உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

மேற்ப்படி முன்பள்ளி இடமாற்றம் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவிற்கமைய கனடாவில் திரு.கணபதிப்பிள்ளை. கனகரத்தினம் அவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் கழகப் பொருளாளர் திரு சி.நடேசன் அவர்கள் பணிப்புலம் வாசிகசாலைத் தலைவர் திரு.ஈ.காந்தனுடன் தொடர்புகொண்டு விளக்கியிருந்தார். இந்நகர்வு தொடர்பாக தனக்கு ஆட்சேபனை எதுவும் இல்லை என்று கூறியமைக்கமைய செயலாளர் திரு.க.விமலன் அம்பாள் ஆலையத்தின் நிர்வாகிகளுடன் தொடர்பு கொண்டு இம் முன்பள்ளியை அன்றாட செயற்பாட்டை நிர்வகிக்கும் பொறுப்பை ஆலையக் குருக்களும் வாசிகசாலையின் முன்னாள் தலைவருமான திரு. பே.இன்பராசாக் குருக்களிடமும் தற்போதைய தலைவர் திரு ஈ.காந்தனிடமும் கையளிக்கும் வகையில் இணக்கம் காணப்பட்டது. இவ் இணக்கம் தொடர்பாக பண்கலை பண்பாட்டுக்கழகத்தின் சார்பில் செயலாளர் திரு.க.விமலனால் வாசிகசாலைத் தலைருடன் தொடர்பு ஏற்ப்படுத்தப்பட்டது அக் கலந்துரையாடலின்படி முன்பள்ளி நகர்வு தொடர்பாகவும் இணைந்து இயங்குவதிலும் பிரச்சனைகள் எதுவும் இருக்காது எனவும் எனினும் தமது முடிவை வாசிகசாலை நிர்வாகிகளுடன் கலந்தாலோசிப்பதாகவும் கூறியிருந்தார். 5 வருடங்களுக்கு முன்னர் செய்யப்பட்ட தளபாடங்கள் அனைத்தும் வாசிகசாலை மேல்மாடியில் தற்போதும் இருப்தனால் அவற்றைப் பயன்படுத்துவது நன்று எனவும் கூறியிருந்தார்.

வாசிகசாலை நிர்வாகிகளின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி பாலர் பாடசாலையானது அம்பாள் ஆலைய அன்னதான மடத்திற்கு மாற்றம் பெறுவது நிராகரிக்கப்பட்டுள்ளது என்ற செய்தி அறிந்தபின்னர், ப.க.ப.கழகச் செயலாளர் வாசிகசாலைத் தலைவருடன் தொடர்பு கொண்டு அதனை உறுதிப்படுத்தியுள்ளார் என்பதை அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

இம் முன்பள்ளியின் இடமாற்றம் தொடர்பாக ஏற்ப்பட்ட தடங்கல்களுக்கு எமது மனவருத்தங்களைச் சம்பந்தப்பட் அனைத்துத் தரப்பினரிடமும் `பண்கலை பண்பாட்டுக்கழகம் தெரிவித்துக்கொள்கின்றது இது சம்பந்தமாக எமது கழகம் எதுவித நிதிசேகரிப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடமாட்டாது என்பதையும் கனடா பண்கலை பண்பாட்டுக்கழகம் தெளிவுபடுத்த விரும்புகின்றது.

தலைவர்,செயலாளர், பொருளாளர்.
பண்கலை பண்பாட்டுக் கழகம்-கனடா
March 1st 2011.

24 Responses to “பணிப்புலம் வாசிகசாலை முன்பள்ளி இடமாற்றம் தொடர்பான பண்கலை பண்பாட்டுக்கழக அறிவித்தல்.”

 • T.BALA. pannipulam:

  சிவானந்தம் திருப்பியும் உங்களை கேட்ப்பது வாசிகசாலை கட்டிடம் திருத்த திரு அழ.சந்திரகாசன் அண்ணரது ஆலோசனையுடன் செயற்த்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதால்.இதற்க்கு எவ்வளவு பணம் தேவையோ அந்தப்பணம் இலங்கையில் வைப்பில் இடப்பட்டு அதன் பின் வங்கியே தன் உறுதியை கட்டிடம் கட்டுபவருக்கு அளித்து வாசிகசாலை நிர்வாகம்,கட்டிடக்கலைஞ்ஞர்,வங்கி,மூன்று பகுதியும் கையொப்பம் இடப்பட்டு அதன் பின் தான் வேலைகள் ஆரம்பிக்கமுடியும்.இதை பல தடவை விளக்கப்பட்டுள்ளது உங்கள் ஆதங்கம் ஒட்டு மொத்தமாய் விளங்கினாலும் எனது அறிவு எந்தளவோ அந்த அளவுக்குள் தான் என் செயற்ப்பாடு இருக்கும்.உங்களிடம் ஊர் நோக்கிய ஆர்வம் மேல் நோக்கியும், அரவணைப்பதில் தேர்ச்சியுள்ளவர், அனுபவசாலி,சட்டத்தில்வல்லமை கூடியவர்,கடவுளுக்கும் உங்களுக்காமான உறவிலும் நெருக்கம் இருப்பதால் வாசிகசாலை திருத்தவேலைக்காக வெளிநாட்டில் இருந்து உங்கள் தலைமையில் நாங்கள் பணியாற்றவிரும்புகிறோம்.ஆகவே நான் இதில் இருந்து ஒதுங்கி நீங்கள் முன் வரலாமே? பணிப்புலம் த.பாலகுமார் டென்மார்க்

 • வாசகன்:

  அன்பான எமது ஊர்மக்களுக்கு எம் ஊர் மக்களின் முன்னேற்றம் வேண்டி ஊர்கூடி தேர் இழுக்கப்போறீர்களா? அல்லது தனிப்பட்டவர் தேர் இழுக்க நீங்கள் வெறும் பார்வையாளராக மட்டும் இருக்கப்போறீர்களா? ஊர்கூடித்தேர் இழுத்தால் ஊருக்கும் பெருமை உனக்கும் பெருமை . தனிப்பட்ட ஆட்கள் தேர் இழுத்தால் ஊருக்கும் இழுக்கு உனக்கும் இழுக்கு. ஊர் இரண்டுபட்டு இருக்கிறதாக உலகெல்லாம் தெரியும் எனவே ஊர்கூடி தேரிழுக்கும் முயர்ச்சியை தொடரவும்.சிந்தித்து செயல் ஆற்றவும்.

 • Selvarajah K.:

  அம்பாள் துணை,
  எல்லோருக்கும் முதற்கண் வணக்கங்கள் உரித்தாகட்டும்.
  தயவு செய்து பொதுவான முன்னெடுப்புக்களில் இறங்குபவர்கள், தனிப்பட்ட நபர்கைளயோ அல்லது ஒரு சங்கத்தையோ, தாக்கியோ அவமதித்தோ எழுதுவது நாகரிகம் அற்ற செயல் என்பதை என்னப்போல் அதிகம் படிக்காதவர்களும் என்னை விட அதிகம் படித்தவர்களும் உணர்ந்து எழுத வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து.
  நண்பர் விசு.க.விமலனிடம் ஒரு கேளவி. வெளிநாட்டில் இருப்பவர்களா ஊரில் போய் இதைஎல்லாம் செய்யமுடியும்?
  நன்றியுடன் இராசன்.

