நீங்கள் விரும்பும் விடயத்தை எழுதிய பின் "Click here to Select and Copy" என்ற பொத்தானை அழுத்தி உங்கள் செய்தியை பிரதி எடுத்து நீங்கள் விரும்பும் பக்கத்தில் உள்ளீடு செய்து கொள்ளலாம்.

"க" எழுதுவதற்கு "க" என்ற எழுத்தை அமத்துவதன் மூலமும் -
"கா" என்ற எழுத்தை பெறுவதற்கு "க" என்ற எழுத்தை அமத்திய பின் "ஆ" என்ற எழுத்தை அமத்துவதன் முலமாக பெற்று கொள்ளலாம்.

மேற் குற்றுப்புள்ளி போடுவதற்கு "F" என்ற பொத்தானை அழுத்தவும்.

அனைத்து உயிர் எழுத்துக்கள் 1 விசை, க,ங,ச,ஞ வரிசை 1விசை, என 31 எழுத்துக்களை ஒரு விசையிலும், மீதமுள்ள 216 எழுத்துக்களையும் இருவிசையில் எழுதலாம். தமிழ் எழுத்துக்கள் 247 ல் எந்த தமிழ் எழுத்தை எழுதவும் இரண்டுக்கு மேற்பட்ட விசைகள் அவசியமில்லை. shift அல்லது வேறு துணைவிசைகளும் அவற்றுக்கு அவசியமில்லை. கிரந்த எழுத்துக்களான ஸ,ஷ,ஜ,ஹ போன்றவற்றை மட்டுமே shift உபயோகித்து எழுத வேண்டும்.

விஞ்ஞானப் பூர்வமான இந்த தமிழ்99 தட்டச்சு முறையால் குறைந்த விசையழுத்த முறைகளில் விரல்களுக்கு எளிமையான வரிசையமைப்பில் அதிக பக்கங்களை அதிக வேகத்தில் அதிக நேரம் கைகளுக்கு களைப்பின்றி தொடர்ச்சியாக தட்டச்சு செய்ய முடியும்…

இம்முறையை கற்றுக் கொள்வதும் எளிமையானது. விசைகளை நினைவில் வைப்பதும் மிகவும் எளிது.