உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

Posts Tagged ‘கனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்’

பேச்சுப் போட்டி – 2011
தரம்: அதி கீழ்ப்பிரிவு – பாலர் வகுப்பு

எமது பெற்றோர்

அம்மாவும் அப்பாவும் எமது பெற்றோர்கள். அவர்கள் எம்மீது அன்புள்ளவர்கள்.

அம்மா எமக்கு பாலூட்டுகின்றார். உணவு ஊட்டுகின்றார், சீராட்டுகின்றார். பாதுகாக்கின்றார்.

அப்பாவும் எமக்காக உழைக்கின்றார். எமக்கு விருப்பமானவை எல்லாம் வாங்கித் தருகின்றார். ஊக்கம் அளிக்கின்றார்.

அன்புடன் எம்மை ஆதரிப்பவர்கள் எமது பெற்றோர்கள். அவர்கள் எமது தெய்வங்கள். பிள்ளைகள் நாம் அவர்களை மதிக்க வேண்டும். துதிக்க வேண்டும் இல்லையா பெரியோர்களே!

நன்றி வணக்கம்

பேச்சுப் போட்டி – 2011
தரம்: கீழ்ப்பிரிவு – வகுப்பு – 1, 2

எனது பாடசாலை

நான் படிக்கும் பாடசாலை ஒரு ஆரம்ப பாடசாலையாகும். நான் அங்கு ஆரம்ப வகுப்பு படிக்கிறேன். அங்கு பல வகுப்பு அறைகள் உண்டு. பல பிள்ளைகள் படிக்கிறார்கள். பல ஆசிரியர்கள் கடமை செய்கிறார்கள்.

எனது வகுப்பு ஆசிரியர் பண்பானவர். பாசமுடன் எம்முடன் பழகுவார். அன்புடன் பாடங்கள் சொல்லித்தருவார்.

என்னுடன் பல நாட்டு மாணவர்கள் படிக்கிறார்கள். அவர்கள் நல்லவர்கள். நட்புடன் பழகுவார்கள். நாங்கள் அவர்களுடன் ஆங்கிலத்தில் கதைப்போம். சில நேரங்களில் நாங்கள் எல்லோரும் வெளியில் விளையாடுவோம்.

எனது பாடசாலை எனக்கு மிக மிக விருப்பமானது. நான் ஒழுங்காக பாடசாலை செல்வேன். நன்றாகப் படித்து பெரியவன் ஆவேன். அதுதான் எனது இலச்சியம்.

நன்றி வணக்கம்

பேச்சுப் போட்டி – 2011
தரம்: மத்திய பிரிவு – வகுப்பு – 3, 4

கல்வி

இவ்வுலகிலுள்ள செல்வங்களில் மிகவும் மேலானது கல்விச் செல்வமாகும். “மன்னனுக்குத் தன் தேசத்தில் தான் மதிப்பு உண்டு ஆனால் கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு”. கல்வி கற்றவர்கள் யாவரும் சபையில் முன் இருப்பர்.
வாழ்வைச் செழுமைப் படுத்துவது கல்வியே. இக் கல்வி ஒவ்வொருவருடைய முயற்சிக்கும் ஓர் உயர்ந்த வழிகாட்டியாகும். இது அறிவு வளர்ச்சிக்கு அருமருந்தாகும். அதேவேளை பிரச்சனைகளுக்கும், தடைகளுக்கும் விடையாகவும் உள்ளது. இதனாலேயே “பிச்சை புகினும் கற்கை நன்றே” என்பர். மேலும் எண்ணும், எழுத்தும் கண்ணெனத் தகும் எனவும் கூறுவர்.

ஏனைய செல்வங்கள் கொடுக்கக் கொடுக்க குறைந்து கொண்டே போகும். ஆனால் கல்விச் செல்வமோ கொடுக்கக் கொடுக்க வளர்ந்து கொண்டே போகும். இதை நீரினாலோ, தீயினாலோ, புயலினாலோ அழித்துவிட முடியாது. அதனை கள்வராலோ, அரசினாலோ கவரப்படவும் முடியாது.

ஒருவரின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பது இளமைப் பருவம். எனவே இளமையிற் கற்றல் அவசியமாகின்றது. அதனாலன்றோ “இளமையிற் கல்வி சிலையில் எழுத்து” எனக் கூறப்படுகின்றது. எனவே என்றும் அழியாமல் எமக்கு வழிகாட்டும் கல்வியை இளமையில் கற்பதில் நாம் ஆர்வம் கொள்வோம்.

நன்றி வணக்கம்

பேச்சுப் போட்டி – 2011
தரம்: மேற்பிரிவ் வகுப்பு – 5, 6

நன்றி மறவாமை

“எந் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந் நன்றி கொன்ற மகற்கு” என்றார் திருவள்ளுவர்.

மனிதராகப் பிறந்த நாம் ஒருவருக் கொருவர் உதவியாய் இருந்தாலே வாழ்வு நலம் பெறும். எமக்கு ஒருவர் உதவிசெய்தால் அவரைப் பற்றி நம் மனதில் ஓர் இனிய உணர்வு ஏற்படும். அவ்வுணர்வு எம் மனதில் பதிவாகும்.

