உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

கிளிநொச்சி நேற்று (17) பிற்பகல் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த நால்வா் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.கிளிநொச்சி பரந்தன் பகுதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றின் பின்பகுதியில் உள்ள நான்காம் வாய்க்கால் வீதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த விடுதியில் இரு இளைஞர்கள் மது அருந்திக் கொண்டிருந்த போது அவா்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் அது இரு குழுக்களுக்கிடையேயான மோதலாக மாறி வாள்வெட்டில் முடிந்துள்ளது. இதன்போது படுகாயமடைந்த நால்வரும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அவசர சிசிசை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அதில் ஒருவா் நோயாளர் விடுதிக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் ஏனைய மூவரும் அவசர சிகிசை பிரிவில் சிகிசைப் பெற்று வருகின்றனா். இவா்களுக்கும் ஆபதான நிலையில் இல்லை எனவும் வைத்தியசாலையினா் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலீஸ் நிலைய குற்றத்தடுப்பு பதில் பொறுப்பதிகாரியும், சிறுகுற்றப் பிரிவு பொறுப்பதிகாரியுமான உப பாிசோதகர் சுமனசிறி தலைமையிலான குழுவினா் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனா். இந்த விசாரணையின் போது சந்தேக நபர்கள் நால்வாின் பெயர்கள் பெற்ப்பட்டுள்ளன.இருந்த போதும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து