உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

மெய்ஞானமா? விஞ்ஞானமா? உண்மைத்துவம் நிறைந்ததென்ற வாதப்பிரதி வாதங்கள் உலக மக்களிடையே நிறைந்திருக்கும் இக் காலகட்டத்தில்,மெய்ஞானமே உண்மைத்துவம் நிறைந்ததென தற்கால உலக நிகழ்வுகள் நிரூபித்துக்கொண்டிருக்கின்றதை யாவரும் அறிவோம்.

இத்தகைய நிலையில் கடந்த மூன்றரையாண்டுகளாக நமதூர் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியிருக்கும் மரண அவலத்திற்கான காரணங்கள் பல மெய்ஞானிகளின் குறிப்புகளினூடாக அறியக்கூடியதாக இருப்பினும், எனக்கு தெரியப்படுத்தப்பட்ட முக்கியமா ஒரு காரணத்தை மட்டும் மக்களது கவனத்திற்கு முன் வைக்கின்றேன்.

அதாவது,இந்து சமுத்திரத்தில் ஒரு சிறு கண்ணீர் துளி போன்று இருக்கும் இலங்கைத் திரு நாட்டில் வாழ்கின்ற தமிழ்மக்கள் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இயற்கையாலும், செயற்கையாலும் அநுபவித்து வரும் துன்பங்கள் குறைந்தபாடில்லை. இலங்கையின் வரைபடமே சான்றுகள் பல பகர்ந்து நிற்கிறது. அதாவது, சைவமும், தமிழும் தழைத்தோங்கியிருந்த இலங்கையில் காலத்துக்காலம் ஏற்பட்ட வெளிநாட்டவர் ஆக்கிரமிப்புக்களும், இயற்கைச் சீற்றங்களும், இவற்றால் ஏற்பட்ட வறுமை நிலையும் தமிழ் மக்கள் தம்நிலைமறந்து வருமானத்திற்காக தவறுகள் பல செய்ததன் காரணமாக மெய்ஞானிகளின் கோபங்களிற்கும்,சாபங்களிற்கும் உட்பட்டு இன்றுவரை தீராத இன்னல்களுடன் வாழ்கின்றோம்.

இவ்வாறனதொரு தோஷத்தாலேயே,(பிரம்மஹஸ்தி தோஷம் அல்லது பிராமண சாபம்) ஊர்மக்களாகிய நாங்களும் பீடிக்கப்பட்டு கொடிய யுத்தகாலத்திலும் ஏற்படாத அவலம் இன்று ஏற்பட்டிருப்பதாக எண்ணத் தோன்றுகிறது. இதை நிரூபிக்கு முகமாகவோ என்னவோ இந்தாண்டு தீர்த்தோர்ஸவ விழாவிலே தாயின் முன்னிலையிலேயே ஆரம்பித்து இது வரை எத்தனைபேர் இறந்துவிட்டார்கள் என்பது யாவரும் அறிந்ததே.

எனவே, *முன்னோர் பாவம் பின்னோர்க்கே* என்ற முதுமொழியை அனைவருடைய கவனத்திற்கும் சமர்ப்பித்து,எனது இக் கருத்துக்கான ஏனைய மக்கள் கருத்துகளையும் எதிர்பார்த்து விடைபெறுகிறேன்.

ஓம் சக்தி ஓம்! ஓம் சக்தி பராசக்தி!

சி.சிவானந்தம்.

4 Responses to “காரணம் புரியாத தொடர் மரண அவலம்”

 • குழந்தை:

  கடந்த மூன்றரையாண்டுகளாக நமதூர் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியிருக்கும் மரண அவலத்திற்கான காரணங்கள் என குறிப்பிடப் பெற்றவை இதற்கு முதல் இப்படியான அவல நிலை இருந்திருக்கவில்லை என அறிந்து மனம் உடைந்துள்ளோம்.

