உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
வாசகர்கள்


முந்தைய செய்திகள்

Posts Tagged ‘காலையடி மறுமலர்ச்சி மன்றம்’

பிறைற் புக் சென்ரர் (பிறைற் புத்தக நிலையம்) என்ற நிறுவனத்தின் மூலம் 200க்கு மேற்பட்ட மாணவர்களுக்கான நூல்களை எழுதியும் தொகுத்தும் வெளியிட்டும் பட்டிதொட்டி எங்கும் புத்தக கண்காட்சிகளை நடாத்தியும் சேவையாற்றிய எமது கிராமத்தின் முதுசமான அமரர் பொன் சக்திவேல் அவர்களை இன்நாளில் காலையடி மறுமலர்ச்சி மன்றம் இவ்விணைய தளத்தின் மூலம் நினைவுகூருகின்றது. அவரது நினைவை சுமந்து அவரது உறவினரும் மன்ற கலைத்தலைவருமான எஸ்.யாதவன் யாத்த கவிதையினை தருகின்றோம்.

அழ பகீரதன்
தலைவர்
காலையடி மறுமலர்ச்சி மன்றம்

 


படங்கள் அனுப்பியவர்கள். அழ. பகிதரன்,  Anujan Sabanajagam

ஒளிப்பதிவு. அபிநயா விடியோ (ஆனந்).
இணையம் ஏற்றியவர். கஜன்

முழு காட்சியும் நான்கு பிரிவுகளாக இணைக்கப்பட்டுள்ளது.

By Ratnarajah Subramaniam. எமது சிறு வயதுக் கனவுகள் நனவாகுதல் கண்டு மகிழ்ச்சியோடு சில பசுமை நிறைந்த நினைவுகளை பகிர்ந்து விட்டு எதிர்கால எண்ணங்களை பகிர்வோம் ..ரவி அண்ணாவும், சந்திரன் அண்ணாவும், ரவி அண்ணா வீட்டில் ஒரு வித கட்டணமும் அறவிடாமல் பத்து வயதில் இருந்து பாடம் சொல்லித் தந்ததை எண்ணிப் பார்க்கிறேன். படிப்பு முடிந்தவுடன் புளியடிக்கு ஓடுவோம்.புளியங்கொட்டை விளையாட புளியம்வேரில் இருந்து கொண்டே பெரிய பெரிய திட்டங்களை தீட்டூவோம்.எல்லோரும் நண்பர்களாக பழகி விளையாட்டுக் கழகம் ஒன்றை உருவாக்கினோம்.

Read the rest of this entry »

 By Ratnarajah Subramaniam…நாங்கள் பல வருடங்களாக வெளிநாடுகளில் வசித்து வருகிறோம். துள்ளிக்குதித்து ஓடி ஆடி, படித்து,விளையாடி மகிழ்ந்த பாடசாலைகள், மறுமலர்ச்சிமன்றம்,அம்பாள் சனசமூகநிலையம் இவைகளின் வளர்ச்சிக்கு என்ன வெளிநாடுகளில் இருந்து நாங்கள் செய்தோம்? தனி ஒருவரின் ஆதங்கம் அல்ல இது. இவ்வாறு எங்களை பார்த்து கேட்க்கும் கேள்வி ஆயிரக்கணக்கான அங்கத்துவர்கள், அபிமானிகளின் கேள்வி? டென்மார்க்கில் இருந்து ஒரு தடவை ஊருக்கோ அல்லது வேறு இடத்திற்க்கோ சுற்றுலா சென்றுவிட்டு வந்தால் நாம் இங்கு கொண்டு வருவது இரண்டுமூன்று சீலை, சட்டை, பத்து பதினைந்து படம் பிடித்தும் வருவோம். Read the rest of this entry »

மன்ற அபிவிருத்தி திட்டத்தின் வரைவின் படி டென்மார்க் பணிப்புலம் காலையடி சாந்தை மக்களை ஒன்றிணைத்து  ஒரு கட்டிடம் ஒன்றினை அமைப்பதற்கு உத்தேசித்துள்ளோம். அதற்கு நிதிசேகரிப்பதற்காக மன்றத்தின் மூத்த உறுப்பினர் சு.இரட்ணராசா அவர்களை நாம் முன்மொழிகின்றோம் இவருடன் மன்ற அங்கத்தவர்கள் இணைந்து செயற்பட முடியும் Read the rest of this entry »

