உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

Posts Tagged ‘நற்சிந்தனைகள்’

Read the rest of this entry »

Read the rest of this entry »

• புத்தகங்கள் நாட்டின் மதிக்க முடியாத சொத்துக்கள் – ஹென்றி.
• ஒரு வாரத்துக்கு குறைந்த பட்சம் 10 பக்கமாவது படிக்காமல் இருப்பவன், அந்த ஒரு வார காலத்திற்கு செத்தவனாகவே கருதப்படுவான் – சீனப் பழமொழி 
• வாழும் மனிதர்களுக்கு அடுத்தபடி உலகில் மிகச் சிறந்தவை புத்தகங்கள் தான் – சார்ல்ஸ் கிங்ஸ்
• நூலகம் மூளைக்கான மருத்துவமனை – யாரோ
• வாழ்வைப் பிரதிபலிக்காத வாசிப்பு, ஜீரணிக்காத உணவினைப் போன்றது – எட்மண்ட் ப்ரூக்
• புத்தகம் என்பது உங்கள் கையோடு பயணிக்கும் தோட்டம் – சீனப் பழமொழி
• சிறந்த புத்தகம் என்பது மந்திரக் கம்பளம் போல. அது நாம் நுழைய …முடியாத உலகிற்கு நம்மை அழைத்துச் செல்லும் – யாரோ

Read the rest of this entry »

வணக்கம்: வா + இணக்கம் = வணக்கம்.<<  தங்கள் வரவை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம் (சம்மதிக்கின்றோம் உடன்படுகின்றோம்)  என்பதே இதன் பொருள்.  வலதுகரம் நாம் எனவும். இடதுகரம் நம்முன் அல்லது நம்மனதில் நிற்பவர்கள் எனவும் எண்ணியே கரம் கூப்புவது. 

வழிபாடு: வழி+ பாடுபடுதல் = வழிபாடு.<<< நம் முன்னோர்கள், தாய் தந்தை, ஆசான், கடவுள், காட்டிய, அனுபவித்து வழங்கிய உணர்த்திய, நல்ல வழிகளை கடைப்பிடித்து, அதன்வழி நடப்பதே வழிபாடு எனப்படும். Read the rest of this entry »

மகரிஷ வேதாஸ்த்திரியின் சீடர் மனவழக்கலைப் பேராசிரியர் பழனிவேல் (சென்னை)நெதர்லாந்து(அசன்) நாட்டில் நடைபெற்ற பொங்கல் விழாவின் போது ஆற்றிய உரை.  டிவிடியை எமக்கு அனுப்பி வைத்தவர். டினேசன் சிவாசுப்பிரமணியம்.

 கிணற்றுக்கோ, ஏரிக்கோ ஏன் சமுத்திரத்திற்கோ கூட நீர் எடுத்துவரச் சென்றாலும் நம் கையில் இருக்கும் பாத்திரத்தின் அளவுக்குத் தான் தண்ணீரை எடுக்க முடியும். அதுபோல, நாம் செய்யும் செயலில் நம் முயற்சிக்கு தகுந்தவாறே பலன் கிடைக்கும். Read the rest of this entry »

(தவத்திரு குன்றக்குடி அடிகளார்) சைவ சித்தாந்ததில் உருவ வழிபாடு மிக முக்கியமானதாகும். ஆனால் உருவம் இல்லாத ஒன்றையும் நம்மால் நினைக்க முடியாது. நாம் ஒன்றை நினைக்க வேண்டும் என்றால் அதற்கு உருவம் வேண்டும். உருவம் இல்லாத ஒன்றை நினைப்பது மிகக்கடினம். Read the rest of this entry »

“Vimalan, Visu”:… எவரொருவர் தனது சொந்த உடைமைகளைப் பாவித்து (பணம், சொத்து நேரம், உழைப்பு) ஒரு சமுதாயத்தினதோ அன்றி ஒரு நாட்டினதோ முன்னேற்றத்தை நோக்கமாக்க் கொண்டு தனித்தோ அல்லது கூட்டாகவோ இயங்கி அதனால் பெறப்படக்கூடிய நற்பலன்கள் அனைத்தும் சமுதாயத்திற்குச் சென்றடைகின்றதோ அதற்காக முன்னின்று உழைப்பவர் எவரோ அவரையே உண்மையானபொ பொது நலவாதி என வரையறுக்காலாம். எங்கு ஒருவர் தான் சமுதாயத்திற்குச் செய்துகொண்டிருக்கும் சேவைகளுக்காக தனக்கு மாலைகளோ, பாராட்டுதல்களோ கிடைக்கவேண்டுமென எதிர்பார்க்கின்றாரோ அங்கு அச்சேவைகள் அனைத்தும் ஒரு வகையிலாண போதைக்காகச் செய்யப்படும் விடயங்களாகக் கருதப்பட வேண்டும். 

