உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

Posts Tagged ‘நற்சிந்தனைகள்’

ஆம், நிச்சயமாக இருக்கின்றார். இதனை ஸ்ரீ ராம கிருஷ்ண பரஹம்சர் ஒரு எளிய உதாரணத்தால் விளக்குகின்றார். இரவில் வானில் நாம் பல நட்சத்திரங்களைப் பார்க்கின்றோம். ஆனால் பகலில் அவை சூரியனது ஒளியால் நமக்குத் தெரிவதில்லை. ஆக பகலில் நாம் நட்சத்திரங்களைப் பார்க்காததால் நட்சத்திரங்களே இல்லை எனக் கூறிவிடமுடியுமா?. பகலிலும் அவை அதே வானில்தான் இருக்கின்றன, ஆனால் நம்மால்தான் பார்க்கமுடிவதில்லை. எனவே நாம் நட்சத்திரங்களே இல்லை எனக் கூறமுடியாது. அப்படிக் கூறினால் அது நமது அறியாமையே தவிர வேறெதுவும் இல்லை. Read the rest of this entry »

உண்மையான ஆனந்தத்தைக் கைவிட்டுப் பொய்யான சகல சௌக்கியங்களை நாடிப் போகிறோமே! இது நாம் நம்மையே ஏமாற்றிக் கொள்வதாகாதா? * எல்லோரிடத் திலும் இறைவனைப் பாருங்கள், எல்லோரையும் நேசியுங்கள், அதுவே இறைவனுக்குப் பிரியமான பக்தி மார்க்கம் * நமக்குள்ளே இருக்கின்ற இறைவனை வெளியே எங்கும் காண முயலுவது தான் உண்மையான ஞானம். மெய்யான பக்தியும் அதுவே.* பஜனையின் மூலம், அதை இதயபூர்வமாக உணர்ந்து பாடுவதன்மூலம் இறைவனை அணுக வேண்டும்..(இந்துதர்ம சாத்திரம்)

♦உன்னை ஆண்டுகொள்ள உனது மூளையை உபயோகி. பிறரை ஆட்கொள்ள இருதயத்தை உபயோகி. இறைவன் வீற்றிருப்பதும் அங்கேதான். அதை அறிந்து கொண்டு அவரிடமும் அன்புசெய். 2♦எல்லா மனிதர்களிடமும் நீ பெருந்தன்மை யாக நடந்து கொண்டாலும், சிறந்தவர் களையே நண்பர்களாக்கிக் கொள்ள வேண்டும். அதுவே உன் வாழ்க்கையை உயர்த்தும். 3♦கடனை அடைப்பதைக் காட்டிலும், தானதருமங்களில் அதிக மகிழ்ச்சி அடையும் சிலருடைய தாராளம் புத்திசாலித்தனமற்றது.(இந்து தர்ம சாத்திரம்)

ஆடம்பரம் இல்லாமல் வாழ்கின்றவன் அமைதியாகவே இருக்கின்றான். தான தருமங்களைச் செய்து பிறருக்காக வாழ்பவன் பெரும்பாலும் மகிழ்ச்சியுடன் தான் இருக்கின்றான். மரணம் நம்மை என்றைக்காவது இந்த உலகத்திலிருந்து பிரிக்கப் போகின்றது என்று நினைத்து வாழ்பவன் கிடைத்த வரையில் திருப்தி அடைவான். மரணத்தை மறந்து வாழ்பவன் பேராசைக்காரனாக, எதிலுமே திருப்தி இல்லாதவனாக இருப்பான். திருப்தியினால் உண்டாகக் கூடிய இன்பத்தை ஒருபோதும் அவனால் அடைய முடியாது.(இந்து தர்ம சாத்திரம்)

நம்முடைய சுகதுக்கங்கள் எல்லாம் என்றைக்கும் இருக்கின்றவை. இவற்றையே பெரிதாக நினைத்துக் கொண்டிருக்காது, நம்மால் மற்றவர்களுக்கு சிறிதளவாவது சந்தோசம், சுகம் உண்டாகுமென்றால் அதை நினைத்து இறைவனைப் பிரார்த்திக்கின்ற மனோபாவமுள்ள கொள்கை தான் மிகச்சிறந்தது. நமக்குக் கஷ்டம், நமக்கு துன்பம் என்பதைப் பாராட்டாமல் உலகம் சேமமாக இருக்க வேண்டுமென்று நாம் எல்லோரும் பிரார்த்தித்துக் கொள்வதே தர்மமாகும்.(இந்து தர்ம சாத்திரம்)

