உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

ஐயா தேவரே என் முன்

எழுந்த சான்றோனே இல்லா

உலகில் இருப்பதை விடுத்து

பொல்லா உலகிற்கு பொருள்

தேடச் சென்றோரை- இல்லா

உலகிலிருந்து நான் இறைஞ்சுவது

தெரிகிறதா?… நான் தான்

மறுமலர்ச்சி மன்றத்து மண்

பேசுகிறன்….

 

ஐயா தேவரே என் மடியில்

பூத்த நிலவே எனக்கு

தாய் மகுடம் சூட்டிய உறவே

சாமி கைவிட்டதால் பூமி

உன் கிட்ட கை ஏந்தி

நிற்கிறேன் என்ர பிள்ளைகள்

எல்லோரையும் நான் ஒரே

நாளில் என் மடி மேலும்

தோள் மேலும் சுமக்க வேணும்

அப்படிச் சுமந்தால் தான் என்

ஆத்மாவின் தவிப்பு அடங்கும்

என்ர பிள்ளைகள் கூன்

விழுந்து குளிசையும் கையுமாய்

திரிகினமாமே?…

என்னைத் தூசு தட்டி

துயில் எழுப்பி என்

மடியில் தடம் பதித்த

பிஞ்சு முகம் பார்த்து

எத்தனை காலம் ஆச்சு

இன்று வருவார் நாளை வருவார்

நாளை மறுதினம் வருவார்

என்று எண்ணி என் உயிர்

மூச்சு ஏனோ தவிக்கிறது

என் தவிப்பு உனக்கு புரிகிறதா?…

 

ஐயா தேவரே நியாயத்தை

எடுத்துச் சொல்வதில் நீர்

அறிவில் ஆதவனே என்

பக்கம் இருக்கும் நியாயத்தை

நீ எடுத்துச் சொல்லக் கூடாதா?

என் பிள்ளைகளின் முகம்

பார்க்க முடியாமல் என் அகம்

ஏங்கி அழுவது உனக்குப் புரிகிறதா?…

 

அன்று என் பிள்ளைகளின்

பிஞ்சுக் கால்கள் என்

நெஞ்சினில் ஏறி ஒரு முனையில்

காந்தி இல்லம் மறு முனையில்

பாரதி இல்லம் என என் நெஞ்சில்

கூடு கட்டி நேர் வழி வந்த

நேசர்களின் பெயரும் இட்டு

கச்சிதமாய் போட்டி இட்டு

கயிறு இழுத்த காட்சி என்

கண்ணுக்குள் நிற்கிறது அது

கடுமையான கயிறுழுத்தல்

போட்டி தோற்ற பிள்ளை

விழுந்து விட்டான் வென்ற

பிள்ளை நிமிர்ந்து நின்றான்

ஏனோ எனக்கு ஒரு சஞ்சலம்

விழுந்தவனை தூக்கிறதா? வென்றவனை

பார்க்கிறதா? ஒரு கணம்நான்

செயல் அற்று நின்றேன்….

 

வென்றவனே தூக்கிவிட்டான்

வீழ்ந்தவனை தூசும் தட்டிவிட்டான்

தோழிலே கைபோட்டு தொங்கித்

தொங்கியே இருவரும் வந்து

என்மடிமீது இருந்த காட்சி

மட்டற்ற மகிழ்ச்சியில் ஆழ்த்தியதை

நான் மறப்பேனோ?

வெற்றியும் தோல்வியும் எங்களுக்குள்ளேயே

பகிரப்படுகின்றன என்ற யதார்த்தத்தை

எடுத்துச் சொன்ன என்

செல்வங்களை காணத் துடிக்குது

என் மனசு.

 

ஐயா தேவரே ஊருக்குள்

கோயில் இருக்கிறது உள்ளுக்குள்

சாமி இருக்கிறது என்னுக்குள்

என்ன இருக்கிற தென்று சாமி

பார்க்கவா? என் வேண்டுதலைக் கூட

அந்த சாமி ஏனோ கேக்கல

இந்த நிலையில் உந்தன் உதவி

நாடி நிற்கிறது இந்தப் பூமி

என்ன உதாசீனம் செய்ய

வேண்டாம்? சாமி என்

பிள்ளைகளைக் கொண்டு

வந்து காண்பி….