Read the rest of this entry »

உங்கள் வாழ்க்கை சுமையாக இல்லாமல் சுவையாக அமைய வேண்டுமா? நீங்கள் உங்கள் வாழ்வில் யாரையாவது மிக முக்கிய முன்னோடி மனிதராக கருதி, அவரை பின்பற்றி வாழ விரும்புகிறீர்களா? அந்த முக்கியமான மனிதர் வேறு யாருமல்ல அது நீங்கள் தான்! Read the rest of this entry »

எப்படி அணுகினாலும், அன்பு கனிந்த இதய பூர்வமான பக்தியின் மூலமாகவே அது பரிபூரணமாகப் பரிமளிக்கிறது. *சத்தியத்தைப் பேச வேண்டும். தர்மத்தையொட்டி ஒழுக வேண்டும். இதுவே வாழ்க்கையின் முழுப்பயனை அடைய வழி வகுக்கும்.*இறைவனை உணருவதற்கோ, இறைவனை அடைவதற்கோ விரும்பும் பக்தர்கள் உண்மையைச் சார்ந்து நடக்க வேண்டும்.* Read the rest of this entry »

ஒரு நிகழ்ச்சியில் வேதாத்திரி மகிரிஷி பேசிக் கொண்டிருந்தார்.  அதாவது இல்லற வாழ்க்கை சிறப்பாக அமைய விட்டுக் கொடுப்பது, அனுசரித்துப் போவது, பொறுத்துப் போவது ஆகிய மூன்று பண்புகளை பின்பற்ற வேண்டும் என்றார். அப்போது ஒரு பெண் எழுந்து, விட்டுக் கொடுப்பது என்று பொதுவாக சொல்கிறீர்கள். யார் விட்டுக் கொடுப்பது? கணவனா? மனைவியா? பிரச்சினை அங்குதானே ஆரம்பிக்கிறது.. என்று கேட்டார். Read the rest of this entry »

ஆன்மீக இதயம் ஒவ்வொரு மனிதருக்குள் இருக்கும் சக்தி மையம். தொப்புளுக்கு மேலே ஒரு சாண் தூரத்தில் இருக்கும் இடம் தான் இதயக் குகை. மார்பின் மத்தியில் இருக்கும் சக்தி மையம். இது சுடர் விடும் தன்மை கொண்டது. இது பிரகாசமானது. பெரும்பாலானவர்கள் இந்த மையத்தை உணரும் வகையில் மனதை ஒருநிலைப்படுத்தி தியானிப்பது இல்லை. புறப்பொருள்களில் இருந்து விலகி மனத்தை அமைதியாக்கி இதை உணர வேண்டும். புறப்பொருட்களால் சலனமடையாமல், உணர்ச்சி மோதல்களில் ஆட்படாமல் மனதை ஒருநிலைப்படுத்தி தியானித்தால் அக உலகம் ஒன்று இருப்பதை நாம் உணர்வோம்.

Read the rest of this entry »

கல்யாணம் என்பதுஆயிரம் காலத்துப் பயிர்.ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் உன்னதமான உறவை ஏற்படுத்தித் தருவது. ஆணுக்கு பெண்ணை பிடித்திருக்க வேண்டும்,பெண்ணுக்கு ஆணை பிடித்திருக்க  வேண்டும். பெரும்பாலான பெற்றோர்கள் இதை உணருவதில்லை. நினைத்துப் பார்ப்பதும்  இல்லை. Read the rest of this entry »

மகிழ்ச்சியான, உறுதியான, அமைதியான உள்ளம் தான் அருட்கொடைகளில் மிகவும் உயர்ந்தது. ஏனெனில் உள்ளம் மகிழ்ச்சியாக இருக்கும்போது உறுதியான ஆக்கப்பூர்வமான நல்ல சிந்தனைகள் பிறக்கும். மகிழ்ச்சி என்பது ஒரு கலை. அதைக் கற்றுத்தான் அறிந்து கொள்ள முடியும் என்பவை அறிஞர்களின் கருத்து. எனவே மகிழ்ச்சிக்கலையைக் கற்றவர் மிகச் சிறந்த அருட்கொடையைப் பெற்றவர் ஆகி விடுவார். அவரது வாழ்க்கை மிகவும் ஆனந்தமாக அமையும். Read the rest of this entry »

கற்பகத் தரு நினைத்தவை எல்லாம் தர வல்லது. பிள்ளையார், தன்னை வழிபட்டவர்கள் நினைத்தவைகள் அனைத்தையும் ஒருங்கே தரவல்லவர். தோற்றம் உண்டானால் மறைவும் நிச்சயம் உண்டு. ஆனால் பிரணவம் தோற்றம் இல்லாதது. பிள்ளையாரும் தோற்றம் இல்லாதவர். ஆதியும் அந்தமும் இல்லாத முழுமுதற் கடவுள் பிள்ளையார். விநாயகப் பெருமான் பிரணவத்திலிருந்து வெளிப்பட்ட காரணத்தால் தேவரும், மூவரும் போற்றும் தனிப்பெருமை வாய்க்கப் பெற்றவர். Read the rest of this entry »

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து