உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

 பண்கலை பண்பாட்டுக் கழகத்தின் முக்கிய அறிவித்தல்.

 கனடா பண்கலை பண்பாட்டுக் கழகத்தினரால் Feb 19 ம் திகதி ஞாயிற்றுக் கிழமையன்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில்
 கலந்தாலோசித்துப் பின்வரும் முக்கிய தீர்மானங்கள் பணிப்புலம் அம்பாள் சன சமூகம் தொடர்பாகவும், அதன் முன்பள்ளி தொடர்பாகவும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

.
 1.பணிப்புலம் சனசமூக நிலையப் புனர் நிர்மாண வேலைக்குத் தேவைப்படும் நிதித் தேவையின் ஒருபகுதியை பண்கலை பண்பாட்டுக் கழகம் கனடாவாழ் பணிப்புலம்  மக்களிடமிருந்து சேகரித்து வழங்கும். இந் நிதி அனைத்தும் அம்பாள்  சனசமூக நிலையம் மற்றும் பணிப்புலம் கிராம முன்னேற்றச் சங்கத்தின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவே பண்கலை  பண்பாட்டுக் கழகத்தினால் வைப்பிலிடப்படும்.  இந் நிதி சேகரிப்பிறகாக எமது ஊரவர்கள் அனைவரிடமும் தொடர்புகளை ஏற்ப்படுத்துவதற்காக ந.இழங்கண்ணன் (416-755-8397) அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.  இவருடன் சி.கெங்காதரன் அவர்களும் த. புலேந்திரன் இணைந்து இயங்குவார்கள்.
.
2.பணிப்புலம் வாசிகசாலையினால் தற்போது தற்காலிக இடத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் முன்பள்ளி அம்பாள் ஆலைய அன்னதான மண்டபத்தில் நடாத்துவதற்கு ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கான சகல தரப்பினரிடமும் சம்மதமும் பெறப்பட்டுள்ளது.
.
3. முன்பள்ளி இடமாற்றம் மற்றும் அதற்கான ஆரம்பச் செலவினங்களை கனடா பண்கலை பண்பாட்டுக்கழகம் பொறுப்பேற்றுக்கொள்ளும் . மேலதிக நிதி  தேவைப்படின் ஏனைய நாடுகளில் உள்ளவர்களிடமும் தொடர்புகொள்ளப்படும்
.
4. முன் பள்ளிக்குத் தேவையான தண்ணி வசதி மற்றும் மலசலகூட வசதிகளைத் திரு. கணபதிப்பிள்ளை. கனகரத்தினம் அவர்கள் ஆலைய நிர்வாகத்துடன் தொடர்புகொண்டு ஏற்ப்படுத்திக் கொடுப்பதற்குச் சம்மதித்துள்ளார் என்பதையும் இங்கு அறியத் தருகின்றோம்.
.
ந. இளங்கண்ணன் 416-755-8397.
சி. கெங்காதரன் 647-282-1274.
த.புலேந்திரன் 416-728-9580. 
.
நன்றி-பண் கலை பண்பாட்டுக் கழகம்-கனடா. 

8 Responses to “பண்கலை பண்பாட்டுக் கழக அறிவித்தல்”

 • manithan:

  முன் பள்ளிக்காக பல கருத்துக்களுடன் வந்த பகி அவர்கள் அன்னதானமடத்தில் முன் பள்ளி பற்றிய எந்த தகவலையும் காணோமே? மனிதன

 • Sivanantham.S:

  பல்வேறு விடயங்களிலும் பல நாடுகளிலும் வாழ்கின்ற எமது ஊர் மக்களிற்கு வழிகாட்டிகளாகத் திகழும் கனடா க.ப.கழகத்தினர் அனைவரையும் ஒன்றிணைத்து ஊர் மக்கள் ஒற்றுமையை வளர்த்து ,அபிவிருத்திப் பணிகளை நல்ல முறையில் மேற்கொள்ளும் வகையில் வரவேற்கத்தக்க தீர்மானத்தை எடுத்துள்ளனர். அவர்களுடைய இத் தீர்மானத்தை அனைத்து நாடுகளிலும் வாழ்கின்ற மக்கள் அனைவரும் ஏற்று, அவர்களுடன் ஒன்றிணைந்து தத்தமது பங்களிப்புகளை மேற்கொள்வதே சாலச்சிறந்ததாகும். வீணான அர்த்தமற்ற கருத்து விமர்சனங்களைத் தவிர்த்து, அனைத்து மக்களும் ஒன்றிணைந்து செயற்படும் வகையில் கருத்துக்களை முன் வைப்பதே நன்மை பயக்கும்.
  நன்றி!

 • பாலர் பாடசாலையை கோயில் மடத்தில் நடத்துவதற்கு க ல்விச் சபையோ கிராமசேவகர் பிரிவோ அனுமதியளிக்குமா?
  எனினும் கோயில் மடத்தில் சிறுவர் பள்ளியை நடத்திய பின்னர் சிறுவர் பள்ளியும் கோயிலுக்கு உரியது என்றும் சனசமூக நிலையமும் கோயிலுக்குச் சொந்தம் என்று கூறிக் கொண்டு இப்பொழுது கோயிலில் உரிமை கொண்டாடுபவர்கள் வரமாட்டார்கள் என்பதற்கு உத்தரவாதம் ஏதும் இல்லை என நினைக்கின்றேன்.