 • T.BALA. pannipulam:

  நண்பா நான் இலங்கையில் பிறந்தவன் அங்கு தான் எனது உரிமைகள் உண்டு.நான் எந்த நாட்டின் குடிமகன் என விளக்கம் தேவையற்றதே.இருந்தாலும் கடவுளை நம்பும் நீங்கள் அம்மாள் அளித்துவிடுவா என்றால் அம்பாள் என்ன தீவிரவாதியா? அப்படி அளித்தல் மட்டுமே செய்யும் கடவுள் தான் பணிப்புலம் அம்பாள் என்றால் ஏன் அதற்க்கு பயப்பிடவேண்டும்.ஐரோப்பாவில் தான் 90% என எழுதப்பட்டது முதல் இதில் வரும் கட்டுரைகள் ஆழமாய் படிக்கவும்.விசு.விமலன் அவர்கள் நான் எப்பவும் மறைத்து எழுதுபவன் அல்ல ஏன் என்றால் வெளிப்படை என்பது என் உறுதி.கங்கா அன்று தெரிவுசெய்யும்போதே நான் அவரிடம் கூறிய விடயம் ப.ப.கழகம் இதில் தலையீடு தவிர்க்கவேண்டும் என்பதே என் கருத்து ஏதோ துர்அதிஷ்டம் கங்கா தலைவர் ஆனது.சனசமூகநிலையம் புனர் நிர்மானம் செய்ய ஏன் தடைகள்.தடைகள் வரும் பாதைகள் அறியப்பட்டுள்ளதால் தான் கனடா நிதி சேகரிப்புபற்றி மாற்று நடவடிக்கை எடுக்கலாமா என பழையநிர்வாகிகள் அனைவரும் முடிவு செய்து அறிவிக்கப்படும்.யாரும் யாரையும் வற்ப்புறுத்தவில்லை.மன்றம் அன்று கூடியதில் எனக்கு சற்று மனஸ்தாபம் இருந்தது ஆனாலும் அவர்கள் கனடாவின் நாடித்துடிப்பை சரியாக அளவிட்டே தங்கள் ஒன்றுகூடல் கூடினார்கள் என்பது விளங்கியுள்ளது. பணிப்புலம் த.பாலகுமார் டென்மார்க்

  • Sivanantham.S:

   அன்பு நண்பன் பாலகுமரே!
   நான் இங்கு அம்பாள் அழித்துவிடுவா என்று கூறவில்லை. அம்பாளின் அருட் சக்தியைத்தான் குறைத்து மதிப்பிட வேண்டாம் என்றும் ,தங்கள் செயற்பாடுகளே தங்களுக்கு ஆபத்துக்களை விளைவிக்கலாம் எனவும் கூறினேன். மேலும் அம்பாள் சனசமூக நிலையத் தலைவர் தனது அறிக்கையில் தற்போது சனசமூக நிலையம் சுதந்திரமாகச் செயர்ப்படுவதாகவும், தாங்களும் ஐரோப்பிய நாடுகளில் தொண்ணூறு வீதமான நிதிச் சேகரிப்பு முடிவடைந்து விட்டதாகவும் கூறுகிறீர்கள். ஐரோப்பாவிலே சுமார் பத்து நாடுகளில் எமது ஊர் மக்கள் வாழ்கின்றார்கள். எனவே தங்கள் கைகளில் சுமார் பத்து இலட்சம் ரூபாய் வரையாவது சேர்ந்திருக்கும் என் எண்ணுகிறேன். தற்போதைய நவீன வசதிகளின்படி சுமார் ஒரு மணி நேரத்தில் இலங்கைக்கு பணத்தை அனுப்பி விடலாம். எனவே இடிந்து வீழ்ந்துவிடும் நிலையில் இருக்கும் வாசிகசாலைக் கட்டிடத்தின் இடிபாடுகளை சீரமைப்பு செய்யும் பணிகளை உடனடியாக ஆரம்பிப்பதில் ஏன் தாமதம்?

   எதற்காக செய்பவர்களையும் செய்யவிடாது, முயற்சி எடுப்பவர்களையும் வீணான விமர்சனங்கள் மூலம் தடுத்துக்கொண்டு, ஊரில் வாழ்கின்ற மக்கள் மத்தியில் வீணான பகைமைகளையும் வளர்த்து புலம் பெயர் மக்களின் மனங்களையும் வேதனைக்குள்ளாக்கி, அவர்தம் பங்களிப்புக்களையும் சீர் குலைக்கிறீர்கள். தயவு செய்து இனியாவது தங்கள் பயனற்ற செயர்ப்பாடுகளைக் கைவிட்டு எல்லா மக்களுடனும் சேர்ந்து ஊர் மக்கள் நலன்காக்கும் நன்முயர்ச்சிகளை மேற்கொள்ளுங்கள்.

   அன்பான அரவணைப்பு, பணிவான பேச்சு, பண்பான உறவு , தூய்மையான நட்பு, இதய சுத்தியான இறைபக்தி முதலியவையே எமது ஊர் மக்கள் ஒற்றுமைக்கும், அபிவிருத்திக்கும் நல்வழி சமைக்கும்
   நல் மருந்துகளாகும். சிந்தித்து செயற்படுங்கள் சிறப்புக்கள் பல மலரும்.

   நன்றி!

 • அழ பகீரதன்:

  எழுதக்கூடாது என நினைத்துவிட்டும் எழுதுகின்றேன். முன்பள்ளியை மன்றத்தில் இணைத்து நடாத்தும் முயற்சியில் எனக்கு பொதுப்படவோ தனிப்படவோ எந்த நலன்களும் இல்லை. அதற்கு முன்பள்ளி ஆசிரியர் விரும்பவில்லை என்பதால் அந்த நோக்கத்தை நான் கைவிட்டுவிட்டேன்.இதில் எனக்கு எந்த வித மனவருத்தமுமில்லை. இதில் அவ்வப்போது எழுதுவது சமூக நோக்கில‍ல்ல. சமூகம் பற்றிய வெறும் கவலையால் மட்டுமே.ஒரு சிறு ஆறுதலுக்குத்தான்.சாந்தை வடக்கில் அரச அரச சாரா நிறுவனங்களின் உதவியோடு அந்த ஊரிலும் முன்பள்ளி நடாத்துகின்றார்கள். நான் நேற்றைய தினம் வங்கியில் கடமையாற்றும் கள உத்தியோக பெண்மணி ஒருவரை பாண்ட வெட்டை (காட்டுப்புலம் அருகில்) அழைத்து சென்றேன்.அங்குள்ள கடற்தொழில் செய்யும் சிலருக்கு சிறு கடன்வழங்குவதற்க்காக. அங்கும் முன்பள்ளி இருக்கின்றது தான். அவ்வாறு தான் எமது ஊரிலும் இரு முன்பள்ளிகள் இயங்குகின்றன. அதில் மனநிறைவு இருக்கின்றது. ஆனால் நான் எனது மகனை அவரது கல்வி முன்னேற்றம் எதிர்காலம் கருதி சங்கானையிலிருக்கும் butterfly international school இ்ல் அழைத்துச்செல்கின்றேன். அது எனது பிள்ளைகளின் விருப்பம். ஆனால் நான் சென்ற வருடம் முழுநிறைவான முன்பள்ளியை நடாத்தவேண்டும் என்று முயன்றேன். யாரும் எனது முயற்சிக்கு ஆதரவு தரவில்லை. மன்ற நிலப்பரப்பில் செய்யமுயன்றதற்கு எனக்கு அது வசதியாக இருந்தமையால்தான். மன்றம் எனக்கு ஒரு சுமையாக இருந்தாலும் அதில் எனக்கு மனநிறைவு இருக்கின்றது. ஆரம்ப பிரிவு மாணவர்களுக்காக ஒரு ஆசிரியையை ஒழுங்கு படுத்தி ஆங்கிலம் கற்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளேன். இன்னும் சில முயற்சிகளை மன்ற உறுப்பினர்களுடன் ஒன்றிணைந்து செய்துகொண்டிருக்கின்றேன். அதற்கு மன்ற மூத்த உறுப்பினர்கள் உலகெங்கிலும் இருந்து உதவுவார்கள் என்ற பூரணமான நம்பிக்கை எனக்கு உண்டு.

