உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

கடவுள் உண்டா? இல்லையா? அவர் எப்படி இருக்கிறார் ? எங்கே இருக்கிறார்.இவன் என்னடா அலம்புகிறான்.விஞ்ஞானம் விண்ணைத் தொட்ட நேரத்தில் பகுத்தறிவு இல்லாமல் மூட நம்பிக்கை பற்றி எழுதுகிறான். தத்துவமேதை சோக்கிரட்டீஸ் சொன்னார் எதிலும் சந்தேகம்கொள். ஏன் எப்படி எதற்க்காக என்று பலகேள்விகள் உன்னுக்குள் வரட்டும்.எப்பொருள் யார்,யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு .கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் இலகுவாக சொல்லலாம் கடவுள் ,இல்லை ,இல்லை என்று சொல்லலாம்.  இல்லாத பொருளைக் காட்டமுடியாதுதானே. கடவுள் இருக்கிறார் என்று சொல்பவர்களுக்குதான் மிகவும் கடினம். இருக்கிற பொருளை காட்ட வேண்டும்.இதுதான் கடவுள் என்று பல ஆதாரங்களுடனும் , உதாரணங்களோடும் விளக்கவேண்டும் அல்லது நிரூபிக்கவேண்டும்.. எனது தாழ்மையான கருத்து கடவுள் இருக்கவே இருக்கிறார். இவ்வாறு நான் சொல்வதினால் பல விளக்கங்களும் ,உதாரணங்கள்,ஆதாரங்கள்உங்கள் முன் வைக்க வேண்டிய நிர்ப்பந்தத்க்கு ஆளாகிறேன். எனது எண்ணத்து எட்டியவரையில்இல்லாத ஒன்றிக்காக எத்தனை பெயர்கள் உண்டு. சிந்தித்து பாருங்கள். கடவுள்,தெய்வம். ஆண்டவன்,தேவன், கர்த்தர்,யேசு, கிறிஸ்துஅல்லா, யெகோவா, ராமர், புத்தா இன்னும் பல எழுதலாம். இல்லாத ஒன்றிற்க்காக மனிதர்கள் எத்தனை பெயர்கள் வைத்தார்கள்.கடவுள் ஒரு ஆவியாய் இருக்கிறார்.நம்மை விட அதி உயர்ந்த உயிர்வகையை சேர்ந்தவர் .கடவுளைடைய செயல் நடப்பிக்கும் சக்தியாய் இருக்கிறது .கடவுளை ஒருவரும் ஒருநாளும் கண்டதில்லை. கடவுள் எல்லாநேரமும் எல்லாரையும்பார்த்த வண்ணமே உள்ளார். ஊனக்கண்ணால்நாம் கடவுளை காணவில்லை என்றால் கடவுள் இல்லையா?  மின்சாரத்தினையோ, காற்றினையோ எங்கள் கண்கள் காணவில்லையென்றால் மின்சாரமோ காற்றோ இல்லையா? இவைகளின் சக்தியாய் மின்குமிழ் ஒளிர்வதும், மின்சார அடுப்பு எரிவதையும்,காற்றாடி சுற்றுவதையும் கண்டும்.,காற்றுவீசுவதை உணர்ந்தும் அறிகிறோம்.இப்படியாக பார்க்க,உணர இறைவனின் செயல் ஏதாவது இருக்கிறதா? அல்லதுஇல்லையா? .

எம்மைச் சூழ்ந்துள்ள பல்லாயிக்கணக்கான பலதரப்பட்ட உயிரினங்கள்,தாவரங்கள் இன்னும் எத்தனையோ இவைகள் எல்லாம் எவ்வாறு தோன்றின? சுயமாக தோன்றினவையா அல்லது ஒன்றில் இருந்து ஒன்று கூர்ப்பு(பரிணாமம்) அடைந்து உருவாகினவா?இல்லாவிடில் யாராவது ஒருவரது படைப்போ? சில தீர்க்கமுடியாத பிரச்சனைகளுக்கு உதாரணம் சொல்லி கோழியா,முட்டையா முதல் வந்தது என்று விவாதிப்பார்கள்.கோழி இருந்தால்தானே முட்டைவரும் முட்டை இருந்தால்தானே கோழி வரும் என்று சொல்வார்கள்.உண்மையான .கடவுளை நம்புகிறவர்கள் நிச்சயமாக சொல்வார்கள் கடவுள் உயினங்களைத்தான் முதலில் படைத்தார் எனவே கோழிதான் முதலில் வந்தது.

மற்றயோர் விவாதம் முடிவில்லாமல் தொடர்ந்து விவாதித்துக்கொண்டே இருப்பார்கள். கடவுள் நம்பிக்கை இல்லாதோர் இவ் உலகில் எந்த கலண்டரினையும் பாவிக்ககூடாது. கிறீஸ்து மரித்து 2011 ஆண்டில்

நாம் எல்லாரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.அல்லது கடவுள் நம்பிகை யுடைய திருவள்ளுவர் ஆண்டில் இப்போ நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் .

கூர்ப்பு(பரிணாமம்) அடைந்து உயிரினங்கள்,தாவரங்கள் அனைத்தும் தோன்றின

என்றால் கூர்ப்பு கொள்கைகள் சொன்ன விஞ்ஞானிகள் எல்லோரும் ஒரே கருத்தை சொல்லவில்லை.ஏன் வெவ்வேறு கருத்துகள். இதற்க்கு அதிக விளக்கம் உண்டு.ஆனால் சிறு உதாரணம் சொல்லி விட்டு கூர்ப்பினால் எப்பவும் முன்னேற்றம் கிடைக்கும்.என்றால் நாம் சிறு பிள்ளையாய் இருந்த காலத்தினைவிட சமூக முன்னேற்றம் இல்லாமல் கொலைகள்,களவுகள் கூடிவிட்டது.

பலமதங்கள் ஏன் ?.கடவுள் பல மதங்களை உருவாக்கவில்லை மனிதர்தான் பல

மதங்களை உருவாக்கினார்கள்

எம்மைச்சுற்றியுள்ள அண்டவெளியில் எத்தனை ஆயிரம் நட்சத்திரங்களை. பலகிரகங்களை தோற்றுவித்து மாறாத ஒழுங்குவிதிகளுக்கு ஏற்ப இயக்குபவர் யார்? பூமி தானும்சுற்றி சூரியனையும் சுற்றி மாறாத ஒருநீள்வட்டபாதையில் வருவதினால் இரவு பகல் ,நாட்கள் வருடங்கள்,யுகங்கள் கோடைகாலம், குளிர்காலம் இன்னும் பல ஒருசக்திக்கு கட்டுபட்டு மாறாமல் நடைபெற்று வருகிறது. இவை எல்லாவற்றையும் ஓர் ஒழுங்கு படுத்தி கட்டியவர் யார்?. இவை எல்லாம் மெல்ல மெல்ல கூர்ப்பு (பரிணாமம் )அடைந்து வந்தவையா? அல்லது எல்லாம் வல்ல இறைவனால் அமைக்கப்பட்டதா? விடைகாண விளைவோம். எல்லோருக்கும் விளங்க எளிய உதாரணங்கள் மூலம் விளக்க முற்படுகிறேன். சிறிது சிந்திப்போம் ஒரு சிறு வீட்டைப் பாருங்கள் ,ஒருசிறு வீதியை பாருங்கள்.உதாரணதிற்க்கு ஒருவர் சொல்கிறார் இவை எல்லாம் மெல்ல மெல்ல கூர்ப்பு அடைந்து தானாக வந்தது.என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?பைத்தியம் விசர் அலம்புகிறான்.இந்தச் சிறியவீட்டையோ அல்லது

வீதிஅமைக்க கட்டாயம் ஆகக்குறைந்தது ஒருவர் என்றாலும் நிச்சயமாக பங்கெடுத்து இருப்பார் என்றுதான் உங்கள் பதில் இருக்கும். ஒருபோதும் தானாக கல்லோ,மணலோ சேர்ந்து வீடோ வீதியோ வரவில்லை.

அப்படியாயின் இப்பெரிய உலகும்,அதன் இயக்கமும் பலகோடிஉயினங்களும் தானாக தோன்றி தானாக இயங்குகின்றவை என்றால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?இல்லைவே இல்லை இன்னும் ஒரு உதாரணம் சொல்லலாம்.

பெளகதிக விஞ்ஞானத்தின் தந்தை என்றுஅழைக்கப்படும், பூமிக்கு புவி ஈர்ப்பு விசைஉண்டு என்று கண்டுபிடித்த விஞ்ஞானி சேர்.ஐசாக்.நியூட்டன் ஒருமுறை

ஆய்வுக் கூடத்தில் அண்டவெளியில் எவ்வாறு கிரகங்கள் தொங்கிய வண்ணம் இயங்கிகொண்டுஇருப்பதை காட்ட சூரியன் பூமி சந்திரன் என்று எல்லாக் கிரகங்களை தொங்க விட்டு சுற்றிக் கொண்டு இருக்க செய்தார். .நாஸ்த்தியக்கொள்கை உடைய நண்பர் அவர் ஆய்வுகூடத்திற்க்கு வந்தாராம்.கண்டவுடன் நியூட்டனைக் கேட்டாராம். மிகவும் பிரமிப்பாக,அழகாகஇருக்கிறது. யார் இதைத் செய்தது. நாஸ்த்தியக்கொள்கைக்கு எதிரான நியூட்டன் சொன்னாராம் இவை எல்லாம் மெல்லமெல்ல தானாகவே வந்து தானாகவே வந்து இயங்கிகொண்டு இருப்பதாக சொன்னாராம் . இதை ஏற்க மறுத்த நாஸ்த்தியக்கொள்கை உடைய நண்பர் இதை நீயோ,அல்லது வேறுயாரோ செய்திருக்கவேண்டும் என்று கூறினாராம்.. நியூட்டன் சிரித்துவிட்டு சொன்னாராம் இந்த சிறுவிடயத்திற்க்கே ஒருவர் செய்து இருக்கவேண்டும் என்றால் . எம்மைச்சுற்றியுள்ள அண்டவெளியில் எத்தனை ஆயிரம் நட்சத்திரங்களை. பலகிரகங்களை, இயக்கமும் பலகோடிஉயினங்களும் தோற்றுவித்து மாறாத ஒழுங்குவிதிகளுக்கு ஏற்ப இயக்க மிகப்பெரிய சத்தியுள்ள ஒருவர் தேவைப்பட்டு இருக்குமெல்லவா?

