உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

ikke-nakfhvngivet-1
ikke-navngfiykivet-1

20 Responses to “”

 • kunathilagam santhai:

  இங்கு நான் ஒன்று கூறுகின்றேன் .எனது ஆக்கங்கள் எமது கிராமத்தின் நிலைகள் பற்றி விளக்கும் வகையிலேயே வழமையாக அமையும் .அந்தவகையிலேயே இக்கவிதையையும் பதிவு செய்தேன் .இப்படி விமர்சனங்கள் வரும் என்பதையும் நான் ஏற்க்கெனவே அறிவேன் .இருந்தும் சில விடையங்களை பகிர சந்தர்ப்பம் கிடைத்ததை இட்டு மகிழ்சசி .

  நான் எமது மக்களின் இன்றைய நிலை பற்றி குறிப்பிடவே அன்றைய நிலையுடன் ஒப்பிட்டு இக் கவிதையை ஆக்கினேன் .ஒரு விடையத்தை மற்றவர் மத்தியில் புகுத்துவதற்குப் பல வழிகள் உண்டு .அவற்றில் ஒரு வழியாகவே கவிதை வழியைப் பின்பற்றுகின்றேன் .இக் கவிதை எமது அன்றைய இன்றைய நிலையைக் கரு பொருளாகக் கொண்டாலும் ஒவ்வொரு வரியும் ஒவ்வொரு விடையத்தைக் கூறுவதை அவதானிக்கலாம் .அதன் பிரகாரம் இன்றைய நிலையில் இரண்டாவது வரியில் நான் கூறிய விடையத்தைப் பற்றி இங்கு சுருக்கமாகக் கூறுகின்றேன் ,

  ஐந்து வயதானதும் ஆரம்பக் கல்வி
  அதுவும் சொந்தவூர் விட்டு அயலூரில் .

  இங்கு இன்று பாடசாலைகள் மூட வேண்டிய ஆபத்துக் கட்டிடத்தில் உள்ளதை யாரும் அறிவதில்லை .இதற்குக் காரணம் என்ன என யாரும் சிந்தித்த தில்லை .அந்நிய மோகமே எமது இன்றைய நிலை .நான் மீண்டும் அந்நிய நாடு பற்றிக் கூறுகிறேன் எனக் கொதிப்படைய வேண்டாம் .எமது கிராமச் சீரழிவின் கொதிப்பாலேயே கூறுகின்றேன் .
  இன்று எமது கிராமத்தின் மத்தியில் எமதுக்கிராமத்தில் பலரை உருவாக்கிய பண்ணாகம் அ.மி .த.க .பாடசாலையின் கதி மிகவும் பரிதாபம் .நூறு வருடங்களுக்கு மேல்ப் பழமை வாய்ந்த இப்பாட சாலை இன்னும் ஓரிரு வருடத்தில் மூடும் அபாயம் நேர்ந்ததை யாரும் சிந்திப்பார்களா ?இது சிறுவயதிலேயே நாடடை விட்டுச் சென்றவர் களுக்கு தேவையற்றதாக இருக்கும் .ஆனால் இங்கு இருக்கும் எமக்கு வேதனை அளிக்கும் விடயமாகும் .
  இவ் வருடம் இப் பாடசாலையில் ஆரம்பக் கல்விக்கு ஒரு பிள்ளையும் சேரவில்லை .அந்த வகுப்பு இவ் வருடம் மூட வேண்டிய நிலை .அடுத்தவருடம் முதலாம் வகுப்புக்கு இந்தநிலை .ஐந்தாம் வகுப்பு வரை உள்ள இப் பாடசாலை தொடர்ந்து இயங்க முடியாத நிலை ஏற்படும் .விளைவு பாடசாலை மூடுவிழாவே !
  ஆறுமுக வித்தியா சாலையும் இதே கதிதான் .
  இதற்குக் காரணம் யார் ?நாமேதான் .எமது மக்களுக்கென்று இருந்த பாடசாலைக்கு இன்று எமது சந்ததி இங்கில்லை .எல்லாம் வெளிநாடுகளிலேயே எமது சந்ததி வளர்கின்றது .
  அடுத்து இங்குள்ளவரும் தமது பிள்ளைகளை அயல்ப் பாடசாலைகளிலேயே சேர்க்கின்றனர் .ஊரில் விசுவாசம் உள்ளவர்கள் கூடத் தம் பிள்ளைகளை பாடசாலை வண்டிமூலம் பட்டினப் பாடசாலைகளுக்கு அனுப்புகின்றனர் .