 • T.BALA. pannipulam:

  கங்காவின் ஆர்வம் புரிகின்றது ஆனால் எனது கேள்வி திட்டத்தை தீட்டியவர் இதை மறுக்கமுடியாது.அப்படி மறுப்பவர் திட்டம் தீட்டுவதை தவிர்க்கவேண்டும்.வெளிநாட்டில் இருப்பவரும் குடும்பஸ்தர் தான்,நாங்களும் வேலைக்குத்தான் போகின்றோம்.ஏதோ இவர்கள் தான் சமூகத்தொண்டர்கள் மற்றவர்கள் தொண்டே செய்வதில்லை என்றமாதிரி விசு.விமலனின் கருத்து.முன் பள்ளியில் அக்கறை கொள்ளும் பண்கலைக்கூடம் அறிக்கைவிட்டவர்கள் ஏன் பகி என்னகூறினார் என்பதை விளக்கம் தராமல் மறைக்கவேண்டிய காரணம்.ஆலயமே ஏன் தாங்களே முன்பள்ளி நடாத்தமுடியாது.எனி மேல்காலங்களில் திட்டத்தைமட்டுமே தீட்டி விட்டு ஒதுங்குபவர்களை எதற்க்காகவும் இவர்கள் போடும் திட்டங்களை கணக்கிலே எடுத்தால் எங்களையும் முட்டாளகளாக்கிவிடுவார்கள்.ஆகவே உங்கள் நேரங்கள் பொன்னானது வீணாக தனிய திட்டம் மட்டும் தீட்டி மற்றவர் திட்டங்களுக்கு எப்படி தடுக்கலாம் என்பதே நோக்கமுடையவர்கள். பணிப்புலம் த.பாலா

 • Sivanantham.S:

  திரு.கங்கா அவர்கள் கூறுவது போல் தனிநபர்கள் வாதப் பிரதி வாதங்களைக் கைவிட்டு, பழைய பகைமைகளை எல்லாம் மறந்து எல்லோரும் ஓன்று சேர்ந்து ஒற்றுமையாக இந்த விடயத்தில் செயற்படுவதே சாலச் சிறந்ததாகும். திரு. பாலகுமார் தொண்ணூறு வீதமான நிதி சேகரிப்பு நிறைவாகி விட்டதாகக் கூறுகிறார் அப்போது ஏன் இதுவரை சன சமூக நிலைய கட்டிடத் திருத்த
  வேலைகள் ஆரம்பிக்கப் படவில்லை? முன்பள்ளியும் வேறிடத்தில் நடை பெற்றுக்கொண்டிருக்கும் போது, தொண்ணூறு வீதமான நிதியும் கைக்கு வந்து விட்ட நிலையில் ஆரம்பக் கட்டிடத் திருத்த வேலைகளை ஆரம்பிப்பதில் சிரமம் என்ன இருக்கிறது? திருத்த வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டால் இதுவரை தமது பங்களிப்பை வழங்காத மக்களும் யார் சொல்லையும் செவிமடுக்காது தங்களுடைய பங்களிப்பை வழங்குவார்கள். அப்போது திருத்த வேலைகளைப் பூரணப்படுத்துவதில் எவ்வித சிரமமும் இருக்காது.
  திரு. பாலகுமார் எழுதும் எழுத்துகள் பழைய பகைமைகளைத் தொடர்ந்து வளர்த்து, மக்களின் முயற்சிகளை மூழ்கடிக்கும் முயற்சியாகவே அமைகின்றன. எனவே பாலகுமார் தனது அதிகாரத் தன்மையான செயற்பாடுகளைக் கைவிட்டு அனைத்து மக்களுடனும், அவர்தம் கருத்துகளையும் உள்வாங்கிச் சிந்தித்து செயற்படுவதே சாலச் சிறந்ததாகும். தனி நபர் பயமுறுத்தல்கள் என்றைக்கும், எங்கும் பயன் கொடுத்ததாகச் சரித்திரமேயில்லை.

  நன்றி!

 • நான் பண்கலை பண்பாட்டுக்கழகத் தலைவனாக இதை எழுதவில்லை.எமது ஊரின் முன்னேற்றத்தில் ஒரு அக்கறையுள்ள ஒரு உங்கள் நண்பனாகத்தான் இதை எழுதுகின்றேன்.
  பண்கலை பண்பாட்டுக்கழகத்தால் ஆரம்பிக்கப்பட்ட முன்பள்ளி திட்டமானது தற்போது காற்றுப்போன பேரூந்து நின்றபாணியிலே அப்படியே நிற்கின்றது.ஒவ்வொருவரும் ஒருவர் மேல் ஒருவர் அதன்பழியைப் போட்டு தப்பித்துள்ளார்கள்.எம்மூர் அனைவரும் ஒன்றை சிந்திக்க வேண்டும் எதற்காக கழகம் இத்திட்டத்தை கொண்டுவந்தது என்று.ஊரில் தற்போதைய சூழலில் எது கட்டாயத்தேவையோ அதைத்தான் நாங்கள் முதன்மைப்படுத்தி இந்த முன்பள்ளித் திட்டத்தை கொண்டுவந்தோம்.அத்தோடு எமது சனசமூக நிலைய திருத்த வேலைகளுக்கு திரு பாலகுமார் அண்ணன் செயல்பட்டார் எல்லோரும் அறிந்ததே.ஆனால் முன்பள்ளித்திட்டத்தை கொண்டுநடாத்துவதற்கு ஒருவரும் முன்வரவில்லை.நாங்கள் காந்தனையும் பகி அவர்களையும் தான் கேட்டுக் கொண்டு இருக்கின்றோம்.இவர்கள் முன்வரவில்லையென்று கூறிவிட்டார்கள்.இவர்கள் முன்வரவில்லையென்றால் ஏன் மற்றவர்கள் முன்வருவதற்கு தயக்கம் காட்டுகிறார்கள்.ஊரில் எவ்வளவோ இளைஞர்கள் குடும்பஷ்தர் இருக்கின்றார்கள் இவர்களில் யாராவது ஒருவர் முன்வந்தால் இதை நாங்கள் இலகுவாகச் செயல்படுத்தமுடியும்.எல்லோரும் சற்று சிந்தியுங்கள் எங்கள் உறவுகளின் பிள்ளைகள்தான் அங்கே படிக்கச் செல்கிறார்கள் அந்த இடிந்த நிலையில் இருக்கும் அந்தத்தூண் எப்பவும் சரியலாம் .அப்படி ஏதாவது விபரீதம் நடைபெறுவதற்கு முதல் இதை நிறுத்தியாகவேண்டும்.
  வெளிநாட்டில் இருக்கும் எத்தனையோ உறவுகளின் அண்ணன்,அக்கா அத்தான் தம்பியென்று பலர் ஊரில் வாழ்கின்றார்கள்.அவர்கள் இதை வாசிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்காது நீங்கள் தான் இவ்விடயத்தை அவர்களுக்கு சொல்லி இவ் முன்பள்ளி விடயத்தை நடாத்துவதற்கு முன்வருமாறு கேட்கவேண்டும்.யாராவது முன்வரும் பட்சத்தில் இதற்கான் சகல உதவிகளையும் கழகத்தோழர்கள் முன் நின்று வழிநடாத்துவார்கள்.
  தயவு செய்து யாராவது இருந்தால் இவ்இணையங்கள் ஊடாகத்தெரிவிக்கலாம்.எமதுஊர் சிறக்கவேண்டும் என்றால் நாம் ஒற்றுமாயாக இருக்கவேண்டும்.நாம் ஒற்றுமையாக இருந்தால் எதையும் எழிதில் அடைந்துவிடலாம்.இதை எல்லோரும் மனதில் கொண்டு செயல்படுவோமாக.
  பொறுமையுடன் இதை வாசித்த உங்களுக்கு எமது நன்றிகள்.அன்புடன் கெங்கா கனடா.

