உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அவுஸ்ரேலியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு, அந்நாட்டில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.

இன்று (புதன்கிழமை) காலை கன்பரா விமான நிலையத்தை அடைந்த ஜனாதிபதி மைத்திரியை அந்நாட்டு அரசின் உயர்மட்ட அதிகாரிகள் வரவேற்றனர்.

அவுஸ்திரேலியாவில் மூன்று நாட்கள் தங்கியிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவுஸ்ரேலிய பிரதமர் உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இந்த சந்திப்பின்போது, இருநாட்டு உறவுகளை வலுப்படுத்தும் பேச்சுக்கள் இடம்பெறவுள்ளதுடன் வர்த்தகம், விவசாயம் மற்றும் பாதுகாப்பு துறைகளில் முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது.

இருநாட்டு தலைவர்களின் சந்திப்புக்களைத் தொடர்ந்து சில உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்படவுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

1954ஆம் ஆண்டு சேர் ஜோன் கொத்தலாவலையின் அவுஸ்திரேலிய விஜயத்தை தொடர்ந்து 63 ஆண்டுகளுக்கு பின்னர் அவுஸ்ரேலியாவிற்கு அரச சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதலாவது அரச தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து