  இதன் விளைவை நாம் அறுக்கப் போவதற்கு அதிக காலம் செல்லாது .இது பற்றிக் கவலை அடைவதும் இங்கிருக்கும் ஒரு சிலரே .இங்கு இப்போது படிப்பவர்கள் கூட வெளி நாட்டு நோக்கமாகவே படிக்கிறார்கள் .

  சிறுவயதில் இங்கிருந்து செல்பவர்களுக்கு தம்பி சுதன் கூறுவது போல் அந்த நாட்டிலேயே பற்று ஏற்படும் .ஆனால் இங்கிருக்கும் எமக்கு எமதூரின் பரிதாபநிலையே வேதனை அளிக்கும் .சிறுவயதில் இங்கிருந்து வெளியேறியவர்கள் ஊரை மட்டுமல்ல உறவுகளையே நேசிக்க மறப்பர் .அவர்களுக்கு அந்த நாட்டு கலாசாரமே முக்கியமானது .

  எனவே எமது ஊரை நேசிக்கும் உறவுகளே சிறிது சிந்தித்துப் பாருங்கள் .நான் கூறுவது தேவையற்றது தானா ?

  நன்றி .

 • பிறந்த ஊரை உண்மையாக
  நேசிக்கும் நெஞ்சங்களுக்கும்.
  மண்ணில் விதைத்தவனுக்கும்
  தான் இந்தக் கவிதையின் வலி புரியும்.

  சில உண்மைகள் எதார்த்தமாக
  வருவதால் தான் அது யாருக்கும்
  பிடித்துக்கொள்வதில்லை.
  பல பொய்கள்.சீவிச் சிங்காரித்து
  லிப்ஸ்டிக் பூசி, சென்ட் அடித்து
  வருவதால் தான் அது
  எல்லோருக்கும் பிடித்துவிடுகிறது.

  வெளிநாட்டு வாழ்க்கை மீது கொண்ட
  மோகத்தால். இருண்ட யுகத்திற்குள்
  புதையுண்டுகொண்டிருக்கும் அன்பின்
  அழிவையும்.

  நவீன விஞ்ஞான வளர்ச்சியினால்
  புதையுண்டுகொண்டிருக்கும் நம்
  கிராம விவசாய உழைப்பாளிகளின்
  இயல்புவாத உண்மையின் அழிவையும்.

  அழுத்தத்தோடும். ஆவேசத்தோடும்.
  சமூக கோபத்தோடும்.மிகவும் அழகாக
  உண்மையை எடுத்துரைத்துள்ளீர்கள்.
  உங்களின் இந்தப் பகிர்விற்கு மிக்க நன்றி.

 • சி.சிவானந்தம்:

  தம்பி சுதனே!
  நீர் என்னை நன்கறிந்தவர் ஆனால் நான் உம்மை அறியவில்லை. இந்த கவியாசிரியர் இந்த இணையத்தில் புலம்பெயர் வாழ்வு, தமிழர் நிலை, ஊர் மக்கள் நிலை,தமிழர் கொண்டாட்டங்கள், சமூக சீர்திருத்த கருத்துகள் நிறைந்த அறிவுசார் கவிதைகள், ஆலய விழாக்கள் பற்றிய தெய்வீகக் கருத்துகள் நிறைந்த அற்புதக் கவிதைகள் என பல நூற்றுக்கணக்கான கவிதைகளை பல வருடங்களாக எழுதி வருகின்ற நமதூர் தந்த ஒரு மகான். தற்போதைய கவிதைகளிலும் அவர் தனிப்பட யாரையும் சுட்டிக்காட்டி எதுவும் எழுதவில்லையே.

