உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

Posts Tagged ‘மெய்’

தாய்- ஒரு விளக்கம்.பூமியைப் ‘பூமாதா’ என்றும் பசுவைக் ‘கோமாதா’ என்றும் வருணிப்பவர்கள் இந்துக்கள்தாம். ‘பொறுமையில் பூமாதேவி’ என்றும், அமைதியில் ‘பசு’வென்றும் சொல்பவர்கள் இந்துக்கள்தான். ஆகவே, பொறுமையும் அமைதியும் நிறைந்தவள் தாய் என்பது இந்துக்கள் மரபு.பொறுமை, அமைதியும் நிறைந்தவள் தாய் என்பது இந்துக்கள் மரபு.பொறுமை, அமைதி, ரத்தபாசம், தன் வயிறைப்பட்டினி போட்டு மகனுக்கு ஊட்டுதல் – இவையே தாய்மை! Read the rest of this entry »

BY வினோதினி பத்மநாதன்……   “நான் உயர்ந்த சாதியைச் சேர்ந்தவன்”  என்று நம்மில் சிலர்
எண்ணிக்கொண்டிருக்கின்றோம். வேறு சிலரை சுட்டிக்காட்டி “இவர்கள் தாழ்ந்த
அல்லது குறைந்த சாதியை சேர்ந்தவர்கள் “என்று கூறுகிறோம் .உண்மையில் மனிதனுடைய
வரலாற்றினை அறிந்திருந்தால் இப்படி எல்லாம் நாம் சிந்தித்துக்கொண்டிருப்பதை   பார்த்து நாமே வெட்கப்பட வேண்டி வரும் . தொடக்க காலத்தில் மனிதன் மலைகளின் மேலேயே வசித்து வந்தான்.ஏனெனில் Read the rest of this entry »

நாம் எல்லோரும் முதுமையடையப் போகிறவர்களே. முதுமையின் அழகை நாம் புரிந்து கொள்ளவேண்டும். இளமைப் பருவத்தின் வாழ்க்கையில் தொடர்ந்து கொண்டிருக்கும் அனைத்து முட்டாள் தனங்களிலிருந்தும் அது நம்மைத் துண்டித்து விடுவதைப் தெரிந்து கொள்ள வேண்டும். வயதாகிப் போகும் போது யாவரும் பீதியடைகிறோம். அழகு, அனுபவிக்கும் இன்பம், சுறுசுறுப்பு யாவும் குறைந்துகொண்டே போகின்றன என்ற கவலை ஒருபுறம். அதைவிட, மரணத்தின் மீதான அதிகப் பயப்பாடு தான் கூடுதலாக மனிதனை வாட்டுகிறது. Read the rest of this entry »

பெற்றதோடு முடிவதில்லை பெற்றவர்கள் கடன். ஒரு குழந்தையை பெற்றெடுப்பதை விட அதனை நன்கு வளர்த்து அறிவுட்டி சான்றோனாகவும் நற்பண்பினனாகவும் வளர்ப்பது சவாலானதாயினும், தவறாது ஆற்றவேண்டிய பெற்றோரின் தலையாய கடனாகும்;. “பிள்ளை வளர்ப்பு என்பது அப்படி என்ன பெரிய விடயமா?” எனக் கேட்பவர் எம்மில் பலர் உள்ளனர். பிள்ளைகளை சரியாக வளர்க்காவிடில் வெறும் பதராவரேயன்றி பயிராகி வளம்சேர்க்க மாட்டார்கள். பிள்ளை வளர்ப்பு என்பது வெறுமனே ஒரு கலையல்ல.

Read the rest of this entry »

உலகப்பந்தில்  ஒரு நாட்டில் அங்கீகாரம் பெற்ற   மொழி ஒன்றின் பெயரை பின்பக்கத்திலிருந்து எழுதினாலோ முன்பக்கத்திலிருந்து எழுதினாலோ இது சரியாக வரும். இந்த மொழியின் பெயர் என்ன ? எந்த நாட்டு மக்களால் இது  பேசப்படுகிறது ?  இரண்டு பதில்களையும் கண்டுபிடிக்கும் முதல் வாசகர் €50 வை சுதர்சனிடம் இருந்து வெல்லுவார்.
விதிமுறைகள்: Read the rest of this entry »

6.புண்ணியம் திரும்ப வரும்,,,“வந்த வினையும் வருகின்ற வல்வினையும், கந்தனென்று சொல்லக் கலங்கும்” ஆனால், செய்த வினையும் செய்கின்ற் தீவினையும், ஓர் எதிரொலியைக் காட்டாமல் மறையமாட்டா. நீ விதைத்த விதைகளை நீயே அறுவடை செய்த பின்னால்தான் அந்த நிலத்தில் வேறு பயிர்களைப் பயிரிட முடியும். கொலை, களவு, சூது அனைத்தையும் செய்துவிட்டு, “குமரா! முருகா!” என்று கூவினால் குமரன் நீ வரும் கோயிலுக்குக் கூட வரமாட்டான். இதிலும் எனக்கோர் அனுபவம் உண்டு. Read the rest of this entry »

Read the rest of this entry »