  கிராமத்தில் ஏற்படும், நன்மை தீமைகள் யாவும் குல தெய்வத்தின் (தன்மையை) நிலைமையை உணர்த்துவதாக ஆன்மீகம் கூறுகின்றது. எமது குல தெய்வத்தை மகிழ்விக்கவே நாம் பல அபிழ்சேகம், பூசைகள், திருவிழாக்களை செய்கின்றோம். அதனால் அதனை செய்விப்போரும், அந்த ஊரும் நன்மையடையும் என்பது ஐதீகம்.

  இந்த விழாக்களை செய்யும் சிவாச்சாரியர்கள் அவற்றை முறையாக செய்கிறார்களா என்பது கேள்விக் குறியே. மாமிசம் சாப்பிட்டு வந்தவர்கள், மாமிசம் சாப்பிட்ட உடம்புடன் குறுகிய காலத்திற்குள் சைவ சமயியாக வாழ ஆரம்பித்தவர்கள் மஹோற்சவ விழா போன்ற பூசைகளில் ஏற்பட்ட குறைகளை நிவர்த்தி செய்யும் உற்சவங்களை நடாத்த தகுதியானவர்களா. அம்பிகை இவற்றை ஏற்குக் கொள்வாரா.

  மஹோற்சவ விழா நடாத்துவதற்கு ஒரு பிராமணக் குருவாக அல்லது குறைந்தது ஏழு பரம்பரையாவது சைவ சமய அனுட்டானங்களுடன் வாழ்ந்த சைவ பரம்பரையில் இருந்து வந்திருக்க வேண்டும் எனபது நியதி.

  மாறாக ஆதீனத்தின் பரம்பரை (சொந்தக்காரர்) ஆதீனகர்த்தா என்ற உண்மைக்கு புறம்பான காரணத்தை முன்வைத்து மஹோற்சவ விழாக்கள் நடாத்தும் சிவாச்சாரியர்களுக்கு இருக்க வேண்டிய தகுதிகள் அற்ற ஆதீனகர்த்தாக்கள் செய்யும் மஹோற்சவ விழாக்கள் பாவம் புரியும் விழாவாகவே அமையும் என்பது திண்ணம்.

 • ஒரு அன்பன்:

  நண்பன் சிவானந்தம் அவர்களின் மனக் குமுறலை அல்டசியம் செய்வது சிலரின் அறியாமையாகவு மிருக்கலாம் .ஆனால் இப்போது நடக்கும் சில சம்பவங்கள் தெய்வ குறைபாடுகளை விளக்கி நின்றபோதும் நாம் திருந்த வில்லையே !
  இப்போது நடந்த ஒரு சம்பவம் ,பணிப்புலம் அம்பாள் ஆலைய மடத்தைச் சிலர் போலீஸ் நிலையம் வைப்பதற்குக் கொடுத்தது யாவரும் அறிந்ததே .அப்போது பலர் இதை எதிர்த்தனர் .இருந்தும் போலீஸ் நிலையம் அமைக்கப் படடது.கடந்த வியாழக் கிழமை பட் டப் பகல் வேளை பொலிஸாரின் மோ ட்ட பைக்கில் ஒரு நாகம் நுழைந்து பெரும் பதடடத்தை ஏற்படுத்தியது அம்பாளின் செயல் என அனைவரும் பேசிக்கொள்கின்றனர் .அத்துடன் அன்றய தினமே ஒரு குரங்குக் கூடடமும் மடக் கூரையில் இருந்து அட்ட காசம் செய்ததையும் என்னென்று சொல்ல ?

  ஒரு அன்பன்

  • kunathilagam santhai:

   இந்தச் சம்பவத்தைப் பற்றி பலரும் பேசிக் கொண்டதை அறிய முடிகிறது .

   • oru adiyaar panipulam:

    அது மட்டுமல்ல போலீசார் நாகம்மாளுக்கு பொங்கல் செய்து படைத்து பிராயச் சித்தம் செய்ததும் உண்மை .

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து