  தம்பி! உமக்கு தமிழர் வரலாறு பூரணமாகத் தெரியாது போலும். காலம் காலமாக தமிழர் சுதந்திரப் போராட்டங்களை உம்மைப் போன்ற அற்ப சலுகைகளைக்கு அடிபணியும் அற்ப மனிதர்களால் காட்டிக்கொடுக்கப்பட்டு வீரபாண்டிய கட்டப் பொம்மன்,பண்டாரவன்னியன்,சங்கிலியன், பிரபாகரன் வரை நடந்ததென்ன? அதுமட்டுமன்றி இலங்கையை கருவாக வைத்து* இராமாயணம்* ஏன் உருவாக்கப்பட்டது என்பதை எண்ணிப்பார்க்கவும்.
  தற்போது மேற்குலக நாடுகளில் ஏற்பட்டுள்ள பயங்கரவாத அச்சுறுத்தல்களால் அனைத்து நாடுகளுமே பயந்த நிலையில் இருப்பதையும், பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பலப்படுத்தியிருப்பதையும்,இதனால் பல பொருளாதார இழப்புகளை சந்தித்துக்கொண்டிருப்பதையும்,மக்களுக்கு வழங்கும் பொருளாதார,மருத்துவ வசதி வழங்கல்களில் பல இறுக்கமான கட்டுப்பாடுகளை விதித்திருக்கின்றமையையும் ,இதனால் மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பொருளாதார சுமைகள்பற்றி புலம்பெயர் நாட்டில் வாழும் நீர் அறியவில்லையா?
  நாற்பதாண்டுகளுக்கு மேலாக ஐரோப்பிய ஒன்றியத்தில் முதன்மை நாடாக அங்கம் வகித்த பிரித்தானியா கடந்த வருடம் பிரிந்தது ஏன்? சிந்தித்துப்பார்த்து உமக்கு இன்று கிடைக்கும் சுதந்திரம், பொருளாதார வசதிகள் நாளைக்கு கிடைக்குமா? என்பதை தீர்மானிக்கவும்.

  தம்பி! இறுதியாக ஒன்றை மட்டும் கூறுகிறேன், அதாவது,இலங்கை தமிழ் மன்னனான இராவணனால் ஆட்சி செய்யப்பட்ட காலத்தில் தெய்வீக சாபத்திற்குட்பட்டதாலேயே காலம் காலமாக பல்வேறு அந்நிய ஆக்கிரமிப்புகளுக்குட்பட்டு,அங்கு வாழ்ந்த பழங்குடியினராகிய தமிழ் இனம் படிப்படியாக அழிக்கப்பட்டு,இன்று சிற்றினமாக்கப்பட்டு அழிவின் விளிம்பில் நிற்கிறது. எனவே,இலங்கையில் தமிழ் மக்கள் சுதந்திரத்தை இறைவனாலன்றி மனிதர்களால் எக்காலத்திலும் ஏற்படுத்தமுடியாது என்பது தெய்வ நியதி.
  வீராவேசப் பேச்சுகளும்,விதண்டாவதக் கருத்துகளும், போராட்டங்களும்,ஒருபோதும் இலங்கைத் தமிழ் மக்களுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுக்கப்போவதில்லை. ஒருவேளை புலம்பெயர் நாடுகளில் மக்களோடு மக்களாக வெளிநாட்டவர்களான நாங்கள் இணைந்து வாழ்வதுபோல் ,இலங்கை வாழ் மூவின மக்களும் ஒன்றிணந்து வாழ முற்பட்டால் அமைதியான சுதந்திரம் ஓரளவுக்கு சாத்தியப்படலாம். காலந்தான் பதில் கூற வேண்டும்.