15 Responses to “புதுக்கவிதை.”

 • T.BALAKUMAR:

  இவரது கவி நயம் கண்டறிந்து இவருக்கும் ஊக்கமும் உற்ச்சாகமும் அளித்து. கவியை இணையத்துள் இணைத்து. மக்கள் முன் கொண்டு வந்த அழ.பகி அவர்கட்கு நன்றிகள்.இவரது அப்பா குணம் அவர்கள் ஒரு நல்ல கவிநயம் கொண்ட மனிதர்.அவரை அன்று சரியான முறையில் வழிஅமைத்து கொடுத்திருந்தால் அவரே ஒரு கவிஞ்ஞனாகியிருக்கமுடியும்.இவரது கவிதைகள் இன்னும் இருந்தால் அதையும் இணைக்கலாம்.இவரது கவிக்கும் பல பழைய புதிய வரவுகளை வைத்து ஒரு தனிப்பகுதியை இணையத்தில் உருவாக்கலாம் என நினைக்கின்றேன்.இணையத்தினர் இதை கவனத்தில் கொள்வார்கள் என நினைக்கிறேன். பாலா

 • vinothiny:

  பனிப்புலம் கலையடி சாந்தை .நெற் இன் மூலம் அருமையான ஒரு கவிஞன் வெளிப்பட்டிருக்கின்றார். எங்கள் ஊரில் இவ்வளவு திறமை வாய்ந்தவர்கள் இருக்கின்றார்களா? இன்னும் எத்தனை பேர் இப்படி இலைமறை காய்களாக இருக்கின்றார்களோ?எல்லோரின் திறமைகளும் நிச்சயம் வெளிப்படுத்தப்பட வேண்டும் . அதற்கான அடித்தளத்தினை நாம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். கணினி பற்றிய அடிப்படை அறிவுகளை அவர்கள் பெற்றுக் கொள்ளுவதற்கான வசதிகளை புலம்பெயர் உறவுகளின் உதவியுடன் ஏற்படுத்திக் கொடுத்தல் வேண்டும். ஐந்து வயது முதற் கொண்டே கணினி பயிற்றுவித்தலை மன்றம் போன்ற பொது இடங்களில் கற்றுக் கொடுப்பதன் மூலம் எமது எதிர்காலச் சந்ததியினருக்கு நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் . இந்த அழகான கவிதையை வடித்த குணசேகரன் என்பவருக்கு என் பாராட்டுக்கள் .இது போன்று மேலும் பல கவிதைகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம் .நன்றி

 • அழ பகீரதன்:

  மேற்படி கவிதை எழுதிய குணசேகரன் அவர்கள் இணைய அனுபவம் உள்ளவர் அல்ல. இந்த கருத்துக்களை அவர் இன்னும் பார்க்கவில்லை. கவிதை இணையத்தில் வந்திருப்பதாக அவருக்கு நான் கூறியிருக்கின்றேன். அனேகமாக அவரை ஞாயிற்று கிழமை சந்தித்து காட்டுவேன். கவிதை பற்றிய கருத்துக்களை நீங்கள் எழுதுவது அவரை உற்சாகப்படுத்தும். இப்படி பல கவிதைகளை அவர் வாய்மொழியாக எனக்கு சொல்லிக்கொண்டிருக்கிறார்….

 • t.balakumar:

  உங்கள் கவி என்னை ஒரு கணம் ஊரை நோக்க வைத்தது. கவி தந்த ஏக்கம் எதிர்பார்ப்பு புரிகிறது.கோயில்களில் கடவுள்கள் இருப்பதாய் கூறுகிறார்கள் ஆனால் அங்கும் இருப்பதாய் தெரியவில்லை.புலம் பெயர்ந்தவருடன் கடவுளும் வந்ததாய் இங்கும் பல ஆலயம் ஆனால் இங்கும் அவர் இருப்பதாய் அறிகுறி இல்லை.ஒன்று மட்டும் உண்மை கடவுள் என்னும் ஒன்றை ஆலயம் என்ற கட்டிடத்துள் வைத்து பல ஆசாமிகள் பணம் பண்ணுகிறார்கள்.பணிப்புலம் மண்ணிற்க்கு உம்மை தந்த பெற்றவர்க்கு நன்றிகள்.உமது ஆக்கங்கள் எமக்கு விருந்தாகவேண்டும் என நிறைய எதிர்பார்க்கின்றோம். நன்றி பாலா

 • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

  நல்ல கவிதை, மனதை சிலிர்க்க வைக்கிறது.

