உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

மதுப்பழக்கம் பிரிட்டனில் அதிகரித்து வருகிறது. இதனால் அடுத்த 20 ஆண்டுகளில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் உயிரிழப்போர் எண்ணிக்கை 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் ஆக இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

தொடர்ச்சியான மதுப்பழக்கம் காரணமாக கல்லீரல் பாதிக்கப்படுகிறது. உடல் செயல்பாட்டுக்கு முதன்மையாக திகழும் கல்லீரல் பாதிக்கப்படும் போது உயிரிழப்பு ஏற்படுகிறது. இது குறித்து கல்லீரல் மருத்துவ நிபுணர்கள் லான்சட் இதழில் எழுதியுள்ளனர்.

மது உற்பத்தி தொழில் துறையுடன் கூட்டணி அரசு நெருக்கமாக உள்ளது ஒரு யூனிட் மதுவிற்கு குறைந்த பட்ச விலை அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். மருத்துவ ஆய்வாளர்களின் இந்த குற்றச்சாற்றை சுகாதாரத்துறை நிராகரித்துள்ளது.

மது உற்பத்தி முறைகேடுகளை மேற்கொள்ளும் தொழில்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மது போதை பழக்கம் பிரான்ஸ் நாட்டில் 1963 ம் ஆண்டுகளில் தீவிரமான பிரச்சனையாக நிலவியது.

தரக்குழறைவான ஆல்கஹாலை குடித்ததால் அங்கு கல்லீரல் நோய் பாதிப்பு அதிகரித்து உயிரிழப்பும் அதிகமானது. இதைத் தொடர்ந்து அங்கு கடுமையான சந்தை கட்டுப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் மது அருந்துவோர் அளவு குறைந்தது.

இதே போன்ற கட்டுப்பாடுகள் பிரிட்டனில் கடைபிடிக்க வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள். தற்போது 1 லட்சம் பேருக்கு 11 பேர் உயிரிழக்கின்றனர். மது அருந்துதலில் கட்டுப்பாடு விதிப்பதன் மூலம் இந்த உயிரிழப்பு எண்ணிக்கை 3 ஆக குறைக்க முடியும் என அவர்கள் கூறுகிறார்கள்.

இந்த பழக்கம் காரணமாக புற்றுநோய் மற்றும் சாலை விபத்துகள் அதிகரிக்கின்றன. ஆல்கஹாலுக்கு விதிக்கப்படும் வரி அளவை அதிகரிக்க வேண்டும் என கூட்டணி அரசு திட்டமிட்டுள்ளது. இந்த கருத்தினை பேராசிரியர் இயான் கில்மோர் தலைமையிலான மருத்துவ நிபுணர்கள் வரவேற்றுள்ளனர்

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து