  *தீயினாற் சுட்ட புண் ஆறினும் ஆறாது
  நாவினாற் சுட்ட வடு.*

  என்ற வள்ளுவர் வாக்கினை நினைவூட்டி விடைபெறுகிறேன்.

  நன்றி!

 • nathan:

  திரு சுதன் அவ்ர்களா உன்னுடைய அறிவு அவளவுதான் ? அசீரியரின் வயது என்ன ? உன்ட வயது என்ன ?முட்டாள்,

  • suthan:

   நாதனே நீர் இதை கண்ணாடியை பார்த்து கூறினால் மிகவும் பொருத்தமாகஇருக்கும். முதலில் ஒழுங்காக தமிழை எழுத வாசிக்க படியும். பரதேசி

 • nathan:

  திரு குணாதிலகம் அண்ணா அவ்ர்களா உங்கள் கருது உணமையன்யாது மேலும் இதுபோன்ற கருது வரவேற்க்கது நன்ட்ரி

 • vadivelan:

  நண்பன் சுதன் அவர்களே ,நாட்டுப் பற்று உள்ளவனுக்குத்தான் சுதந்திர உணர்ச்ச்சி உண்டு .பணம் தேடி அலையும் பிணங்களுக்கு சுதந்திர சுதந்திர உணர்ச்ச்சி எங்கே ?உங்களை போன்ற ஆட்களால்தான் இன்று தமிழனுக்கு இந்தநிலை .இங்கு எண்கள் நிலையையே அவர் எழுதியுள்ளார் .நீங்கள் எப்படிக் கூறினாலும் சொந்த மண்ணில் இருந்து கண்சி குடித்தாலும் அது தேவா அமிர்தம் தான் .

  • Suthan:

   வடிவேலனே உங்களுக்கு என்று ஒரு நாடு இருக்கிறதா நாட்டுப்பற்றும் சுதந்திர உணர்வும் உண்டாகுவதட்க்கு. உங்கள் பந்திஜிலேயே உங்கள் அறியாமை புலப்படுகிறது. பணத்தை தேடி எப்படி பிணம் அலையும். இது இயலாமாஜின் வெளிப்பாடு. சொந்த மண்ணில் கஞ்சி அமிர்தமாக இருந்தால் ஏன் புலம் பெயர்ந்தோரிடம் பிச்சை கேட்ட்க்கிறீர்கள். 65 வருடமாக ஏமாற்றும் ஒரு இனத்திடம் இவ்வளவு அழிவின் பின்பும் ஒரு தீர்வு வைப்பதட்கு மறுக்கும் அரசிடம் தமிழனுக்கு தீர்வு என்பது முயல் கொம்பு.உலகில் முடியாட்சி, குடியாட்சி, கூட்டாட்சி, ஓட்டையாட்சி என்று பல ஆட்சி உண்டு இதில் ஓட்டையாட்சி பெரும்பான்மை சிறு பான்மைஜை அடக்கியாளும் ஆட்சி. சோல்பரி அரசியல் அமைப்பின் 29 வது சரத்தை இல்லமால் செய்யவே 1972 ஆண்டு அரசியல் அமைப்பு கொண்டு வரப்பட்டது . இதில்தான் ஒட்டையாட்சி புகுத்தப்பட்ட்டது.இந்த அரசியல் திருத்தம் வரும்பொழுது அரசு கவிண்டுவிடும். நீர் நாடுபட்டுடன் உணர்ச்சி படவேண்டியது என்சி இருக்கும்.