நண்பர் வெட்கித் தலைகுனிந்தாக வரலாறு.

குளோனின் முறையால் உயிரினங்களையே மனிதன் உருவாக்க வெளிக்கிட்டு விட்டான் இவன் என்னவென்றால் கடவுள் கத்தரிக்காய் என்று கதைக்கிறான் என்று நீங்கள் நினைக்கலாம்.

இல்லாத ஒன்றினை குளோனின் முறையால் செய்யவில்லை. இருக்கின்ற ஒரு

உயிரினத்தின் RNA, DNA பிரதிகள் எடுத்துதான் வேறு உயிரினம் அல்ல அந்த உயிரினத்தின் பிரதி தான் செய்கிறார்கள். இவன் என்ன எதிர்மாறான கருத்துகளை இப்ப எழுதுகிறான் .முதல் ஒரு மாதிரி எழுதுகிறான்.

அன்புள்ளம் கொண்டவர்களே இது ஒரு கருத்துக்களம் மட்டுமேதான்

உங்கள் கருத்துகளையும் எதிர்பார்க்கிறேன்

15 Responses to “”கடவுள் இருக்கிறார்””

 • mohanraj:

  மூளை இல்லாமல் நாம் எதையும் உணர மாட்டோம்.தலை இல்லாமல் உடல் இல்லாமல் மூளை இல்லை மூளை இல்லாமல் தலை இல்லாமல் உடல் இல்லாமல். ஒன்றுமில்லை.பிறகு கடவுள் உங்கள் பிரச்சனை எப்படி தெரியும்.நீங்கள் பதில் தருகிறீர்கள் அடுத்த பதில்.கடவுள் காற்றைப் போன்றவர்.பின்னர் கடவுள் எப்படி நினைக்கிறார் பிறகு கடவுள் உங்கள் எல்லா பிரச்சினைகளையும் எப்படி தீர்க்கிறார்.முக்கியமானது என்று உங்களை நம்புங்கள்.கடவுள் இருக்கிறார். உங்கள் அம்மாவும் அப்பாவும்.உங்கள் அம்மாவும் அப்பாவும் உங்களை உருவாக்கினர்.அதனால் உங்கள் அம்மாவும் அப்பாவும் ஒரே கடவுள்

 • mohanraj:

  மின்சாரத்தில் நாம் பார்க்க முடியாது.ஆனால் நாங்கள் அதை உணர்கிறோம்அதே சமயத்தில் நான் கடவுளை காணவில்லை.நான் கடவுள் கூட ஒருபோதும் உணரவில்லை.மின்சார ஒரு வகையான ஆற்றல் மற்றும் சக்தி மனிதனுக்கு ஒரு ஆத்மா இருப்பதை மின்சாரம் தெரியாது.அதனால்தான் மின்சார மனிதர்கள் கொல்லப்பட்டார்கள்என் சிந்தனை நீங்கள் கடவுள் மற்றும் மின்சார இருவரும் அதே நினைக்கிறாய் மின்சாரத்தைப் ஒரு புதிய பெயரை இடுங்கள். அந்த பெயர் மின் கடவுளே என்று எனக்கு தெரியும்.உங்கள் பதில் அனைத்தும் சரியானது அல்லஏனெனில் உங்கள் பதில் முட்டாள்தனமானது மக்கள் மனதில்

  நான் தவறு செய்தால் தயவுசெய்து மன்னிப்பு கொடுக்க

 • சிந்திப்பவன்:

  அன்பான அன்பின் சிவத்துக்கு எனது சந்தேகத்துக்கு, அல்லது கேள்விகளுக்கு உங்கள் கருத்துக்கள் விடை ஒன்றையும் எனக்கு தரவில்லை. அல்லது நீங்கள் நினைக்கிறீர்களா சந்தேகம், கேள்விகள் பற்றி வரக்கூடாது .யார் என்ன சொன்னாலும் ஆராயமல் அதையே அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும்.உங்களின் சில கருத்துக்கள்வேறு ஆட்கள் ஸ்ரீ ராம கிருஷ்ண பரஹம்சர் பற்றி எழுதியதை கூகிள்தமிழ் இணையத்தளத்தில் ஸ்ரீ ராம கிருஷ்ண பரஹம்சர் பிரிவுக்கு கீழே இருப்பதை அப்படியே கொப்பி பண்ணி போட்டுஇருக்கிறீர்கள்.ஆனால் நான் இணையத்தில் இருந்து தகவல் எடுக்கவேண்டாம் என்று எழுதவில்லை. ஆனால் எனது கேள்விகளுக்கோ,சந்தேகத்திற்க்ககோ விடை அது தருகிறது என்றால் சந்தோஸம்.ஆனால் விடை தரவில்லையே? ஆனால் உங்களிட ம் மும்மலங்கள் என்றால் என்ன,ஐந்தொழில்கள் என்றால் என்ன , பதினாறும் செல்வங்கள் என்றால் என்ன, முன்வினைப்பயன் , இதுபற்றி உங்களிடம் நான் ஒன்றும் கேட்கவில்லை.ஆனால் சமய பாடத்தில் படித்த ஞாபகம் பலருக்கு உண்டு. சிலருக்கு இன்றும் ஞாபகம் இருக்கும். எனது கேள்விகள் ,சந்தேகம் எல்லாம் இங்கு வாழும் எமது எதிர்கால இளம் சமுதாயத்தினர் கேட்கும் கேள்விகள்சந்தேகம் மட்டுமே. எனது தாய்தந்தையரும் இந்து சமய நம்மிக்கை உள்ளவர்கள்தான் .அவர்களிடம் நாம் கேள்விகள் கேட்காமல்த்தான் நானும் வளர்ந்தேன் .நான் நினைக்கிறேன் ஊரில் உள்ளவர்கள் போல் சமயத்தினை கடைப்பிடித்து கோயிலுக்கு தொண்டு செய்த குடும்பங்களில் எனது குடும்பமும் ஒன்றுதான். ஆனால் இங்கு எதிர்கால சந்ததி கேள்விகள் கேட்காமல் வள ரும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அல்லது நாங்கள் சரியான விளக்கம் கொடுக்காமல் போனால் தொடர்ந்து சமயத்தினை கடைப்பிடிக்கும் என எண்ணுகிரீர்களா?உதாரணத்துக்கு சில சமயம் ஐயர் பூசைபண்ணும்போது உங்களிடம் உங்கள் பிள்ளை ஐயர் என்ன சொல்கிறார் என்று உங்களிடம் கேட்டால் உங்கள் பிள்ளைக்கு ஐயர் என்ன சொன்னவர் என்று சொல்லமுடியாமா? கேள்விகேட்க்ககூடாது என்று சொல்வீர்களா? அல்லது எனக்கும் விளங்க்கேல்லை என்ரை பிள்ளைக்கும் விளங்காதுதானே என்று எண்ணி எதாவது சொல்லி சாமாளித்து விடுவீர்களா?
  வேறு அன்பின் சிவாஸ் உங்களின் கருத்து இப்படி எழுதி இருந்தீர்கள் எனக்கு நன்றாக விளங்கவில்லை மனிதனின் மானம் அவன் அணிந்திருக்கும் ஆடையில்தான் உள்ளது. என்பது போல் சிலைகளில் படங்களில் ஆயுதங்களில் தான் கடவுள் இருக்கின்றார்.அதாவது கடவுளின் மான ம் சிலைகளில் படங்களில் உள்ளதா? விசுவாமித்திரர் சமஸ்கிருத்தில் தான் காயத்திரி மந்திரத்தினை எழுதினார். அந்தணர்தானேஅதைவாசிப்பார்கள். படிப்பார்கள். திருமூலர் தமிழில் மொழிபெயர்த்தும் அதைப் பாவிக்காமல் அந்தணர்கள் இன்றும் சமஸ்கிருத்தில் தான் ஓதுகிறார்கள். இது சரியா? உனக்கும், எனக்கும் விளங்ககூடிய மொழியில் இருந்தும் அதைப்பாவிக்காமல் ஓதுக்குவதை பற்றி உங்கள் கருத்து என்ன? இந்துசமயத் திலே ஒரு மிக முக்கியமான ஒருகொள்கை வர்ணாச்சிரமக்கொள்கை அதில் ஒவ்வொரு சாதியினரும் ஒவ்வொரு அங்கத்தில் இருந்து வந்ததாக தத்துவம் சொல்கிறது. உய்ர்ந்த சாதியினரை தலையில் இருந்தும் தாழ்ந்த சாதியினரை காலில் இருந்து பிரம்மா படைத்தாக எழுதப்பட்டுள்ளது.படைத்தபடைப்பின் படியே அவர் அவரது தொழில் செய்யவேண்டும். இது சரியா ?

 • Anbe Sivam:

  உயர்வு பெறுவதற்கான நிலையான பல உண்மைகள் இவ்வுலக வாழ்க்கைக்கு அப்பால் இருப்பதை உணர்ந்து கொள்ளுகின்றான். இப்பொழுது உயர்நிலை வளர்ச்சியையும் பெற்றுள்ள மனிதன் தன்னைத் தானே உணர்ந்து கொள்கின்றான். இவ்வாறான அறிவுபூர்வமான அடித்தளத்தை ஒரு மதம்தான் அமைத்துக் கொடுக்க முடியும் என்பது எனது தாழ்மையான கருத்து. மேற் சொன்ன இருநிலை வளர்ச்சிகளையும் புரிந்துகொண்டால் மனிதன் வளர மதம் துணைநிற்கும். புரிந்து கொள்ளாவிட்டால் வேற்றுமை, பிரிவினை சர்ச்சைகள் தான் தோன்றும். குறிப்பாக மதம் என்ற பதம் யாரையும் வதம் செய்யக்கூடாது.

