உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

இன்றுகாலை 9 மணியளவில் பொ.த உயர்தர பரீட்சைக்குத் தோற்றிய இளைஞரொருவர் வவுனியா கூமாங்குளத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,வவுனியா கூமாங்குளத்தில் வசித்துவரும் 20 வயதுடைய பாஸ்கரன் விதூசன் என்ற இளைஞனே கடந்த ஆண்டு விஞ்ஞான பிரிவில் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றியிருந்தார்.

எனினும் பெறுபேறு போதாத நிலையில் இந்த ஆண்டும் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய நிலையில் வீட்டில் இருந்துள்ளார்.
இன்று காலை தாயார் கடைக்குச் சென்று வீடு திரும்பிய போது வீட்டின் அறையினுள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் காணப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் அடிக்கடி கல்வி தொடர்பாக கதைப்பதாகவும் இந்தமுறை எவ்வாறு பெறுபேறு வருகின்றதோ என பெற்றோரிடம் கவலையுணர்வுடன் தெரிவிப்பதாகவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
தற்போது சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து