 • Selvarajah K.:

  அம்பாள் துணை,
  எல்லோருக்கும் முதற்கண் வணக்கங்கள் உரித்தாகட்டும்.
  அழ.பகியும்,நடுக்குறிச்சியானும் என்ன கனடாவில் உதவியாளர்களை வைத்திருக்கின்றனரா? தங்கள்சார்பாகக் குரல்கொடுப்பதற்கு.அவர்கள் முன்வந்து செய்தாலும் நண்பர் விசு.க.விமலன் போன்றோர் விடமாட்டினம் போல இருக்கிறது.
  இதுவே எமது ஒற்றுமை.
  இதுவே எங்கள் ஊரின் முன்னேற்றத்தின இரகசியம்.
  நன்றியுடன் பணிப்புலத்து இராசன்

  • விசு.க.விமலன்.:

   இதை நான் கூறவில்லை அழ.பகீரதனே பல முறை விளங்கப்படுத்தியுள்ளார். வாசிகசாலை நிர்வாகத்தினருக்கு என்ன நடந்த்து? புனர் நிர்மாண வேலைகளைக் கையாழ்வதை அவர்கள் விரும்பவில்லையா?

   நண்பர் பாலகுமாரின் கருத்துக்கள் பிளாக்மெயில் பண்ணுவதுபோலத் தோன்றுகின்றதே? ஏன்?

   நீங்கள் தொடங்கியமுயற்ச்சியை ஏன் அடுத்தவர்களிடம் கைமாற்றுவதற்கு எத்தனிக்கின்றீர்கள் என்பதே எனது கேள்வி.

   கனடாவில் ப.க.ப.கழகத்தினூடாக பணம்சேர்ப்பதை சென்ற வருடத்திலிருந்தே பாலா அவர்கள் விரும்பவில்லை என்பது இவ் இணையத்தை வாசிப்பவர்கள் அனைவருக்கும் புரியும். அதனால்த்தான் தனிப்பட்டவர்களின் பெயர்கள் பல முறை இங்கு முன்மொளியப்பட்டிருந்த்து.
   என்ன காரணம்?

 • T.BALA. pannipulam:

  நாங்கள் வாசிகசாலை விடயத்துக்கு என தெரிவு செய்யப்பட்டவர்கள் அதை முன்னெடுப்பது நடக்கும்போதே.ஆர்வலர் என்ற போர்வையில் முன்னுக்கு பின் முரணான கருத்துக்கள் எழுதுபவரகள் யார் என்பதை சகல மக்களுக்கும் தெரியம்.ஆனால் ஒரு சிலரின் கருத்தை இணையம் ஒன்றாக வெளியிடுமானால் சிலரது முகத்திரைகள் கிளிக்கப்படும்.வாசிகசாலை சம்மந்தமாக ஐரோப்பாநாடுகளில் 90% நிதி சேகரிப்பு முற்றாகி கொண்டு வருகின்றது.கனடாவில் தான் பல குளப்பங்கள் இதில் க.ப.ப.கழகம் மூலம் சேகரிப்பது சாத்தியக்கூறு இல்லை என நான் ஏற்க்கனவே கங்காதரனுக்கு கூறினேன்.எது என்னவானாலும் எங்கள் முயற்ச்சி யாராவது ஒருவர் கனடா சென்றுதான் நிதி திரட்டவேண்டும் என்றால் நாம் அதற்க்கும் தயாரே.குளப்பங்கள் குளப்புவோருக்கு நன்றாக புரியும் எந்த ஒரு காலத்திலும் வாசிகசாலை ஆலயத்தினர் ஆழ நினைத்தால் அதற்க்கான சட்டத்தை நாடவும் நான் தயாராகவே உள்ளேன்.இதற்க்கான ஆதாரங்கள் வெகு விரைவில் மக்கள்பார்வைக்கு நோட்டீஸ அடித்து வெளியிடப்படும்.ஊரில் நாமே சமூகவாதிகள் மற்றவன் துரோகி என விமர்சனம் செய்பவரில் இந்த கதாபாத்திரங்கள் எவர் எவருக்கு என முகத்திரைகள் கிளிக்கப்படும். பணிப்புலம் த.பாலா

 • விசு.க.விமலன்.:

  பணிப்புலம் வாசிகசாலைப் புனர் நிர்மாணம் தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் நீண்டுகொண்டே இருக்கின்றதே தவிர எந்தவிதமான செயற்ப்பாடுகளும் தொடங்கியதாகத் தெரியவில்லை. அழ.பகீதரனும், நடுக்குறிச்சியானும் ஊரில் உள்ள உண்மை நிலைமைகளை அவ்வப்போது அங்குள்ள யதார்த்த நிலைமைகளைப் புரிந்து கருத்துக்ளை எழுதுகின்றார்களே தவிர தாங்கள் பொறுப்பெடுத்துச் செய்கின்றோம் என எங்கும் குறிப்பிட்டுக் கூறவில்லை. அவர்களுக்கு தத்தமது அன்றாட உத்தியொகப் பொறுப்புக்களுடன் அவரவரின் குடும்பக் கடைமைகளையும் தாங்கி நிற்கின்றனர். இடைப்பட்ட நேரங்களில் தம்மால் இயன்ற சமூகசேவைகளையம் நிறைவேற்றிக்கொண்டே இருக்கின்றார்கள்.
  குறிப்பாக அழ.பகி அவர்களின் இப்பேர்ப்பட்ட நல்ல நடவடிக்கைகளைப் பொறுக்காதவர்கள் சிலர் ஒருசில வருடங்களுக்கு முன்னர் அவரை பொது இடத்தில் வைத்து பலவந்தமாகத் தாக்கியுள்ளனர் என்பது இங்கு பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

  இங்கு சிலர் மீண்டும் மீண்டும் அவரை பொறுப்பாளி ஆக்குவதற்கு முயல்து நன்றாக விளங்குகின்றது.. அழ.பகி அவர்கள் தனது நிலைமையை மிகத் மிகத் தெளிவாகப் பலமுறை விளக்கியுள்ளார். ஆரம்ப்ப் பள்ளி மன்றத்துடன் இணைப்பதில் பல நன்மைகள் நடக்க வாய்ப்பிருக்கின்றது என்ற தனது அபிப்பிரயத்தை வெளியிட்டிருந்தாரே தவிர அம்பாள் ஆலைய அன்னதான மடத்தில் நடாத்துவது பற்றிய கருத்துக்கள் ஏனையவர்களினாலேயே கொண்டுவரப்பட்டது. அவரைப் பொறுத்தவரை மறுமலர்ச்சி மன்ற வேலைகளே அளவுக்கதிகமான சுமை. வாசகசாலை வேலைகளை வாசிகசாலை நிர்வாகத்துடன் மட்டுப்படுத்துதே நன்று. இதைப் புரிந்துகொடு அடுத்தவரிடம் உங்கள் சுமைகளை ஏற்றுவதை நிறுத்திவிட்டு நீங்கள் உங்களால் ஆனவற்றை நிறைவேற்ற முயற்ச்சி செய்யுங்கள்.

