உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

அனைத்து மக்களின் சம்மதத்துடன் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு, அதனூடாக நிரந்தர சமாதானம் ஏற்படுத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷப் நேற்று (வியாழக்கிழமை) எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். குறித்த சந்திப்பின்போதே எதிர்க்கட்சி தலைவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறித்த சந்திப்பின்போது, அனைத்து மக்களின் சம்மதத்துடன் ஒரு அரசியல் சாசனம் உருவாக்கப்பட வேண்டும் என தாம் கோரியதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டார்.

அத்துடன், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், காணிப் பிரச்சினைகள், அரசியல் கைதிகளின் பிரச்சினை, காணாமல் போனோர் பிரச்சினை, மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு போன்ற பல விடயங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து