உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

தமிழரின் எதிர்பார்ப்பாக முன்வைக்கப்படவுள்ள அரசியலமைப்பானது நீண்டகாலமாகத் தீர்க்கப்படாதுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமானதும் நீடித்து நிலைத்திருக்கக்கூடியதுமான தீர்வினைக் காண வழிகாட்ட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழரின் தேசிய திருநாளான தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.குறித்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை திருநாட்டில் வாழும் தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி புலம்பெயர்ந்து வாழும் எம்மக்களுக்கும் தைப்பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

உழவர் திருநாள், தமிழர் பெருநாள் என்றெல்லாம் பெருமைப்படும் தைத்திருநாளான இன்று தமிழ் கூறும் நல்லுலகம் எங்கும் இத் தைப்பொங்கல் விழா மகிழ்வுடன் கொண்டாடப்படுகின்றது.

தை பிறந்தால் வழிப் பிறக்கும் என்பார்கள். அதன்படி தை மாதம் பிறக்கும் போதே மக்களுக்கு பல எதிர்பார்ப்புக்களும் பிறக்கும். அந்தவகையில் தமிழரின் எதிர்பார்ப்பாக முன்வைக்கப்படவுள்ள அரசியலமைப்பானது நீண்டகாலமாக தீர்க்கப்படாதுள்ள தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயமானதும் நீடித்து நிலைத்திருக்கக்கூடியதுமான தீர்வினைக் காண வழிகாட்ட வேண்டும்.

அந்த தீர்வானது இலங்கை வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமைந்திட வேண்டுமெனவும், இதய சுத்தியுடனான இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமெனவும் இந் நன்னாளில் நாம் நம்பிக்கை கொள்வோம் என தனது வாழ்த்துச் யெ;தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து