உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

வடக்கில் பெண்களுக்கெதிரான வன்முறைகளைக் கட்டுப்படுத்த வடமாகாணத்தைச் சேர்ந்த இளம் பெண்கள் பொலிஸ் சேவையில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று வடக்கு மாகாண மகளிர் விவகார புனர்வாழ்வு மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

சாவகச்சேரியில் இன்று இடம்பெற்ற துணியிலான பைகளைப் துணியிலான பைகளைத் தயாரிப்பதற்கான அறிமுக விழா விழாவில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.முன்னைய காலங்களில் பொலிஸ் திணைக்களத்தில் பல்வேறு பணிகளில் பெண்கள் பணியாற்றியுள்ளனர்.

பொலிஸ் திணைக்களத்தில் பெண் அலுவலர்களுக்கு தனித்துவமான கௌரவம் வழங்கப்படுகிறது. அலுவலகங்களில் கடமையாற்றுவது போல் பொலிஸ் திணைக்களத்திலும் பகல் நேரக் கடமைகள் பெண் அலுவலர்களுக்கு வழங்கப்படுகின்றன. க.பொ.த.உயர்தரம் படித்தவர்களுக்கு உதவி ஆய்வாளர் பதவிகள் வழங்கப்படுகின்றன.

அரச பணியை விரும்புபவர்கள் பொலிஸ் திணைக்களத்தையும் அரச திணைக்களமாகக் கருதி சேவையாற்ற வேண்டும்.வன்முறைகளால் பாதிக்கப்படும் பெண்கள் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று முறைப்பாடு கொடுக்கும் போது அங்கு கடமையாற்றும் ஆண் பொலிஸ் அலுவலர்களிடம் முழுமையான விடயங்களைச் சொல்லாமல் விடுகிறார்கள்.

இது தொடர்பான வழக்கு நீதிமன்றுக்கு வரும் வேளைகளில் முறைப்பாட்டுக்கும் பாதிக்கப்பட்ட பெண் அளிக்கும் சாட்சியத்துக்கும் பெரிதும் முரண்பாடுகள் காணப்படுவதைக் காணமுடிகிறது.இந்த நிலை மாற வேண்டுமாயின் வட மாகாணத்தைச் சேர்ந்த இளம் பெண்கள் பொலிஸ் சேவையில் இணையவேண்டும்.

இவர்களது கடமைக் காலத்தில் வடமாகாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களிலே கடமையாற்றவும் முடியும். வடமாகாணத்துக்கென ஒரு பொலிஸ் திணைக்களம் உருவாக்கப்பட்டால் நிச்சயம் அங்கு கடமையாற்றுபவர்கள் தமிழ் தெரிந்த பொலிஸாராக இருக்க வேண்டுமென்பது எமது ஆசை. பொலிஸ் சேவையில் தமிழ் மொழியிலான 500 பெண் பொலிஸ் அலுவலர்கள் தேவையென அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இளம் பெண்கள் பொலிஸ் சேவையில் இணைய முன்வர வேண்டும். – என்றார்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து