கேட்பது மனிதனுடைய உரிமை. கொடுப்பது இறை வனுடைய தன்மை. எவ்வளவு இருந்தாலும் நம்மு டைய மனம் திருப்தியடைவதில்லை. கிடைத் ததைக் கொண்டு திருப்தியடைய வேண்டும். நம்மைவிடக் கஸ்டப்படுகிறவர்களைப் பார்த்து மனதைத் திருப்திப்படுத்திக் கொள்ள வேண்டும். திருப்தியுடன் வாழ்வது தான் மனித வாழ்வின் பூரணத்துவம். இந்து பூரணத்துவத்தைப் பெற பெரியோர்கள், ஞானிகளுடைய அறிவுரை களைப் படித்து மனதைப் பண்படுத்திக் கொள்ளவேண்டும்.(இந்து தர்ம சாத்திரம்)

இருப்பதும், சிறப்பதும், அதிகாரம் செய்வதும், அடங்கி நடப்பதும், உழைப்பதும், பிழைப்பதும் மட்டுமே போதுமா? இவற்றில நீதி நிலைத்திருக்க வேண்டாமா? நீதி இல்லாமல் இவைகளைச் செய்தால் துன்பமே உண்டாகும். இயற்கைக்கு விரோதமாக நீதி தவறி நடப்பவனுக்கு இறைவனுடைய தண்டனை நிச்சயமாக உண்டு. (இந்து தர்ம சாத்திரம்) நியாயமானதை மட்டுமே செய்வதற்கு உரிமை உண்டேயன்றி, தனக்கு இஷ்டப்பட்டதைச் செய்வதற்கு யாருக்குமே உரிமையில்லை. (சார்ல்ஸ் சிம்மன்ஸ்)

பெண்களின் நடை, உடை, பாவனை, அளவுக்கதிகமான அலங்காரம் போன்றவைகள்தாம் ஆடவர்களின் சிருங்கார சேஷ்டைகளுக்குக் காரணமாக இருப்பதால், இதுபோன்ற விடங்களில் பெண்கள் சாதாரணமான அலங்காரத்துடன் இருக்கவேண்டியது அவசியம். மூடனாக இருப்பவன்கூட காமத்திற்கு விதிவிலக்கல்ல என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளதால் பெண்கள் காரணமின்றித் தங்களை மிதமாக அழகுபடுத்திக் கொள்ளக்கூடாது. சாஸ்திரங்களை மீறுவதும்கூட பாவமான செயல்தான். (இந்துதர்ம சாத்திரம்)

நீ வாழ்வதற்காக எதை வேண்டுமானாலும் செய்து விடாதே! கூட்டில் அடைக்கப் பட்டிருக்கும் பறவையைக் கொல்வது கடினமல்ல! அதைப்போல உன்னிடத்தில் சிக்கிய எளியவர்களை வதைப்பதும் சுலபம்தான்! ஆனால் நீ அந்த வேலையைச் செய்யாதே! இறைவன் உனக்குக் காட்டிய நல்வழியில் நடந்து நீ உயர்வடைவதற்கு மேலும் மேலும் முயற்சி செய். குறுக்கு வழியில் மேன்மையடைய ஒருபோதும் நினையாதே! அந்த வழி உனக்கு நல்ல பலனைத் தராது. (இந்து தர்ம சாத்திரம்)

பெண்கள் தங்கள் மகிழ்ச்சியையும், ஆண்கள் தங்கள் சுதந்திரத்தையும் பணயம் வைத்துச் சீட்டுக் குலுக்கும் நிகழ்வுதான் திருமணம். (தெரியூ அம்மையார்) ஒரு திருமண வாழ்வை வெற்றி யடையச் செய்யவேண்டுமானால் இருவர் தேவை. தோல்விக்கு ஒருவர் போதும். (ஹெர்பட் சாமுவேல்). மகிழ்ச்சி நமது வீட்டின் அடுப்படியில் வளர்கிறது. அது மாற்றான் தோட்டத்திலிருந்து பொறுக்கப்படுவதில்லை. (துக்ளஸ் ஜோல்ட்)

