உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்


12 Responses to “இடுமன் கோவில் அறிவித்தல்”

  • நலன்விரும்பி:

    திரு. பகி அவர்களுக்கு… ஊரில் உள்ளவர்கள் வாழ்வு தேடி வடக்கு இந்தியாவில் இருந்து வந்த பிராமணிகளுக்கு வாழ்க்கை கொடுக்க வேண்டும் என்றுதான் பல கோவில் வேலை தலங்களை எமது ஊரில் உருவாக்குகிறார்கள் என்று கூறுகின்றீர்கள். ஒம் உண்மையாக இருக்கலாம். அதை எமது ஊரில் இருக்கும் மற்றவர்கள் எல்லாரும் ஒற்றுமையாக நின்று தடுக்கலாமே….அப்படி யாராவது ஒற்றுமையாக பலர் நின்று உழைத்தால் இந்தக் கோவில்களுக்கு நேர்த்திக் கடன் வைக்கும் பெரியவர்களிடம் சென்று எங்கள் ஊரின் தேவையை உணரும் வகையில் எடுத்து கூறலாமே…. அப்படி எல்லாம் செய்வதை விடுத்து இப்போது மட்டும் (கட்டிடம் உயரும் போது) விமர்சிப்பது எந்த வகையில் நியாயம். ஒருவரிடம் ஒரு பொறுப்பை ஒப்படைக்கும் போதோ அல்லது அந்த பொறுப்பை அவர் ஏற்கும் போதோ அந்தப் பொறுப்பை அவர் சிறப்பாக செய்வதற்கு தன்னால் முடிந்த அளவு முயற்சி செய்வார். இதைத்தான் இடுமன் கோவில் நிர்வாகம் செய்கின்றது. எனக்கு தெரிந்த வகையில் நீங்களும்)(திரு பகி அவர்களும்) மறுமலர்ச்சி மன்றத்தில் செய்கின்றீர்கள். நான் சொல்லக் கூடியது ஒன்றுதான். எமது மக்கள் என்ன வேண்டும் என்று அவர்கள் தான் தீர்மாணிக்க வேண்டும்.

  • அழ பகீரதன்:

    கோயில்கள் ஆன்மீகத்துக்கோ அல்லது சமூக முன்னேற்றத்துக்கு உதவுகின்றதோ வேறுவிடயம். ஆனால் கோயில்கள் கட்டுவதால் யாழ்ப்பாணத்தில் மேசன் தொழிலாளர்கள், தச்சுத்தொழிலாளிகள் குடும்பங்கள் மற்றும் சீமந்து மண் விற்பனையாளர்கள், மேலும் இதுபோன்ற தொழிலாளிகளின் வாழ்க்கைத்தரம் உயர்வடைகின்றது. அவர்கள‍து தொழில்வாய்ப்புக்கள் பெருகுவதால் அதில் ஒரு சமூக நலன் இருக்கின்றது. அவர்களுக்கு கிடைக்கும் வருமானத்தை வைத்து அவர்கள் தங்களது பிள்ளைகளை தனியார் கல்வி நிறுவனங்களுக்கு அனுப்புவதனால் அந்த தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் வருமானம் கிடைக்கின்றது. இவ்வாறான பொருளாதார சுற்றோட்டத்தில் கோயில் முக்கியமான சமூக நிறுவனமாக இருப்பதனால் கோயில்கள் கட்டுவதும் அதனை செப்பனிடுவதும் அவசியமான திருப்பணியாக நிகழ்ந்து வருகின்றது.மேலும் நேத்திக்கடன் தீர்க்கும் அடியார்கள் பொங்கிப்படைப்பதனூடாக ஏதிலிகளாக இருக்கும் மக்களின் பசிப்பிணி போக்ககூடியதாக இருக்கின்றது. யாழ்ப்பாண சமூக அமைப்பில் வீடுகள் கட்டுவதற்கும் மதில்கள் கட்டுவதற்கும் தான் பிரதேச சபையிலோ வீதி அதிகாரசபையிலோ அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆனால் ஆலயங்களுக்கு விதிவிலக்கு உண்டு போலும். இந்த வீதி ஒன்றும் பஸ் ஓடுகின்ற வீதி இல்லையே. மற்றது, அதை தான் இறைவன் பாத்துக்கொள்ளுவானே. மக்கள் தமது வாழ்வாதாரத்தை தாமே பார்த்துக்கொள்ளுவார்கள். மேலும் பல ஆலயங்களின் திருப்பணிகள் ஆரம்பிக்க இருக்கின்றன என்ற நற்செய்தியையும் வழங்கி விடைபெறுகின்றேன்

