உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்


ஐயா தேவரே! நன்றே விழித்தீர்!
இல்லா ஊரென்று நிலை தாழ்ந்து
பொல்லாப் பழி சுமத்தும்
மறுமலர்ச்சி மண்ணே! தாயே!

நீ உயர்வுகளுக்குள் உயர்ந்தவள்!
மறப்போமா?
நாங்கள் உன் மகசூலின்
விளைந்த விருட்சங்களன்றே!
மறப்போமா தாய் மண்ணே!
மறுமலர்ச்சி மண்ணே!

பொல்லா ஊரிற்கு
பொருள் தேடி வந்ததென்பது
உண்மையிலும் உண்மை
உண்மைக்குள் ஆயிரம் துயர்கள்!.
நீயாறியாயோ!

பனிபடர்ந்த பூவி தன்னில்
உன் மார்பிலே தவழ்ந்தவர்
படும் பாடு நீ அறியாயோ?

புலம் பெயர்ந்தாலும் புலன் பெயரா
உன் பிள்ளைகள்
இரவையும் பகலையும் பிரித்தறியார்
இரண்டும் ஒரு நிறந்தான்
ஓடுகின்றார் ஓடுகின்றார்

வேலை வேலை பணம் பணம்
உற்றவரை மற்றரைப் பார்பதற்கே
காலாற நேரமின்றி
தூக்கம் தொலைத்து
ஒரு வேலை இரு வேலை
ஓய்வுறக்;கம் ஏதுமில்;;;;;லை
ஆயினும் தாய் மண்ணே
மறக்கவில்லை தாயே உனை.
உன் அணைப்பை மறக்காமல்
தேடுகின்றார் உன் உறவை
தாயே மறப்போமா மறுமலர்ச்சி
மண்ணே தாயே!

நெஞ்சில் ஓடுதையா
இல்லப் போட்டிகளும்
அம்மன் கோவில் திருவிழாவும்
ஜம்பு கோளப் பட்டினமும்
கடற் காற்றும் மெல்லத் தழுவிய இதம்!
நினைக்க நீர் சுரக்குதம்மா!
தாயே மண்ணே! மறப்போமா
உன் நினைப்பை!

அண்ணன் வீடு வாங்கிவிட்டால்
அதைவிடப் பெரிதாய்
நான் வாங்க வேண்டும்;.
ஆசை அதிகம் வைத்து
விரலுக்கு மிஞ்சிய வீக்கமாய்
அகம் வாங்கி
வங்கிக் கடனாளியாகி
கணமேனும் வீட்டில்
இருப்பதையே மறந்து
ஓடி ஓடி உடைந்து போனோர் சிலர்

கடன் மட்டை வசதிகளல்
மட்டற்ற செலவு செய்து
மாண்டு போனார் சிலாஇ;
சூதாட்டம் சீட்டு என்று
சிதைந்து போனோர் சிலர்இ

பலதும் பத்தையும்
எண்ணி எண்ணி
மன நோயாளியானோர் சிலர்இ
இப்படிப் பல சிக்கலஇ; பறையார் பலர்
ஆயினும் தாயே மறுமலர்ச்சி மண்ணே
மறக்கவில்லை! உன்னை மறக்கவும்
தான் முடியுமோ? உன் நினைவை.

தாய் தந்தையைக் காணாத
பிள்ளைகள் மனம் கோணக்கூடதென்றுஇ
கிடைக்கின்ற விடுமுறையில்
கடைத் தெரு சென்று
கணணி விளையாட்டுப் பொருள் முதலாய்
களியாட்டுப் பொருள் வரையில்
பிள்ளைகள் எண்ணம் போல
பெற்றோரே வாங்கிக் கொடுப்பார்
வேலை முடிந்து பெற்றோர் வரும் வரை
பிள்ளைகள் தனிமையில்
கல்வியை மறந்து
கணணிக்குள் தலை புதைத்து
மூளையைத் தொலைத்திடுவர்
முகநூல் வழியாக வேண்டாத
உறவுகளால் வேடிக்கைச்
செய்திப் பரிமாற்றம்
தொலைக் காட்சிக்குள்
தொகைக் கணக்காய்
நேரம் கழியும்
பிள்ளை என்ன செய்கின்றார்
எனப் பார்க்க பெற்றோர்க்கு
நேரமில்லை. – ஆயினும்
தாய் நிலத்து மறுமலர்ச்சி
மண்ணே மறக்கவில்லை
உனை நாம்.