  வாழ்க்கையில் ஆன்மீகம் எப்படிப்பட்டது?

  பிறருக்குத் துன்பம் கொடுத்து அதில் இன்பம் காண்பது மிருக இயல்பு படைத்தவர்களின் குணம். பிறருக்கு துன்பம் கொடுக்காமல் தனக்கு இன்பம் தேடுவது நாகரீகப் பண்பாடு. பிறருக்கு இன்பம் கொடுத்துத் தானும் இன்பமடைவது தெய்வீகம். தனக்கு துன்பம் நேர்தாலும், பிறருடைய துன்பங்களை நீக்கி அவர்களுக்கு இன்பம் தருவது தான் ஆன்மீகம் என்று இந்து தர்ம சாத்திரம் கூறுகின்றது. இப்படிப்பட்ட ஆன்மீக வாழ்வியலில் தான் இறைவனைக் காணமுடியும்.

  ஆன்மீகத்துக்கு ஆரம்ப நிலையென்று எதைக் கூறுவீர்கள்?

  நான், எனது என்ற அகந்தையை ஒழிப்பது தான் ஆரம்ப நிலையாகும். ஞானிகள் பேசும் பொழுது “நான்” என்பதற்குப் பதிலாக எப்பொழுதும் “நாங்கள்” என்றே பேசுவார்கள். இப்படி அகந்தையற்ற நிலையை அருளும்படி பட்டினத்தார் இறைவனை நோக்கி

  “ஊன் நிறைந்க காயம் உயிர் இழந்து போகுமுன்னே
  நான் இறந்து போக நல்லவழி நீயருள்வாய் “
  என்று வேண்டி நிற்கின்றார்.

  நாமெல்லோரும் இறைவனை வழிபடுகின்றோம். இருப்பினும் நாம் செய்கின்ற வினைகளைப் பொறுத்துத்தான் நமது வாழ்க்கை அமைகின்றதென்று சொல்லும் பொழுது எதற்காக இறைவனை வணங்க வேண்டும்?

  இறைவனை வணங்குவதன் காரணமாக நாம் செய்த வினைகள் நலிவடைந்து விடுகின்றன. அதன் பொருட்டு பெருமளவில் வரவிருந்த துன்பங்கள் சிறிய அளவில்தான் (தலைக்கு வரவிருந்தது தலைப்பாகையுடன் சென்றுவிட்டது என்பது போல) நம்மைவந்து சேரும். அதுமட்டுமன்றி வினைகளினால் வரக்கூடிய துன்பங்கள் ஒரே சமயத்தில் நம்மைப் பாதிக்காமலிருப்பதற்கும் இறை வழிபாடு முக்கியம்.

  ஒரு வேண்டுதலை முன்வைத்து சிறிய காணிக்கையைச் செலுத்தி பெரிய உபகாரத்தை இறைவனிடத்தில் வேண்டுவது பற்றி உங்கள் கருத்து?

  ஆலயத்துக்குச் சென்று இறைவன் எம்மைப் படைத்து வாழவைத்தமைக்கு நன்றி செலுத்தி இறைவனை வணங்க வேண்டுமென்றே ஆன்மீகப் பேரறிஞர்கள் கூறுகின்றார்கள். “அம்மையே அப்பா” என்றும் “தாயினும் சாலப்பரிந்து” என்றும் தோத்திரங்களிலே பெற்றோராக வர்ணிக்கப்படுகின்ற இறைவனிடத்தில் பிள்ளைகளாகிய நாங்கள் எதனையும் கேட்டுத்தான் பெற வேண்டும் என்றில்லை. பிள்ளைகளுக்குத் தேவையானவற்றைப் பெற்றோர்கள் அவ்வப்போது தாமாகவே உணர்ந்து செய்வது போல எம்மைப் படைத்தவருக்கும் எமக்கு எவை தேவையென்பது நன்றாக தெரியும். அவற்றை அவர் தவறாது நிறைவேற்றி வைப்பார். இதை நாங்கள் காணிக்கை செலுத்துவதன் மூலமாகத்தான் பெறவேண்டு மென்றில்லை. இறைவன் நம்மிடத்தில் எதிர்பார்ப்பதெல்லாம் தூய அன்பு ஒன்றை மட்டும்தான்.
  இதைத்தான்

  “ பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி
  ததஹம் பக்த்யுபஹ்ருதம் அஸ்னாமி ப்ரயதாத்மன. “

  அதாவது ” பக்தியுடன் எவனொருவன் எனக்கு இலையோ, மலரோ, கனியோ, நீரோ அளிக்கிறானோ தூய மனம் கொண்ட அவனது பக்தியின் பொருட்டு நான் அதை விரும்பி ஏற்றுக் கொள்கிறேன்.” என்று இறைவன் கூறுகின்றார்.

  மலரோ, இலையோ, கனியோ, நீரோ போதுமென்றால் விநாயகர் தனது கையிலே மோதக்கத்தை வைத்திருப்பது எப்படி?

  சரணாகதி தத்துவத்தை வெளிப்படுத்துவதே விநாயகப் பெருமான் கையில் மோதகத்தினை வைத்திருப்பதாக ஆதிசங்கரர் கணேச பஞ்சரத்ன தோத்திரத்தில்

  “முதா கரார்த்தமோதகம் ஸதா விமுக்திஸாதகம்”

  என்று கூறுகின்றார். மோதகம் என்னும் பொழுது அதிலே இரண்டு பொருட்கள் உள்ளன. ஓன்று மாவினாலான கிண்ணம் இரண்டாவது உள்ளேயிருக்கின்ற பூரணமாகும். மாவினாலான கிண்ணம் நமது உடம்பாகும்; அதனுள்ளே இருக்கின்ற பூரணம் ஆன்மாவாகும். இவையிரண்டையும் விநாயகர் கையில் ஒப்படைத்து விட்டால் அதாவது அவரைச் சரணாகதி அடைந்து விட்டால் நாம் முக்தியடைவது நிச்சயமாகும் என்பதைத்தான் உணர்த்துகின்றது.

  இப்பிறவியில் நாம் செய்கின்ற நல்வினை, தீவினைகள் மறுபிறவியிலும் நம்மை வந்தடையுமா ? அல்லது இப்பிறவியிலேயே முடிந்து விடுமா?

  நாம் செய்கின்ற வினைகள் பக்குவப்படாமல் இப்பிறவியில் அனுபவிக்கப்படாதவை அடுத்த பிறவியிலும் நம்மை வந்தடையுமென்று சித்தர்களும் ஞானிகளும் உறுதிப்படக் கூறியுள்ளார்கள். உதாரணமாக

  “என் செய லாவது யாதொன்றுமில்லை இனித் தெய்வமே
  உன் செய லேயென்று உணரப் பெற்றேன் இந்த ஊனெடுத்த
  பின் செய்த தீவினை யாதொன்றும் இல்லைப் பிறப்பதற்கு
  முன் செய்த தீவினையோ இங்ஙூனமே வந்து மூண்டதுவே”

  என்று பட்டினத்தார், தான் செய்யாத குற்றத்துக்கு தண்டனை கிடைக்கும் பொழுது இறைவனை விழித்து இவ்வாறு பாடுகின்றார்.

  ஆன்ம ஈடேற்றத்தின் பொருட்டு கடைப்பிடிக்கப்பட வேண்டிய நற்குணங்கள் எவை?

  பொறுமை, அடக்கம், பற்றின்மை, நடுநிலை, நம்பிக்கை, அமைதி போன்றவையாகும்.

  பதி, பசு, பாசம் என்றால் முறையே இறைவன், ஆன்மா, மலம் என்று படித்திருக்கின்றேன்; இவைகளின் தொழிற்பாடு பற்றி கூறுவீர்களா?

  ஆம், இறைவன் அதாவது கடவுள் என்பவர் ஒருவர் தான். அவரை சிவன் என்று சொல்லுகின்றோம். அவர் வடிவமற்றவராக இருப்பினும் அவரது திருவருட் செயல்களினால் நாம் அவரை உணர்ந்து கொள்ள முடியும். அவர் தனது சக்தியினாலே வெவ்வேறு தொழில்களைச் செய்வதனால் வெவ்வேறு பெயர்களைத் தாங்கி நிற்கின்றார். உதாரணமாக ஜனனி, சோதயித்திரி, ஆரணி என்ற சத்திகளைக் கொண்டு படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய தொழில்களைச் செய்யும் பொழுது பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் என்ற பெயர்களைத் தாங்கி நிற்கின்றார். பிரபஞ்சத்துக்கு மூலமாகிய மகாமாயைக்குத் தலைவராக விளங்குகின்ற சிவபெருமானுக்கு விநாயகர் என்று பெயர். குருவாயிருந்து மெய்யறிவைக் கொடுக்கும் சிவபெருமானுக்கு தட்சிணாமூர்த்தி என்று பெயர். இவ்வாறாக கூறிக்கொண்டே போகலாம். இதுபற்றி விரிவாக பின்னர் பார்ப்போம்.

  அடுத்து பசுவாகிய ஆன்மாக்கள் பொதுவாக மலத் தொடர்பு கொண்டவை மட்டுமன்றி அறியும் வல்லமையும் பெற்றவை. சிவனுடைய திருவருளினாலே மல நீக்கம் பெற்று சிவத்தன்மை அடையத்தக்கவை. அவ்வாறு சிவத்தன்மை பொருந்து முன்னர் அளவில்லாத பிறவிகள் பொருந்தி நிற்பவையாகும்.