 • suthan:

  திரு குணாதிலகம் அவர்களே சுதந்திரம் என்று ஒன்று தமிழனுக்கு இருக்கவில்லை இழப்பதட்கு. என்றும் இன்றும் தமிழன் இலங்கையில் அடிமை வாழ்க்கையே வாழுகின்றான். அதை விட மரியாதையாக தமிழன் வெளீநாட்டில் வாழ்கின்றான்.பொன்விளையும் பூமி பாலைவனமாக மாறுவதை நாம் பெரிது படுத்தவில்லை காரணம் சுதந்திரம் இல்லாத நாடு.
  உந்த நாட்டில் 4 விதமான சட்டம் இருக்கிறது. கொள்ளை அடிக்கும் அரசியல் வாதிக்கு ஒரு சட்டம், மொட்டை கூடத்துக்கு ஒரு சட்டம், சிங்களவருக்கு ஒரு சட்டம், தமிழனுக்கும் முஸ்லிமுக்கும் எழுதப்படாத சட்டம். புலம் பெயர்த்தோருக்கு வேஷட சட்டம் இங்கு கிடையாது எல்லோருக்கும் சம நீதி. கல்வியில் திறமை படைத்தவருக்கு பல்கலை கழக கட்டுப்பாடு கிடையாது. இலங்கை பல்கலை கழகத்தில் பஜிலும் மாணவர் தொகையை விட புலம் பெயர் தமிழ் மாணவர் அதிக அளவில் இன்று வெளிநாட்டு பல்கலை கழகங்களில் பயிக்கிறார்கள். இலங்கை அரசியல் வாதிகளுக்கு மட்டும் சிறந்த நாடு. சில அரசியல் வாதிகள் கொள்ளை அடிக்கிறார்கள் அவர்களுக்கு கேட்டிட முதல் 100000 ரூபா சம்பள உயர்வு. யனாதிபதி பென்சன், மந்திரி பென்சன், mp பென்சன் மற்றும் வீடு வாகனம் சகல வசதியும் உண்டு வெளி நாட்டில் அரசியல் வாதிக்கு வரப்பிரசாதம் இல்லை.

  • kunathilagam santhai:

   தம்பி ,சுதன் இங்கு நீர் ஆத்திரப் படும்வகையில் நான் பெரிதாக எதையும் எழுதவில்லை என நினைக்கிறேன் .இன்றைய இளையோர் வாழ்க்கை முறையுடன் அன்றைய எம் வாழ்க்கையை விளக்கவே இதை பதிவு செய்துள்ளேன் .அன்று எமது வயல்கள் இருந்த நிலையை அறிந்தவனுக்கே இது விளங்கும் .அன்று சாந்தைப் பிள்ளையார் கோயிலின் பின் இறங்கினால் காட்டு ஐயனார் கோயில்வரை கத்தரி ,மிளகாய் ,புகையிலை ,வெங்காயம் ,மரவெள்ளி ,குரக்கன் மற்றும் சிறுதானி யங்களான எள்ளு ,பயறு போன்றவைகள் வயலை நிரப்பி இருக்கும் .வயல்வெளி பச்சைக் கம்பளம் விரித்தது போல் காட்சி அளிக்கும் .இன்று அதே வயல்கள் இருக்கும் நிலையையே இங்கு குறிப்பிட்டேன் .

   அடுத்து இங்கு சுதந்திரம் இல்லைத்தான் .அதற்காக அந்நிய நாடு சென்ற நீங்கள் சுதந்திரமாக வாழ்கிறீர்கள் என்றில்லை .சுதந்திர தாகம் அனைவரிடமும் இருந்தாலே நாம் சுதந்திரத்தை அடைய முடியும் .சுயநலம் கொண்டு ஒரு தொகுதியினர் எம் நாட்டை விட்டு ஓடியதால் இன்று நாம் பெரும்பான்மையை இழந்து நிற்கின்றோம் .எமது பாராளுமன்ற உறுப்பினர் தொகை குறைக்கப்பட்டு சிங்கள உறுப்பினர் தொகை அதிகரிக்கும் நிலையில் உள்ளோம் .இது எம்மை மேலும் சிக்கலாக்கும் நிலையாகும் .சுதந்திரம் தானாக வரமாட்டாது .அதை நாமே பெறவேண்டும் .போராடியே பெறவேண்டும் .அதற்கு எமது சனத் தொகைப் பலம் வேண்டும் .இதற்கு மேல் விளக்க நான் விரும்பவில்லை .நன்றி