  முன்பள்ளி விடயம் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது என்று நினைக்கின்றேன்.
  பண்கலை பண்பாட்டுக் கழகத்தின் முயர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

  ஏரன் (ஏர்- அன்)

 • nanban:

  பண்கலைபண்பாட்டுக்கழக இந்த அறிக்கை வரவேற்க்கத்தக்கது.ஆனாலும்
  பாலர்பாடசாலைக்கு அன்னதானமடத்தை பாவிப்பதற்கு அழைப்பு சரியான
  இடத்தில் இருந்து வரவில்லை?

 • Selvarajah K.:

  அம்பாள் துணை,
  அண்ணன் பாலாவுக்கு, அன்னதானமடக்கட்டடத்தில் முன் பள்ளி நடத்துவதற்கு அனைவரின் சம்மதமும் பெறப்பட்டுள்ளது (மரியாதைக்குரிய குருக்கள்கள் உட்பட) அண்ணர் கனகரத்தினமும் கதைத்துத் தண்ணீர்,களிப்பிட வசதிகள் செய்து தருவதாக்க் கூறியுள்ளார். இதற்குமேல் என்ன வேண்டும் உங……
  நன்றியுடன இராசன்.

 • நலன்விரும்பி:

  வாழ்த்துக்கள். நீண்ட காலத்திற்கு பிறகு ஒருவாறு ஒன்று கூடி இந்த தீர்மானங்களை எடுத்தற்கு..இனியாவது உடனடியாக (((((((((பல வருடங்களுக்கு பிறகு அல்ல)))))) காரியங்களில் இறங்கவும். அதாவது அடுத்த நிர்வாகம் தெரிவு செய்வதற்கு முன்னர். பிறகு அதில் ஒரு புது குழப்பங்கள் வந்தால் சரியான கஸ்டமாகிவிடும். பிறகு வடிவேல் பாசையில் சொல்வது போல் முடியல… என்றுதான் சொல்ல வேண்டி வரும். வாக்குறுதி கொடுத்துக் கொண்டே காலம் கடத்துவது போன்ற யுக்தியையும் சிலர் பாவிக்க கூடும்.

 • Selvarajah K.:

  அம்பாள் துணை,
  க.ப.க.களகத்துக்கும் அதற்காகப் பாடுபடுபவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.முன்பள்ளி இடப்பிரச்சனையை இவ்வளவு சுகுமாகவும் கெதியாகவும் காலமறிந்தும் பெற்றமைக்காக,பாடசாலையை ஆரம்பித்தவர்களில் நானும் ஒருவன் என்ற வகையிலும், ஊர்ச் சிறுவர்களின் நலன் விரும்பி என்றவகையிலும் மனமார்ந் நன்றிகளை மனப்பூர்வமாக மீண்டும் மீண்டும் கூறுகின்றேன். நன்று,நன்றி.இதற்காகப் பாடபட்ட உள்ளங்களுக்கும் மனமுவந்து இடங்கொடுத்த மதிப்பிறகுரிய சிவாச்சாரியர்களுக்கு நன்றி,நன்றி,நன்றி
  வாழ்க உங்கள் தொண்டு.
  வளர்க உங்கள் பணி.
  நன்றியுடன் ஊர் முன்னேற வேண்டும் என்ற எண்ணங்கொண்டவர்களில் ஒருவரான கணேசர் இராசன்.நன்றி.

 • T.BALA P.s.s.nilayam:

  பண்கலைபண்பாட்டுக்கழக இந்த அறிக்கை வரவேற்க்கத்தக்கது.பணிப்புலம் வாசிகசாலைக்கு எடுக்கும் முயற்ச்சி வெகு துரிதப்படுத்தப்பட வேண்டும். தற்ப்போது வேலை ஆரம்பம் பணம் வெகுவிரைவில் அனுப்பினால் மட்டுமே முடியும்.முன் பள்ளிக்கு அன்னதானமடம் தருவதாய் ஆலயத்தினர் அதாவது இன்று ஆலயத்தை நிர்வாகம் பண்ணுவோர் தங்கள் சம்மதம் தெரியப்படுத்தப்படவேண்டும்.அதன் பின் பகி அவர்கள் இந்த இடத்தில் முன்பள்ளி நடாத்த அனுமதியும் அதேவேளை அந்த முன்பள்ளிக்கு இலங்கை அரசாங்க உதவிகள் எப்படி என ஆராயப்பட்டு இதை தொடங்கவேண்டும்.இதைப்பற்றிய மேலதிக திட்டமிடல்கள் பகியும், அவரோடு ஒத்துளைப்பு வளங்கும் ஆசிரியர்கள்,பெற்றோர்கள் சேர்ந்து முடிவு செய்து எங்களுக்கும் அறியத்தரவும்.சாதிய வேற்றுமைகள் பாரா முன்பள்ளி ஆரம்பமே நன்று.மக்கள் வரவே ஆதரவு தந்ததாய் எடுப்பதாயின் பணிப்புலத்தில் எதையும் சாதிக்கமுடியாது.வராதவர் வந்ததாய் எண்ணி எமது தீர்மானங்கள் நிறைவேற்ற சகல மக்களும் உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம். நன்றி பணிப்புலம். ச.ச.நிலைய வெளிநாட்டு தொடர்பாளர் பாலா

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து