  அடுத்து பாசம். அதாவது மலங்கள் ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களையும் குறிக்கின்றது. ஆணவமலமானது ஆன்மாக்களுக்குப் பொய்யறிவை கொடுப்பதாகும். ஆனாலும் ஆணவமலத்தின் தொழிற்பாட்டினால், ஆன்மாக்கள் செய்கின்ற ஆணவச் செயல்களின் பயனை அனுபவிப்பதன் மூலம் ஆணவத்தின் வலிமை குன்றிவிடும். அதன் பொருட்டு இறைவழிச் செயற்பாடுகளினால் மெய்யறிவைப் பெறக்கூடியது. கன்மம் என்பது ஆன்மாக்கள் செய்கின்ற வினையாகும். மாயை சிற்றறிவைக் கொடுக்க வல்லது. சிற்றறிவு என்று இங்கே குறிப்பிடப்படுவது உலக அறிவாகும். மாயையிலே சுத்தமாயை, அசுத்தமாயை என இரு பகுதிகளுண்டு. ஆன்மாவுக்கு அன்பு, அறிவு, வல்லமை போன்றவைகளைக் கொடுக்கும் சிவதத்துவங்கள் சுத்தமாயையிலிருந்தும் ஆத்மதத்துவங்கள், வித்யாதத்துவங்கள் போன்றவைவகள் அசுத்தமாயையிலிருந்தும் தோன்றுமென்று சொல்லப்பட்டுள்ளது.

  சிலர் பேசும் பொழுது “அதற்கெல்லாம் பிராரப்தம் இருக்க வேண்டும்” என்று கூறுவதைக் கேள்விப் பட்டிருக்கின்றேன். அப்படியென்றால் கொடுத்து வைத்திருக்க வேண்டுமென்று பொருள்படுமா?

  நீங்கள் கேள்விப்பட்ட வசனத்திலுள்ள கருத்து சரியானது. பிரார்த்தம் அல்லது பிராரப்தம் என்பது முன்வினைப் பயனைக் குறிக்கும். நாம் இப்போ அனுபவிப்பவைகளெல்லாம் நாம் செய்த முன்வினைகள் தான் (நல்வினை, தீவினைகளின் பொருட்டு) அதாவது நமது வினைகளை பிராரப்தம், சஞ்சிதம், ஆகாமியம் என்று மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

  நாம் இப்போ அனுபவிப்பது பிராரப்தம் எனப்படும்.
  முன்னர் நாம் செய்து அனுபவிக்கப்படாமலிருப்பது சஞ்சிதம் எனப்படும்.
  நாம் இப்போ செய்பவைகளெல்லாம் ( நல்வினை,தீவினை ) ஆகாமியம் எனப்படும்.

  ஆலயத்திலே நடைபெற்ற திருமண விழா ஒன்றில், வந்திருந்த சபையோர்களில் சிலர் இறைவனுக்குச் சூட்டப்பட்ட மலர்களிலாலே மணமக்களை ( தாலி கட்டும் பொழுது) ஆசீர்வதித்தார்கள். இப்படிச்செய்யலாகுமா?

  இது சரியா அல்லது தவறா என்பது தெரியவில்லை. இருப்பினும் ஆலயங்களிலே எல்லாச் சந்நிதானங்களிலேயும் இறைவனது விக்கிரகங்களே இருக்கின்ற போதிலும் ஒரு சந்நிதானத்தில் சூட்டப்பட்ட மலர்களை வேறொரு சந்நிதானத்தில் சூட்டுவதில்லை. திருமண வைபவத்தின் பொழுது கன்னிகாதானத்தினை நடத்திவைக்கின்ற குருவானவர் மணமக்களை சிவனாகவும், உமாதேவியாராகவும் பாவித்து அவர்கள் சற்று உயரத்திலேயும் தான் கீழேயுமாக அமர்ந்திருந்து திருமாங்கல்ய தாரணத்தின் பின்னர் மணமகளை மணமகனின் இடப்பாகத்திலே அமரவைக்கின்றார் (சிவனும் தனது இடப்பாகத்தை உமாதேவிக்கு அளித்தார்). எனவே இச்சந்தர்ப்பத்தில் மணமக்களும் பார்வதி சமேத பரமேஸ்வரனாகக் கருதப்படுவதால் சூட்டப்படாத மலர்களைப் பயன்படுத்துவது தான் சிறந்ததாகும்.

  “பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க” என்று வாழ்த்தும் பொழுது சொல்லப்படுகின்ற பதினாறும் எவைகளென்று கூறுவீர்களா?

  பதினாறு என்று கூறப்படுவது

  1.புகழ் 2. கல்வி 3. ஆற்றல் 4. வெற்றி 5. நன்மக்கள் 6. பொன் 7. நெல் 8. அழகு 9. பெருமை 10. ஆயுள் 11. நல்வினை 12. இளமை 13. அறிவு 14. துணிவு 15. நோயின்மை 16. நுகர்ச்சி போன்ற பதினாறு போகங்களு மாகும்.

  திருமண வைபவத்தில் அட்சதையிட்டு மணமக்களை வாழ்த்துகின்றோம். “அட்சதை” என்பதன் பொருள் யாது?

  க்ஷதை என்றால் வடமொழியில் குறைவு என்று பொருள். அ+க்ஷதை என்றால் குறைவற்றது என்று பொருள்படும். எனவே மணமக்கள், எல்லாம் நிறைந்த நல்வாழ்வு வாழவேண்டுமென்ற பாங்கினில் தான் அட்சதையிட்டு வாழ்த்துகின்றோம்.


 • சிவமயம்
  அன்பாக சிந்திப்பவர்க்கு.
  இந்து மதத்தில் எந்த இடத்தில் அந்தணர்கள் பரம்பரையாகத்தான் வரவேண்டும் என்று சொல்லப்பட்டு உள்ளது. என்று அறிய தர முடியுமா? நான் அறிந்த வரை . யார் பிராமணன் என்றால். வேதத்தை நன்கு படித்தவன். படித்ததை படித்தபடி எடுத்து உரைப்பவன். உரைத்ததை உரைத்தபடி நடப்பவன். யாசித்து உண்பவன் எவனோ அவனே பிராமணன். என்று தான் நான் அறித்தேன். ஆனால் நீங்கள் இப்படி எளுதுகின்றீர்கள் எனக்கு புரியவில்லை.
  இந்துக்களால் மூல மந்திரம் என்று கூறப்படும் காயத்திரி மத்திரம் ஓர் பிராமணனால் இயற்ரப்பட்டதல்ல. ஓர் அரசன் தன் அரசை துறத்து தவம்செய்து )வேததை நன்கு படித்து) முனிவராக வாழ்ந்த விஸ்வாமித்திர முனிவரால் இயற்றப்பட்டது. இவர் பிறவிப்பிராமணன் அல்லவே.
  சாதி என்பது தொழிலை வைத்தே சொல்வது .பரம்பரையாக ஒரே தொழிலை செய்யும் போது அது பரம் பரைத்தொழிலாகிவிட்டது. தீண்டாமை என்பது ஆணவத்தினால் திணிக்கப்பட்டது.
  ஓர் குடம் பாலுக்கு ஓர் துளி விசம் போல் இந்து மதத்துக்குள் நுளைந்த விசங்களில் ஒன்று இந்த தீண்டாமை
  மனிதனின் மானம் அவன் அணிந்திருக்கும் ஆடையில்தான் உள்ளது. என்பது போல் உள்ளது சிலைகளில் படங்களில் ஆயுதங்களில் தான் கடவுள் இருக்கின்றார் என்பது.
  இது என் சிற்றறிவுக்கு எட்டிய கருத்துக்கள். தப்பிருந்தால் மன்னிக்கவும்
  அன்புடன்.
  நா.சிவாஸ்

 • சிந்திப்பவன்:

  அன்பின் நண்பர்களுக்கு அன்பான வேண்டுகோள் தயவு செய்து உங்கள் சிந்தனைகளை ஒரு கணம் எனக்காக இல்லை எங்களுக்காக சிந்தியுங்கள்.
  நீயும் ,நானும் இந்துசமயத்தினைப் பற்றி எவ்வளவுதான் அறிந்தாலும் படித்தாலும் நாங்கள் அந்தணர் (ஐயர்) ஆகிவிடமுடியாது.இதைத் தீர்மானிப்பது எமது பெற்றோர் அல்லது அவர்களின் சாதி. நாங்கள் பிறக்கும் போதே நீ எந்த சாதி அந்த தொழில் மட்டுமே செய்ய வேண்டும். இது இந்து சமயக்கொள்கை.
  சாதரண கிறீஸ்தவன் படித்து பாதிரியார் ஆகலாம் .சாதரண முஸ்லீம் படித்துமெளலவி ஆகலாம். ஆனால் நீயும் நானும் என்னதான் செய்தாலும் மாற முடியாது என்று சொல்கின்ற மதத்தினை பின்பற்றுகிற சரியா? அல்லது பிழையா?உங்கள் மனச்சாட்சியை தொட்டு சொல்லுங்கள் எத்தனை பேர் வெளிநாட்டிள் வீபூதி சந்தனம் பூசிக்கொண்டு வேலைதலங்களுக்கு செல்கிறீர்கள். வீட்டில் சிலசமயம் பூசி விட்டு வெளீயில் போகும் போது அழித்துவிட்டு செல்கிறீர்.உங்களாலை ஏற்றுக்கொள்ள முடியவில்லை
  ஐயர் உங்களைப்பற்றி கடவுளிடம் என்ன சொல்கிறார் உங்களில் யாருக்கும் தெரியுமா?அவர் உங்களைப் பற்றி உங்களுக்கு விளங்குகிற மொழியில் சொன்னால் நன்றாக இருக்கும் என்று நினைத்தில்லையா? சில விடயங்கள் கேட்க இனிமையாக இருக்கும் .சிந்தித்தால் உண்மை புலனாகும். உதாரணத்துக்கு கல் தோன்றா மண்தோன்றா காலத்துக்கு முன்பு தொன்றிய மூத்த தமிழ் . என்று பேசியவுடன் கைதட்டுவார்கள். இரத்தபொட்டும் பேச்சாளருக்கு வைப்பார்கள். ஆனால் உண்மையை சிந்திப்பதில்லை. கல் தோன்றா மண்தோன்றா காலத்துக்கு முன்பு யார் தமிழ் பேச இருந்தார்கள் .பூமி தோன்றித்தான் உயிரினம் வந்தது. அப்படியாயின் பேச்சாளர் பேசியது சரியா தவறா?