மறுமலர்ச்சி தாயே
தாய் மண்ணே
புலம் பெயர்ந்த மண்ணில்
குடியுரிமை பெற்றாலும்
நாம் வந்தேறு குடிகள் தான்.
வரும் போது கொண்டு வந்தோம்
சீதனமும் சாதியமும் சமயமும்
சற்றேனும் தளர விடவில்லை
மூலைக்கொரு கோவில்
சந்திக் கொரு தமிழ்க் கடை
கிரைக் கடைக்கு பத்து எதிர்க்கடை
போட்டியோ போட்டி
இன்னும் எத்தனையே
சொல்லி மாளாது.

மகிளூர்ந்து வாங்கிவிட்டால்
நான்கு சில்லுக்கும்
தேசிக்காய் வைத்து நசித்து
வெள்ளோட்டம் விடுவோம்
வீடு வாங்கிவிட்டால்
வாசலில் சுரக்காய் தொங்க விட்டு
வீட்டுக்குச் சாந்தியும் செய்வோம்
செய்யும் செலவு ஏனென்றே தெரியாமல்
இந்தியாவிலிருந்து நடிக நடிகையர் முதல்
கணியன் வரை இறக்குமதி செய்து
காண்டம் முதல் கழிப்பும் செய்வோம்.
ஆயினும் தாயே உனை மறவோம்.

பூப்புனித விழாஇ பிறந்த நாள் விழாஇ
திருமண விழா இவை இங்கு
பணத்தின் பலம் சொல்லும் விழா
‘கெலி’ முதல் பல்லாக்கு வரை
சடங்குப் பொருட்கள்.
பகட்டாய் பலர் வியக்க
பெரிதாய் விழா எடுத்துச்
சிரித்து மகிழ்ந்து நின்றோர்
பிள்ளையின் பட்டப் படிப்பிற்கு
கடனுக்கு விண்ணப்பம்;!
பிள்ளை படிப்பு முடிந்து
பட்டம் பெறுகுதோ இல்லையோ
கடன் சுமையை முதுகில் சுக்கும்;.
ஆயினும் தாயே உனை மறவோம்

ஓடி ஓடி உழைக்கின்றார்
உறக்கம் ஒழுங்கில்லை
உணவோ நேரத்திற்கில்லை
ஓய்வோ ஏதுமில்லை
கையிலும் காசுமில்லை.
நாற்பதை எட்ட
கண்ணுக்கு கண்ணாடி
நரை தேடும் கறுப்பு மை
நீரிழிவும் கொழுப்பும் மார்படைப்பும்
மிரட்டி வளைத்துக் கூனாலாக்கும்
ஆயினும் தாயே மண்ணே
மறக்கோம் நின் நினைவை.

முடிந்த வரை முயர்ச்சிகள் தொடர
தாயே உனக்காய் சில வேளை கூடுவோம்
குலவிக் கதைத்து சிலரிடம் குழைந்து
நெளிந்து கெஞ்சிக் கூத்தாடி
சேர்த்த பணத்தை அவ்வப்போது
அனுப்பியும் வைப்போம்!
உன் போலும் எமக்கும்
பெருங் குறையுண்டு
எப்போது உன் மார்பில்
கொஞ்சி விளையாடுவது?
எனும் ஏக்கம் நெஞ்சினில் நிறைந்திருக்கு!
இன்னும் எத்தனையே நினைவலைகள்
மோதி மோதிச் செல்கின்றது
சொல்லி விட வார்த்தையில்லை.

புலம்பெயர்ந்த மண்ணில்
இன்னும் பல சோகங்கள்
உண்மைகள் சொல்வதற்கும்
சிலர்க்கு மனம் ஓப்பாது.
ஆயினும் தாயே சொல்லும்
வேளை வரும் அப்போ செப்புவோம்
மீண்டும் மீண்டும் தாயே
உன் மடியில் தலை வைத்துக்
கதை பேச ஆசை
நிச்சயமாய் காலம் கனியும்
காண்போம் மறுபடியும்
மகிழ்வோம் களிப்போம்
இனிதாய் இனிதாய்.

8 Responses to “தொப்புள்கொடி உறவை தொடர நினைக்கும்”

 • எங்களின் தவிப்புக்களை கவியாக வடித்த அண்ணன் ஏகன்(விஜி) அவர்களுக்கு எனது நன்றிகள்.உங்களின் கவி தொடர எனது வாழ்த்துக்கள்.

