உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

கத்தோலிக்க மதத்தலைவரான போப் பிரான்சிஸை சுட்டுக்கொல்ல முயன்ற இளம்பெண்ணிற்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அமெரிக்காவை சேர்ந்த Santos Colon(17) என்ற இளம்பெண் தான் இந்த சதித்திட்டத்தில் ஈடுப்பட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

நியூ ஜெர்ஸி மாகாணத்தில் உள்ள Philadelphia நகருக்கு போப் பிரான்சிஸ் கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் திகதி வருவதால் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்துள்ளன.இதே நகரைச் சேர்ந்த அந்த இளம்பெண் ஐ.எஸ் தீவிரவாதிகளால் ஈர்க்கப்பட்டு போப் பிரான்சிஸை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

இதற்காக தொலைத் தூரத்தில் இருந்து சுடும் ஸ்னைபர் ரக துப்பாக்கியையும் அவர் வாங்கியுள்ளார்.ஆனால், இத்திட்டத்தை செயல்படுத்த திறமையான ஆண் ஒருவரின் உதவி அவருக்கு தேவைப்பட்டது.பல்வேறு ரகசிய விசாரணைக்கு பிறகு நபர் ஒருவரை அவர் தனது திட்டத்திற்காக நியமித்துள்ளார்.

அதிர்ஷ்டவசமாக இளம்பெண் நியமித்த அந்த நபர் அமெரிக்க ரகசிய FBI ஏஜெண்ட் என்பது அந்த பெண்ணிற்கு தெரியவில்லை.இளம்பெண்ணின் திட்டத்தை அறிந்து விசாரணை நடத்தியபோது அவர் போப் பிரான்சிஸை கொலை செய்ய முயற்சிப்பது தெரியவந்தது.இதனைத் தொடர்ந்து இளம்பெண் உடனடியாக கைது செய்யப்பட்டார்.

இவ்வழக்கு நேற்று அமெரிக்க நீதிமன்றத்திற்கு வந்தபோது மன இளம்பெண்ணிற்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

இத்திட்டத்தை தீட்டியபோது அவருக்கு 15 வயது என்பதால் அவரை உளவியல் மருத்துவமனைக்கு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இச்சிகிச்சை முடிந்து அவர் திரும்பும்போது போப் பிரான்சிஸை கொலை செய்ய முயற்சித்த குற்றத்திற்காக அவருக்கு 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து