உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

candle20ani

 

2004-ம் ஆண்டு டிசம்பர் 26 எதிர்பார்க்காத தருணத்தில் அனைத்து உயிர்களையும் உள்வாங்கிச் சென்று உலகையே உலுக்கிய ஆழிப்பேரலையின் 12 வது நினைவு தினம் இன்று , 2004-ம் ஆண்டு டிசம்பர் 26 காலை சாதாரணமாகத்தான் விடிந்தது.ஆனால் மிகுந்த கவலையுடன் அன்றைய தினம் கழியும் என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை.இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவு பகுதியில், கடலுக்கு அடியில் உருவான பயங்கர நிலநடுக்கத்தின் விளைவால், பிலிஃப்பைன்ஸ், தாய்லாந்து, மலேசியா, இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஆழிப்பேரலை (சுனாமி) என்ற இயற்கை சீற்றத்திற்கு ஆளாயின.அதனால் ஆழிப்பேரலை (சுனாமி)விஸ்வரூபம் எடுத்து, பயங்கர வேகத்துடன் கடலோர நகரம், கிராமம் என்று வித்தியாசம் பாராமல் உள்ளே புகுந்தது .கடற்கரையில் இருந்த கடலோர மக்கள் மட்டுமின்றி, பொழுது போக்கிற்காக கூடியிருந்தவர்களும்,நடைபயிற்சி மேற்கொண்டவர்களையும் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் வாறி சுருட்டிக் கொண்டு கடலுக்குள் இழுத்துச் சென்றது சுனாமி எனும் ஆழிப்பேரலை.குவியல் குவியலாக கிடந்த பிணங்கள் ஒரே குழிக்குள் போட்டு புதைக்க வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டது.அன்று கேட்ட மரண ஓலம் இனியும் இதுபோல் இயற்கை அனர்த்தம் ஒன்றும் ஏற்பட வேண்டாம் என்று இறைவனை பிரார்த்திப்போம்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து