உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

அமரர் சபாபதி சண்முகலிங்கம் (சுழிபுரம் வடக்கு ஆறுமுக வித்தியாசாலைமுன்னள் அதிபர் )

மண்ணின்  மைந்தர்கள் வரிசையில் இன்று வருபவர் அமரர் சபாபதி சண்முக லிங்கம் அவர்கள் .பணிப்புலம் கிராமத்தில் பிறந்த இவர் ஆசிரியராக அதிபராக கோட்டக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றி மறைந்தவர் .அமரர் அவர்கள் எமது கிராமத்தில் (சமூகத்தில் )மிகப் பழமையான ஒரு கலைப்  பட்டதாரியாக ஆசிரியர் சேவையில் (1967 என நினைக்கிறேன் )சேர்ந்தார் .

அவர்களின் சுய வாழ்க்கை பற்றிநான்  எதையும் கூற வரவில்லை .அவர்கள் எமது கிராமத்துக்கு ஆற்றிய சேவைகள் பற்றியே குறிப்பிட விரும்புகிறேன் .பண்ணாகம் வடக்கு அ.மி .த .க  பாடசாலையில் ஆரம்பக் கல்வி கற்று சுழிபுரம்  விக்டோரியாக் கல்லூரியில் இடை நிலைக் கல்வி கற்று சுண்ணாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் உயர் கல்வி கற்று கொழும்புப் பல்கலைக் கழகத்தில் கலைப் பட்டதாரி ஆனவர் .
இக் கால இள வயதில் பனிப்புலம் அம்பாள் சனசமூக நிலைய நிர்வாகிகளில் முன்னின்று  உழைத்தவர்களில் ஒருவராவார் .நிலைய வளர்ச்சிக்காக நிலைய அங்கத்தினர் அருவி வெட்டி நிதி சேகரித்தபோது முன்னின்று செயல்ப்பட்டவர் .
பல பாடசாலைகளில் ஆசிரியராகக் கடமை ஆற்றி பண்டத்தரிப்பு இந்துக் கல்லூரியில் உப அதிபராகி பின் எமது கிராமத்திற்கு சேவை செய்யும் ஒரே நோக்குடன்  சுழிபுரம் வடக்கு ஆறுமுக வித்தியாசாலையில் அதிபராகப் பொறுப்பேற்றார் .அங்கு அதிபராக இருந்த காலத்தில் அங்கு கற்ற மாணவர்கள் (இன்று புலம் பெயர் நாடுகளில் அவர் பெயர் சொல்லி வாழும் )அவரின் கிராமப் பற்றைக் கூறுவதைக் கேட்க முடிகிறது .ஒரு சில உதாரணங்களைக் கூற விரும்புகிறேன் .
ஒரு முறை பாடசாலை மாணவர் சிலர் அயலிலுள்ள வயல்க் கிணற்றில் விழுந்து குளித்து விட்டனர் .(இது பாடசாலைக்கு நல்ல தண்ணீர் எடுக்கச் சென்ற போது)அந்தக் கிணற்று உரிமையாளன் (சுழிபுரம் கிழக்கைச் சேர்ந்த எம்மினத்தின் மீது துவேசம் கொண்டவர்கள் )பாடசாலைக்கு வந்து அதிபரிடம் முறையிட்டார் .
அதிபர் உடனே மாணவர்கள் செய்தது பிழை எனத் தெரிந்தும் வந்த முறைப்பாட்டுக் காரரைத் திருப்திப் படுத்துவதற்காக தண்ணீர் அள்ளப் போனவர்களைக் கூப்பிட்டு விசாரித்து எல்லோருக்கும் அவர் முன்னிலையிலேயே அவர்களைத் திரும்பி நிற்கும்படி கூறி பின் பக்கத்தில் இரண்டு அடியும் கொடுத்து வந்தவரைத் திருப்திப் படுத்தி அவர்களைப் புத்தகங்களுடன் பாட சாலையை விட்டு வெளியேற்றினார் .அந்த மாணவர்கள் அஞ்சி மீண்டும் பாடசாலைக்குச் செல்லாது விட்டனர் .அதிபர் அவர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களுக்குப் புத்திமதி கூறி அவரைத் திருப்திப் படுத்தவே தாம் அப்படிச் செய்ததாகக் கூறி அவர்களை மீண்டும் பாடசாலைக்கு அழைத்துச் சென்றார் .
இன்னுமொரு சம்பவம் , சில வருடங்களுக்கு முன் சுழிபுரம் கொத்தணி என்ற பெயரில் பாட சாலை நிர்வாகம் இருந்த போது ஆறுமுக வித்தியாசாலை கொத்தணி அதிபர் (விக்டோரியா )மேற்ப்பார்வையில் இருந்தது .அப்போது நான் விக்ரோரியாவில் கற்ப்பித்தேன். ஒரு நாள் ஆறுமுக வித்தியாசாலை மேர்ப்பார்வைக்காக கொத்தணி அதிபர் வந்திருந்தார் .அப்போது அவர் சண்முக லிங்கம் அவர்களிடம் “உங்கள் பிள்ளைகளை உயர் கல்விக்கு விக்டோரியாவுக்கு அனுப்புங்கள் “எனக் கூறினார் .அப்போது எங்கள் பிள்ளைகளை கடைசிவரை விக்டோரியாவுக்கு அனுப்ப மாட்டேன் என  காரணத்தையும் கூறினாராம் .அதிபர் சற்று விரக்தியுடன் வந்து என்னிடம் கேட்டார் ,உங்கள் பிள்ளைகள் ஏன் விக்டோரியாவுக்கு வருவதில்லை என்று .நான் இங்கு இருக்கும் சிலர்  எங்கள் சாதியைக் குத்திக் கதைப்பதால் எமது மாணவர்கள்  உளப் பாதிப்புடனேயே இங்கு கற்க வேண்டும்.அப்படித்தான் நாம் கற்றோம்  எனக் கூறினேன் . உடனே அவர் சொன்னார் ,சண்முகலிங்கம் மாஸ்டர் சொன்னது சரி என நான் இப்போ உணருகிறேன்  என .
