உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

ஆலயங்களின் புனிதம் பேண முன் வருவீர்களா ?
————————————————————–
இன்று ஆலையங்கள் பல வழிகளிலும் முன்னேறி வரும் வேளையில் சில ஆலயங்களில் சிலர் செய்யும் செயல்கள் வழிபடுவோருக்குப் பெரிதும் கவலை அளிக்கிறது .ஆலையங்கள் மக்கள் அமைதியைப் பெறும் ஒரு இடமாகவே இருக்க வேண்டும் .மன நிம்மதியை இழந்துள்ளவர்கள் ஆலையங்களுக்குச் சென்று அமைதியாக இறைவனிடம் தங்கள் குறையைக் கூறி நின்மதியைப் பெறுகிறார்கள் .இது காலம் காலமாக நடைபெறும் ஆன்மீகச் செயற்பாடாகும் .

இவ்விதம் இருக்க சில ஆலயங்களில் காவலாளிகள் விடுகாலிகள் தங்கள் பொழுதைக் கழிப்பது வேதனையான விடையமாகும் .இதற்கு எமது கிராமமும் விதி விலக்கல்ல .எமது கிராமத்தில் ஆலையங்கள் அசுர வேகத்தில் அபிவிருத்தி அடைந்து வருவதைக் காணலாம் .மூலை முடுக்குகளில் உள்ள கொட்டில் கோயில்கள் எல்லாம் இன்று அழகான வேலைப்பாடுகளுடன் கூடிய கோயில்களாக அமைக்கப் பட்டு மக்கள் வசதியாக வழிபட்டு வருகின்றனர் .
அவ்வகையில் அமைக்கப் பட ஒரு கோயில் தான் காலையடி தெற்கு அருள்மிகு முத்தர்கேணி ஞான வைரவர் ஆலையம் .இது பல வருடங்கள் பழமை வாய்ந்த ஆலயமாகும் .இவ் ஆலையம் புனரமைக்கப் பட்டு சிறப்பாகப் பூசைகள் இடம்பெற்று வருவது அனைவரும் அறிந்த ஒன்று .ஆனால் இங்கு சில வேண்டாத செயல்களை சிலர் செய்து வருவதை இவ் ஊரில் உள்ள யாரும் கண்டு கொள்வதில்லை .
ஆலையம் மக்கள் வழிபாட்டுக்காக திறந்திருக்கும் வேளைகளில் இங்குள்ள சில சமூக சீர்கேடுகளில் ஈடுபடுவோர் ஆலயத்துள் சென்று மது போதையுடன் படுப்பது ,போதை பொருட்களை பாவிப்பது ,ஆலைய வளவில் சிறுநீர் கழிப்பது போன்ற அருவருக்கத் தக்க செயல்களில் ஈடுபடுகிறார்கள் .அத்துடன் ஆலைய மின்குமிழ்களைத் திருடுகிறார்கள் .பலமின்குமிழ்கள் திருடு போயுள்ளதால் ஆலைய ஆதீன கர்த்தா மிகுந்த கவலை அடைந்துள்ளார் .இதைவிட இன்னுமொரு அநியாயம் ஆலைய மடப்பள்ளியில் திருடும் பொருட்டு மடப்பள்ளியில் கதவுக்குத் தீமூட்டி எரிக்க முயற்சித்ததாகவும் கூறப் படுகிறது .எனவே இவ்வாறான செயல்களில் ஈடுபடுவோரை ஊர் மக்களே கட்டுப் படுத்த வேண்டும் .ஆலைய ஆதீன கர்த்தாவால் இவர்களைக் கட்டுப் படுத்த முடியாது .கிராம மக்களே இதைக் கண்காணித்து ஆலயத்தின் புனிதத்தைக் காக்க முன் வருவீர்களா ?

பணிப்புலம் வாசி .

2 Responses to “”

 • kunathilagam santhai:

  நண்பன் சிவானந்தம் அவர்களின் கருத்தே உண்மை .சனசமூக நிலையம் என்பது சமூகத்தை நல்வழியில் ஒரு கட்டுக் கோப்புக்குள் கொண்டு செல்வதற்கே .எனவே நாம் பனிப்புலம் என்னும் ஒரு சமூகம் .நாம் அனைவரும் ஒரு குடையின் கீழ் வாழ ஒன்றுபட வேண்டும் ,முன்பு பனிப்புலம் மத்தியில் அமைந்திருக்கும் அம்பாள் சனசமூக நிலையத்தின் கட்டுப்பாட்டுடனேயே நம் முன்னோர் வாழ்ந்தனர் .பிற்காலங்களில் ஒவ்வொரு காரணங்களைக் காட்டி குக் கிராமமாக சன சமூக நிலையங்கள் அமைக்கப்பட்டன .இதனாலேயே எம்மில் பிளவுகள் ஏற்ப்பட்டன .