By Chandrahasan:… I have received fee proposal from a young architectural practice for the detailing of Master plan and designing Auditorium. It may look too high for Jaffna mentality that do not value architecture but there is no other way to develop Manram on international standard. This firm has sent their design for Anurathapura Cultural Centre that is architecurally impressive.
Their fees for developing master plan is Rs250,000 and designing Auditorium is Rs 1,250,000. Altogether 15 laks. Please see the fee proposal

Read the rest of this entry »

http://people.panipulam.net/#36

Read the rest of this entry »

கடந்த 20.12.2010 அன்று தேசிய கலை இலக்கியப் பேரவையினால் ஒழுங்கமைக்கப்பட்ட கைலாசபதி நினைவரங்கு மாலை 3.30க்கு யாழ்ப்பாணம் புதிய உயர்கலைக்கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. அதில் தலைமைதாங்கிய அழ பகீரதன் ஆற்றிய உரை :.  தேசிய கலை இலக்கியப் பேரவையின் முப்பத்தேழாவது ஆண்டு நிறைவினையும் பேராசிரியர் கைலாசபதியின் இருபத்தெட்டாவது ஆண்டுநினைவினையும் நினைவுகூரும் வித்த்தில் நாம் கூடியுள்ளோம். Read the rest of this entry »

Read the rest of this entry »

காலையடி மறுமலர்ச்சி மன்றத்தில் நேற்றைய தினம் (21.11.2010) நுாலகத் திறப்பு விழா நடைபெற்றது. இதன் போது மாணவர்களின் திறமைகள் வெளிக்கொணரும் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடாத்தப்பட்டன. பரிசில்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்தும் இவ்வாறான நிகழ்ச்சிகள் நடாத்தப்படவேண்டும் என மாணவர்கள் விரும்பம் தெரிவித்தார்கள்.
.

மிகுந்த ஆரவாரத்துடன் 500 க்கு மேற்பட்ட மாணவர்களும், பெரியவர்களும் பார்வையிட புத்தகக் கண்காட்சி இடம்பெற்றது. இதில் புதிதாகத் தருவிக்கப்பட்ட 1500க்கு மேற்பட்ட புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. 100க்கு மேற்பட்ட சிறுவர்கள் தமது கருத்துக்களை ஒலிபெருக்கியில் உரையாற்றினார்கள். “மறுமலர்ச்சி மன்றமென்றே புதுமலர்ச்சியாக்குவோம்” என்ற மன்றத்தின் கீதம் அன்றைய கால அனைத்து மன்ற நிகழ்வுகளிலும் இசைக்கப்படும்போது ஏற்பட்டிருந்த ஒரு கற்பனாவாதம் இன்று நிஐமாகவே நடந்துகொண்டிருக்கின்றது. இப்படியான ஒரு அறிவகம் உருவாவதற்கு அங்கிருந்து முன்னின்றுழைத்துக்கொண்டிருக்கும் அனைத்து
இழைஞ்ஞர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். இது ஒரு ஆரம்பமெனக்கொண்டு வருங்காலத்தில் ஏற்படப்போகும் அனைத்து முன்னேற்றப் பணிகளுக்கும் கனடா வாழ் பழைய மறுமலர்ச்சிமன்ற அங்கத்தினர்களின் ஆதரவும் ஓத்துழைப்பும் வாழ்த்துக்களும் உரித்தாகுக.
விசு.க.விமலன்-கனடா
முன்னாள் செயலாளர்.காலையடி மறுமலர்ச்சி மன்றம். Read the rest of this entry »

“ஒரு நூலகம் திறக்கப்படுகின்றபோது ஆயிரம் சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன.” என்றார் மாவோ. பல வருடங்களாக நூலக வசதியற்றதாகக் காணப்படும் எமது ஊரின் மாணவர்கள், பெரியவர்களின் வாசிப்புப் பழக்கத்தை வளர்த்தெடுக்கும் நோக்குடனும், கல்வி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடனும், மறுமலர்ச்சி மன்றத்தின் வாசகர் சாலையை நூல் நிலையமாக மாற்றும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. இது இணைய வசதியுடன் கூடியதாக அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது. Read the rest of this entry »

திருமண சேவை

விளம்பரங்கள்
 

பிறந்தநாள் வாழ்த்து