அப்பதிவு காத்திருந்து அவருக்கு பிரதி உபகாரம் செய்யச் சொல்லும். அச் செயல் நன்றி மறவாமை எனப்படும். அதாவது,
மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் இருந்தும், உயிருக்கு ஆபத்தான கட்டத்தில் இருந்தும் காப்பாற்றப்பட்ட ஒருவர், தம்மைக் காப்பாற்றியவருக்கு, ஏதாவது ஒருவகையில் பேருதவி புரிதல் நன்றி மறவாமை ஆகும்.

ஒருவரிடம் இருந்து உதவியைப் பெற்றவர் காத்திருந்து காலத்தின் தேவையை உணர்ந்து, அவருக்கு தகுந்த உதவியை செய்ய வேண்டும். அது எவ்வாறு எனில் தென்னை மரம் தான் பெற்ற நீரை தனக்கு நீர் தந்தவனின் தாகம் தீர்க்க, இளநீராக தன் தலையாலே தருதல் போலாகும்..

தான் பெற்ற உதவிக்கு பிரதி நன்றி செலுத்தாதவர்களுக்கு உலகில் உய்வில்லை. அது மாத்திரமன்றி அவர்கள் மதிக்கப்படவும் மாட்டார்கள்.

எனவே நாம் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து நன்றி மறவாது வாழ்வில் உய்வோமாக.

நன்றி வணக்கம்

பேச்சுப் போட்டி – 2011
தரம்: அதிமேற்பிரிவு வகுப்பு 7, 8

சொல்லொழுக்கம்

மனிதப் பிறப்பு மேலானது. உயர்வானது. காரணம் அவனது பேச்சாற்றலின் வளர்ச்சி. மிருகங்களும், பறவைகளும் ஒலி மட்டுமே எழுப்புகின்றன. ஆனால் மனிதனின் குரல் ஒலிப்பது மட்டுமன்றி பேசவும் செய்கின்றது. சிரிக்கவும் முடிகிறது. கருத்துக்களை பரிமாறிக் கொள்கின்றது. அதனால் செய்திகள் தெரிவிக்கப்படுகின்றது. கடமைகள் செயற்படுத்தப்படுகின்றன.

ஒரு செயலுக்காகப் பேச வேண்டும் எனில் அப்பேச்சுக்கு நற்பண்பு வேண்டும். இல்லையேல் அது வன்சொல் எனப்படும். வன்சொல் வன்முறைக்கே வழிசமைக்கும்.
நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து.
நற்பண்பில் இருந்து விலகாத பயனுள்ள சொற்கள் பேசுவோனுக்கு நன்மை கிடைக்கும் என்கிறார் வள்ளுவர். அதனால் யாரிடத்தில் பேசினாலும் எந்நிலையிலும் இன்சொல் பாவியுங்கள். அது பேசுபவனை நாகரீகம் உடையவனாக உலகிற்கு உணர்த்தும். நற் பண்பாடு உள்ளவனாக காட்டி நிற்கும் எனக் கூறுகின்றார்.

மனித உறவு என்பது பேச்சுறவு, நண்பர்கள்தானே என்று அவர்களைக் கேலி செய்யக்கூடாது. பகைவரையும் கூட பழித்துப் பேசக்கூடாது. ஒருவனை இகழ்ந்து பேசுதல் விளையாட்டிலும் துன்பமே தரும்.

கேலிப் பேச்சு கேட்டையே கொடுக்கும். இழிசொல் இயம்பாதாற்கு உறவு பெருகும். மனிதநாட்டம் வளரும். பெருமதிப்பும் உண்டாகும்.

“நாகாக்க” என்பது பொய்யாப் புலவரின் எச்சரிக்கை. எனவே எம்மைக் காக்க, எம் வாழ்வை வளமாக்க, எம் நாவை நல்நாவாக வழிநடத்துவோம். இன்பமாக வாழ்வோம்.

நன்றி வணக்கம்


தங்கள் பிளைகளின் பிரிவிற்குரிய பேச்சை பிரதி எடுபதற்கு மேல் உள்ள நோட்டீசை கிளிக் செய்வதன் முலம் பெற்றுக் கொள்ளலாம்.

இப் போட்டி பற்றிய விபரங்கள் அறிந்து கொள்ள விரும்புவோர் திரு. செல்லத்துரை மனுவேந்தன் அவர்களை தொலைபேசி 416-792-1820 ல் அழையுங்கள்.