 • இராமச்சந்திரன்:

  புலம்பெயர் வாழ்வின் சந்திக்கு வராத எங்களின் சங்கதிகளை புடம்போட்டு காட்டிய ஏகனே,தொடரட்டும் உங்கள்பனி

 • siva germany:

  தம்பி ஏகனே உங்களது கவியில் புலம்பெயர்ந்த மக்களின் அவலங்களை மிகவும் அழகாகவும் தெளிவாகவும் எடுத்துக்காட்டினீர், இன்னும் இன்னும்
  உங்கள் ஆக்கங்கள் தேவை. நன்றி

 • சு.யாதவன்:

  ஏகனின் கவிதை நன்றாக உள்ளது வரவேற்கின்றேன்.

 • அழ பகீரதன்:

  ஏகனின் கவிதை எம்மனதை தொட்டது. நெஞ்சினில் நிற்கின்றது. இக்கவிதையை ஒரு அரங்க நிகழ்வில் பயன் படுத்தலாம் என நினைக்கின்றேன். அது கைகூடும் எனவே நம்புகின்றேன். நாம் தூரத்து அவலங்கள் என்ற தலைப்பில் மன்றத்தில் கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முன் ஒரு நாடகம் நிகழ்த்தினோம். அந்நாடகத்தை எஸ் யாதவன் எழுதியிருந்தார். அதில் புலம் பெயர் அவலங்கள் அதில் சொல்லப்பட்டது. ஆக்கங்கள் ஒவ்வொன்றும் ஆக்க கர்த்தாக்களின் உணர்வுகளை உரைக்கின்றது. மன்றத்தின் செயற்பாடுகளுக்கான புலம் பெயர் பங்களிப்புகள் மகத்தானவை. அவை என்றென்றும் விதந்து போற்றத்தக்கவை.

 • S.Ratnarajah:

  ஏகனே என்னே உன் கவி! புலம் பெயர்ந்த புலத்து உறவுகளின் வாழ்க்கையை அப்படியே ஒருமுறை படம் பிடித்துகாட்டி விட்டாய். உங்கள் கவி தொடர்ந்து வர வாழ்த்துக்கள்.நல்ல கவிஞர்கள் வெளிவர களம் அமைத்துகொடுத்த இணையத்துக்கு என் அன்பான நன்றிகள்.

 • T.BALA:

  அண்ணா ஏகன் உங்கள் கவி யதார்த்தங்களை எடுத்து கூறினீர்கள்.உங்கள் கவியில் பல உண்மைச்சம்பவங்கள் நிறைந்துள்ளது.உண்மைகள் பல நாம் ஒளி நாடாக்கள் மூலம் பார்த்து ஓ இப்படியா, ஏன் இப்படி ஒரு கொண்டாட்டம் என எண்ணியதும் உண்டு.ஒரு விழா ஒரு மனிதனின் ஆயுள்காலம் வரை உழைத்து கடன் கட்டும் நிலையில் பலர் எம் கண் முன் பட்டைஅடி அடித்து கடன் சுமை குறைக்கமுடியா திண்டாட்டம்.கவிஞ்ஞர்கள் அனுபவித்து எழுதுவது உங்கள் எழுத்தில் உணரமுடிகின்றது.நண்பா அண்ணா என்றதில் கோபமா என்றும் 16 தானே. பாலா

 • விசு.க.விமலன்:

  ஆகா, ,ஏகனே உங்கள் கவிதையில் புலம் பெயர்ந்தோரின் உள்ளக் கிடக்கையில் இருப்பவைகளை அப்படியே அள்ளித் தெளித்துவிட்டீர்களே. பணிப்புலம்.நெற்றில் வரும் அனைத்துக் கவிதைகளையும் ஒன்று சேர்த்து ஒரு காலத்தில் ஒரு புத்தகமாகவே வெளிக்கொணரலாம் போலத் தோன்றுகின்றது. நல்ல கவிதைகள் தொடரட்டும். எழுதுவதோடும், வாசிப்பதோடும், இரசிப்பதோடும் மட்டும் நின்றுவிடாமல் இக் கவிதைகளிலிருந்து வெளிப்படும் மனித நேயத்தையும் உணர்வோம்.

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து