இப்படி எமது சமூகத்தை ஒரு இடமும் விட்டுக் கொடுக்காத ஒரு சமூகப் பற்றாளர் .
நானும் அவரின் ஊக்குவிப்புடனேயே ஊக்கமாகக் கற்றேன் எனக் கூறலாம் .நான் கற்ற காலத்தில் எனது மாமனாருடன் அவர் சினேகிதனாக உள்ளதால் அடிக்கடி அங்கு வருவார் .அப்போது அவரைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றிருந்தேன் .சந்திக்கும் நேரமெல்லாம் கவனமாகப் படிக்க வேண்டும் ,நாம் தொழிலில் மாறி முன்னேற வேண்டும் என்று அடிக்கடி கூறுவார் .இப்படியாக எமது சமூகத்தை வெளியில் உலாவச் செய்ய வேண்டுமென அக்கறையுடன் செயல்பட்டார் .
அரசியல் பற்றி நான் கூற விரும்பாவிட்டாலும் ,அவர் ஸ்கந்தாவின் புகழ் பூத்த ஒறேற்றர் சுப்ரமணியம் ,மாதகல் கந்தசாமி ,வ.பொன்னம்பலம் ஆகியோரின் மாணவனாக இருந்தும் அவர்களது அரசியல் கொள்கைகளை எம் ஊரில் முன்னெடுக்க முயலவுமில்லை  ,முனைந்தவர்களைத் தடுக்காது விடவுமில்லை .
இதற்கு உதாரணமாக ஒரு சம்பவம் ,
1 9 7 7 பொதுத்தேர்தல் மிகத் தீவிர பிரசாரம் .எமதூரில் தமிழர் கூட்டணிக்கே ஆதரவாக இருந்தது .அமரர் அவர்கள் தீவிரமாகக் கூட்டணிக்குப் பிரசாரம் (மேடையில் அல்ல )செய்கிறார் .அதேவேளை எமது கிராமத்தில் ஒரு அமைப்பு தேர்தலைப் பகிஸ்கரிக்கும் பிரசாரக் கூட்டமொன்றுக்கு ஒழுங்கு செய்திருந்தது .அதைத் தடுக்கும் முயற்ச்சியில் இருந்த இளைஞர் குழுவுக்குத் தலைமை தாங்கித் தடுத்தும் விட்டார் .பகிஸ்கரிப்புக் குழுவில் அவரது நெருங்கிய உறவினர்கள் முன்னணியில் இருந்தபோதும் கொள்கையில் மாறாத இவர் தமது கொள்கையை விட்டுக் கொடுக்காதது இவரின் தமிழ்ப்பற்றே .
ஆறுமுக வித்தியாசாலை அதிபராக இருந்த காலத்தில் பாடசாலைக்கு ஒரு விளையாட்டு மைதானம் இல்லாதிருந்தது .1 9 5 9  ஆம் ஆண்டு எமது கிராமச் செட்டியார் சமூகத்தில் வாழும் திருமதி மங்கயர்க்கரசி பாலச்சந்திரன் அவர்களால் பாடசாலைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டிருந்த 1 2 பரப்புப் பனந்தோ ட்டம் ஒன்று இருந்தது .சமார் 7 ௦ பனைகள் அடங்கிய நிலத்தை இன்று காணப்படும் ஒரு தரமான விளையாட்டு மைதானமாக்கிய பெருமை  அமரர் சண்முகலிங்கம் அவர்களையே சாரும் .இராச துரை வாத்தியார் என எம்மூரவரால் அன்பாக அழைக்கப்பட்ட அமரர் அவர்களை ஒருமுறை கல்வித் திணைக்களத்தினர் சுழிபுரம் விக்டோரியாவுக்கு அதிபராக ஏற்கும் படிகூற “நான் எமது சமூகத்தை மேம்படுத்தவே விரும்புகிறேன் “என மறுத்ததாக அவரே என்னிடம் கூறினார் .
தவிர்க்க முடியாத காரணங்களால் ஆயிரத்துத் தொளாயிரத்துத்தொண்ணூற்று நான்காம் ஆண்டு இடம் பெயர நேர்ந்த போதுஇவர் வன்னி மாவட்டத்தில் தன மகளுடன் குடி அமர்ந்தார் .அப்போது கோட்டக் கல்வி அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்று வன்னி மாவட்டத்திலேயே கடமை ஆற்றினார் .அங்கு கடமை ஆற்றும் போதே நோய்வாய்ப்பட்டு இறைவனடி சேர்ந்தார் .அன்னாரின் எமது கிராமத்துக்கான சேவைகளை நினைவுகூர நாம் வாழ்நாள் முழுவதும் கடமைப் பட்டவராவோம் .
இது எனக்குத் தெரிந்த தகவலே .மேலும் தகவல் இருந்தால் வாசகர்கள் தெரிவிக்கவும் .மற்றும் இங்கு ஏதாவது தவறுகள் இருந்தால் குடும்பத்தினரையும் ஏனையோரையும் என்னை மன்னித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் .
நன்றி .
ஆ.த .குணத்திலகம்
ஓய்வுபெற்ற ஆசிரியர்
அகில இலங்கை சமாதான நீதிவான்
சில்லால ,சாந்தை