 • Selvarajah K.:

  அம்பாள் துணை,
  எல்லோருக்கும் முதற்கண் வணக்கங்கள் உரித்தாகட்டும்.
  க.ப.க.ப களகத்தின் அறிக்கையைப் பார்த்து மனவேதனை அடைந்தவர்களில் நானும் ஒருவன்.
  நண்பர்களே; நாங்கள் எமது வாசிகசாலையைத்தான் முதலில் திருத்தவேண்டும். திருத்தத்தவறும் பட்சத்தில் சிலவருடங்களில் வாசிகசாலை காணாமல்ப் போய்விடும் அபாயம் இருக்கிறது. இதனை நிழற்டங்கள் மூலம் கணக்கூடியதாக உள்ளது. எனவே முதலில் வாசிகசாலையைத் திருத்துவதற்குத் தேவையான முயற்சிகளைச் செய்வோம்.( க.ப.க.ப.களகம் இந்தநிதியும் சேகரிக்காமல் ஒதுங்குகிறதா?)
  வாசிகசாலை நிரவாகம் மேற்கொள்ளுகின்ற நடவடிக்கைகளுக்கு அந்த நிர்வாகமே பொறுப்பேற்க்க வேண்டும். விபரீதங்கள் ஏற்படும் பட்ச்சத்தில் அவர்களே முளுப்பொறுப்பேற்று விடைகூறவேண்டும்
  இது இவ்வாறிருக்க, முன்பள்ளி விடயத்தில் நிர்வாகத்தில் இல்லாத ஒருவர் (நிரவாகத்தினரின் விருப்பமில்லாமல் )வலுக்கட்டாயமாத் திணிக்கப்படுமிடத்து அவர்களால் ஆசிரயருக்கோ,சிறவர்களுக்கோ ஏற்படும் அசௌகரிங்களுக்கு யார் பொறுப்பு?(கோயிலுக்குள்ளேயே குளப்படி செய்த சிறுவர்களை ஓடஓட விரட்டியதை என் கண்ணூடே கண்டேன்.) இவர்கள் குழந்தைளின் குறும்புத்தனத்தை எவ்வாறு சகித்துக் கொள்வார்கள்? 1981 இல் கோயில் பூட்டிக்கிடந்த வேளையில் வீதியில் கைப்பந்த விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் விளையாடிய (பந்து பட்டு) பந்தினால் கோயில் ஓடுகளை உடைகிறார்கள் எனப் பந்து விளையாடிய விளையாடாத சிறுவர்களை சிறைக்கு அனுப்பியவர்களாயிற்றே;(ஓடு உடைந்தாலும் புதுஓடு போட அந்தச்சிறுவர்களின் பெற்றோரின் பணந்தானே)
  இதபோல மு.ப.குழந்தைகள் மடத்தின் சுவரில் கீறலாம்.அல்லது ஏதாவது குளப்படி பண்ணினால் பொறுப்பார்களா?
  அதனால்த்தான் கூறுகிறேன் மு.பள்ளிக்க்கு தலைவர் செயலாளர் தவிர வேறுயாரும் தொடர்பு படக்கூடாது.இது அனுபவம்.
  நிர்வாகத்தினால் ஒருவரை ஏற்பாடு செய்து பராமரிக்க விடுவது நிர்வாகத்தின் முடிவே.அதுகூட நிர்வாகம் முடிவு எடுக்க வேண்டுமே தவிர வேறுயாரும் கட்டாயப் படுத்தக் கூடாது.( வாசிகசாலைக்கு நிர்வாகத்துக்கு எஜமானர்கள் தேவையில்லை. ஆலோசகர்களே தேவை.யாராக இருந்தாலம்)
  ஐயா நடுக்குறிச்சயான் அவர்களே;
  நீங்கள் கூறுவதுபோல் மறைந்து இயங்கும் நிர்வாகத்தை ஊர்ப்பெரியவர்களாகிய நீங்கள் ஏன் வெளிச்சத்துக்குக் கொண்டு வரவில? முடியாத? முயறசிக்கவில்லையா?ஏன்?
  மரியாதைக்குரிய குருக்கள்மாருடன் சேர்ந்து முன்பள்ளி நடாத்த முடியுமானால் நீங்களும் நண்பன் பகியும் மற்றும் படித்தவர்களும் பெரியோர்களும் சேர்ந்து ஊர்கூடி மடம் முன்பள்ளி வா. நிர்வாகம் மதிப்பிற்குரிய குருக்கள்மார் எல்லோரும் சேர்ந்து ஒரு தீர்க்கமான முடிவை எட்டலாமே? வெகு விரைவாக இதில் தலையிட்டுத் தீர்க்கமானதும் உறுதியானுமான முடிவைப் பெற்றுத் தருவீர்கள் என நம்புகின்றோம்.பாடசாலைகளுக்கு வேலி முக்கியம்.வேலி இல்லாவிட்டால் பிற உயிரினங்களின் தொல்லைகள் இருக்காதா? முட்கம்பிக்குள் இருக்கும் அனுபவத்தை இப்ப இருந்தே கற்கட்டுமே.
  நண்பன் பகியின் நோக்கம் மு.பள்ளியை ம.மன்றத்திற்கு நகர்த்துதிலும்.கோபுரம் கட்டுபவர்களை வசைபாடுவதிமே போகிறது. வாசிகசாலையின் பளையதலைவராகவோ,மு.ப.மாணவரின் தந்தையாகவோ எதுவுமே செய்யவில்லை. எதிர்ப்பு அறிக்கைமட்டும் இணையத்தில் வந்த வண்ணம் உள்ளது. பகி உமது நம்பிக்கைக்கும் மேன்மைக்கும் உரிய குருக்கள்மாருடனும் பெரியவர்களுடனும் நடுக்குறிசியானுடனும் வாசிகசாலை நிர்வாகத்துடனும் பேசி ஒரு தீர்க்கமான முடிவை எட்ட வேண்டும எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொளகின்றேன்
  இதில் எழுதப்பட்ட விடயங்கள் யாரையும் புண்படத்தவோ அவமதிக்கவோ எழுதவில்லை. ஆதாரத்துக்காக மட்டுமே;
  யாரையாவது புண்படுத்தியிருந்தால் தயவுசெய்து மன்னிக்கவும்.
  முனபள்ளி விடயத்தில் ஒற்றுமையாக நல்லதீர்க்கமானமுடிவை எடுக்க்கும்படி மத்தாழமையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

 • Sivanantham.S:

  திரு. பாலகுமார் அவர்களே!
  அம்பாளின் அருள் சக்தியின் மகிமையைக் குறைத்து மதிப்பிடாதீர்கள். தங்களுடைய பயமுறுத்தல்கள் எதுவும் அம்பாளின் பிள்ளைகளான பனிப்புலத்து மக்களை எதுவும் செய்துவிடாது. இத்தகைய பயமுறுத்தல்கள் தங்களுக்கே ஆபத்தாக முடியும். ஏற்கனவே சனசமுக நிலையத் தலைவரின் அறிக்கைக்கு தாங்கள் வழங்கிய கருத்து பற்றி நான் கேட்டதற்கு இதுவரை தாங்களோ அல்லது நிர்வாகமோ பதில் தரவில்லை. தற்போது கனடா ப.க.ப.கழகத்தினரின் கருத்தையே திசை திருப்பியது மட்டுமன்றி, பொதுச்சொத்துக்களை திருப்பிப்பெற நடவடிக்கை எடுக்கப்போவதாக பயமுறுத்தல் விட்டிருக்கிறீர்களே. டென்மார்க் பிரசையான தங்களுக்கு இலங்கையிலுள்ள, பனிப்புலம் என்னும் கிராமத்திலுள்ள மக்களின் அசையாச் சொத்துக்கள் பற்றி பேசுவதற்கோ அல்லது நடவடிக்கை எடுப்பதற்கோ இலங்கை சட்டவியல் கோவையின் குடியுரிமைச்சட்டம், தேசவழமைச் சட்டம் ,சொத்துரிமைச் சட்டம் ஆகியவற்றின் எந்தெந்தப் பிரிவுகளின்கீழ் உரிமை இருக்கிறது என்பதை மக்களுக்கு தெளிவு படுத்தமுடியுமா?
  நன்றி!

 • T.BALA. pannipulam:

  முன்பள்ளிக்கு யாரும் இடைஞ்ஞல் தரவில்லை.ஆலயத்தினர் மடத்தை தருவது பெரும்தன்மை என்று கூறுவது ஏதோ அவர்கள் தமது சொத்தை தரவில்லை.இது புலம் பெயர் மக்களின் உழைப்பால் உருவானது என்பதை மறந்துவிட்டீர்களா.நடுக்குறிச்சியான் கருத்து வாசித்தால் இவர்கள் சமூகசிந்தனையாளர்களாய் புலம் பெயர் நாடுகளுக்கு தங்களை தாங்களே அறிமுகம் செய்யமுனைகிறார்கள்.ஏன் அழ.பகி அவர்களால் எடுத்தமுயற்ச்சி அவரே முன் நிண்டு செய்யமுடியவில்லை.நடுக்குறிச்சியான் தான் முன் நின்று நடத்தலாமே இவைகளை விட்டு மற்றவனை மாட்டுவதில் பல திறமைமிக்கவர் பலர் இருக்கும்போது எந்த ஒரு முயற்ச்சியிலும் யாராலும் ஒரு அடியும் நகர்த்தமுடியாது ஆகவே பணிப்புலத்தில் களைகள் பல முளைவிடுவது அந்த நிலமே பாள்படும் அறிகுறியாகும்.ஆகவே பணிப்புலம் பொதுச்சொத்துக்கள் பொதுவாக்கவேண்டிய அவசியம் புலப்படுவதால் அதற்க்கான நடவடிக்கையே அடுத்தநகர்வாகும்.அதன் பின்னர் எதையும் செய்யலாம். பணிப்புலம் த.பாலகுமார்

 • அழ பகீரதன்:

  தம்பி நிசாந்தன் நான் முன்பள்ளி நடாத்துவதில்லை. எனது கட்டுப்பாட்டில் அம்பாள் சனசமூக நிலையமும் இல்லை. நான் இதில் எனது கருத்துக்களை கூறுவது எனக்கு பாழடைந்த மண்டபத்தில் முன்பள்ளி நடத்துவது பற்றிய வெறுப்பில் தான். நான் முன்பு தற்செயலாக இந்த சனசமூக நிலையத்திற்கு தலைவராக வந்தேன். முன்பள்ளி எங்கு நடத்தவேண்டும் என்பது அம்பாள் சனசமூக நிலைய தலைவரும் ஆசிரியையும் பெற்றோரும் தான் நாங்கள் வெறும் பார்வையாளர்கள் மட்டும் தான். பிரச்சனை என்னவென்றால் நிர்வாகிகள் இந்த கருத்துக்களையே பார்ப்பதில்லை போல் தோன்றுகின்றது. பார்த்தால் அவர்கள் எங்களுடன் கதைத்திருப்பார்கள். அல்லது ஒரு பொதுக்கூட்டம் ஒன்றைநடாத்தினால் ஆர்வமுள்ளவர்கள் பங்கேற்பார்கள். ஆனால் எல்லோருக்கும் பாழடைந்த மண்டபத்திலேயே நடத்துவது விருப்பம் என்றால் நாங்கள் ஒன்றும் செய்யமுடியாது. பெற்றோரும் இதை பார்ப்பதில்லை என்று தான் கருதவேண்டியிருக்கின்றது. நான் சொன்னது இருமுன்பள்ளிகளும் ஒரே இடத்தில் மன்ற வளவில் நடாத்தலாம் என்றுதான். அதற்கு முன்பள்ளி ஆசிரியை விரும்பவில்லை. இதற்கும் முன்பள்ளி ஆசிரியை விரும்பவில்லை, நான் மறுமலர்ச்சி மன்ற முன்பள்ளியை எவ்வாறு நிர்வகிப்பது பற்றியும் அதில் எவ்வாறு பிள்ளைகளுக்கு படிப்பிக்கலாம் என்பது பற்றியும் அதற்கு தான் நான் பொறுப்பாளியே ஒழிய இதற்கு அல்ல. காந்தன் சொல்வதுபோல் தற்போது முன்பள்ளி சிறப்பாக இயங்கினால் எனக்கு அது பிரச்சனை இல்லை.மன்ற செயற்திட்டங்களுக்கு பொதுமக்கள் ஆதரவு இருப்பது போல் இதற்கு இருப்பதாக தெரியவில்லை. வருகின்ற காசை ஏன் விடுவான் என்று வாசிகசாலை கட்டுவதில் எல்லாரும் முனைப்புக்காட்டுவார்கள். இப்ப ஆரோ ஒரு தனவந்தர் காசுகொடுக்குறார் விடக்கூடாது என்று அந்த காசை வேண்டி கோபுரம் கட்டிப்போட்டு இப்ப விடப்படாது முடிக்கவேணும் எண்டு காசு சேர்க்கின்றார்களே அப்படித்தான் காசு கொடுக்கதயாராக ஆக்கள் இருந்தால் வாங்க இருப்பார்கள். அந்தளவும் தான். ஆரும் சமூக அக்கறை உடையவர்களாக இருக்கமாட்டார்கள். அப்படி எதிர்பார்ப்பதும் பிழையானது தான். அவரவர் தன் தன் பிள்ளையளின் நலன் பற்றி சிந்தித்தாலே போதுமானது. இப்பிடி எழுதிப்போட்டு உங்களிட்ட வேண்டிக்கட்ட தேவையில்லை.