  • நறுக்கு!..:

    கோபுரத்தில் கண்ணப்ப நாயனார் சிலைகளை வைத்தால்,5 m தூரங்களில் வசிக்கும் ஏழைக்குடிசைமக்கள் தினமும் சமைக்கும் உணவைப் படைத்து விட்டு உண்பார்கள்.
    “கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம் “ஆனால்
    “குடி இல்லா ஊர்களில் பல கோயில்கள் உருவாக்குவோம்”

    • நலன்விரும்பி:

      நீர் எப்படி நறுக்கினாலும் நீட்டினாலும் ஊரில் நீரும் சரி நானும் சரி ஒன்றும் செய்ய முடியாது. அவர்களுக்கு எது தேவையோ அதை அவர்கள் தேடுவார்கள். பெற்றுக் கொள்ளுவார்கள். அப்படி தேடிப் கிடைத்தவர்களில் ஒருவர்தான் நீரும்.. நானும். ஊரில் உள்ளவர்களை மாற்ற இயலாது. வாழ்வின் இடை நடுவில் வெள்ளைக்காரன் தேசத்திற்கு வந்து விட்டு வேணும் எண்டால் வெளியில் நின்று கொண்டு வெட்டி நியாயம் பேசலாம்.

  • நலன்விரும்பி:

    உங்கள் கேள்வி எனக்கு விளங்குகிறது. ஆனால் எனக்கு பதில் ஆங்கிலத்தில் சொல்லத்தெரியாது. உங்களுக்கு தமிழ் விளங்கும் என்று நினைக்கிறேன். குறிப்பாக இடுமன் கோவில் நிர்வாகம் மற்ற ஊர் கோவில் நிர்வாகங்கள் போல் பொது வேலையில் ஈடுபடுதில்லை என்று கூறுகிறீர்கள் என்று நினைக்கிறேன். ஊம் இல்லைத்தான். ஆனால் அப்படி அவர்களுக்கு வசதி இல்லை என்று அவர்கள் சொல்ல கேட்டு இருக்கிறேன். அப்ப கோபுரம் எப்படி என்று கேட்கிறீர்கள். அது எனக்கு தெரிந்தவரை ஒரு முருகன் அடியவரின் நேர்த்திகடனாம்.அதை அவர் முடிக்க மற்றவர்களிடமும் நிர்வாகம் மூலமாக உதவி கேட்கின்றார். இதில் இந்த செய்தியை வாசிப்பவர் முடிவெடுக்க வேண்டியது ஒன்றே ஒன்றுதான் இதில் எனது பங்களிப்பு இருக்க வேண்டுமா வேண்டாமா. மேலும் இந்த ஆலய நிர்வாக பொருளாளாரும் உம்மைப் போல் ஒரு பொது நல சேவையில் ஈடுபாடு உடையவர்தான். அந்த ஆர்வத்தை அவர் எமது ஊர் பொது நல சேவையில் ஈடுபடும் மறுமலர்ச்சி மன்றம் ஊடாக செய்கின்றார். அதற்கு எங்கள் ஊரைப் பொறுத்த வரை அதுதான் சரியான களம். அனாவசியமாக இரண்டையும் இணைத்து பார்க்க வேண்டாம். முடிவு நீரும் குளம்பி மற்றவரையும் குளப்புவதாகத்தான் முடியும். இதைவிட கோவில் தேவையா தேவையில்லையா…கோவில் இடம் சிறியது என்று வாதம் எல்லாம் உண்மையில் எமது ஊர் கிராம சபை முடிவு எடுக்க வேண்டிய விடயம்.

    அவர்களின் அனுமதி பெற்றுதான் இந்த கட்டிடம் எல்லாம் கட்டபடுவதாக எனக்கு பதில் கிடைத்தது. மேலும் கோபுரம் கட்ட கொடுக்கும் காசை அந்த அடியவர் பத்து அனாதைகளுக்கு தானமாக கொடுத்து இருந்தால் உம்மை விட நான் மிகவும் சந்தோசப்பட்டிருப்பேன். ஆனால் எமது ஊரில் இருக்கும் சமூக நல தொண்டர்கள் எனக் கூறுக் கொள்பவர்கள் இப்படியான பணக்காரர்களுக்கு தகவல் வழங்குவதில் எதோ தவறு விட்டு இருக்கின்றார்கள் என்று மட்டும் தெரிகின்றது. மேலும் என்னைப் பொறுத்தவரையில் தனியார் கோவில் களுக்கு செல்லும் நேர்த்திக் கடன் எங்கு செல்கின்றது என்று யாரும் கேள்வி கேட்க முடியாது. இந்த பொதுக் கோவில் களில் கேள்வியாவது கேட்கலாம். அந்த ஒரு சிறிய நல்ல பக்கம் ஒன்று இருக்கின்றது. அவ்வளவுதான்.

