐ பாவிர்கலாம்.
   -Funny Zone ends-

 • r.suki:

  வணக்கம் எனது அன்பனே புலம்பெர் பெற்றோர்களே நான் உங்கள் மேல்தான் குன்றம் சொல்லுவேன் என்னென்றால் நிங்கள் கிறிஸ்மஸ் ஏதே எமது நிகழ்வு மாதிரி கொண்டடிரின்கள் எமது இந்து சமயம் கண்களுக்கு தெரியவில்லையோ உதராம் எமது தை பொங்கல் இத நிங்கள் பின்பற்றவும் எமது பிள்ளைகள் எமது இந்து சமயம் விளங்கும் உறவுகள்

 • Selvarajah K.:

  அம்பாள் துணை நிற்க;
  கட்டுரைக்கு விளக்கம் வளங்கிய உறவு சிவசுக்கு நன்றி கலந்த பாராட்டுக்கள். நான் அதிகமாக அனைவருக்கும கும்பிடு போட்டு வணக்கம் சொல்வது வளமை. அது போல் சென்ற வாரம் மேடை ஒன்றில் ஏறச் சந்தர்ப்பம் கிடைத்த்து. அதில் நீங்கள் 2வது படத்தில் காட்டியது போலவே காரணமும் தெரியாமல் அர்த்தமும் தெரியாமல் வணக்கம் கூறினேன்.நண்பர் ஒருவர் கூறினார் எல்லோருக்கும்முன்னால் மேடையில் அப்படிச் செய்தது தவறு என்ற.எனதுமனமும் ஆதங்கபட்டது தவறுதானோ என்று.. இப்போதுதான் தவறில்லை என்று தெரிந்து மனம் ஆறுதல் அடைந்த்து.தவறில்லை என்று தெரிய வைத்த சிவசுக்கு நன்றிகள். எனிமேல் சங்கடமின்றித் தொடரும் எனது வணக்கங்கள்.
  வாழ்க வளமுடன்
  நன்றியுடன் இராசன்

 • vinothiny:

  விளையும் பயிரை முளையிலே தெரியும் என்று சொல்வார்கள் .அது போன்று இந்த படத்தில் மிக அழகாக இரு கைகளையும் கூப்பி வணக்கம் செலுத்தும் பாங்கு, இந்த மழலையின் பெற்றோர்கள் எம் கலாச்சாரத்தை எப்படி தம் பிள்ளைக்கு ஊட்டி வளர்க்கின்றார்கள் என்பதிலிருந்து
  தெளிவாகின்றது.

  தமிழர்களே தமிழுக்கு தலை வணங்குங்கள்!
  ————————————————————————-
  அன்னை தமிழ் அரியாசனத்தில் அமர்ந்திருக்கின்றது. அதை உலகமே ஆச்சர்யமாகப்பார்க்கின்றது. ஆனால் ,தமிழர்களில் பலரும் தமிழுக்கு முக்கியத்துவம் தருவதில்லை . தமிழ் என்றாலே சிலருக்கு கசக்கிறது.
  தமிழனின் முகம்,முகவரி,அடையாளம் அனைத்தும் தமிழ் தான். நாம் தமிழை இழந்தால் அனைத்து அடையாளங்களையும் இழந்து
  விடுவோம். நாம் இப்போது தமிழுடன் கலந்து நாம் புலம்பெயர்ந்து வாழும் நாட்டின்மொழியையும் பேசிக்கொண்டிருக்கின்றோம். அதாவது ஒரு புது மொழியை உருவாக்கிபேசுகிறோம். நாம் என்னதான் அந்நிய மொழியில் பாண்டித்தியம் பெற்றுக்கொண்டாலும்ஒருபோதும் மேலைத்தேய நாட்டை சேர்ந்தவர்களாக மாறி விட முடியாது என்பதை நினைவில் கொள்ள
  வேண்டும் . புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் இன்று வீடுகளில் பிள்ளைகளுடன் தமிழ் பேசாமல் அந்நிய மொழியில் பேசுவதுஅதிகரித்து வருகின்றது. என் பிள்ளைகளுக்கு தமிழ் தெரியாது, அவர்களுக்கு தமிழ்
  உச்சரிப்பு சரியாக வராது என்றும் , சிலர் இதனை பெருமையாக கூட எண்ணி
  மகிழ்கின்றனர் . முயன்றால் முடியாதது எதுவுமில்லை .

  அன்பான சொந்தங்களே ,நாம் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் மொழியாலும் உணர்வாலும் தமிழர்களாக வாழ பழகிக் கொள்ளவேண்டும். எம்மண்ணின் பண்பாட்டின்படி வாழ வேண்டும்,அப்படியானால் எம் குழந்தைகளுக்கு தமிழ் மொழியை ஊட்டி வளர்க்கவேண்டும் . எம்கலாச்சாரத்தையும் பண்பாடுகளையும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பிள்ளைகளுடன்பெருமையாகப் பேசி புரிய வைக்க முயற்சிக்க வேண்டும். அதற்கு முதலில் மொழி
  அவசியம்.அன்பான பெற்றோரே கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தில் தோன்றிய எம் தாய்மொழி,உலகின் மூத்த மொழி ,எம் உயிரிலும் உணர்விலும் ஊறிக் கிடக்கும் இனிய மொழி ,அதனைஎம்மோடு அழிந்து போக விடாமல் பாதுகாக்க வேண்டியது எமது கடமை அல்லவா!!!!!!! .

  தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா.

 • மிகவும் நல்ல கட்டுரை.தமிழரின் கலாச்சாரத்தினை பிரதிபலிப்பவை. புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள பிள்ளைகள் ,பெரியோர் கடைப்பிடித்தால் மிகவும் நல்லது.ஆனால் கடைப்பிடிப்பார் என்பது கேள்விக்குறிதான்.

 • Sivanantham.S:

  புலம்பெயர்ந்த மக்களில் பலரும் மறந்துவிட்ட நற்றமிழ்ப் பண்பாட்டினை நல்ல முறையில் எதிர்காலச் சந்ததியினரும் எளிதாக விளங்கிக்கொள்ளும் விதத்தில் படத்துடன் விளக்கிய
  சிவாஸ் அவர்களுக்கும், நல்ல முறையில் தனக்கே உரித்தான மழலைப் புன்னகையுடன் வணக்கம் செலுத்திக் காட்டிய மழலைச் செல்வத்திற்கும் நன்றிகள் பல.
  வாழ்க வளமுடன்! வளர்க தம்தமிழ்ப் பணி!
  நன்றி.

 • T.SANKAR:

  எமது இந்து சமயா கலாச்சாரம் பேணி பாதுகாப்போம் உங்கள் பணி தெடரவும் சிவாஸ்

 • அழ பகீரதன்:

  இக்கட்டுரை சிறப்பாக இருக்கின்றது.

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து