உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

முல்லைத்தீவு வெல்லமுள்ளிவாய்க்கால் பகுதியில் கடற்படைக்குச் சொந்தமான 40 ஏக்கர் காணிக்கு சீனர் ஒருவர் உரிமை கோரியுள்ளார். இந்தக் காணியின் மூல உரிமையாளர் தாம் என குறித்த சீனர் தெரிவித்துள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் பயன்படுத்தப்பட்ட பாரிய கடற்புலி முகாம் அமைந்திருந்த பகுதியையே அவர் இவ்வாறு உரிமை கோரியுள்ளார்.

தற்போது குறித்த பகுதியின் 600 ஏக்கர் காணியை உள்ளடக்கி படையினர் முகாம் ஒன்றை அமைத்துள்ளனர். சீனப் பிரஜை கோரும் காணியானது அவரது பெற்றோர் விவசாய அனுமதிபத்திர அடிப்படையில் பெற்றுக்கொண்டது எனத் தெரிவிக்கப்படுகிறது.

அவ்வாறு விவசாயம் செய்வதற்கு 40 பேர்சஸ் காணிக்கு மட்டுமே அனுமதிப்பத்திரம் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, இந்த சீனப் பிரஜையின் தாய் ஓர் சிங்களப் பெண் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து