   • Suthan:

    திரு குணாதிலகம் அவர்களே நான் ஒன்று கூறுகின்றேன் இன்று இங்கிலாந்தில்/ கனடாவில் குடியுரிமை உடைய தமிழன் ஸ்ரீலங்காவில் தமிழருக்கு இருக்கும் உரிமையை விட அதிக உரிமையுடனும் நாடுபட்டுடனும் வாழ்கின்றார்கள். சனத்தொகைக்கும் உரிமை கொடுப்பதற்கும் சம்பந்தம் இல்லை.93 இனம் கனடாவிலும் 67 இனம் இங்கிலாந்திலும் ஒற்றுமையாக சம அந்தஸ்துடன் வாழ்கின்றது. இங்கே பட்டய உரிமை charter of rights என்று ஒரு சட்டம் இருக்கிறது இது சகல குமகனுக்கும் பொருந்தும் இதை எவராலும் எந்த பெரும்பான்மையாலும் மாத்த முடியாது. ஒரு இனத்தில் ஒருவர் வசித்தாலும் அவருக்கும் அந்த சட்டம் செல்லுபடியாகும். குறுகிய மனப்பான்மை உடையவரிடம் தாராளத்தை எதிர் பார்க்க முடியாது. இப்படியான ஒரு நாட்டில் சேவை செய்வது விட பண்டைய ரோமா ராஜ்யத்தில் அடிமையாக இருப்பது சாலசிறந்தது. உந்த நாட்டில் சில அரசியல்வாதிகள் 3 பென்ஷன் பெறுகிறார்கள் அரச உத்தியோகத்தராக இருந்த ஒரு பென்சன் அவர் மேப் பதவிக்கு வந்து அடுத்த பென்சன் பின்பு ஜனாதிபதி பதவிக்கு அடுத்த பென்சன். அதே நேரம் 45 வருடமாக கடின வேலை செய்யும் தோடட தொழிலுக்கு ஒன்றும் கிடையாது . இதுதான் யதார்த்தம்.

    • சி.சிவானந்தம்:

     தம்பி சுதன் அவர்களே!
     தங்களது ஆதங்கத்தையும்,புலம்பெயர் வாழ்வின் மோகத்தையும் எதற்காக அறிவாற்றலும்,அநுபவ முதிர்ச்சியும் நிறைந்த இன,மத,மொழிப் பற்றாளரும்,சமூக நலன் விரும்பியுமான இந்த ஆசிரியர் மீது பாய்ச்ச முனைகிறீர் என்பது புரியவில்லை.நானும் ஒரு புலம்பெயர்ந்தவனாதலாலும், புலம்பெயர்ந்த நமது தமிழர்கள் நிலை,செயற்பாடுகள், பற்றி நன்கறிந்தவன் என்தனாலும் கூறுகிறேன் இடர்கள்பல கண்டு,இன்னல்கள் பலவற்றை தம்மகத்தே சுமந்து,பிறந்த மண்ணில் வாழ்கின்ற எந்தவொரு மக்களையும்,அல்லது ஒரு தனி மனிதரையும் எந்தக் காரணத்துக்காகவும் குற்றம் சுமத்தவோ,குறை கூறவோ தகுதியற்றவர்கள்.

     ஆசிரியர் அவர்கள் தனது தீர்க்க தரிசனத்தின் மகத்துவத்தால் தமிழ் மக்கள் நிலைமைதனை இறந்த கால,நிகழ்கால,எதிர்கால நிலைகளை கவனத்திற்கொண்டு இக் கவிதைகளைப் படைத்திருக்கிறார்.கவிதையின் கருத்தாளத்தை படித்தறியத் தெரியாத,பல்லாயிரம் ஆண்டுகளாகத் தொடரும் தமிழர்தம் சோக வரலாறுகளுக்கான காரணத்தை நன்கறியாத,காலம் காலமாக வேலியே பயிரை மேய்ந்து கொண்டிருப்பதை இன்று வரை உணராத தங்களுக்கு இவை அனைத்தையும் நன்கறிந்த இக் கவியாசிரியரிடம் தாங்கள் கண்ட குறைகளுக்கான அடிப்படைக் காரணம் யாதோ?