 • Anbe Sivam:

  ஆண்டவன் எமக்கு அழகாக, வளமாக வாழ்வதற்கு அருள் புரிந்து அன்புடன் வாழ்க்கையை அருளி இருக்கின்றான். உன்னதமான வாழ்க்கையை இன்பமாக மாற்றிக் கொள்ள எல்லா வழியிலும் வழிவகுத்து உதவிசெய்து இருக்கின்றான். இதனை நாம் உணர்ந்து கொண்டு சீரும் சிறப்புமாக வாழ வேண்டியது நமது கடமை. இந்த நேரத்தில் எப்படி வாழ்வது ? எந்த பாதையில் நடப்பது!? என்ற இரண்டு கேள்விக் குறிகள் நம்கண் முன்னே வந்து நிற்கின்றன. இதற்கு எளிதாகவே பதிலைக் காணமுடியும். எப்படி என்றால் எந்த வினாவுக்கும் விடை பல உண்டு. ஆனால் இந்த வினாவுக்கு நமது வாழ்கையின் படிக்கட்டுகளே பதிலாக வந்து விழும். இன்பமாக, அறிவுடன், ஆற்றலுடன் நம்பிக்கையோடு, துணிவோடு,

  இலட்சியம் என்ற வரைகோட்டைப் போட்டு குறிக்கோளுடன் நாம் நம் வாழ்க்கைப் பயணத்தில் பயணிப்போமானால் பதில் அங்கே கிடைத்துவிடும்.உலகில் பிறந்த நாம் உன்னத மனிதப்பிறவியாக இருப்பதே மேன்மை கொண்டது. வாழ்க்கையை இன்பமாகவும் வளமானதாகவும் வாழ்ந்து கடப்பதிலே வாழ்க்கையின் பிறவிப்பயன் அடங்கி உள்ளது.

  நமது பெற்றோர்கள் வாழ்வாங்கு வாழ்ந்து வான் புகழ் பெற்று நம்மை உருவாக்கி இவ்வுலகத்தில் வாழச் சொல்லி விட்டு விட்டு அவர்கள் பயணித்து விட்டார்கள். வாழ்க்கை வாழ்வதற்கே! அது வளத்தை காண்பதற்கே! என்ற தத்துவத்தையும். உன்னை நீ திருத்து உலகம்தானாகவே திருந்தும். என்ற பொன்னான வார்த்தைகளையும் எமக்காக விட்டுச் சென்றுள்ளார்கள்

  இந்த வார்தைகள் இன்றைய மானிட வாழ்க்கைக்கு சித்தாத்தமாக கண்முன்னே நிற்கின்றது. நாம் நம்மை, நம் பின்புறத்தை பார்க்க முடியாமல் மற்றவர்களின் செயலில், மற்றவர்களின் பேச்சில் எங்கே பிழை உள்ளது; அதை எப்படி பெரிதாக்கி அவரை குற்றவாளிக் கூட்டில் நிறுத்தலாம் என்ற சிந்தனையில் நம்மை நாம் அழித்துக்கொண்டிருக்கின்றோம். அப்படியான செயலால் நாம் நமக்கு மட்டுமல்ல, நமது எதிர்கால சந்ததிக்கு மட்டுமல்ல, நம்மை உருவாக்கி இந்த பூமிப்பந்தின் ஒருகோடியில் வாழச்சொல்லி விட்டு விட்டு சென்ற நம் பெற்ரோருக்குமே பழிசெய்கின்றோம். அவர்கள் வாழ்ந்து சென்ற புனித வாழ்க்கைக்கு பாதகம் செய்கின்றோம். எமது சந்ததி வாழவேண்டிய புனிதமான மகிழ்சியான மானிட வாழ்கைக்கு தடை போடுகின்றோம் என்பதே உண்மையாக நிற்கின்றது. இதை சிந்தித்து நமது செயலை, சிந்தனைய மாற்றி அமைப்போமானால் நமது வாழ்க்கை பூப்பந்தல் பரந்த சிங்கார தோப்பாக மகிழ்சி நிறைந்த வாழ்க்கையாக அமைந்து விடும்.

  இயற்கையின் வழி வாழ்கின்றவர்கள் எவரும் ஏழையாக மாட்டார்கள். மற்றவர் சொல்லைக்கேட்டு தன்மதி அடைவுவைத்து, தானென்ற தலைக்கனம் கொண்டு நடப்பவர்கள் வாழ்க்கையை வெற்றி கொள்ளவும் மாட்டார்கள், என்று மூத்தோர் சொன்ன வார்தைகள் உறுதிப்படுத்தப்படுகின்றன எனலாம். ஆனால் நாமும் வாழ்ந்து காட்ட முடியும். இந்த பரந்த நீண்ட உலகில் நாம் முயற்சித்தால் எதையும் செய்யலாம். முடியும் நம்மால். ஆனால் முயற்சிக்கும் போது இதயத்தில் மற்வரைப்போல் நாமும் வாழவேண்டும் என்ற சிந்தனையை நினைவில்கொண்டால் அது நியாயமனது. ஆனால் அதை விட்டுவிட்டு மற்றவரை விட மேலோங்கி வாழவேண்டும்; என்ற பொறாமை, வஞ்சகம், கொண்ட நெஞ்சத்து நினைப்போடு முயற்சி செய்தால் நிட்சயம் பாழும் கிணற்றில் உங்கள் பயணம் முடிவடையும் என்பது திண்ணம்.

  சூரியன் உலகுக்கு ஒளியூட்டி உலகின் அனைத்துக் காட்சிகளையும் காண வைப்பதோடு. அனைத்து உயினங்களையும் சிரிக்க வைக்கின்றான். அதை நாம் கண்களால் காண்கின்றோம். ஆனால் பார்வை இழந்த குருடனின் கண்கள் அந்தக்காட்சியை காணமுடியாது. அதுபோல்தான் மனிடவாழ்கையும். இப்படி எல்லா உறுப்புக்களும், இயற்கை வளமும் எமக்கு நல்லபடி ஒத்துழைத்து, ஒற்றுமையாக வாழ வழிசொல்லும் போது இந்த ஆறறிவான பகுத்தறிவைக் கொண்ட மனிதன் மட்டும் ஏன் அந்தப் பாதையை விட்டு விலகச் செல்கின்றான். எப்போ இதை அவன் தெரிந்துகொள்வான்..!?

 • சிந்திப்பவன்:

  ஸ்ரீ ராம கிருஷ்ண பரஹம்சர் ஒரு சிறந்த தத்துவஞானி. அவர் ஒரு இந்து. ஆனால் அவர் ஒருஇஸ்லாம் மதத்தினைய்த்தான் இறுதிவரை பின்பற்றியவர். அவர் ஒருகாலமும் இறைவனைக்கண்டதாக கூறவில்லை. ஆனால் அவர் யசோதாவை கண்டதாக மக்கள் சொல்கிறார்கள்.
  ஆனால் அவர் ஒருபோதும் கூறவில்லை தான் கண்டதாக
  சம்பாசுரனுக்கும் மனைவி சம்பாவதியின் அழகில் மகாவிஸ்ணு மயங்கினான்.அடைய விரும்பினான். சம்பாசுரனை கொலைசெய்து விட்டு சம்பாசுரனின் உடலில் புகுந்து சம்பாவதியை
  அடைய விரும்பினான். ஆனால் இந்த விடயங்கள் சம்பாவதிக்கு தெரிந்துவிட்டது. அதானால் சம்பாவதி உடன்படவில்லை.சம்பாவதி நெருப்பில் எரிந்து சாம்பல் ஆகினா. மகாவிஸ்ணு சாம்பலில் உருண்டு பிரண்டு இன்பத்தை அனுபவிக்கவேண்டும் என்று துடித்துக்கொண்டு இருந்தார். இதைப் பார்த்த தங்கை உமாதேவி இவரை சந்தோஷப்படுத்த தங்கை துளசியை அனுப்பி ஆறுதல் படுத்தினார் இதன் பின்பு வீடுகளில் துளசிச் செடி வளர்க்கவேண்டும் வீட்டில் உள்ள ஆண்களை ஆறுதல்ப் படுத்தஎன்று இது புராணக் கதை..


 • ஐயா அன்பே சிவம்
  பாமரமக்களும் புரிந்து கொள்ளும் விதத்தில் மிகவும் எழிமையாக இறைவனை விளக்கினீரகள் பாவபுணியம் பற்றிய கேள்விகள் பலர் மனதிலும் எப்பவுமே கேட்க்கப்படும் கேள்விகள் முக்கியமாக துன்பங்கள் வரும் போதெல்லாம் இந்த கேள்விகள் எளும் நல்ல எழிமையான முறையில் விளக்கி நீர்கள்.
  ஒருவேளை யாராவது ஆதாரம் கேட்கக்கூடும் .அவர்கட்கு அனுபவம் தான் பதில் கூறவேண்டும்.
  வாழ்க வழமுடன். ஓங்குக நற்பணி.
  அன்புடன்,நா.சிவாஸ்

 • சிந்திப்பவன்:

  அன்புள்ள அன்பே சிவத்துக்கு!
  அன்பே சிவம் என்றால் ஆயுதங்கள் ஏன் சிவத்தின் கையில் காலில் ஒருவரை போட்டு மிதிப்பதேன். கடவுள் உண்டு ஆனால் சிலைகளில் இல்லை.கடவுள் என்று ஆயிரம் கடவுள் இல்லை.ஒன்றேகடவுள் ஒருவனே தெய்வம்.பல கடவுள்களை மனிதர்தான் கல்லிலும் மண்ணிலும் உருவாக்கினான். மனிதர் கடவுளை உருவாக்க இயலாது.பொதுவில் இந்துக்கள் மற்ற மதங்களை மதிக்கிறார்கள்.. மற்ற மதங்கள் ஒன்றுக்ககொன்று முரண்படும் கருத்தை கற்பித்தாலும் ஆராயாமல் தங்கள் மதத்தில் இருக்கும் பிரச்சனைகள் தெரிந்துவிடும் என்பதினால் எல்லாமதமும் சம்மதம் என்று சொல்லி நழுவி விடுவார்கள்.
  நீங்கள் குறிப்பிட்ட அனைவரும் தாங்களாக்த்தான் சொல்கிறார்கள்.கடவுளை கண்டதாக அவர்கள் கண்டதற்க்குரிய எந்த ஆதாரங்களும் இல்லை.நானும் சொல்லலாம் கடவுளை கண்டதாக ஊனக்கண்ணால் கடவுளை காணக்கூடியவாறு கடவுள் இல்ல கண்டவர்கள் சொன்னார்களா சிலைகளில் கடவுளைச் மனிதர் செய்யலாம்.
  விதை உதாரணத்தோடு நானும் ஒத்துவருகிறேன்.ஆனால் விதி,முற்பிறப்பு,மறுபிறப்பு என்பவற்றோடு உடன்பாடு இல்லை. இது சம்பந்தமாக பின்பு விளக்கம் எழுதுகிறேன்.
  உங்கள் சிந்தனக்கு இந்துக்கள் அதிகமாக வாழும்,பல பெரிய ,இந்துக்கோயில்கள்உள்ள இந்துக்களை ஆள இந்துவத்தில் நம்பிக்கை இல்லாத(கடவுள் நம்பிக்கை இல்லாத)(திராவிடர்க்கழகதினர் தமிழ்நாட்டில் உள்ளோரை( இந்துக்களை )ஆளுகிறார்கள் . .