4 Responses to “மண்ணின் மைந்தர்கள்”

 • karu:

  எல்லோரும் அப்படி இல்லை . ஆனால் எமது ஊருக்கு தெற்கு பக்கம் உள்ள கிராமத்து
  காடையர்கள் சிலர் விளக்கமில்லாமல்,புரியாமல் கதைப்பது அவர்கள் குணாதிசயம்

 • யதார்த்தவாதி:

  தமிழன் என்று. நெஞ்சை. நிமிர்த்தி. சொல்வேன் .. பண்டாரம். என்று. தலை உயர்த்தி. சொல்வேன். இது.வீரசைவம்..

  • kokilan canada:

   மண்வாசனை வீசும் உங்களைப்போல் நாமெல்லோரும் வாழ்ந்தாலே எம் வீர சைவ குலம் பாதுகாக்கப் படும் .
   வாழ்க வீரசைவம் !

 • rajah:

  எண்கள் ஊரை குத்தி கதைப்பது மிக அதிகம் அயல் ஊர் அக்காள் இதை அனுபவத்துடன் எளிதியுள்ர்கள் இது 1௦௦%உண்மை நானும் ஊரிலும் பார்த்து கேட்டு அனுபவித்துள்ளேன் .மற்றும் அயல் கிராமங்கள் அப்படி இல்லை அவர்கள் தொடர்ச்சியாக புலன்பெயர் நாடுகளிலும் நடப்பதை அவதானித்துஉள்ளோம்.நம்மவர்கள் பலர் முன்பு மாதிரி அல்ல கல்வி விஞ்ஞானம் ,பதவி பொருளாதாரம் என்பவத்தில் உட்ஷம் அடைந்து அவர்களைவிட பெரிய இடங்களில் திருமணம் உறவுகள் வைத்தும் ,வைக்ககேற்கிறார்கள் சங்கானை யூனியனில் தலைவராக தங்கராஜா இருந்தபோது அயல் ஊரவர் ஒருவர் அவரை செப்பு பொறுக்கிறவர்கள் இங்கு வந்து வீட்டினம் போன்ற பல உதாரணங்கள் உண்டு .பல வேறு ஊர் மக்கள் எம்மை பிராமணருக்கு அடுத்து அதி உயர் வெள்ளாளர் என்று புரிந்து மதிக்கிறார்கள்

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து