உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

வட கிழக்கு நைஜீரியாவில் மூன்றாண்டுகளுக்குமுன் கடத்தப்பட்ட 276 மாணவிகளில் 82 பேரை பொகோஹராம் தீவிரவாதிகள் விடுவித்துள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.பலகட்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து, பரிமாற்றம் மூலம் பொகோஹராம் தீவிரவாதிகள், குறித்த மாணவிகளை விடுவித்துள்ளதாக அறியமுடிகின்றது.

இருந்த போதிலும் பொகோஹராம் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்பட்ட நபர்கள் எத்தனை பேர் விடுவிக்கப்பட்டனர் என்ற எண்ணிக்கை அரச தரப்பில் தெளிவுபடுத்தபடவில்லை.

விடுவிக்கப்பட்ட 82 சிறுமிகளும் நைஜீரிய இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் சிறுமிகள் தொலைத்தூர பகுதியிலிருந்து கேமரூன் உடனான எல்லையை ஒட்டி அமைந்துள்ள பாங்கி அருகே இருக்கும் இராணுவ தளத்திற்கு சாலை வழியாக வாகன தொடரணி மூலம் கொண்டு வரப்பட்டதாகவும் அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்னதாக சுவிஸ்லாந்து மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் ஆகியன இணைந்து பொகோஹராம் தீவிரவாதிகளுடன் மேற்கொண்ட உடன்படிக்கையின் பின்னர், கடத்திச் செல்லப்பட்ட மாணவிகளில் 21 பேர் விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து