 • anbe sivam:

  இறைவன் இருக்கின்றாரா……..
  இது இன்று பலருடைய கேள்வி. இறைவன் இருக்கின்றாரா, இருந்தால் எனக்கு மட்டும் ஏன் துன்பம் மேல் துன்பம் வருகின்றது, இன்று நல்லோர் துன்பப்பட தீயோர் நன்றாக வாழ்கின்றனரே ஏன்? இப்படியாகக் கேள்விகள் பல. இதையெல்லாம் பார்க்கும் போது கடவுள் பக்தி மிகுந்தவர்கள் கூட சில வேளைகளில் தடுமாறி விடுகின்றனர். ஏன் இத்தனை கேள்விகள், தடுமாற்றங்கள்?

  இறைவன் இருக்கின்றாரா…

  ஆம், நிச்சயமாக இருக்கின்றார். இதனை ஸ்ரீ ராம கிருஷ்ண பரஹம்சர் ஒரு எளிய உதாரணத்தால் விளக்குகின்றார். இரவில் வானில் நாம் பல நட்சத்திரங்களைப் பார்க்கின்றோம். ஆனால் பகலில் அவை சூரியனது ஒளியால் நமக்குத் தெரிவதில்லை. ஆக பகலில் நாம் நட்சத்திரங்களைப் பார்க்காததால் நட்சத்திரங்களே இல்லை எனக் கூறிவிடமுடியுமா?. பகலிலும் அவை அதே வானில்தான் இருக்கின்றன, ஆனால் நம்மால்தான் பார்க்கமுடிவதில்லை. எனவே நாம் நட்சத்திரங்களே இல்லை எனக் கூறமுடியாது. அப்படிக் கூறினால் அது நமது அறியாமையே தவிர வேறெதுவும் இல்லை.

  ஸ்ரீ ராம கிருஷ்ண பரஹம்சர், சுவாமி விவேகானந்தர் போன்ற நாடறிந்த பக்திமான்கள் இறைவனைக் கண்டவர்கள். ஸ்ரீ ராம கிருஷ்ண பரஹம்சர் அன்னை ஜெகன்மாதாவையும், இறைதூதர் அல்லாவையும், இறைதூதர் இயேசுவையும் கண்டவர். விவேகானந்தர் கூட அன்னை ஜெகன்மாதாவைக் கண்டவர்தான். இவர்கள் கண்ட தெய்வங்கள் எல்லாம் வெறும் மாயையா?. உதாரணத்திற்காகத்தான் நாமெல்லோரும் அறிந்த இவ்விருவரையும் கூறினேன். இன்னும் எத்தனையோ சாதுக்களும், துறவிகளும் இறைவனை நேரில் கண்டுள்ளார்கள். அவர்கள் கண்டதும் வெறும் மாயையா?. இல்லை, அவர்கள் மிகுந்த சிரத்தையெடுத்து பல முயற்சிகள் செய்து இறைவனைக் கண்டார்கள்.

  நாம் எந்த முயற்சியும் செய்யாமல் இருந்தால் எப்படி இறைவனைப் பார்க்க முடியும். மகான்கள் செய்த முயற்சி போல் எந்த முயற்சியும் செய்யாது இருந்து விட்டு, இறைவன் இல்லை என்று கூறுதல், நட்சத்திரம் இல்லை என்று கூறுவது போலத்தான்.

  சாதுக்கள், துறவிகள் மட்டுமல்ல புகழ்பெற்ற விஞ்ஞானிகள் கூட இறைவன் இருக்கிறார் என்று கூறியுள்ளனர். அவர்கள் தங்கள் சிந்தனைக்கும் அப்பாற்பட்ட ஒரு மாபெரும் சக்தி உண்டெனக் கூறியுள்ளார்கள். அந்த மாபெரும் சக்திதான் நாம் வணங்கும் இறைவன். இறைவனால்தான் இந்தப் பிரபஞ்சமே ஒரு ஒழுங்கில் இயங்குகின்றது. இறைவனது சக்தி இல்லையேல் இந்த ஒழுங்கு இருக்குமா?.

  எந்த ஒரு பொருளினதும் தொடக்கத்தினையும் ஆராய்ந்தால் அது அந்த இறைவனது சக்தியை நோக்கியே செல்லும். உதாரணமாக ஒரு மரத்தின் விதையினை எடுத்துக்கொள்வோம். ஏதாவது ஒரு தாய்மரத்தில் இருந்து அந்த விதை வந்திருக்கும். அந்த விதையினுள் ஒரு மரம் உருவாவதற்கான அனைத்து மூலக்கூறுகளுமே இருக்கும். சரியான சந்தர்ப்பம் உருவாகும்போது அந்த விதை முளை விட்டு, சிறு தாவரமாகிப் பின்னர் பெரிய மரமாக மாறுகின்றது. ஒரு விதையினுள் இத்தனை சூட்சுமங்களை வைத்தது யார்?. வைத்தவன் அந்த இறைவன். நம்மால் இப்படி ஒரு விதையினை உருவாக்கமுடியுமா?. முடியாது, ஏற்கனெவே இருக்கும் விதைகளைக் கலந்து ஒரு புது விதையினை வேண்டுமானால் உருவாக்கலாம். ஆனால் நாம் உருவாக்கும் புது விதையின் ஆதாரம், இறைவன் படைத்த அந்தப் பழைய விதைதான். இதைத்தான் நம் முன்னோர்கள் “அவனின்றி ஓர் அணுவும் அசையாது ” என்றார்கள்.

  இங்கு நாம் கண்டுபிடிக்கும் பொருட்கள் அத்தனையுமே ஏற்கனவே இங்கு இருப்பவைதான். ஏற்கனவே இங்கு இருக்கும் மூலக்கூறுகளை விதம் விதமாகக் கலந்து புதிய பொருட்களை உருவாக்குகிறார்கள். நாமே முற்றுமுழுதாக ஒரு பொருளை உருவாக்கிவிடுவதில்லை. நம்மால் ஒரு மூலக்கூறினைக் கூட உருவாக்க முடியாதுள்ளபோது, இத்தனை மூலக்கூறுகளையும் படைத்தது யார்?. அதுதான் இறைவன்.

  முடிவாக, இறைவன் அன்றும் இன்றும் என்றும் உள்ளவர். இறைவன் மேல் முழுநம்பிக்கையோடு அவனைக் காணமுயற்சி செய்யுங்கள். நிச்சயம் நீங்கள் அவனைக் காண்பீர்கள். இதை நான் கூறவில்லை. நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.

  எனக்கு மட்டும் துன்பம் ஏன்?

  இறைவன் இருக்கிறாரா என்பதைப் பற்றிப் பார்த்தோம். இறைவன் இருந்தால் எனக்கு மட்டும் ஏன் இத்தனை துன்பங்கள். இக் கேள்வி பலர் மனதில் உண்டு.

  முன் வினைப்பயனைப் பற்றி நிச்சயம் அறிந்திருப்பீர்கள். நாம் சென்ற பிறப்பில் செய்த வினைகளின் பலனை இந்தப் பிறப்பில் நிச்சயம் அனுபவித்தே தீரவேண்டும். முற் பிறப்பில் அதிக நல்ல காரியங்களையும், புண்ணியங்களையும் செய்தவன் இப் பிறப்பில் அதற்கான நல்ல பலனை அனுபவிக்கின்றான். முற் பிறப்பில் தீய காரியங்களிலும், பாவச் செயல்களிலும் ஈடுபட்டவன் இப் பிறப்பில் அதற்கான தண்டனையை அனுபவிக்கின்றான்.

  அப்படியானால் நான் முற்பிறப்பில் அதிக பாவச் செயல்களில் ஈடுபட்டேனா?, அதனால்தான் இப் பிறப்பில் எனக்குத் துன்பமா எனக் கேட்கலாம். இப் பிறப்பில் நாம் அனுபவிக்கும் துன்பத்திற்கு முன் வினையின் 50 % தான் காரணம். மீதி 50% இப் பிறப்பில் நம் செயற்பாடுகளைப் பொறுத்து அமைகின்றது.

  முற் பிறப்பில் நாம் எத்தனை தவறுகள் செய்தோம், எவ் வகையான தவறுகள் செய்தோம் என்பதெல்லாம் அந்த ஆண்டவனுக்குத்தான் தெரியும். சாமானியர்களான நமக்குத் தெரியாது. நாம் சென்ற பிறப்பில் ஒரு பொய் சொல்லி இருந்தால் கூட அதற்கான பலனை இப் பிறவியில் அனுபவித்தே தீரவேண்டும். பொய் சொன்னதற்கான பலனையே அனுபவித்தாகவேண்டும் என்கின்றபோது, மற்றைய தவறுகளுக்கு என்ன சொல்வது. வினை விதைத்தவன் வினையை அனுபவித்தே தீரவேண்டும். இது விதி. ஆனால் நாம் இந்த முன் வினைப்பயனின் தாக்கத்தைக் குறைக்கமுடியும். அதாவது சென்ற பிறப்பிற் செய்த வினைக்கு வருந்தி இறைவனை உள்ளன்போடு வணங்குவதன் மூலம் தாக்கத்தைக் குறைக்கலாம். ஆனால் இறைவனை வணங்குவதன் மூலம் முன்வினைப்பயனின் தண்டனைகளில் இருந்து தப்பிவிடமுடியாது, அவற்றின் தாக்கத்தை மட்டுமே குறைக்கமுடியும். யாராக இருந்தாலும் வினைப் பயனில் இருந்து தப்பமுடியாது. அபூர்வமாக சிலர் ஞானகுருக்கள், சாதுக்கள், சித்தர்கள் போன்றோரால் வினைப்பயனில் இருந்து தப்பியுள்ளனர்.