4. பாவமாம், புண்ணியமாம்!>>>>>இதுவரை யாருடைய பெயரையும் நான் குறிப்பிடவிலை.இப்போது ஒருவருடைய பெயரை குறிப்பிட விரும்புகிறேன்.பட அதிபர் சின்னப்ப தேவரை நீ அறிவாய்.சிறு வயதிலிருந்தே அவர்தெய்வ நம்பிகையுள்ளவர். சினிமாத் தொழிலிலேயே மதுப்பழக்கமோ, பெண்ணாசையோ இல்லாத சிலரில் அவரும் ஒருவர். மிகவும் உத்தமர்கள் என்று சொல்லத்தக்க உயர்ந்தோரில் ஒருவர். முப்பது முப்பத்தைந்து வயதுவரை, அவரது வாழ்வு கடுமையான வறுமையிலும் ஏழ்மையிலும் கழிந்தது.
அப்போதும் அவர் நாணயத்தை நேர்மையையும் விட்டதில்லை.குஸ்தி கோதா நடத்தினார். சிறிய பால் பண்ணை நடத்தினார். ஜூபிடர் பிக்சர்ஸ் படங்களில் ஸ்டண்ட் நடிகராக வேலைபார்த்தார்.அவரது வரலாறு உழைத்து முன்னேற விரும்புகிறவர்களுக்கு ஒரு பாடமாகும். Read the rest of this entry »

பணிப்புலம் ஒரு காலத்தில் சிறந்த விளை நிலமாக இருந்தது.இப்பொழுது சிறிது காலங்களுக்கு முன்பு விதைப்பதற்க்கு நெல்லு வாங்கி விதைப்போம் என்று நல்ல விதை நெல்லு தேடினோம். ஊரவர் சிலர் சொன்னார்கள் நல்ல விதை நெல்லு ஊரிலேயே உண்டு என கூறியதால் அந்த நெல்லை வாங்குவோம் எண்று முன்னுக்கே சொல்லி வைச்சனாங்கள்.  Read the rest of this entry »

3. துன்பம் ஒரு சோதனை…-வெள்ளம் பெருகும் நதிகளும் ஒருமுறை வறண்டு விடுகிறது.குளங்கள் கோடையில் வற்றி மழைக்காலத்தில் நிரம்புகின்றன. நிலங்கள் வறண்ட பின்தான் பசுமையடைகின்றன. மரங்கள் இலையுதிர்ந்து பின் தளிர் விடுகின்றன.இறைவனின் நியதியில் நிரந்தரமாக வாழ்ந்து கொண்டிருப்பது மலை ஒன்றுதான்.அதுவும் வளர்வதாகவும், அமிழ்வதாகவும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.இறைவன் மனிதனையும் அப்படித்தான் வைக்கிறான். Read the rest of this entry »

வணக்கம்: வா + இணக்கம் = வணக்கம்.<<  தங்கள் வரவை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம் (சம்மதிக்கின்றோம் உடன்படுகின்றோம்)  என்பதே இதன் பொருள்.  வலதுகரம் நாம் எனவும். இடதுகரம் நம்முன் அல்லது நம்மனதில் நிற்பவர்கள் எனவும் எண்ணியே கரம் கூப்புவது. 

வழிபாடு: வழி+ பாடுபடுதல் = வழிபாடு.<<< நம் முன்னோர்கள், தாய் தந்தை, ஆசான், கடவுள், காட்டிய, அனுபவித்து வழங்கிய உணர்த்திய, நல்ல வழிகளை கடைப்பிடித்து, அதன்வழி நடப்பதே வழிபாடு எனப்படும். Read the rest of this entry »

ஊர் நோக்கிய திட்டம்.     கால் நடை வளர்ப்பு பற்றி சகலரும் அறிந்தாலும் அதன் பலாபலன்கள் நாம் பெரிதாய் அனுபவிக்கவில்லை. கோழி.ஆடு,மாடு வளர்ப்பதில் இன்று நிறைவான இலாபம் பெறமுடியும். பத்து கோழியுடன் ஆரம்பித்தால் அதில் இருந்து ஒரு குறுகிய காலத்தில்  கோழிப்பண்ணை முதலாளியாக முடியும்.  இதே போல் சகல கால்நடை வளர்ப்பு முறைகளையும் தொழிலாக்க முடியும். Read the rest of this entry »

தைப்பொங்கல். தை பிறந்து முதலாம் நாளான்று தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர் திருநாளாக தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. இவ்விழா சமயங்கள் கடந்து அனேக தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாக கொண்டாடப்படுகிறது. Read the rest of this entry »

பணிப்புலமும் அதன் இதர கிராமங்களான சாந்தை காலையடி சுற்றாடல்களில் இருக்கும் அனைத்து  பொது நிலங்களும்  யாரால் பொதுமக்களிடம் வழங்கப்பட்டது என எண்ணிப் பார்ப்போமானால் சில விடயங்கள் தெளிவுக்கு வரும்.  சிவன்கோயில் திரு கார்த்திகேசு செட்டியார் அவர்கள் பணிப்புலம் மக்களிடம் கையளித்து அதை  இன்று பொதுமக்கள் தங்களால் உருவாக்கப்பட்ட நிர்வாக அமைப்பின் உதவியுடன் நடாத்துகிறார்கள்.    பணிப்புலம் அம்பாள் ஆலயத்தின் உண்மையான சொந்தகாரகிய  திரு நாராயணிஅவர்கள் ஆரம்ப காலங்களில் இந்த ஆலயத்தை பொதுநிர்வாக அமைப்பு ஒன்று   நடத்த அனுமதியும் கொடுத்து இந்த ஆலயத்தின் அர்ச்சகர்களுக்கு கோவில் வருமானத்தில் ஒரு பகுதியையும் கொடுத்து மிகுதியை  ஆலயத்திருப்பணிக்கு பயன்படுத்தப்பட்ட அன்று அனுமதி வழங்கியிருந்தார். Read the rest of this entry »

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து