  • poolathavan panndatheruppu:

    கடும்பு அவர்களே ஆலயம் பொது என்றால் என்ன என உங்கள் ஆங்கில வாத்தியாரிடம் கேளுங்கோ ஏன் என்றால் கடும்பு அவர்களே உடும்பு பிடி பிடியாமல் சிந்தியங்கோ.முருகன் ஆலயம்,சாந்தையில் பிள்ளையார் இவை இரண்டும் பொதுவான ஆலயம் மீதி எஞ்சியவை உங்கடை பாசையில் தொழிற்ச்சாலையங்கோ. பொதுவான ஆலயத்துக்கும் தனிப்பட்டவர் ஆலயத்துக்கும் வித்தியாசம் தெரியாவிட்டால் ஒரு நாலு பத்து மக்களிடம் விசாரியுங்கோ கடும்பு அவர்களே. பொல்லாதவன் பண்டத்தரிப்பு

  • Kadamban:

    Yes. I know about common temple. There are main purpuse public wellfare.but your temples are no intrest that. only congret is your interst.Please are you know public welware.

  • T.BALA. pannipulam:

    ஆலயம் என்பதற்க்கு அப்பால்.இதன் கட்டமைப்பும் அதன் நேர்மையுமே இங்கு முன் நிற்க்கின்றது.அதாவது மக்களுக்கும் கடவுளுக்கும் ஆன இடைவெளி குறைவே.நிர்வாகத்துக்கும் மக்களுக்கும் இடையே இடைவெளியே கிடையாது. எனவே நம்பிக்கையும் நாணயமும் முருகன் ஆலய நிர்வாகத்திடம் இருப்பதால் எவ்வளவு கொடுத்தாலும் அதன் வரவும் செலவும் நன்றியும் முருகனின் அருளும் கிடைக்கும்.ஆலயம் சில சமூக சம்மந்த நற்காரியங்களில் முனைப்பு எடுக்கவேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள். நன்றி பணிப்புலம் த.பாலகுமார் டென்மார்க்

    • kadamban:

      Is that sure? please dont speak randomly.are you a meditator?

      • நலன்விரும்பி:

        கடம்பன். அவர்களே…பதிவு செய்யப்பட்ட பொதுக் கோவில் என்றால் என்னவென்று தெரியுமா…

  • oorvilampi:

    எங்கே இன்னும் இடுமன் கோவிலைப்பற்றி ஒரு விளம்பரத்தையும் காணவில்லை என்று எல்லோ நினைத்தன் ?

  • V.Nagendram:

    அன்பான எம்மக்களே!

    ஆலயத்துக்காக மக்கள் இல்லை! மக்களுக்காகவே ஆலயம். எனவே எங்கள் ஆலயத்தை வளம்படுத்துவது நம்கடமை நான் பெரிது நீ பெரிது என்றில்லாமல் நாம் பெரிது எம் ஊர் பெரிது என ஒன்றிணைந்து இந்த அரிய பெரிய ஆன்மீக முயற்சியில் ஈடுபடுவோம். வெளிநாடுகளில் வாழும் முருக பக்த்தர்களே! உங்கள் குடும்பம் நலமுடன் எல்லா செளபாக்கியங்களும் பெற்று வாழ உங்கள் வசதிக்கேற்ப வாரி வழங்குங்கள். முருகன் அருள் என்றும் உங்கள் வீட்டில் நிறைந்து நிற்கும் என்பதை நம்புங்கள். எனவே பணம் சேர்க்க வரும் தொண்டர்கள் உற்களுக்கு பிடித்தவரா? இல்லையா? என பேதம்பார்க்காதீர்கள். ஆலய நிர்வாகம் சார்பாக அவர்கள் இங்கு செய்யும் சேவையை கொச்சைப்படுத்தாதீர்கள்.உங்கள் பணம் உரிய இடம் சென்று ஊரின் நடுவே கோபுரமாக நிமிரும் என நம்புங்கள்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்




 

பிறந்தநாள் வாழ்த்து