  அயல்கிராமங்களைப் பார்த்து நாம் நடக்க வேண்டிய நிலையில் நாம் இன்று உள்ளோம் .சாந்தை என்பது முன்பு பனிப்புலத்தில் வடபகுதியாகப் பிள்ளையார் கோயிலடியை மையமாகக் கொண்டிருந்தது .இங்கு வாழ்ந்த பனிப்புலம் சமூகத்துடன் மிகக் குறைந்த ஒரு வேறு சமூகமும் வாழ்ந்தது .இன்று சாந்தை என்பது ஒரு மிகப் பெரும் சமூகமாக அதன் நிலப் பரப்பும் சில்லாலையை ஊடுருவி மாதகல் எல்லையை அண்மித்து விட்டது .இதன் காரணம் பல இடங்களில் சிதறிக் கிடந்த ஒரு இனம் ஒன்றுபட்டு ஒரே இடமாக கூடியதேயாகும் .இன்று அவர்கள் சமூகத்துக்கென தனியாக சனசமூக நிலையம் ,சங்கக் கடை ,முன் பள்ளி ,ஆரம்ப சுகாதார நிலையம் ,வெவ்வேறு கடவுள்களுக்கான சிறு ஆலையங்கள் ,ஒரு அரச பாடசாலை ,இன்னும் ஒவ்வொரு தொழில் ரீதியான சங்கங்கள் என பல அமைப்புடன் ஒன்று பட்டுச் செயல் படுகிறார்கள் ,எமது கிராமத்தை விட சனத்தொகையில் அதிகம் இருந்த போதும் ஒரே சமூகம் என்ற ரீதியில் ஒரு சனசமூக நிலையம் மட்டுமே உண்டு .இப்போது ஒரு பெரும் ஆலையம் அமைக்க முயற்ச்சி எடுத்து வருகிறார்கள் .நாமோ இன்னும் இன்னும் பிரிந்து கொண்டு செல்லும் போக்கிலேயே உள்ளோம் .

  எனவே முதலில் எம்மிடம் நாம் ஒரு சமூகம் என்னும் பற்று ஏற்ப்பட வேண்டும் .அப்போது எல்லாம் தானாக அமைந்துவிடும் என்பது என்கருத்து .

 • சி.சிவானந்தம்:

  இங்கு குறிப்பிடப்பட்டுள்ள நிலைமைகள் இலங்கை,இந்தியக் கிராமப்புறங்களில் இருக்கின்ற ஆலயங்களில் இருப்பதாகும்.இதற்கான காரணம் மக்களிடையே மதம் பற்றிய பூரண அறிவின்மையும்,மழுங்கி வரும் இறை பக்தியுமாகும். வளர்ந்து வரும் விஞ்ஞானம் மனிதரின் அறிவினை மழுங்கடித்து விட்டது.

  எமதூர் இந்த நிலையிலிருந்து விடுதலை பெற வேண்டுமானால், மக்களிடையே விட்டுக்கொடுப்புகளுடனான, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படல் வேண்டும். இதற்கு முதல் தேவை எல்லைப் பிரிவுகள்,படித்தவர்கள்,படிக்காதவர்கள் பகுதி,என்ற சிற்றறிவினால் உருவாக்கப்பட்டுள்ள பல மக்கள் அமைப்புகள் ஒன்றிணைக்கப்பட்டு நாங்களெல்லாம் எம் குலத்தாய் அம்பாளின் பிள்ளைகள் என்ற அசையாத நம்பிக்கையுடன் ஒரு சனசமூக அமைப்புக்குட்பட்ட மக்கள் அமைப்பை உருவாக்கி உழைத்திட முன் வரவேண்டும்.

  பணிப்புலம் என்ற எமதூரின் எண்திசை எல்லைப்பிரிவுகளின் பெயர்களால் அமைக்கப்பட்டுள்ள சனசமூகநிலையங்கள், மன்றங்கள் ஒன்றிணைக்கப்பட்டு ஒரு நிர்வாக அமைப்பின் கீழ் எமது கிராமத்தினதும்,மக்களினதும் நலன்களை கவனத்திற்கொண்டு ஒற்றுமையாகச் செயற்பட மக்கள் முன்வர வேண்டும். ஒரேயொரு பெரிய ஆலயத்தைக் கொண்டிருந்த எமதூரில் இன்று மூன்று பெரிய ஆலயங்கள் உருவாகிவிட்டன. இம்மூன்று ஆலயங்களும்,ஏனைய சிற்றாலயங்களும் ஒரு மக்கள் நிர்வாகக் கட்டமைப்புக்குள் உள்வாங்கப்பட்டு மக்கள் ஆலயங்களாக இயக்கப்படுதல் வேண்டும்.இத்தகையதொரு நிலை எமதூர் மக்களிடையே ஏற்படுத்தப்படாவிடின் மேற்படி நிலைமைகளை ஒழிக்கமுடியாது என்பது எனது பணிவான கருத்தாகும்.

  ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!
  ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு!

Leave a Reply for kunathilagam santhai

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து