உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை பராமரிப்பதற்கான தீர்மானம் இன்று நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் மாவட்ட செயலகத்தில் இணைத்தலைவர்களான சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் மாவை சேனாதிராஜா தலைமையில் இன்று நடைபெற்றுள்ளது.

இதன்போது, யாழ். மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் உள்ள காணிகளை தாவரவியல் பூங்காவாக பராமரிப்பதற்கான பிரேரணையை நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் முன்மொழிந்தார்.

இதனைத் தொடர்ந்தே, இராணுவம் உள்ள காணிகளை தற்போது பொறுப்பேற்க முடியாது. இராணுவம் வெளியேறிய பின்னரே அதைப் பற்றி முடிவு எடுக்க முடியும்.

எனினும், ஏனைய துயிலும் இல்ல காணிகளின் உரிமையாளர்கள் அடையாளம் காணப்பட்டு, காணிகள் பிரதேச சபைகளிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் பராமரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Leave a Reply

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து