உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

18 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் ஆண்கள் மட்டுமே பணியில் அமர்த்தப்பட்டார்கள்.ஆரம்பக் கல்வி கூடப் படிக்க அனுப்பாமல் வீட்டுக்குள்ளே முடக்கி போடப்பட்டிருந்த காலம் .தொடர்ந்து கொண்டிருந்த அவர்களது வாழ்வில் 1857 ஆம் ஆண்டுவாக்கில் நிலக்கரி சுரங்கங்கள், தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் அவர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். அன்றைய தினம் தான் அவர்களாலும் இப்பணிகளைச் செய்ய இயலும் என்று எண்ணத்துவங்கினார்கள் ஆனால் வேலை கிடைத்ததே தவிர பெண்களுக்கு ஊதியத்தில் அநீதி இழைக்கப்பட்டது.இதனால் மிகுந்த மன்முடைந்த பெண்கள், ஆணக்ளுக்கு இணையான ஊதியம் மற்றும் சம உரிமைகோரி குரல் கொடுக்கத் தொடங்கினர் ஆனால் இதற்கு அப்போதைய அமெரிக்க அரசு இதனை அலச்சியப்படுத்தியது. இதன் விளைவாக அமெரிக்கா முழுவதும் உள்ள பெண் தொழிலாளர்கள் கிளர்ச்சியல் இறங்கினர்.1857 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தை அரசின் ஆதரவுடன் தொழிற்சாலை உரிமையாளர்கள் ஒடுக்கினர். அதன் பிறகு சம உரிமை, சம ஊதியம் கேட்டு 1907 ஆண்டு போராடத் தொடங்கினார்கள்,1910ம் ஆண்டு டென்மார்க்கில் பெண்கள் உரிமை மாநாடு நடைபெற்றது இதில் உலகில் பல்வேறு நாடுகளில் இருந்து கலந்து கொண்டு பெண்கள் ஒற்றுமையயை வெளிப்படுத்தினர்.இந்த மாநாட்டில் கலந்து கொண்ட ஜெர்மன் நாட்டு கம்யூனிஸ்ட் தலைவர் “கிளாரே செர்கினே ” மார்ச் 8 தேதியை மகளிர் தினமாக கொண்டாட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தினார். ஆனால் பல்வேறு இடர்பாடுகளால், அம்மாநாட்டில் தீர்மானம் நிறைவேரவில்லை. பிறகு 1920 ஆண்டு இரஷ்யாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்கள் போராட்டத்தில் கலந்து கொண்ட இரஷ்யாவின் “அலெக்ஸாண்டிரா கெலன்ரா” ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் தேதி உலக மகளிர் தினமாக கொண்டாட வேண்டும் என்று பிரகடனப் படுத்தினார். இதனையடுத்து 1921 முதல் மார்ச் 8 ஆம் தேதி உலக மகளிர் தினமாக பெண்களால் கொண்டாடப்படுகிறது,1921 மார்ச் 8 முதல் கொண்டாடிவரப்பட்ட உலக மகளிர் தினத்தை 1975 ஆன் ஆண்டை உலக மகளிர் தின ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபை பிரகனப்படுத்தியது. இரஷ்யா, வியட்நாம், உக்ரைன், கியூபா, ஆர்மேனியா, பெலாரஸ், புர்கினியா,பெசோ, கம்போடியா,மால்டோவா,மங்கோலியா,மான்டே நெக்ரோ ,அஜர்பைஜான், எரித்திரியா, உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான்,துருக்மெனிஸ்தான்,ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் உலக மகளிர் தினத்திற்காக பொது விடுமுறை விடப்படுகிறது

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து