  சரி, இப்பிறப்பில் நாம் அனுபவிக்கும் துன்பங்களுக்கு முன்வினைப்பயனோடு, இப்பிறப்பில் நாம் செய்யும் செயல்களும் காரணமாகும். எப்படி என்றால் ஒரு குழந்தை மண்ணில் பிறக்கும் போது நல்ல குழந்தையாகவே உள்ளது. அது கள்ளம் கபடமற்றதாக இருக்கும். அதனால்தான் குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பார்கள். ஆனால் வளர வளர அதன் இயல்புகள் மாறி விடுகின்றது. தவறுகளைச் செய்ய ஆரம்பிக்கின்றது. அது நன்றாக வளர்ந்த பின் அதனிடத்தில் நிச்சயம் ஒரு சில தீயபழக்கங்களாவது இருக்கும். இதற்கான காரணங்களாகப் பலவற்றைக் கூறமுடியும். சமூகம்தான் அவனை இப்படியாக்கிவிட்டது என்று கூடக் கூறலாம். ஆனால் ஊசி இடங்கொடுக்காமல் நூல் எப்படி நுழையமுடியும். தீயபழக்கங்களை ஒரு மனிதன் விலக்கமுடியும். அதற்காகத்தான் ஆறாவது அறிவாக பகுத்தறிவு அவனுக்குத் தரப்பட்டுள்ளது. ஆனால் அவன் சிந்திக்காது தீயபழக்கங்கள் தன்னிடத்தில் குடியேற அனுமதித்துவிடுகின்றான். ஆக அவன் சிந்தித்திருந்தால் தீயபழக்கங்களில் இருந்து தப்பி இருக்கமுடியும். குழந்தையாக அவன் இருந்த போது நல்லவனாகத்தானே இருந்தான். பின்னர் சிந்திக்கத் தவறியதால்தான் தனக்குத் தானே கேட்டினை வரவழைத்தான்.

  இதற்குச் சில உதாரணங்களைக் கூறமுடியும். ஒருவன் படிக்கும் காலத்தில். படிக்க அனைத்து வசதியிருந்தும், தேவையற்ற வேலைகளில் ஈடுபட்டுவிட்டு, பிற்காலத்தில் சரியான வேலை இல்லாது துன்பப்படும் போது முற்பிறவி பயனை மட்டும் குறை கூறுவதில் பயனில்லை. ஒரு விவசாயி தன் தோட்டத்தில் சரியான நேரம் அறிந்து பயிரிடாமலும், பயிரிட்டால் தோட்டத்தைக் கவனிக்காதும் விட்டால் எப்படி விளைச்சல் கிடைக்கும். விளைச்சல் கிடைக்காது போனபின்னர் முற்பிறவிப்பயனைக் குறை கூறுவதில் அர்த்தமில்லை. சிலர் சிகரெட் பிடிப்பது உடலுக்குக் கேடு என்று தெரிந்தேதான் பிடிப்பார்கள், பின்னர் கான்சர் வந்தால் ” சே… முற்பிறப்பில் என்ன பாவம் செய்தோமோ, நமக்கு கான்சர் வந்திருச்சே ” என்று சொன்னால் எவ்வளவு முட்டாள்த்தனம்.

  மொத்தத்தில், வாழ்க்கையில் முன்னேறுவதற்கு நாம் எந்த முயற்சியும் செய்யாது இருந்துவிட்டுப் பின் முன்வினைப்பயனைக் குறை கூறுவது முட்டாள்த்தனம். இருப்பினும் சிலர் என்ன முயற்சி செய்தாலும் அது தோல்வியில்தான் முடிவடையும். அவர்களும் தொடர்ந்து முயற்சி செய்துபார்ப்பார்கள் ஆனால் முடிவு முன்போலத்தான் இருக்கும். இவர்கள் இறைவனை உள்ளன்போடு வழிபட்டு, முற்பிறப்பில் செய்த தவறுகளுக்குப் பிராயச்சித்தம் செய்தால் வாழ்வு சிறக்கும்.

  ஆக எனக்கு மட்டும் துன்பம் ஏன் என்று கேட்பது தவறானது. மனிதர்களில் 99% ஆனோருக்கு ஏதாவதொரு கவலை இருக்கிறது. நாம் முற்பிறப்பிலும் இப்பிறப்பிலும் செய்த காரியங்களே நம் இன்பத்தினையும் துன்பத்தினையும் முடிவு செய்கின்றது. எனவே துன்பம் வரும்போது துவண்டுவிடாமல் இறைவனை மனதார வணங்கி துன்பத்தை இன்பமாக்கிக் கொள்ளுங்கள். “கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டார்”. இது நம் முன்னோர் கூறியது.

  முற்பிறவியிற் செய்த வினை எத்தனை தூரம் மனிதனை அலைக்கழிக்கிறது. இப்படி இருக்க இப்பிறப்பிலும் பாவ காரியங்களில் ஈடுபடவேண்டுமா?. மனிதன் வாழும் காலம் சொற்பமானது. அந்த சொற்ப வாழ்நாளில் நம்மால் முடிந்தவரை எல்லோருக்கும் நல்லது செய்யவேண்டும். நாம் இறந்த பின்னர் நம்மோடு வருவது காசு,பணம், தங்கம் அல்ல. நாம் செய்த பாவ,புண்ணியங்கள்தான்.

  • இளையவன்:

   அன்பு வணக்கங்கள் அன்பே சிவம் .உமது கருத்துகள் யாவும் நன்று ,இருபினும் என் மனதில் ஒரு சந்தேகம் . இறைவன் படைத்த மனித உஜிரினம் தவறு செய்யாமல் எல்லாம் வல்ல இறைவனால் தடுக்கமுடியதோ ? ஒருவர் நல்லாய் இருப்பதும் கஷ்ட படுவதும் முற்பிறப்பு பயன் என்று நிறுவ என்ன ஆதாரம். தண்டனை உடனே கிடைக்குமானால் யாரும் தப்பு செயயமட்டர்கள்தனே . தெரிந்து கொளவே கேட்கிறேன் தப்பாய் எடுக்கவேண்டாம். அன்பே சிவம் என்பர் அறிவிலர் மறத்துக்கும் அதுவே துணை என்பது வள்ளுவ வேதம் .அன்பு கலந்த பதிலை தாருங்கள்.
   அன்புடன் இளையவன்

 • சிந்திப்பவன்:

  அன்பான அன்புள்ளம் கொண்டவர்களே !!
  நீங்கள் பிழையாக விளங்கிவிட்டியளோ தெரியவில்லை.நான் சிலைகளை கடவுள் என்று சொல்லவில்லை.கடவுளைஉலோகங்களிலும் கல்லிலும்சாதரண மனிதர்களால் உருவாக்கமுடிமா?
  மனிதன் கல்லுக்குள்ளோ,மண்ணிலோ,உலோகங்களுக்கோ
  கடவுளின் சக்தியை அடைப்பான் என்றால் மனிதன்தான்
  கடவுளை விட வல்லமை உள்ளவன் என்ற முடிவுக்கு வரவேண்டும். கடவுள்தான் மனிதரை படைத்தாரோ?
  மனிதன்தான் கடவுளை படைத்தாரோ.?
  சிலைகள் எல்லாம் கடவுள் அல்ல அவை வெறும்
  சிலைகள் மட்டுமே தான்.சிலைகள் உடைந்து விட்டால்
  கடவுள் உடைந்து விட்டாரோ? சிலைகள் கடவுள் என்றால்
  கோயில்களுக்கு ஏன் கதவும் பூட்டும்
  தன்னையே காத்துக்கொள்ள முடியாதவர் என்னவென்று
  சாதரண மனிதர்களை காத்துக்கொள்ளவார்.
  கடவுளின் காலடியில் இருக்கும் உண்டியலை கடவுள் காக்கமுடியாமல் உண்டியலுக்கு பிரத்தியேகமான பெரிய பூட்டுப் போட்டும் அதைப் பாதுகாக்க முடியவில்லை களவு போனபிறகு கண்டுபிடித்துக் கொடுக்கிற காவல்தான் கடவுளை விட வல்லமையானதா?
  எங்காவது ஒரு ஐயர் அங்கபிரதட்சணம்செய்தது கண்டதுண்டா?
  காவடி எடுத்தது கண்டதுண்டா?
  பறவைக்காவடி எடுத்தது கண்டதுண்டா?
  அலகு குற்றியது கண்டதுண்டா?
  ஐயர்ப் பெண் கற்பூரச்சட்டி தூக்கியது கண்டதுண்டா?அவர்களுக்குதான் கடவுள் இல்லை அங்கே என்று நன்றாகத் தெரியும்.
  அப்பாவி நீயும் நானும் தான் அங்கே இத்தனையும் செய்கிறோம்
  மாதசுகயீனமான காலங்களில் பெண்கள் கோயிலுக்குள் போகப்படாது
  என்றால் பெண்கள்எல்லாம் வல்ல சாமியை தீட்டுப் படுத்தக்கூடிய வல்லமை வாய்ந்தவரா? தாய்க்குலம் மன்னிக்கவும்.எனது தாயும் ,தாரமும் பெண்தான்,,,,,,
  நாம் எல்லாரும் இறப்பதற்க்கு காரணம் பைபிளின் படி ஏவாள் என்ற
  முதல் பெண்ணின் பேராசை ?கடவுள் சாப்பிடவேண்டாம் என்று சொன்ன
  அப்பிளை சாப்பிட்டது.
  சீதை என்ற பெண்ணிண் பேராசை மாயமானைக் கண்டதாலை
  இவ்வளவு பிரச்சனை ராமருக்கு
  கண்ணகி,கோவலன்,மதுரை ஆண்ட மன்னன் இந்த மூன்று பேருக்குள் உள்ள பிரச்சனையாலை கண்ணகி மதுரையினையே எரிக்கலாமா?

