உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

அமெரிக்காவில் மின்னெ கோடாவை சேர்ந்த ஒரு நிறுவனம் சமீபத்தில் வெளியான ‘ஐபோன்-7’ வடிவில் கைத்துப்பாக்கி தயாரித்துள்ளது.அது ‘9எம்எம்’ ரக இரட்டைக்குழல் துப்பாக்கியாகும். அதன் விலை ரூ.30 ஆயிரம் (330 பவுண்டு) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஐ போன்-7 விலையை விட பாதி அளவாகும்.

‘ஐபோன்’ வடிவிலான கைத்துப்பாக்கி அடுத்த வாரம் விற்பனைக்கு வருகிறது. அதற்கான முன்பதிவு (ஆர்டர்) அதிக அளவில் குவிந்துள்ளது.இதற்கிடையே பெல்ஜியம் போலீசார் இந்த துப்பாக்கி குறித்து ஐரோப்பிய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஏனெனில் ஐரோப்பிய நாடுகளில் போலீசாருக்கு ஐபோன் வடிவிலான துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளன.

தற்போது அமெரிக்காவில் அதே வடிவிலான துப்பாக்கி விற்பனைக்கு வரும் பட்சத்தில் அது கண்டம் விட்டு ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவும் சூழ்நிலை உள்ளது. அது தீவிரவாதிகளின் கைகளில் தாராளமாக கிடைக்கும் அபாயம் உள்ளது.எனவே பொதுமக்களும், போலீசாரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து