 • nisanthan canada:

  ஒட்டு மொத்தமாக ஒரு விடயம் வெளியாகிறது. பாலா அண்ணரின் முயற்ச்சிக்கு ஆலயம் தான் தடை என நினைத்திருந்தால் தப்பானகணக்கு பாலா அண்ணா.இப்ப தான் தெரியுது தடைகள் களைகள் முளைப்பு போல் முளைவிடுகிறது. ஏன் பகி அண்ணை உங்களுக்கு நியாயமோ பிரச்சனையை கிண்டிவிட்டுப்போட்டு ஏன் ஒதுங்கின்னீங்கள். இன்பராசா உத்தம்புரிசர், ஆண்மீகவாதி, இப்படி அப்படி புகழ்மாலை சூடும் நீங்கள் ஏற்க்கனவே அவருடன் செயற்ப்பட்ட நீங்கள் ஒரு பணிப்புலத்தின் அறிவாளி என்கிறார்கள் ஏன் நீங்களே தொடங்க அல்லது ஆரம்பித்த பிரச்சனைக்கு நீங்களே முடிவு எடுப்பதல்லோ நியாயம் பிறகு ஏன் மற்றவர்களை குற்றம் சுமத்தி ஒதுங்கிறியள்.ராசா அண்ணர் ஏற்க்கனவே பல விடயம் விபரமாக எழுதினவர். நிஷந்தன் கனடா

 • அழ பகீரதன்:

  இன்பராசகுருக்கள் படித்தவர் பண்பானவர் நல்ல எண்ணம் படைத்தவர் இதயம் சுத்தமானவர் ஆன்மீக கல்வியை குருகுல கல்வியை தென்னிந்தியா வரை சென்று பெற்றவர். அவரது முன்வரவை முயற்சியை நிர்வாகத்தினர் ஏற்றுக்கொள்ளவேண்டும். இளங்கண்ண்ன் சொல்வது உண்மையாக இருந்தால் ஐரோப்பிய நாடொன்றில் இருந்து வரும் அழுத்தங்களுக்கு அடிபணிபவர் தான் நிலையத்தலைவர் என்றால் அத்தகைய தலைமையை பனிப்புலத்தில் உள்ள மக்களும் இளைஞர்களும் நிராகரித்திடலாம். நடுக்குறிச்சியானின் கருத்துக்களை பார்க்கும்போது இங்கு நிர்வாகம் பெரிய அளவில் இல்லைப்போல் தோன்றுகின்றது. என்னவோ தந்தை செல்வா சொன்னதுபோல இந்த அம்மாள் ஆச்சிதான் சனத்தை காப்பாத்தவேணும்,நான் தலைவராக இருந்தபோது இன்பராசகுருக்கள் உபதலைவராகவும் காந்தன் பொருளாளராகவும் இருந்தார்கள், இன்பராசகுருக்கள் தலைவராக இருந்த போது காந்தன் செயலாளராக இருந்ததாக அல்லது பொருளாளராக இருந்ததாக எனக்கு ஞாபகம். எல்லாம் ஒண்டுக்குள்ள ஒண்டுதான்.ஏனிந்த பிரிவினை.

 • T.BALA. pannipulam:

  முன்பள்ளி விவகாரம் எழுப்பியவர் திரு.அழ.பகி அவர்களே.பண்கலபண்பாட்டு கழகம் தங்கள் முடிவை பகியுடன் தான் கதைத்து பகியும்,பகியுடன் இயங்குவதாய் வாக்களித்த ஆசிரியர்கள், ஆர்வலர்கள் போன்றோரிடம் எமது சங்கம் ஆலயத்தின் அன்னதானமடம் தருவதாயும் அவர்களே மலசலகூடம்,தண்ணீர் வசதியும் செய்வதாயும் கூறினார்கள் எனவே இன்பராசாவுடன் இணைந்து நடத்தும்படி பணித்திருக்கவேண்டும்.ஆனால்இந்த முன் பள்ளிபற்றி எதுவும் அலட்டிக்கொள்ளாதா தலைவர் ஈ.காந்தன் அவர்களுக்கு தொலைபேசி மூலம் பண்கலைக்கூட பொருளாளர்,செயலாளர் இப்படி மடத்தில் முன்பள்ளி நடத்தவும் நீங்களும் இன்பராசாவும் என்று கேட்டதற்க்கு அவர் நிர்வாகமுடிவு என கூறினார்.ஆனால் அவர் நிர்வாகமுடிவை எனக்கு தொடர்புகொண்டு தன் நிலைப்பாட்டை வெளிப்படுத்திவிட்டார்.இதனை ஏற்று அறிக்கையும் விட்டாயிற்று.எனது பணிப்பின் பேரிலே அவர் இப்படிக்கூறினார் என்பது தப்பானகற்பனைகள்.எனக்கு இன்றும் ஒரு விடயம் புரியாதபுதிர் என்னவென்றால் அன்றை சரித்திரப்படங்களில் எப்படியும் ஒரு நாரதர் பாத்திரமே அந்தப்படத்தில் பல குளப்பங்களை கொண்டுவந்து குளப்புவார்.அதே போல் முன்பள்ளி பிரச்சனை அவசரம் கட்டாயம் என பல சவடால்கள் விளக்கங்கள் மூலம் பெரிதுபடித்திய அவருக்கே பண்கலைக்கூடமோ அல்லது ஆர்வலர்கள் அழுத்தம்கொடுத்திருக்கவேண்டும்.ஏன் அதைச்செய்யாமல் தன் வேலை உண்டு என இருந்த ஒருவரை வலிய இழுத்து விமர்சனம் செய்யவேண்டிய அவசியம் என்ன.பகி அவர்கள் என்ன இதற்க்கான எந்த பதிலும் இல்லாமல் இருப்பது எப்படி என்றால் திட்டம்மட்டும் தான் போடுவோம் அதை செயல்வடிவம் பெறும்போது காணாமலே போய்விட்டால் இந்தப் பழிகளை யாராவது தலையில் அரைக்கவேண்டியதா. பணிப்புலம் த.பாலகுமார் டென்மார்க்

 • ஊரவன் ஒருவன்.:

  opic: தொடங்கிய இடத்திலேயே கொண்டுவந்து விடப்பட்டுள்ள முன்பள்ளிப் பிரச்சினையுமReply to Topic
  Displaying all 2 posts.

  இற்றைக்கு ஒரு வருடத்துக்கு முன் எடுத்துக்காட்டப்பட்ட பிரச்சினைதான். அம்பாள் முன்பள்ளி ஒரு அபாயகரமான கட்டடத்தில் இயங்குகின்றது என்பது. அது தொடர்பாக மிக நீண்ட விவாதம் அண்மை நாள் வரை இடம்பெற்றுக்கொண்டு வந்தது. ஆனால், இப்போது சிலர் இணைந்து அதைத் தொடங்கிய புள்ளிக்கே நகர்த்திக்கொண்டுவந்து விட்டுள்ளனர். எனவே, இது வரை இப்பிரச்சினை தொடர்பாகக் கலந்துரையாடியோர் அனைவரும் ஏமாளிகளாக்கப்பட்டு, சில கோமாளிகளின் எண்ணம் நிறைவேற்றப்படுகின்றது.

  இது பிரச்சினையுடன் தொடர்புபட்டவர்கள், அதன் தீர்வு பற்றிச் சிந்திக்கவேண்டும் என்ற உண்மையைத் தெளிவுபடுத்துவதுடன், பாதிக்கப்படுபவர்கள் சிந்தித்துச் செயற்படாதவரை அதற்கான சரியான தீர்வைப் பெறமுடியாது என்பதையும் வெளிப்படுத்துகின்றது. ஆனால் ஐந்து வயதுக்கு உட்பட்ட அந்தப் பாலகர்கள் அதுபற்றி எப்படி யோசிப்பார்கள்? சில்லாலை, சங்கானை நேசரிகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்த்து நன்றாகப் படிப்பிக்கத் தெரியாத பெற்றோரால் எவ்வாறு இவ்வளவு தூரம் சிந்திக்கமுடியும்?