 • Chandrahasan:

  தொண்டை வரண்டு கன்னமெல்லாம் கண்ணீரால் நனைய வைத்தது உன் கவி. மீண்டும் ஒருநாள் கூடுவோம் மிடுக்கோடு.

 • அண்ணா உங்களையா நான் குத்துச்சண்டை வீரனென்று அழைத்தேன்.மன்னித்துக்கொள்ளுங்கள்.உங்களின் சுமைகளையும் ஏக்கத்தவிப்பினையும் கவிமூலம் எங்களுக்கு எடுத்துரைத்தீர்.என் கண்களால் கண்ணீரை மட்டும் தான் வரவழைக்கமுடிந்தது.எம்மண்ணில் மீண்டும் தங்கள் பாதம் பட்டதால் தான் என்னவோ தங்களின் சுமைகள் எல்லாம் கவியாகப் பறக்கின்றது.வாழ்க நீர் வழமுடன்.அன்புத்தம்பி கெங்காவின் வாழ்த்துக்கள்.

 • ilankannan.navaradnam:

  பாசமிகு எனதருமை மறுமலர்ச்சி மன்றத்தாய்க்கு மகன் இளங்கண்ணன்
  எழுதிக்கொள்வது.நானும் எனது சகோதரர்களும் எந்தெந்த நாட்டில் இருக்கிறோமோ
  அங்கெல்லாம் நலமாக இருக்கிறோம்.அதுபோல் உங்கள் நலமும் முன்னறிலும் பார்க்க
  வலுவாகவும் உறுதியாகவும் இருப்பதனை உங்களது கவிதையில் இருந்து அறிந்துகொண்டேன்.
  மிக்கமகிழ்ச்சி.
  மேலும் அம்மா உனக்கு நாங்கள் என்ன குறைவிட்டோம் செலவுக்கு காசு அனுப்பு
  கிறோம் தானே இதைவிட அவ்வப்போது நாங்கள் எல்லாரும் கூடி நீகேக்காமலே உனக்கு
  என்னதேவை என அலசிஆராய்ந்து கலந்துரையாடி ஆலோசித்து அதையும் நிறை வேற்றிக்கொண்டு
  தானே இருக்கிறோம்.அப்படியிருந்தும் உனக்கு ஏன் இந்தப் பேராசை 35 _40 வருசங்களுக்கு முன்
  உனது வயிற்றிலும் மடியிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும் ஏறிமிதித்து தொட்டு உதைத்து
  விளையாடிய பிள்ளைகள் எல்லோரயும் ஒரேநேரத்தில் ஒன்றாய்ப்பார்க்க வேன்னுமென்று இது
  நடக்கக் கூடியதா அதாலதான் சொன்னேன் இது பேராசை எண்டு.இருந்தாலும் அம்மா நீ ஆசைப்பட்டது
  போல் நடந்தால் எப்படி இருக்கும் என்று எண்ணிப்பார்த்தேன் கண்ணீர் புடைதாண்டி ஓடியது எந்த
  அணைபோட்டும் தடுக்க முடியவில்லை எப்படியோ என்னைச் சுதாகரித்துக் கொண்டு எழுதுகிறேன்
  அப்படி இல்லாடில் என்ன ஒவ்வொரு வருடமும் ஒவ் வொருத்தராயோ இவ்விருவராயோ உன்னிடம்
  வருகிறோம்தானே உனது தேவைகளை இனங்கண்டு நிறைவேற்றிதானே வருகிறோம்.என்ன வரும்
  காலத்தில் எங்களுக்குப்பின்னர் உனது பேரப்பிள்ளைகள் உனிடம் வருவார்களோ என்றுதான் கவலை
  அதனால் என்ன உனக்குத்தானே உங்கு பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் பல்கிப்பெருகிக் கொண்டு
  இருப்பார்கள் அவர்களை அணைத்து அவ்வணைப்பில் ஆனந்தப்படு ஆ ஒன்றை மறந்துவிட்டேன்
  போனமார்கழி மாதம் கனடாவில் இருக்கும் உனது பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் எலேரும்
  மறுமலர்ச்சி மன்றத்தாய் மக்கள் என்று ஒன்றுகூடி உன்புகளைப் பேசிப்பேசிப் பெருமைப் பட்டோம்
  அத்தோடு உனது மூத்த புதல்வர்களில் எம்மை விட்டு மறைந்துபோன இந்திரணண்ணா மற்றும்
  மனியம்மண்ணா அவர்களின் ஆத்மா சாந்திகான அஞ்சலியும் நடத்தி இறைவனையும் வேண்டியிருந்தோம்
  இதை நீயும் நெற்றில் பாத்திருபாய் தானே வேறுஎன்ன ஓ வாறவருசம் உனது 40 ஆவது பிறந்த நாளினை
  கனடாவில் மிகவிமர்சையாக கொண்டாட இருக்கிறோம் உனக்கும் சந்தோசம் தானே இக்கடிதத்தினை
  இத்துடன் முடிக்கிறேன் மிகுதி தொடரும்.
  இப்படிக்கு
  உனது மகன்
  ந.இளங்கண்ணன் ‘

  • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

   ஆஹா, உங்களுக்குள்ளை ஒரு கவிஞன் உறங்கிகொண்டிருக்கிறான் கண்ணன்-அண்ணை அவர்களே…அவனை கன காலம் உறங்கவிடாதேங்கோ…

 • . விசு.க.விமலன்.:

  இது கவிதை அல்ல, எம் ஊரவரின் ஏக்கம், வேண்டுகோள், அங்கலாயப்பு, ஆதங்கம் , இதுவரை பட்ட அல்லல்களின் வெளிப்பாடு. இது தான் ஆத்மாத்தமான கவிதை. புரிந்துகொள்ளுங்கள் என்கின்றார் -எத்தனை பேர்கள் இவரின் வரிகளை உள்வாங்குவார்கள். காலம் கட்டாயம் பதில் கூறும்.

 • இராமச்சந்திரன்:

  உங்கள் கவி எங்களின் நெஞ்சத்தினை நெகிழவைத்து விட்டது உங்களின் கவிப்பயணம் தொடரவாழ்த்துகள்,

 • அருமையாக உள்ளது…
  விமல் – கனடா

 • அழ பகீரதன்:

  குணசேகரனின் உணர்வுகள் உங்கள் உணர்வுகளை உசுப்புவது மட்டுமல்ல என் இதயத்தையும் நெகிழவும் வைக்கின்றது. வாழ்க வளர்க

 • ஈர் ஏழு உலகம் சென்றேன் நாரதமுனி நான் என்று!!
  கவிபாடி நாடகம் நடித்த குணசேகரனா இக்கவி வடித்தது
  நாடகத்துக்கு உமக்கு யாழ் கடனாக ஒருவரிடம் இருந்து
  வேண்டித்தந்தது ஞாபகம் இருக்குகிறதா?
  நாங்கள் தாயின் மடியில் வளர்ந்ததைவிட மன்றத்தின் மடியில்
  வளர்ந்த காலம் கூட. பெற்ற தாயினைப்போல்த்தான் மன்றத்தினையும்
  நேசித்தோம்.நாங்கள் ஒரு தாய் பிள்ளைகள் போல் ஒற்றுமையாக ஒருகுரலாக
  ஒலித்தோம்.
  உங்கள் கவி எங்கள் நெஞ்சத்தினை நெகிழவைத்து விட்டது.கவி பிரமாதம்.
  கவி தாங்கி வந்த கருத்தும் உணர்வும் பிரமாதம். உங்கள் கவி எங்களின் உணர்வுகளை ஒரு முறை உலுப்பிவிட்டது.தொடரட்டும் தொய்வின்றி உங்கள்
  கவிப்பயணம் தொடர்ந்து எதிர்பார்க்கிறேன் உங்கள் கவிகளை…….

 • siva germany:

  ஐயா உங்களது கவிதை எம்மை கண்கலங்க வைக்குது. உங்கள் ஆக்கங்கள் இன்னும் இன்னும் தேவை. நன்றி

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து