உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

காணாமல் போனோரின் உறவினர்களுக்கு பதில் வழங்குவதற்கான முக்கியமான அடியை இலங்கை எடுத்து வைத்திருப்பதாக, கனடாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் ஷெல்லி வைட்டிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.

காணாமற் போனோர் அலுவலக்தை உருவாக்குவதற்கான சட்டமூலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (வியாழக்கிழமை) கையெழுத்திட்டார். இது தொடர்பில் சர்வதேச இராஜதந்திரிகள் பலரும் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்ற நிலையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இதனூடாக நீண்ட காலமாக தங்களது உறவினர்களுக்கு என்னானது என்ற பதிலுக்காக காத்திருக்கும் மக்களுக்கு, தீர்க்கமான பதிலை வழங்க கூடியதாக இருக்கும் என்று நம்புவதாக, அமெரிக்காவின் தூதுவர் அத்துல் கெசாப் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட காணாமற் போனோர் அலுவலக்தை உருவாக்குவதற்கான சட்டமூலத்தில் ஜனாதிபதி கையெழுத்திட்டுள்ள நிலையில், குறித்த அலுவலகத்துக்கான அதிகாரிகளை நியமிக்கும் பணிகள் அடுத்தக்கட்டமாக முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து