உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

பாவம் செய்த மக்கள்
——————————–
ஒரு ஊரில் ஒரு குளம் .அந்த ஊருக்கு அது ஒரு முக்கியமான குளம் .அவ் ஊரிலுள்ள அனைவரும் அக் குளத்து நீரையே விரும்பிக் குடிப்பர் .மிகப் பழமையான குளம் என்பதால் அவ் ஊர் மக்கள் அனைவரும் அக்குளமே தமது வாழ்க்கைக்கு காரணமெனப் பெருமையுடன் கூறி வருகின்றனர் .இக்குளம் காலத்துக்கு காலம் அதை பயன்படுத்துவோரால் செப்பனிடப்பட்டு வந்தது .ஆரம்பத்தில் மிகச் சிறுகுளமாக இருந்து பின் வளர்ச்ச்சி அடைந்து இப்போ அவ் ஊரில் ஒரு பெரிய குளமாக அவ்வூரில் காணப் படுகிறது .அவ்வூரில் வேறு பல சிறிய குளங்கள் இருந்த போதும் மக்கள் இக் குளத்திலேயே அதிகம் நாட்டம் கொண்டு வருவது அந்தக் குளத்தின் தனிச் சிறப்பே .
அக்குளத்தில் ஆடிப்பூர நட்ஷத்திரத்தின் முந்திய பதினைந்து நாட்கள் விசேட நீர் ஊற்றுக்கள் காணப் படுவது அக்குளத்தின் விசேட சிறப்பாகும் .இக்காலங்களில் அவ்வூரிலிருந்து பிற இடங்களில் ,வெளிநாடுகளில் சென்று வாழ்வோர் கூட அங்கு வந்து அந்த நீரைப் பருகத் தவறுவதில்லை .அக்குளத்துடன் சம்மந்தமான நான்கு பிரிவுகள் உண்டு .குளம் ,குளத்துநீர் ,அதை பயன்படுத்தும் மக்கள் ,குளத்துக்கு உரிமை கோரும் ஒரு பிரிவினர் .

இப்போது அந்தக் குளம் பாரிய புனரமைப்புச் செய்ய வேண்டிய நிலையில் மோசமாகப் பாதிக்கப் பட்டுள்ளது .இதை பயன்படுத்துவோர் அதைச் செய்ய முயலுகையில் அக்குளத்துக்கு உரிமை கோருவோர் அதைத் தாமே செய்ய வேண்டு மெனவும் அப்பணத்தைத் தம்மிடமே தரவேண்டுமெனவும் அடம் பிடிக்கின்றனர் .இதனால் இக் குளம்புனரமைப்பு தடை பட்டு வருகிறது .இவ் வருடம் இக் குளம் புனரமைப்புச் செய்யாது போனால் இக்குள நீர் சக்தி இழந்து உவர்த் தன்மையாகி மக்களுக்குப் பிரயோசனமற்ற தாகும் ஆபத்து உண்டு .இதனால் அநேகர் இக் குளத்து நீரை விரும்பிப் பருக முடியாதும் விருப்பமில்லாதும் காணப் படுகின்றனர் .இங்கு யாரை யார் கோபிப்பது?.குளத்துடனோ குளத்து நீருடனோ மக்களுக்கு கோபமில்லை .குளத்துக்கு உரிமை கோருபவர்கள் மீதே மக்கள் கோபிக்கின்றனர் .அவர்களுடன் கோபித்துக் கொண்டு குளத்து நீரைக் குடிக்காது விடடால் தங்களுக்கு விமோசனம் இல்லை என்ற நம்பிக்கையில் மக்கள் திண்டாடுகின்றனர் .பாவம் மக்கள் ,இந்த மக்களுக்கு எம்மால் என்ன செய்ய முடியும் ?ஒரு காலம் குளம் பொங்கி எழுந்தே இந்தப் பிரச்சனைமு டிவுக்கு வரும் .இதுகங்காதே வியின் பிரச்சனை அல்லவா ?

One Response to “”

 • ranji:

  இது குளமல்ல குலத்தின் பொக்கிஷம்!
  வரட்சி வாட்டும் வடக்கினிலே
  வரட்சி காணாது தன் மக்களுக்கு
  வரமெனும் நீர் தரும் அற்புதக் கலசம் !
  முன்னோர் நமக்களித்த பொக்கிஷமிதனை
  அழிந்திட விடுவோமா? இல்லை
  அகிலம் போற்றும் அற்புத கலசமாய்
  ஆக்கிடுவோமா அக்குளத்து நீர்
  அருந்தும் அன்பு மக்காள்!
  வடக்கெல்லாம் அடைமழை
  ஏனில்லை இன்னும் மழை
  எமதூரினிலே என்று
  எண்ணி பாருங்கள்!

  ஆடி மாதம் அம்பாளின் மாதம்
  அம்மாத பிறப்பன்று ஏன்?
  வீழ்ந்தா எங்கள் தாய் ?
  எம்குளத்துக்கு ஏன் இந்த நிலை ?
  எண்ணிப்பார்ப்போர் எவருமில்லை
  எடுத்து சொல்வோரை
  ஏளனம் செய்திட பலருண்டு !
  ஏன் மிரட்டவும் குளத்து நீர்
  குடித்திடும் குருமாரும் வந்திடுவர்!
  என்றுதான் அழகுறும் எங்கள் குளம் ?
  எப்போது காண்போம் கும்பாபிஷேகம்?

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து