சுவாமிக்கு வெற்றிலை பாக்கு வைத்து வணங்குவது நமது மரபு. தாம்பூலம் எனப்படும் வெற்றிலைக்கு ஜீரணத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் உண்டு. வெற்றிலையோடு சேர்ந்த சுண்ணாம்பு உடம்புக்கு தேவையான கால்சியச் சத்தையும் தருகிறது. சுபநிகழ்ச்சிகளில், விருந்துக்குப் பிறகு ஜீரணத்துக்காக வெற்றிலை பாக்கு கொடுத்து வழியனுப்பும் வழக்கம் ஏற்பட்டது. திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கு அழைக்கும் போது அழைப்பிதழோடு வெற்றிலை, பணம் வைத்து அழைப்பார்கள்.

மரணம் எப்போது நம்மை அணுகும் என்பது நிச்சயமில்லை. எனவே வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நல்ல எண்ணங்களைச் செயலாக்கி விடவேண்டும். காலத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கக் கூடாது. மரணம் எப்படி வேண்டுமானாலும் வரும். அதற்கு அவன், இவன் என்ற பாகுபாடு கிடையாது. தத்துவ ஆராய்ச்சியையும் வறட்டு வாதத்தையும் விட்டுவிடுங்கள். விவாதத்தின் மூலமாக யாராலும் இறைவனை அறிய முடியாது. (அன்னை சாரதாதேவி)

பெண்கள் கண்ணீர் விடுவது நாட்டிற்கு நல்லதல்ல! ஆகவே எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பெண்கள் மனம் வருந்தும்படியாகவோ, கண்கலங்கும் படியாகவோ வாழக்கூடாது. சமுதாயம் அப்படி வாழவிடவும் கூடாது. அது தர்மமாகாது. அதேபோன்று கணவனானவன் தெய்வமாக நினைக்கக்கூடிய நிலையில் இல்லாமல் இருந்தாலும்கூட அவனைத் தெய்வமாக மதித்தால், பெண்களுக்குத் தெய்வத்தினுடைய அருள் குன்றாமல் வளரும். கணவனும் இறைவனருளால் மேன்மையடைந்து விடுவான். (இந்து தர்ம சாத்திரம்)

இறைவனுடைய கண்கள் ஒவ்வொருவனுடைய மனத்திலும் உள்ள இரகசியங்களைப் பார்க்கக் கூடியவைகளாய் இருக்கின்றன. உயர்ந்தவனோ, தாழ்ந்தவனோ, ஏழையோ, பணக்காரனோ, அறிஞனோ, மூடனோ யாராக இருந்தாலும் ஆண்டவனால் கவனிக்கப் படுகிறான். அதனால் இதய சுத்தியோடு வாழக்கற்றுக் கொள்ளுங்கள். (இந்து தர்ம சாத்திரம்) நீங்கள் சரியான முறையில் நடந்துகொண்டு, உங்களின் புலன்களைக் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தால், இறைவன் உங்களை நெருங்கி வருவார்.

ஹிந்து என்பவன் யார்? எல்லாரிடமும் அன்பு கொண்டவன் ஹிந்து; பிறரைத் துன்புறுத்தாத அகிம்சாவாதி ஹிந்து; பிறர் நலன் நாடுபவன் ஹிந்து; வேண்டியவர்-வேண்டாதவர், நல்லவர்-கெட்டவர், உற்றார்-வேற்றார் என்றெல்லாம் வேற்றுமை பாராட்டாமலும் எவரையும் வெறுக்காமலும் உலகம் முழுவதையும் சகோதர நேயத்துடன் நோக்குபவன் ஹிந்து. நம் புண்ணியபூமியில் எத்தனை எத்தனையோ மகான்கள் வாழ்ந்தார்கள்; வாழ்கிறார்கள். அவர்கள் மக்களுக்கிடையில் வேற்றுமை பாராட்டாதவர்கள் மட்டுமல்லர்; ஒற்றுமையை மட்டுமே கண்டவர்கள்.

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து