 • om sakthi om!:

  பணிப்புலத்தில் பிறந்த மக்கள் அனைவரும் இறைபணி செய்வதற்காகப் பிறந்தவர்கள். எனவே இவர்கள் இதயத்திலிருக்கும் அம்பிகையின் பக்தி நிழலை யாராலும் அளித்து விட முடியாது. இத் தலைப்பானது இரண்டாவது தடவையாக முன் வைக்கப்பட்டது வருந்தத்தக்கதாகும்.
  அம்பாள் துணை எழுதிய விளக்கமே சிந்திப்பவனுக்கு போதுமானதாகும்.

  அன்பே சிவம்! சிவமயமே பராபரம்!

  தாயே! மிகவும் தயவுடையார் எனச் சாற்றுவர்- இச்
  சேயேன் படுந்துயர் நீக்க எனே உளம் செய்திலையே
  நாயேன் பிழையினி நாடாது நல்லருள் நல்க
  வருவாயே எம் ஒற்றி மயிலே! வடிவுடை மாணிக்கமே!

  நன்றி!

 • Amman thunai:

  கடவுள் எங்கே இருக்கின்றார்?
  கடவுள் இருக்கின்றாரா என்பது பலருக்கு ஐயப்பாடு. இருந்தால் அவர் எங்கே இருக்கின்றார் என்பதிலும் ஐயம். அவர் என்ன வடிவில் இருக்கின்றார் என்பதிலும் ஐயம்.
  சில பொருள்களைக் கண்ணால் காணமுடியாது. காணமுடியாமையால் அப்பொருள் இல்லை யென்று கூறுவது அறிவுடமையாகாது. மலரில் மணம் இருக்கின்றது. அந்த மணத்தைக் கண்ணால் காண முடியாதல்லவா? ஒருவன், இம்மலரில் மணம் இருக்கின்றதா என்று முப்பது ஆண்டுகளாகக் கண்ணால் உற்றுப் பார்த்தேன். பூதக் கண்ணாடி வைத்தும் பார்த்தேன். வாசனை இருந்தால் என் கண்ணுக்குத் தெரியாதா? ஆகவே இம்மலரில் வாசனை இல்லை என்று முடிவு கட்டினான். அப்படி முடிவு கட்டிய மேதாவிக்கு மூக்கில் சதை வளர்ந்திருந்தது.
  காற்று வாய் வழியாக வந்து போய்க் கொண்டிருந்தது. அவன் மலரின் மணத்தைக் கண்ணாலன்றி வேறு எதனால் அறியத் தலைப்படுவான்? அவனைப் போலவே மூக்கில் சதை வளர்ந்தவர்கள் ஊருக்கு நான்கு பேர் ஒன்றுகூடி மலரில் மணம் இல்லையென்று தீர்மானம் செய்தால், அதை நல்ல மூக்குள்ள ஒருவன் ஒப்புக் கொள்வானா என்பதைச் சிந்தியுங்கள்.

  மலரின் மணத்தை நாசியினால் அறிதல் வேண்டும். ஒரு செய்யுளில் பொதிந்து கிடக்கும் கருத்தை அறிவினால் அறிதல் வேண்டும். இனிக் கடவுளை மெய்யறிவினால் அறிதல் வேண்டும். மெய்யறிவு என்பது நூல்களைப் படிப்பதனால் வரும் கலையறிவு அன்று. நூலறிவால் வாலறிவனாகிய இறைவனை அறிய முடியாது. மெய்யறிவு என்பது அநுபவத்தில் விளைவது. சுட்டியறிகின்ற உலக அறிவு முழுவதும் அற்றுப்போன இடத்திலே அநுபவ அறிவு தலைப்படும். அந்த அளவில் அறிவுக்கறிவான இறைவனுடைய அருட்காட்சி தோன்றும். இதனை அநுபவ ஞானியாகிய அருணகிரிநாத சுவாமிகள் கந்தரநுபூதியில் இனிமையாகவும் அழகாகவும் கூறுகின்றார்

  “அறிவொன் றறிநின் றறிவார் அறிவில்
  பிறிவொன் றறநின்ற பிரானலையொ
  செறிவொன் றறவந் திருளே சிதைய
  வெறிவென் றவரோ டறும்வே லவனே.” – கந்தரநுபூதி

  “அறிவா லறிந்து னிருதா ளிறைஞ்சும்
  அடியா ரிடைஞ்சல் தளைவோனே” – திருப்புகழ்

  ஏறக்குறைய 1500 ஆண்டுகளுக்கு முன் அறிஞர்கள் பலர் ஒன்றுகூடி கடவுளைப் பற்றி ஆராய்ந்து விவாதித்தார்கள்.
  ஒருவர், “கடவுள் கைலாயத்தில் இருக்கின்றார்” என்றார்.
  ஒருவர், “கடவுள் சூரியமண்டலத்தில் இருக்கின்றார்” என்றார்.
  ஒருவர், கடவுள் தேவேந்திர உலகத்தில் இருக்கின்றார்” என்றார்.
  ஒருவர், “கடவுள் அண்ட முடிவில் இருக்கின்றார்” என்றார்.
  ஒருவர், “கடவுள் வேத முடிவில் இருக்கின்றார்” என்றார்.
  ஒருவர், “கடவுள் அறிஞர் நடுவே இருக்கின்றார்” என்றார்.
  இவ்வாறு பலர் பலவாறு கூறித் தருக்கம் புரிந்தார்கள். தாம் தாம் கூறியதே சரியென்று வாதிட்டு வழக்கிட்டுக் கொண்டார்கள்.

  அக்காலத்தில் காரைக்கால் என்ற திருநகரத்தில் அறிவின் கருவூலமாகப் புனிதவதியார் விளங்கிக் கொண்டிருந்தார். ஆண்களைக் காட்டிலும் பெண்கள் அறிவில் சிறந்தவர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. ஞானத்தைப் பெண்ணாகக் கூறுவது சாத்திரம்.

  “சக்தி தான் யாதோ என்னில் தடையில்லா ஞானமாகும்”. – சிவஞான சித்தியார்

  ஆதலினால் கடவுள் எங்கே இருக்கின்றார் என்று வாதிட்டுக் கொண்ட அறிஞர்கள் அனைவரும் ஒருங்கு திரண்டு காரைக்காலுக்கு வந்தார்கள். அங்கே அறிவும் அன்பும் ஆசாரமும் பண்பும் ஒழுக்கமும் கற்பும் சேர்ந்து ஓர் உருவாக அவதரித்தது போல் காரைக்கால் அம்மையார் இருந்தார். அவரிடம் அறிஞர்கள் சென்று வணங்கி, தாங்கள் கடவுள் எங்கே இருக்கின்றார் என்று வாதம் புரிந்ததையும் முடிவு காண முடியாமல் போனதையும் கூறி நின்றார்கள்.
  அம்மையார் தனித்தனியே அவர்களை நோக்கி அவர்கள் கருத்தை வினவினார்கள். அவர்களும் கடவுள் வானத்திலும் வானவர்கோன் தானத்திலும் இருக்கின்றார் என்று தத்தம் கருத்தை கற்ற நூலறிவைக் கொண்டு கழறினார்கள்.

  தலைமை சான்ற புலமை நிறைந்தவரும் மெய்யறிவு பெற்றவருமான அம்மையார் புன்னகை புரிந்து, கடவுள் இருக்குமிடம் இதுவென ஒரு நேரிசை வெண்பாவில் விடை பகர்ந்தார்.

  “வானத்தான் என்பாரும் என்கமற் றும்பர்கோன்
  தானத்தான் என்பாருந் தாமென்க – ஞானத்தான்
  முன்னஞ்சத் தாலிருண்ட மெய்யொளிசேர் கண்டத்தான்
  என்னெஞ்சத் தானென்பன் யான்.”

  இறைவன் நினைப்பவர் மனம் கோயிலாகக் கொள்பவன். பொதுவாக எல்லோருடைய உள்ளங்களிலும் இருக்கின்றான். உள்ளம் உருகி நினையாதார் உள்ளத்துள் பாலில் நெய் போல் மறைந்திருக்கின்றான். உருகிய உள்ளத்துடன் ஓவாது உள்குவார் உள்ளத்துள் தயிரில் நெய் போல் வெளிப்பட்டுத் தோன்றி நிற்பான். அம்மையார் இடையறாது இறைவனை நினைந்தவராதலின் அவருடைய நெஞ்சிலே விளங்கித் தோன்றினான்.

  ஆதலால் அம்மையார், ஆண்டவன் வானத்திலிருக்கின்றான், வானவர்கோன் தானத்திலிருக்கின்றான், வேத நடுவில் விளங்குகின்றான் என்று கூறுவாரெல்லாம் கூறுக. நான் கடவுள் என் நெஞ்சிலிருக்கின்றான் என்று கூறுவேன் என்று யாரும் மறுக்க முடியாத அளவில் அழகாகக் கூறினார்.

  இப்பாடலின் மூன்றாவது வரி முன்னஞ்சத்தாலிருண்ட மெய்யொளி சேர் கண்டத்தான் என்பது மிகவும் அருமையானது. இறைவனுடைய கண்டம் நஞ்சினால் இருண்டு ஒளி செய்கின்ற இருளில் ஒளி என்ற முரண்தொடையணியாக மொழிந்த அழகு நனிபெருஞ் சிறப்புடையது.

  எனவே இறைவன் இடையறாது எண்ணுவார் இதயத்தில் இருக்கின்றான் என்பதை யாவரும் அறிந்து ஐயந்தீர்ந்து அக மகிழ்ந்தார்கள்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து