     நன்றி!

     • suthan:

      அண்ணன் சிவானந்தம் அவர்களே நீங்கள் வாழும் நோர்வேயில் உங்களுக்கு சகலவசதியும் கொடுக்கப்பட்டுஇருக்கிறது. நீங்கள் வேலைசெய்யாமல் நோய் வாய் பென்சன் பெற்றுக்கொண்டு இருக்கிறீர்கள். இந்த வரப்பிரசாதம் உங்களுக்கு உங்கள் ஸ்ரீலங்காவில் கிடையாது. முதலில் இருக்கும் நாட்டிட்கு நன்றியாக இருங்கள். கண்ணாடி வீட்டில் இருந்து கல் ஏறியாதீர்கள். ஆசிரியர் என்றால் எல்லாம் தெரிந்தவர் என்பது அர்த்தம் அல்ல.

    • kunathilagam santhai:

     தம்பி சுதன் ,நான் என் வயது அனுபவத்தால் இதைக் கூறினேன் .நான் 69varuda தமிழர் போராட்டத்தைக் கண்டதால் இப்படி எழுத நேர்ந்தது .நீங்கள் சுகமாக வாழ வேண்டி வெளிநாடு சென்றவர்கள் தானே .இது உங்களுக்கு கசப்பாகத்தான் இருக்கும் .
     பணம் தேடியலையும் பிணம் என்பதன் சரியான பொருளை நீர் அறியாதது கவலையாக உள்ளது .பிணம் என்பது பிணம்தான் .ஆனால் அந்தப் பிணம்கூடப் பணம் என்றதும் வாய் திறக்கும் என்பது பழமொழி .இதன்மூலம் பணத்தின் பெறுமதியை விளக்கப் படுகிறது .

     அடுத்து லண்டன் ,கனடா போன்ற நாடுகளில் உள்ள சுதந்திரம் எண்கள் நாட்டில் இல்லைத்தான் .அதை நாங்கள் பெற்றே ஆகவேண்டும் .அது இங்கிருக்கும் எங்களது பொறுப்பு .நீர்தானே லண்டன் கனடா உங்கள் தாய் நாடென்று கூறியுள்ளீர் .எனவே நான் கூறுவது எம் தாய் நாடு பற்றி .உங்கள் நாட்டுப் பற்று இப்போது தன்சப் பற்றாகவே இருக்கும் .உங்கள் பேரபி ள்ளையின் காலமே இது அவர்களின் தாய் நாடாகும் .இப்போது நீரும் உங்கள் தாயும் இலங்கையர்களே .இதற்கு மேல் நான் ஒன்றும் கூறவில்லை .நன்றி

     • suthan:

      திரு குணாதிலகம் அவர்களே உங்கள் ஆசிரியர் பதவிக்கு நான் தலை வணங்குகின்றேன். ஒருவர் ஒன்றை எழுதும் பொழுது அதை வாசிப்பவர் பல கோணத்தில் விளங்கிக்கொள்வார். இதை ஆங்கிலத்தில் subjective theory / objective theory என்று அழைப்பார்கள் எழுதுபவர் ஒன்றை நினைத்துக்கொண்டு எழுதுவார் இது subjective theory படிப்பவர் வேறு கோணத்தில் விளங்குவார் இது objective theory . உங்கள் கவிதையில் குறிப்பிட்டுள்ள அந்நிய நாடு சென்று அடிமை வாழ்வு வாழ்வது என்பது ஏற்றுக்கொள்ளமுடியாததொன்று. ஒரு நாடடிட்கு வந்தால் முதலில் நாம் அந்த நாட்டு மொழியை கட்க வேண்டும் பின்பு ஒரு தொழில் சார் கல்வியை கற்கவேண்டும் அப்பொழுது தொழில் நம்மை தேடி வரும். இங்கு வந்து படிக்காமல் கள்ள வேலையும் அரச கொடுப்பனவும் எடுத்துக்கொண்டு 40 வயதில் disability பென்ஷன் எடுத்துக்கொண்டு இறை பத்தன் நாடகம் போடுவோருக்கு வெளி நாடு அடிமை வாழ்க்கை என்பார்கள். படிக்கவும் இயலாது வேலை செய்யவும் இயலாது எல்லாம் இலவசமாக வேண்டும். நாட்டிடை இகழ்ந்து அந்த நாடிடமே பொய் கூறி கொடுப்பனவு பெறுவோர் தங்கள் சுதந்திர நாட்டிட்கு திரும்ப யாரும் தடை இல்லையே. நன்றி உங்களை மனம் புண்படுத்தியிருந்தால் மன்னித்துக்கொள்ளவும். திரும்பவும் நன்றி

