உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

untitledஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிட்டு இருந்தால் டொனால்ட் டிரம்ப் நிச்சயம் தோல்வியை சந்தித்திருப்பார் என்று தற்போதைய ஜனாதிபதியான ஒபாமா தெரிவித்திருப்பது சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் 8 ஆம் திகதி நடந்த அமெரிக்க ஜனாதிபதிக்கான தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார்.

ஹிலாரி வெற்றி பெறுவார் என்று உலக நாடுகள் அனைத்தும் எதிர்பார்த்த நிலையில், டிரம்பின் இந்த வெற்றி பல நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.மேலும் டிரம்ப் வரும் ஜனவரி மாதம் 20 ஆம் திகதி ஜனாதிபதியாக பதவி ஏற்க உள்ளார்.

இந்நிலையில் தற்போதைய அமெரிக்க ஜனாதிபதியான ஒபாமா இதுகுறித்து கூறுகையில், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையாக போட்டியிடும் வாய்ப்பு கிடைத்திருந்தால், அமெரிக்க மக்கள் பேராதரவோடு நிச்சயம் வெற்றி பெற்றிருப்பேன் என்று கூறியுள்ளார்.

தன்னை எதிர்ப்பவர்கள் உட்பட நாடு முழுக்க உள்ள அனைத்து மக்களும் தன்னுடைய சிந்தனை, பார்வை மற்றும் செயல்பாடுகளைச் சரியானது என்றே தொடர்ந்து கூறிவந்தனர்.அதைத் தொடர்ந்து குடியரசுக் கட்சியினரால் பிரிவினையைத் தூண்டுவதில் மட்டுமே மும்முரம் காட்ட முடிந்தது.

ட்ரம்ப்பின் வெற்றியானது சகிப்புத்தன்மை, பன்முகத்தன்மை மற்றும் திறந்த மனத்துடன் அணுகும் ஒரே அமெரிக்கா ஒன்றிணைந்த அமெரிக்கா என்ற கனவை பொய்த்துப் போனதாக ஆக்கிவிடாது என்று கூறியுள்ளார்.மேலும் தான் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய பின்பு சாதாரண வாழ்க்கை வாழ ஆசைப்படுவதாகவும், தன்னுடைய இளைய மகள் படிப்பு முடியும் வரை வாஷிங்டனிலேயே இருக்கப்போவதாகவும் கூறியுள்ளார்.

ஆனால் நான் கடமைகளையும், பொறுப்புகளையும் கொண்ட குடிமகன் என்பதால், முக்கியப் பிரச்சனைகள் குறித்து தொடர்ந்து பேசுவேன் என்றும் கூறியுள்ளார்.இரண்டு முறைக்கு மேல் ஒருவர் அமெரிக்க ஜனாதிபதி பதவியில் தொடர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்




 

பிறந்தநாள் வாழ்த்து