  எனவே, உ***** என்ற எமது பண்டைய தொழிலை எமது சந்ததி தொடரவும், ஊரின் எதிர்காலம் புடைவைக் கடைகளின் வாசல்களில் வெய்யில் குடிக்கவும் எம்மால் இயன்றதைச் செய்வேம்.

  வானுயர எழுக இடும்மன் கோயில் கோபுரம்! விண்ணைத் தொடுக அம்மன்கோவில் சித்திரத் தேர்! ஓங்குக இறைபணி, வீங்குக வயிறுகள்!
  on Sunday · Report

 • நடுக்குறிச்சியான்:

  பணிப்புலம் அம்பாள் முன்பள்ளி சம்பந்தமாக பண் கலை பண்பாட்டு கழகம் எடுத்த முயற்சி வரவேற்கத்தக்கது. முன்பள்ளிக்கு நிதி சேகரிப்பிலிருந்து நீங்கள் விலகிக்கொள்வது வருந்தத்தக்கது. கல்வியே கருந்தனமென்பது வித்துவான் மு விருத்தாசலத்தின் மகுட வாக்கியமாகும். இதை நினைவில் நிறுத்துவோம். பணிப்புலம் அம்பாள் முன்பள்ளியை அம்பாள் ஆலய அன்னதான மடத்தில் நடாத்துவதற்கு பண்கலை பண்பாட்டு கழகம் எடுத்த முயற்சியை தற்போதைய வெளிப்படையாக இயங்காத பணிப்புலம் அம்பாள் சனசமூக நிலைய நிர்வாகத்தினர் எதிர்ப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. முன்பள்ளியானது மாடியில் நடாத்தகூடாது என்பது வலிகாம‍ம் பிரதேச சபையின் முன்பள்ளி இணைப்பாளரின் வேண்டுகோள். எனவே எமது முன்பள்ளியானது அன்னதான மடத்தில் நடாத்த கிடைத்த அனுமதி மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். இதற்கு இன்பராச குருக்களின் பங்களிப்பு முக்கியமானது. எந்த ஒரு முன்பள்ளியும் நாம் அறிந்தவரையில் யாழ் மாவட்டத்தில் மேல்மாடியில் நடப்பதில்லை. காரணம் மேல்மாடி பாதுகாப்பற்றது. பிள்ளைகள் முன்பள்ளி முற்றத்தில் ஓடிவிளையாடவேண்டும். அத்துடன் வேப்பமரத்துக்கு கீழ் சிறுவர் பூங்கா அமைக்கப்படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பாகும். பணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையத்தின் தற்போதைய வெளிப்படையற்ற நிர்வாகம் இன்பராசகுருக்களை எதிர்ப்பதா உமது நோக்கம்? இன்பராசக்குருக்களுடன் கதைத்து பல பயன்களை நாங்கள் பெறலாம். காரணம் இவர் பொதுமக்களால் தெரிவு செய்யப்பட்டு பலவருடங்கள் அம்பாள் சனசமூக நிலைய தலைமை பதவியை ஏற்று நடாத்தியவர். இவரது காலத்தில் இல்ல விளையாட்டுப்போட்டி சிறப்பாக நடைபெற்றது. தற்போதைய நிர்வாகத்தின் நோக்கம் முன்பள்ளியை மறுமலர்ச்சி மன்றத்துடன் இணைப்பதா அல்லது தற்போது முன்பள்ளி நடக்கும் முட்கம்பி அடைத்த இடிஞ்ச தண்ணீர் வசதியற்ற இரவல் வீட்டுக்குள் தொடர்ந்து நடாத்த திட்டமா. இந்த நேரத்தில் வெளிப்படையற்ற நிர்வாகம் எமது பணிப்புலம் அம்பாள் சனசமூக நிலைய மூத்த உறுப்பினர் சிவானந்தம் அண்ணரின் கருத்தை ஏற்றுக்கொள்வது சிறப்பானதும் பெறுமதியானதும் ஆகும்.
  ப‍னிப்புலத்திலிருந்து நடுக்குறிச்சியான்

 • இளங்கண்ணன்:

  பனிப்புலம் அம்பாள் சனசமுக நிலைய முன்பள்ளியை நடத்தும் இடம் பற்றி பண் கலை பண்பாட்டுக்
  கழகம் பல சிரமங்களின் மத்தியிலும் பெரும் முயற்ச்சி செய்து ஆலய நிர்வாகத்துடன் கதைத்து முன்பள்ளியை
  ஆலய அன்னதான மடத்தில் நடத்த அனுமதி பெற்றிருந்தது அனைவரும் அறிந்ததே இவ்வரிய வாய்பை நாம் ஏன்
  ஏற்க்கமறுக்கிறோம் என்பதுதான் எனக்கு ஒன்றும் புரியவில்லை ஆலயத்தினர் ஏதாவது நிபந்தனை விதித்தார்களா
  இல்லையே மாறாக மாணவர்களின் வசதி கருதி மலசல கூடம் தண்ணீர் வசதி முதலியன செய்துதானே தருகிறார்கள்
  இதை நாம் ஏன் ஏற்க்க மறுக்கவேனும் பாடசாலையை வழிநடத்த சனசமூக நிலைய முன்னாள் இன்னாள் தலைவர்களை
  தீர்மானித்தது தப்பா அதில் என்ன தப்பிருக்கிறது அவர்களைக் கேக்காமல் தீர்மானித்தது என்றால் அதில் உண்மை இல்லை
  அவர்களோடு கதைத்து சம்மதமும் பெறப்பட்டது ஆனால் பின்னர் ஐரோப்பிய நாடு ஒன்றில் இருந்து போன தொலைபெயின்
  வர்புத்தலின் காரணத்தால் வாசிகசாலையின் இந்நாள் தலைவர் தன் முடிவை மாற்றிக்கொண்டார் அதுமட்டுமல்ல இப்போது
  தலைவர் காந்தன் விட்டதாக வந்த அறிக்கைக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை என்றும் சொல்லுகிறார் எது எப்படியோ
  கிடைத்த இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்தத் தவறும் நாம்தான் துரதிஸ்ட வாதிகள் ஆனால் காத்துவாக்கில் பரவலாக
  ஒரு கதை அடிபடுகிறது முன்பள்ளியை நடத்தும் இடம்பற்றி பண் கலை பண்பாட்டுக் கழகத்தின் தலையிட்டினால் கிடைத்த
  இடம் என்பதால்தான் ஏற்க்கமறுக்கிறோம் எண்டு இம் முடிவு பற்றி பனிப்புலம் வாழ் மக்கள் திரும்பவும் யோசித்து ஒரு
  நல்ல முடிவுக்கு வரவும் வாழ்க வளமுடன் வாழ்கவையகம்

 • T.BALA P.s.s.nilayam:

  நன்றி பண்கலை பண்பாட்டு கழகத்துக்கு.உங்கள் முடிவு ஒரு சரியான நிலைப்பாடே.வாசிகசாலைக்கான நிதி சேகரிப்பை வெகு விரைவு படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன். நன்றி பணிப்புலம் ச.ச.நிலையம் வெளிநாட்டுதொடர்பாளர் த.பாலகுமார் டென்மார்க்.

Leave a Reply

Warning: Undefined variable $user_ID in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-content/themes/nnnnn/comments.php on line 203

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து