    • vadivelan:

     நிறை குடம் தளம்பாது சுதன் ,குறைகுடம் எப்போதும் தளம்பிக்கொண்டுதான் இருக்கும் .இது இரண்டு குடங்களுக்குள்ளும் இருக்கும் நீரின் அளவினால் ஏற்படுவதே..உங்கள் அறிவு அவ்வளவுதான் .

     • Suthan:

      வடிவேலனே நான் படித்தது ஸ்ரீலங்காவில் ஆண்டு எட்டு. Germany வந்து இங்கிலாந்தை அடைந்தேன் மிகுதிப்படிப்பை இங்கேயே முடித்தேன் உங்கள் பழமொழிகள் உங்களைபோன்றவருக்கு பொருந்தும். Billgate எதை படித்தார் கணணியே அவருடைய திறமையில் தான் சுழலுகிறது. நீர் பாமர பழமொழி படித்துகொண்டிருந்தால் இது ஒன்றும் புரியாது. நவீன தொழில் நுற்பத்தை கற்றுகொள்ளும். பழமொழியின் காலம் மலையேறி விடடது.

  • rajan panippulam:

   சுதன் நீர் அண்ணாவோ தம்பியோ தெரியாது ,ஒண்டு மடடம் சொல்லுறன் .

   உழுகிறமாடு உள்ளூரிலையே உழும் .உள்ளூரில் உள ஏலாத சோம்பேறி மாடே வெளியூர் செல்லும் .உள்ளூர் மாடு தன சொந்த மண்ணை நம்பும் .சோம்பேறி மாடு அந்நியர் கையை எதிர் பார்க்கும் .அந்த வகையில் நீர் ???????????????????.

   • Suthan:

    ராஜன் அவர்களே நான் பிறந்தது 1977 . எனக்கும் நீங்கள் அண்ணன் / தம்பி என்பது தெரியாது . உழுகிற மாட்டிக்கு உள்ளூரில் வசதி இல்லாமல் வெளீநாடுகளுக்கு அரசாங்கம் விசேட பாயிட்ச்சிகளுக்கு அனுப்புவது தெரியாத? வெளீநாடுகளில் தூதரகங்களை ஏன் திறந்து வைத்திருக்கிறார்கள். உள்ளூரில் உழுவதட்கு கிணத்து தவளைக்குத்தான் முடியும்.

    • rajan panippulam:

     தம்பி சுதன் நீர் மிகச் சின்ன வயதில் ஊரை விட்டு ஒழித்து ஓடியவன் ,அதன் பின் இதுவரை ஊருக்குத் திரும்பியதே இல்லை .உங்களுக்கு எங்கே ஊர்ப் பற்று ?உன் குடும்பத்தில் (பெற்றோர் )கூடப் பற்றில்லாத உனக்கு நான் கூறும் அறிவுரை புறக் குடத்து நீரே ! ஆனாலும் உன் அப்பன் குணம் உன்னில் அப்படியே இருப்பதே நீ இவ் ஊறவன் என்பதற்கு ஒரு அறிகுறி .

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து