Read the rest of this entry »

பண்கலை பண்பாட்டுக் கழகம்
பண் கலை பண் பாட்டுக் கழகத்தின் மாணவர் அமைப்பினால் ஏற்கனவே
அறிவிக்கப் பட்டிருந்த கோடை காலச் சுற்றுலா எமது உறவுகளின் மத்தியில்
தொடர்ந்து வரும் கொண்டாட்டங்களின் காரணமாக அச்சுற்றுலாவினை
இவ்வருட இறுதிக்காலத்தில் அதாவது குளிர்காலத்தில் மேற்கொள்வதென
கழகம் தீர்மானித்துள்ளது.
ஆகையால் தங்கள் இணையத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ள கோடைக்கால சுற்றுலாவை தற்காலிகமாக நீக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.
எமது கோடைக்கால ஒன்று கூடல் பற்றிய விபரங்களை விரைவில் அறியத்தருகன்றேன்.
தலைவர் பண்கலை பண்பாட்டுக்கழகம் கனடா.

Read the rest of this entry »

பண்கலை பண்பாட்டுக்கழகம் -கனடா
பண்கலை பண்பாட்டுக் கழகத்தின் நிர்வாகசபை கூட்டம் 21 -06-11 அன்று கூடியபோது பின்வரும் முடிவுகள் ஏகமனதாக எட்டப்பட்டன. Read the rest of this entry »

 விடியோ கிளிப் இணைக்கப் பட்டுள்ளது

Read the rest of this entry »

Read the rest of this entry »

மாணவர் அணி 2011. >>>>>>பண்கலை பண்பாட்டுக் கழகத்தினரால் நடாத்தப்பட்ட Spelling Bee 2011 April மாதம் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை Scarborugh Civic Center ல் வெகு சிறப்பாக நடந்தேறியுள்ளது.  ( Spelling Bee போட்டி முடிவுகள் பின்னர் அறியத்தரப்படும்). இந் நிகழ்விற்கு 100 ற்கும் மேற்ப்பட்ட அங்கத்தினர்கள் சமூகமளித்திருந்தனர். இப் போட்டி நிகழ்வுகளினிடையே அங்கு சமூகமளித்திருந்த பண்கலை பண்பாட்டுக் கழகத்தின் தற்போதைய நிர்வாக அங்கத்தினர்கள் அனைவரினதும் ஏகோபித்த தீர்மானத்திற்கு அமைவாக எமது கழகத்தில் ஒரு மாணவர் அணி” அமைத்துக்கொள்வதெனத்  தீர்மானிக்கப்பட்டது. Read the rest of this entry »

மேற்படி WORKSHOP ல் கலந்துகொள்ள விரும்பும் பெற்றோர்கள் பண்கலை பண்பாட்டுக்கழக தலைவருடன் அல்லது செயலாளருடன் தொடர்புகொள்ளவும்.

When: April 30th 2011 Saturday
Time:  8:00 a.m to 4:00 p.m
Where: 140 Borough Drive. Scarborough.
Free registration, lunch & child minding.

 Telephone # 647-282-1274  or  # 416-524-7778.

மறுமலர்ச்சி மன்ற அபிவிருத்திக் கட்டுமானப் பணிகள் தொடர்பான அறிவித்தல்.   
பண்கலை பண்பாட்டுக் கழகம்-கனடா…April மாதம் 3ஆம் 2011 திகதி ஞாயிற்றுக்கிழமை கனடா செல்வச்சன்நிதி ஆலய மண்டபத்தில் பண்கலை பண்பாட்டுக்கழக தற்போதைய நிர்வாகசபையிற்கும் மறுமலர்ச்சி மன்றம்-கனடா அங்கத்தினர்களிற்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பின்வரும் தீர்மானம் ஆராயப்பட்டு கனடா வாழ் பணிப்புலம் மக்களிடம் அதனை எடுத்துச்செல்வது என உடன்பாடு காணப்பட்டுள்ளது. Read the rest of this entry »

 

Read the rest of this entry »

Read the rest of this entry »

மேற்ப்படி முன்பள்ளி இடமாற்றம் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவிற்கமைய கனடாவில் திரு.கணபதிப்பிள்ளை. கனகரத்தினம் அவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் கழகப் பொருளாளர் திரு சி.நடேசன் அவர்கள் பணிப்புலம் வாசிகசாலைத் தலைவர் திரு.ஈ.காந்தனுடன் தொடர்புகொண்டு விளக்கியிருந்தார். இந்நகர்வு தொடர்பாக தனக்கு ஆட்சேபனை எதுவும் இல்லை என்று கூறியமைக்கமைய செயலாளர் திரு.க.விமலன் அம்பாள் ஆலையத்தின் நிர்வாகிகளுடன் தொடர்பு கொண்டு இம் முன்பள்ளியை அன்றாட செயற்பாட்டை நிர்வகிக்கும் பொறுப்பை ஆலையக் குருக்களும் வாசிகசாலையின் முன்னாள் தலைவருமான திரு. பே.இன்பராசாக் குருக்களிடமும் தற்போதைய தலைவர் திரு ஈ.காந்தனிடமும் கையளிக்கும் வகையில் இணக்கம் காணப்பட்டது. இவ் இணக்கம் தொடர்பாக பண்கலை பண்பாட்டுக்கழகத்தின் சார்பில் செயலாளர் திரு.க.விமலனால் வாசிகசாலைத் தலைருடன் தொடர்பு ஏற்ப்படுத்தப்பட்டது Read the rest of this entry »

Read the rest of this entry »

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து